நமது தளத்துக்கு புதிதாக வருகை தனது சில பதிவுகளை தந்திருக்கும் சகோ. nissi என்னும் ஆபிரஹாம் அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.
தாங்கள் எழுதும் கருத்துக்களில்இருந்து தாங்கள் எந்த பிரிவை சார்ந்த்தவர் என்பதை சிறிது யூகிக்க முடிகிறது. ஆகினும் தாங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்யும்போது சற்றுபொறுமையுடன் ஒவ்வொன்றாக பதிவிடவும்.
கிறிஸ்த்தவத்தில் எத்தனை விதமான விசுவாச பிரிவுகள்தான் இருக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு கிறிஸ்த்தவம் பிரித்து கிடப்பது வேதனையே. ஒரே இயேசுவை ஏற்றுக் கொண்ட வர்களுக்குள் இறைவன் ஏன் இத்தனை பிரிவுகளை அனுமத்தார் என்பது புரியவில்லை.
முடிந்த அளவு தாங்கள் சொந்த கருத்துக்களுடன் திறந்த மனதுடன் விவாதியுங்கள். ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப் பாராக.