இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. ரொஷான் அவர்களை வரவேற்கிறோம்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோ. ரொஷான் அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


நமது தளத்துக்கு புதிதாக வருகை தந்து கீழ்கண்ட அறிமுக பதிவை தந்திருக்கும் சகோதரர். ரோஷன் அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
 
//////சகோதரர் சுந்தர் அவர்களுக்கு எழுதிகொள்வது,  யெகோவாவின் நாமத்தினாலும், அவரின் மகனாகிய  இயேசு கிறிஸ்துவின்  கிருபையாலும் வாழ்த்துதல்களை தெரிவித்து  என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான்  அண்மைய காலமாக தாங்கள் எழுதும் அணைத்து பதிவுகளும் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது:. அத்துடன் பதிவுகள் எழுதும் போது அடக்கத்தோடும், கோவப்படாது, மரியாத்யோடு பதிவுகள் எழுதும் விதம் எமக்கு பிடித்து இருக்கு. அத்துடன் எனது நண்பர் மூலமாகவே இந்த தளத்தை அறிந்துகொண்டேன். காரணம் நான் தங்களின் விசுவாசப் பிரிவை சேர்ந்தவன் அல்ல. எனக்கும் எனது நண்பருக்கும் இடையில் வேதம் தொடர்பாக கருத்து பரிமாற்றம் நடக்கும் போதே தங்களில் தளம் தொடர்பான விஷயத்தையும் அறிந்துகொண்டேன். அத்துடன் சில்சாம், நித்தியஜீவன், மற்றும் கோவை பிரதர்ஸ் போன்ற தளத்து கருத்துக்களும் வாசிக்க தவறுவது இல்லை...... தொடர்ந்து படிக்க இங்கு  Hi Frnds  சொடுக்கவும்.    

 
சகோதரரே, மார்க்க பேதங்கள் சம்பந்தபட்ட கருத்துக்களை தள்ளி, அனைவரின்  நடைமுறை வாழ்வுக்கு பயன்தரும் நல்ல கருத்துக்கள் எதுவாக இருந்தாலும்  தாங்கள் இங்கு
பதிவிட உற்சாகப்படுத்துகிறோம்.
 
வேதாகமத்தில் ஆக்கபூர்வமாக  விவாதிப்பதற்கு எவ்வளவோ நல்ல கருத்துக்கள் இருக்கிறது அவைகளை பற்றி எழுதலாம். தேவ நாமத்தை உயர்த்தலாம்.
 
மேலும் தாங்கள் எவ்வாறு அல்லது யாரின்மூலம் ஆண்டவரால் தொடப்பட்டீர்கள் என்று தெரிவித்தால் தள நண்பர்களுக்கு அது  பயனுள்ளதாக இருக்கும். 
 
ஆண்டவரின் அன்பு தங்களோடு கூட இருப்பதாக!
 
அன்புடன்
இறைநேசம்
 


-- Edited by இறைநேசம் on Thursday 24th of March 2011 11:06:49 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard