சகோதரர் அவர்களே! ஆத்துமா சாகுமா சாகாத என்பதை அறியும் முன் சாவு அல்லது மரணம் என்றால் என்னவென்று வேதம் சொல்கிறது என்பதை கவனிக்கவும்.
பிரசங்கி 9:5உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது
மரித்த ஒருவனுக்கும் இந்த உலகில் நடக்கும் நிலையே சாலமோன் இங்கு சொல்கிறார். அதாவது "மரித்தவன் இந்த பூமியில் நடப்பது ஒன்றையும் அறியான், இனி அவனுக்கு இந்த பூமியில் எந்த ஒரு பலனும் இல்லை." என்பதே.
ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்து பிரிக்கபட்டு அந்தஇடத்தில் அவருக்கு உள்ள அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதே மரணம் எனப்படும்.
அதாவது மரணம் என்பதற்கு
termination of life./ the destroyer of life, என்றும் பொருள் கொள்ளமுடியும்.
அதாவது மரணம் என்னும் பேருள்ள ஒரு தூதன் (வெளி 6:8) இந்த் பூமியில் உள்ள ஒருவரை பிடித்து மறைத்து விடுகிறான். அவனது பூமிக்குரிய வாழ்வு முடிவுக்கு வருகிறது அவனது மாம்சம் மண்ணுக்கு திரும்பிவிடுகிறது.
இதையே நாம் மாம்ச மன்றம் என்று கூறுகிறோம்.
ஆத்துமாவையும் அதேபோல் கொல்ல முடியும் என்று வேதம் சொல்கிறது. அதாவது பாவம் செய்த ஆத்துமாவை தேவன் "நித்திய ஆக்கினையில் தள்ளி. அவனை நித்தியத்தில் இருந்து மறைப்பது நித்திய வாழ்வில் பங்கும் பாத்திரமும் இல்லாமல் செய்வது அல்லது நித்திய வாழ்வை முடிவுக்கு கொண்டுவருவதுதான் ஆத்தும மரணம் எனப்படும்.
அதை தேவன் ஒருவரே செய்ய வல்லவர்!
மத்தேயு 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
எனவே "பாவம் செய்யும் ஆத்துமாவே சாகும்" என்பதன் பொருள், ஆத்துமாவை நரகத்தில் தள்ளி நித்தியத்திலிருந்து அழிப்பதையே குறிக்கும்.
வெளி 20:15ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
வேத புத்தகம் சரீர மரணத்தை "மரணம்" என்றும் ஆத்தும மரணத்தை "ஆத்தும மரணம்" என்றோ அல்லது "இரண்டாம் மரணம்" என்றோ
விளக்கியுள்ளது.
-- Edited by SUNDAR on Friday 25th of March 2011 10:13:20 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
////தசம பாகம் கொடுத்தே தீர வேண்டுமா ? எஸ் என்றால் யாருக்கு ?
ஒரு சர்ச் ல் 10000 சம்பளம் வாங்கும் 10 பேரும்,
50000 சம்பளம் வாங்கும் 20 பேரும் மீதி கொஞ்சம் பேரும் இருந்தால்
அந்த சர்ச் ன் மாத வருமானம் 110000
வருடத்தில் 1320000
வித் அவுட் இன்கம் டாக்ஸ் டேடக்சன்
ஒரு முதல்வரின் மத வருமானம் இது
வியர்வை சிந்தாமல் சம்பாதிக்கும் முறையாக இது எனக்கு தோன்றுகிறது ////
சபையில் கொண்டு மொத்த தசமபாகத்தை கொடுப்பதிலோ அல்லது முற்றிலும் கொடுக்காமல் இருபதிலோ எனக்கு உண்டபாடு இல்லை
தசம பாகம் குறித்த எனது கருத்தை நான் தெளிவாக கீழ்கண்ட திரியில் பதிந்துள்ளேன் சகோதரரே அதில் தாங்கள் எல்லா கேள்விக்கும் பதில் இருக்கிறது என்று கருதுகிறேன்.
ஞானஸ்தானம் என்பது நமது கீழ்படிதலை நிரூபிக்கும் ஒரு தேவ நீதி என்றே நான் கருதுகிறேன். இந்த ஞானஸ்தானம் என்பது அச்சுஅசல் தீர்க்கதரிசியாகிய எலியா மற்றும் நாகமான் வரலாற்றுக்கு ஒப்பாக இருக்கிறது.
குஸ்டம் என்னும் நோய் குணமாகவேண்டி வந்த நாகமானை எலியா யோர்தானில்
போய் முங்கி எழும்பும்படி கூறுவான்
II இராஜாக்கள் 5:10. அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்
முதலில் கடும் கோபம் கொண்ட நாகமன், பின்னர் சமாதானம் அடைந்து யோர்தானில் மூழ்கி எழுந்து சுகமாவான். இந்த அருமையான சம்பவம் 2 ராஜாக்கள் 5ம் அதிகாரத்தில் உள்ளது.
இதே சம்பவத்தை பாவம் என்னும் குஸ்டம் பிடித்து நீக்க முடியாமல் ஆண்டவராகிய இயேசுவிடம் வந்து நிற்கும் ஒரு மனிதனுக்கு ஒப்பிடலாம்.
நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்த இயேசு சொல்கிறார்
மத்தேயு 3:15இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று
அவ்வு தேவ நீதிக்காக் தண்ணீருக்குள் மூழ்கி எழும்பும்போது அவர் நம்மை புதிய மனிதன் ஆக்குகிறேன் என்று. இந்த சின்ன தேவ நீதிக்கு கீழ்படிதலை அவர் எதிர்பார்க்கிறார் . மற்றபடி அங்கு பழைய மனிதன் நீரில் அமிழ்ந்துவிடுவதும் புதிய மனுஷன் எழுவதும் எல்லாமே ஒரு இன்டிகேசன்தான்.
ஒருவர் ஞானஸ்தானம் என்ற பெயரில் நீரில் மூழ்கி எழுவதால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படபோவது இல்லை. மாறாக தேவநீதியை நிறைவேற்றிய தேவனின் இந்த எதிர்பார்ப்புக்கு அவன் கீழ்படிய வேண்டியது அவசியமாகிறது. இதற்க்கு கூட கீழ்படியமாட்டேன் என்றும் பிடிவாதம் பிடித்து பட்ச்சபதம் பண்ணினால் அவர்களுக்கு பாவ குஸ்டம் நீங்காமல் கூட போகலாம். எனவே எல்லாம சாதகமானநிலை இருந்தால் மூழ்கி ஞானஸ்தானம் எடுத்துகோள்வதே சிறந்தது.
இன்னும் ஒரு காரியத்தை கூட இங்கு நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். புறஜாதியானாக இருந்த ஆபிரஹாம் கர்த்தரின் அழைப்பை ஏற்று, அவரை விசுவாசிததற்கு அடையாளமாக விருத்தசேதனம் என்னும் தேவ நீதியை நிறைவேற்றினான்.
ரோமர் 4:11மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான்
அதுபோலமே ஞானஸ்தானமும் ரட்சிக்கப்பட்டதன் அடையாளமான ஒரு "தேவநீதியின்" நிறைவேறுதல்.
மேலும் இந்த கருத்துக்கள் சம்பந்தமான விவாதங்களை கீழ்கண்ட திரியில் முன்வைக்கலாம்.
ஞானஸ்தானம் எடுத்தவர்கள் எல்லாம் பரலோகம் போவார்களா ??
நீங்களோ நானோ கூட பரலோகம் போவோமா மாட்டோமா என்பது தேவனின் கரத்தில் இருக்கும் பட்சத்தில், ஞானஸ்தானம் எடுத்தவர் எல்லோரும் போவார்களா என்பதை நம்மால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்.
என்ற வசனத்தின் அடிப்படையில், ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என்பதை அறிய முடிகிறது! ஆனால் அவன் பரலோகம் போவானா மாட்டான என்பது தேவனுக்கே வெளிச்சம். ஆனால் அவரின் வார்த்தைக்கு செவிகொடுத்து
அந்த நீதியை நிறைவேற்றுவது நமது கடமை.
Kanna wrote:
////அப்படி இருக்க சிலுவை கள்ளனனுக்கு யார் ஞானஸ்தானம் கொடுத்தது .?/// -----------------------------------------------------------------------------------------------------------
இது தேவையில்லாத கேள்வி என்றே நான் கருதுகிறேன் காரணம் தேவன் நினைத்தால் எதை எப்படி வேண்டுமானாலும் செய்ய முடியும் அவரிடம்போய் "நீர் இதை ஏன் இப்படி செய்தீர்? நீர் செய்ததற்கு வசன ஆதாரம் தாரும்" "கள்ளனை மட்டும் ஞானஸ் தானம் இல்லாமல் என் எடுத்துகொண்டீர் என்று கேட்க முடியுமா?
"சிலுவையில் அறையப்பட்டு உயிருக்கு போராடும் கடைசி நேரத்தில் ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொண்டாலோ அல்லது எந்த ஒரு மரணத்தின் விளிம்பில் ஞானஸ்தானம் எடுப்பதற்கு போதியவசதி நேரமில்லாமலிர்க்கும்போது இயேசுவை
ஏற்றுக்கொண்டலும்கூட அவர்களுக்கு விடுதலை உண்டு" என்பதையே இந்த காரியம் நமக்கு அறிய தருகிரதேயன்றி, "கள்ளன் எடுக்கவில்லை அதனால் நானும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கருதுவது சரியானது அல்ல.
ஒரு அரசாங்க வேலைக்கு ஜாதிவாரியாக விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது பொதுவான ஒரு நிலையில் இருப்பவர் "அவருக்கு மட்டும் என் வயது வரம்பு 45 எனக்கு மட்டும் 35 என்று கேட்கமுடியதல்லவா?
அதுபோல் அவரவர் தகுதிக்கும் இருக்கும் நிலைக்கும் தகுந்தால்போல் தேவன் நியாயத்தையும் கீழ்படிதலும் எதிர்பாக்கிறார்!
Kanna wrote:
///ஞானஸ்தானம் எடுப்பவர்கள் எல்லாம் உண்மையாக மனம் திரும்பி வாழ்கிறார்களா ? இல்லை என்றால் ஏன் இந்த ஏமாற்றுவேலை ?///
வேதம் கைகொள்ள சொல்லியுள்ள ஒரு காரியத்தை ஏமாற்றுவேலை என்று சொல்வது சரியல்ல சகோதரரே!
யோவான் 3:5இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
தேவனின் ராஜ்யத்துக்கு போவதற்கு அடிப்படை தகுதி ஞானஸ்தானம்தான். பார்க்க போனால் அது ஒன்றுமில்லாததுபோல் தெரியும். ஆனால் அந்த ஒன்றுமில்லாத காரியத்துக்கு கீழ்படிவதன் மூலம்தான் தேவன் நம்மை தேவராஜ்யத்துக்கு தெரிவு செய்கிறார்.
ஞானஸ்தானம் எடுத்த ஒருவன் தவறான காரியங்களில் ஈடுபட்டால் ஞானஸ் தானத்தை குறைகூறுவதற்கு அங்கு எந்த முகாந்திரமும் இல்லை சகோதரரே.
இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவன் பாவம் செய்தால் இயேசுவை குறைகூறுவது நியாயமாகுமா?
அடுத்தவர் செய்யும் ஒழுங்கீனங்கள் மற்றும் மீருதல்களுக்கு அவரவருக்கு தகுந்த தண்டனை உண்டு. அது கர்த்தருக்கடுத்த காரியங்கள் அதைஅவர் பார்த்துகொள்வார்
நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்து அதை தேவனின் விருப்பத்துக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டியதுதான் நம்மேல் விழுந்த கடமையே அன்றி அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக இருந்தும் அடுத்தவரை காரணம் காட்டி நாம் எஸ்கேப் ஆக நினைப்பது நம்மேல் தேவ கோபத்தையே ஏற்ப்படுத்தும் .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
////////உயிருக்கு போராடும் கடைசி நேரத்தில் ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொண்டாலோ அல்லது எந்த ஒரு மரணத்தின் விளிம்பில் ஞானஸ்தானம் எடுப்பதற்கு போதியவசதி நேரமில்லாமலிர்க்கும்போது இயேசுவை ஏற்றுக்கொண்டலும்கூட அவர்களுக்கு விடுதலை உண்டு" /////////
கடைசி நேரத்தில் மனம் திரும்பினால் ரட்சிப்போ ????
ஒரு பாவி சாகும்போது நாராயணா என்று 2 முறை சொன்னதால் சொர்க்கம் போனது போலவோ ?
நன்றி சகோதரா உமது விளக்கத்திற்கு ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழம் தேவை
__________________
வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு
கடைசி நேரத்தில் மனம் திரும்பினால் ரட்சிப்போ ???? ஒரு பாவி சாகும்போது நாராயணா என்று 2 முறை சொன்னதால் சொர்க்கம் போனது போலவோ ? நன்றி சகோதரா உமது விளக்கத்திற்கு ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழம் தேவை
உங்களை போன்றவர்களுக்கு தேவ குமாரன் ஒரு உதாரணம் வேதத்தில் சொல்லி இருக்கின்றார்
மத்தேயு 20
13. அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
14. உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
15. என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
கர்த்தருடைய வார்த்தையை கேட்டு கை கொண்டு நடந்தால் நித்ய ஜீவனை தருவேன் என்று நமக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறார்
அதே போல் ஒரு நிமிடமோ அல்லது ஒரு மணி நேரமோ அவரை ஆண்டவர் என்றும் அவர்தான் தேவ குமாரன் என்றும்
விசுவாசித்து அறிக்கை செய்தால் போதும் அவனுக்கு மீட்பு உண்டு
ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
////நான் கிறிஸ்தவனாக வாழ ஞானஸ்தானம் வேண்டுமா !!///
சகோதரர் Kanna அவர்களே, இங்கு நாம் என்ன நினைக்கிறோம் நமது தெரிவு என்னவென்பது ஒரு பொருட்டே அல்ல ! வேத வசனம் என்ன சொல்கிறது என்பதை மாத்திரம் நாம் நோக்குவோம்.
நீதிமொழிகள் 14:12மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
என்று வேதம் சொல்வதால், நாம் என்ன கருதுகிறோம் என்பதைவிட வேதம் நமக்கு என்ன அட்வைஸ் பண்ணுகிறது என்பதை நோக்குவதே சிறந்தது. அவ்வாறு பார்க்கையில் "நான் கிறிஸ்தவனாக வாழ ஞானஸ்தானம் வேண்டுமா? என்ற தங்கள் கேள்விக்கு எனது பதில்
///கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று நான் விசுவசித்து அறிக்கை எடுகிறேன்!///
நல்லது சகோதரே! ஆனால் பிசாசுகளும்கூட அவ்வாறு அறிக்கையிடுகிறது என்ற்றனல்லவா வேதம் சொல்கிறது
லூக்கா 4:41பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது.
இதில் நாம் அறிக்கையிடுவதில் பெரிதாக என்ன இருக்கிறது? தேவனின் ஆலோசனைக்கு கீழ்படிந்து அவரது கற்பனைகளின்படி வாழ்வதில்தான் சிறப்பு இருக்கிறது. அவ்வாறு கீழ்படிவதில் இந்த ஞானஸ்தானம் என்னும் செய்கையும் அடங்குகிறதே!
Kanna wrote:
////கிழ்படிதலை தான் தேவன் எதிர்பர்கிறார், ஞான ஸ்தானம் பெற்றும் கிழ்படியாமல் வாழ்வதால் என்ன பலன் ////
நல்ல கருத்து சகோதரரே! தாங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது ஆனால்"ஞானஸ்தானமும் கீழ்படிதலின் ஒரு அடையாளமே. என்பதை நாம் பலமுறை வலியுறுத்தி சொல்லியிருக்கிறோமே. நீங்கள் பத்து கடினமான கட்டளைக்கு கீழ்படிந்து ஒரு மிகசுலபமான கட்டளையை உதாசீனம் செய்து ஒரு மோசேயை போல ஒரு சவுலைபோல ஏன் உங்கள் மேன்மையானை அழைப்பை இழக்க வேண்டும்?
செயற்கரிய செய்கைகைகளை செய்த வேதாகம மனுஷர்கள் கூட சிறிய ஒரு தவறு அல்லது மீருதல்மூலம் தங்கள் மேன்மையை இழந்த சம்பவம் அநேகம் வேதத்தில் உண்டு
சிறியகாரியம் என்று அலட்சியம் பண்ணாமல் எல்லாவிதத்திலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதே எனது வாஞ்சை!
Kanna wrote:
///அக்காலத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் அழியவில்லையாஅல்லது இக்காலத்தில் அழியவில்லையா///
சகோதரர் அவர்களே ஒரு வேலைக்கு ஒன்பது மணிக்கு சரியாக அலுவலகத்துக்குள் வரவேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் சரியாக ஒன்பது கனிக்கு வந்துவிடீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக உங்களுக்கு அந்த நாளுக்கான சம்பளத்தை கொடுத்துவிட மாட்டார்கள். சரியான நேரத்துக்கு வந்த நீங்கள் சரியாக வேலையும் பார்க்க வேண்டும் இல்லையேல் வந்த வழியே திருப்பி அனுப்பப்படலாம்.
அதுபோலவே விருத்தசேதனம் மற்றும் ஞானஸ்தானம் என்பது ஒரு அடையாளம் போன்றது. அந்தே ஒரே அடையாளத்திநிமித்தம் நீங்கள் முழும்யானவர் என்று தீர்த்துவிட முடியாது வேத வசனங்களுக்கு கீழ்படிதல் அவசியம். ஆனால் அந்த முதல்நிலை அடையாளம் இல்லை என்றால் உங்களின் மற்ற கீழ்படிதலுக்கு பயனில்லாமல் போகலாம் அல்லவா?