(Holy Spirit) • தேவன் பரிசுத்தர் . அவரிடத்தில் இருந்து வரும் காணப்படாத அவருடைய சக்தியை பரிசுத்த ஆவி என்று சொல்லபட்டுள்ளது.
• பரிசுத்த ஆவி அநேக தீர்க்கதரிசிகளுக்கும், பக்தர்களுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய சபையாருக்கும் பற்பல தெய்வீக காரியங்களைச் செய்யக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
உன்னதமானவரின் பலம் லூக் 1:35; … பரிசுத்த ஆவி உன் மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்.
லூக் 24:49; …. நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்.
அப். 10:38; (இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியானாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார். ) எபிரேய மொழி – Ruach - ரூவாக் கிரேக்க மொழி – Pneuma - நூமா. தேற்றரவாளன்.
• இயேசு வாக்குத்தத்தம் செய்த பரிசுத்த ஆவியை தேற்றரவாளன் என்று சொல்லியிருப்பதால் அதை ஓர் ஆளாக சிலர் சாதிக்கிறார்கள். யோவா 14:16; ….அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூடு இருக்கும்படிக்கு, சத்திய ஆவியாகிய வேறௌரு தேற்றரவாளனை அவர் உங்களுக்கு தந்தருளுவார்.
யோவா 16:7; தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேன் ஆகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
யோவா.16:13; சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.
லூக் 24:49; இயேசுவோ பரிசுத்த ஆவியை உன்னதத்திலிருந்து வரும் பெலன் என்று கூறுகிறார். இந்த சத்திய ஆவியை தேவன் பெந்தேகோஸ்தே என்னும் நாளில் சபையார்மேல் ஊற்றினார் (அல்லது)பொழிந்தருளினார்.
அப் 2:1-4; பெந்தகோஸ்தே என்னும் நாள் வந்த போது…. அப் 2:17; கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.
அப் 2:33; அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி, பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
• தேற்றரவாளன் ஓர் ஆளாக வரவில்லை.
• வாக்குத்தத்தத்தின்படி தேவனுடைய ஆவியாகிய பலன் ஊற்றப்பட்டது.
காரணம் :
• கிரேக்க பாஷையில் உயிர்இல்லா பொருட்களையும், அவர், இவர், என்று சொல்லப்படும்.
• ஆங்கிலத்திலும் சூரியனை அவனென்றும் , சந்திரனை , கப்பல் போன்ற சிறப்பான பொருட்களை அவள் என்றும் சொல்லப்படும். இது போலவே பரிசுத்த ஆவியை கிரேக்க பாஷையில் உயர்திணையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
“பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல”
1. 1கொரி. 2:11; மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?அப்படி போலவே தேவனுடைய ஆவியேயன்றி (பரிசுத்த ஆவி) ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். “ மனுஷனில் உள்ள ஆவி – மனித ஆவி.” மனித ஆவி எப்படி ஆள் இல்லையோ அதே போல தேவ ஆவியை தனி ஆள் என்று கூறமுடியாது.
2. ஆங்கில மொழிபெயர்ப்பில் (KJV) Holy Sprit என்று சரியாக போடப்பட்டிருக்கிறது. தமிழ் வேதாகமங்களில் பரிசுத்தஆவியானவர் என்று சில இடங்களில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிதாவிடமிருந்து ( பரிசுத்தரிடமிருந்து)அனுப்பப்படும் இந்த வல்லமையை இயேசு கிறிஸ்துவும் கூட பிதாவிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டியதாய் இருந்தது.
3. திருத்துவ கொள்கைப்படி 3பேரும் சமமானவர்களாக இருக்கும் போது, பிதாவாகிய தேவன் குமாராகிய தேவனுக்கு பரிசுத்த ஆவியாகிய தேவனால் ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்? Ans: அப் 10:38;
4. தேவன் பரிசுத்த ஆவியை தமது குமாரனுக்கு அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். யோவா 3:34; ஒரு ஆளை அளவோடும் அளவில்லாமலும் கொடுக்க முடியுமா?
6. அப் 10:45-46;பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள் மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்து பிரம்மித்தார்கள். அப் 2:4 ; நிரப்பப்பட்டு அப் 2:33; பொழிந்தருளினார். யோவேல் 2:28-29 ; நான் மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். ஒரு ஆளை நிரப்பவோ, பொழியவோ, ஊற்றவோ முடியுமா?
7. பிதாவாகிய தேவனுக்கு நாமம் - யேகோவா குமாரனாகிய தேவனுக்கு நாமம். - இயேசு பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கு நாமம்- என்ன? Ans: இல்லை. ஏனெனில் பரிசுத்த ஆவி ஆளாக இருந்திருந்தால் அவருக்கு நாமம் இருந்திருக்கும் பரிசுத்த ஆவி ஆள் அல்ல.
8. யோவா 16:13; சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். சத்திய ஆவி – அவர் - தேற்றரவாளன். (யோவா 14:16;16:7;)
1யோவா 4:6; இதனாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். வஞ்சக ஆவி ஆளா? Ans: இல்லை. எப்படி வஞ்சக ஆவி ஆள் இல்லையோ அதே போல சத்திய ஆவியும் ஓர் ஆள் அல்ல. சத்திய ஆவியானவர் - (Sprit of Truth) யோவா 14:17 சத்திய ஆவி ---------- (Sprit of Truth) 1யோவா 4:6; வஞ்சக ஆவி ------------(Sprit of Error) வஞ்சக ஆவியை வஞ்சக ஆவியானவர் என்று மொழி பெயர்த்தால் இன்னொரு சாத்தான் இருப்பதாக பொருள் மாறிவிடும் . எனவே சாத்தன் ஒருவனே என்பதால் வஞ்சக ஆவி , என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, யோவா 14:17 ல் சத்திய ஆவியானவர் என்று மொழிபெயர்த்தது தவறு என்பதையும் அறிந்துகொள்கிறோம்.
12. அப்போஸ்தலர் நிரூபங்களின் துவக்கத்தில் சபைகளுக்கு ஆசிர்வாதம் கூறும் போது பரிசுத்த ஆவியாகிய தேவன் பேரில் கூறுவதில்லையே ஏன்?
13. வேதத்தின் முக்கிய நோக்கம் “நித்திய ஜீவனை ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டும் என்பது.”யோவா 17:3; 1. “ஒன்றாகிய மெய் தேவனாகிய பிதாவையும்” 2. “அவரால் அனுப்பப்பட்ட இயேசுவையும்” அறிவதே நித்திய ஜீவன் 3. பரிசுத்த ஆவியாகிய தேவன் எங்கே?.
14. பவுல் சொல்கிறார். 1கொரி 8:5-7; “பிதாவாகிய ஒரே தேவன் உண்டு. இயேசு கிறிஸ்து என்னும் கர்த்தரும் உண்டு.” பரிசுத்த ஆவியாகிய தேவன் உண்டு என்றால் இந்த இடத்தில் சொல்லியிருக்க வேண்டுமே!.
15. யோவா 14:1; இயேசு யாரை விசுவாசிக்க வேண்டும் என்று சொல்கிறார்? 1. பிதாவாகிய தேவனையும் 2. தன்னையும் விசுவாசிக்க வேண்டும் என்று கூறுகிறார். பரிசுத்த ஆவி தேவனாகயிருந்தால் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று கூறியிருப்பாரே!
23. நீதி 30:4; பிதாவினுடைய நாமம் என்ன? குமாரனுடைய நாமம் என்ன? இதை அறிவாயோ? பரிசுத்த ஆவியானவருடைய நாமம் என்ன? என்று சொல்லப்படவில்லையே.
24. அப் 7:55; தேவனுடைய மகிமையையும் இயேசு வலது பரிசத்திலே நிற்கிறதையும் ஸ்தேவான் பார்த்தார். பரிசுத்த ஆவியானவர் நிற்கிறதை பார்த்தாரா?
25. யோவா 17:3; ஒன்றான மெய்தேவன் என்று தான் வேதத்தில் இருக்கிறது. எங்கேயாவது திரியேக தேவன் என்று வேதத்தில் உண்டா?
26. 2கொரி.13:14; “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும் , தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக. ” பரிசுத்த ஆவி என்று தான் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் என்று இல்லை. உங்களிடம் கிருபையும், அன்பும் , சகோதர ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக என்ற பொருள்படும்படி சொல்லப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியை பெற்ற அனைவரும் ஒரே சபையாக, ஒரே சரீரமாக ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்று பவுல் ஆசிர்வதிக்கிறார்.
27. லூக். 1: 35 ல் பரிசுத்த ஆவியை ஓர் ஆள் தத்துவமுள்ளவராக ஏற்றுக்கொண்டால்? (“பரிசுத்த ஆவி உன் மேல் வரும்” உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்”) பரிசுத்த ஆவியானவருக்கும் மரியாளுக்கும் பிறந்தவர் தான் இயேசு என்று பொருள்படும். இப்படி பொருள் எடுபோமானால் இப்படி பல விபரீதமான எண்ணம் ஏற்படும்.
இந்த எண்ணம் ஏற்படாத வகையில் (Power) என்று வேதமும், இயேசுவும் கூறுகிறார்.
நாம் சொல்லும் ஒரு கருத்துக்கான உண்மை தன்மையை தீர்மானிக்கும் முன் அது சம்பந்தமாக வேதத்தில் சொல்லபட்டிருகும் எல்லா வசனங்களையும் ஆராய்ந்து ஒரு முடிவுக்குவராமல் சிலவசனங்களை பிடித்துகொண்டு அதன்படியே உண்மையை தீர்மானிக்க விரும்புகிறவர்கள் ஒருநாளும் சரியான உண்மையை அறிந்துகொள்ள முடியாது.
இரண்டு தண்டவாளங்கள் இருந்தால்தான் இரயில் ஓடும் ஒரே தண்டவாளத்தில் இரயில் ஓட்ட முடியாது. எனவே தாங்கள் குறிப்பிடும் வசனத்தை மட்டுமே முடிவாக தீர்மானித்துவிட்டு அடுத்தவர் குறிப்பிடும் வசனத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் விடுவது சரியான ஒரு நிலை அல்ல. அப்படி ஒரு போதனை செய்வதால் அது தவறான ஒரு கொள்கைக்கே வழி செய்யும் என்பதை அறிய வேண்டும்
உதாரணமாக பரிசுத்த ஆவியானவரை பற்றி எடுத்துகொண்டால்: அவரை உன்னதத்தில் இருந்து வரும் பெலன் என்று ஒரு வல்லமையாக கீழ்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.
லூக் 24:49; …. நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்.
அதே நேரத்தில் அவர் ஆள்தத்துவம் உள்ளவர் என்றும் வேதம் தெளிவாக சொல்கிறது
எபேசியர் 4:30அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்
ஒரு வல்லமையால் யாருக்கும் கட்டளையிடவும் முடியாது! ஒரு வல்லமையை யாரும் துக்கப்படுத்தவும் முடியாது.! கட்டளையிடுவதும்
துக்கப்படுவதும் ஒரு ஆள்தத்துவம் உள்ளவர்கள் செய்யும் காரியங்கள்.
இவ்வாறு இருபுறமும் வசனங்கள் இருக்கும் பட்சத்தில் தாங்கள் நம்பும் "ஆவியானவர் வெறும் வல்லமைதான்" என்ற ஒருபுறவசனத்தை பிடித்துகொண்டு போதிப்பதுதான் ஒரே தண்டவாளத்தில் வண்டி ஓட்ட முயல்வது.
ஆவியானவர் ஒரு வல்லமை என்பதை எப்படி ஒருசில வசனத்தை அடிப்படையில் சொல்கிறீர்களோ அதேபோல் ஆவியானவர் ஆள்தத்துவம் உள்ளவர் என்பதை நாமும் சில வசன ஆதாரத்துடன் கூறுகிறோம். நீங்கள் சொல்வதை நான் மறுக்க வில்லை ஆனால் நான் சொல்வதை ஏன் உங்களுக்கு ஏற்க்க மனதில்லை?
இப்பொழுது
வேத வசனங்களை முழுமையாக நம்பினால் "ஆவியானவர் ஒரு வல்லமை" என்று வசனத்தின் ஏற்றுக்கொண்ட நீங்கள் அவர் ஒரு ஆள்தத்துவம் உள்ளவரும் கூட என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதாவது ஆவியானவர் என்பவர் "ஆள்தத்துவம் உள்ள வல்லமை" என்று ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் எந்த வசனத்தையும் ஏற்காதீர்கள்.
ஓன்று இரண்டு தண்டவாளத்தில் இரயில் ஓட்டுங்கள் அல்லது ரயிலே ஓட்டாதீர்கள். ஒரு தண்டவாளத்தில் ரயில் ஓட்டினால் ஓட்டுபவரும் விழுந்து அதில் பயணிப்போரும் விழ நேரிடும்.
-- Edited by SUNDAR on Saturday 26th of March 2011 11:04:28 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஏசா 34:16 கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது. அவருடைய வாய் இதை சொல்லிற்று. அவருடைய ஆவி இவைகளைச் சேர்க்கும்.
ஒன்றும் ஜோடில்லாதிராது எபே. 4:30; ஜோடி எங்கே ? pls ans...
ஏசா 34:16 கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது. அவருடைய வாய் இதை சொல்லிற்று. அவருடைய ஆவி இவைகளைச் சேர்க்கும்.
ஒன்றும் ஜோடில்லாதிராது எபே. 4:30; ஜோடி எங்கே ? pls ans...
சகோதரர் nissi அவர்களே பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆள்தத்துவம் உள்ளவரா என்பதையே இங்கு விவாதிக்கிறோம் அவர் "ஆள்தத்துவம் உள்ளவர்" என்பதை திட்டமாக சொல்லும் அனேக வசனங்கள் வேதத்தில் உள்ளது. அதில் இரண்டு வசனங்களை மட்டுமே தங்களுக்கு நான் சுட்டியிருந்தேன்.
இன்னும் இயேசு சொல்லிய சில வசனங்களை இங்கு தருகிறேன்.
யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
இங்கு ஒரு வல்லமையால் யாருக்கும் போதித்து நினைப்பூட்ட முடியாது என்பதை அவதானிக்கலாம்.
யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.
வெறும் வல்லமையால் மனுஷனைபோல இன்னொருவரை குறித்து சாட்சி கொடுக்க முடியுமா என்பதை சற்று யோசியுங்கள்.
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
இங்கு மிக தெளிவாக சொல்லபட்டுள்ள உங்களை நடத்துவார்/ உங்களுக்கு சொல்லி அறிவிப்பார் போன்ற செயல்களை ஒரு ஆள்தத்துவம் உள்ளவ ரேயன்றி வெறும் வல்லமையால் செய்ய முடியாது என்பதை அறிய முடியும்.
சரிசகோதரரே! "நீங்கள் பரிசுத்தத்ஆவியை வெறும் வல்லமைஎன்று சொல்கிறீர்கள்" அந்த வல்லமைக்காக தாங்கள் யாரிடமாவது ஜெபித்திருக்கிரீர்களா? அல்லது கீழ்கண்ட வழி முறைகளில் ஏதாவது ஒன்றின்மூலம் அதன் வல்லமையை பெற முயன்றிருக்கிறீர்களா?
முதலில் உங்கள் ஆராய்ச்சி கருத்தை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு சற்று முயற்சி எடுத்து வேதம் காட்டும் வழியில் அந்த வல்லமையை பெறுவதற்கு சற்று முயன்று பாருகள். பின்னர் நீங்களே அவர் ஒரு ஆள்தத்துவம் உள்ளவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். கேள்வி ஞானத்தைவிட அனுபவ ஞானம் என்பது அதிக சக்தி வாய்ந்தது. எனவே முயன்று பாருகள்
லூக்கா 11:13பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோதரர் nissi , தாங்கள் வேதத்திலே ஆவியானவரை எங்கெல்லாம் ஆவி என்று சொல்லப்பட்டு இருக்கிறதை எடுத்து குறிப்பிட்டு ஆவியானவரை ஆள்தத்துவம் இல்லாதவர் என்று சொல்ல்லுகிரிகள் .
தாங்கள் இன்னொன்றையும் கவனிக்கும்படி அன்பாய்கேட்கிறேன். ஒருபுறம் தாங்கள் சொல்வதுபோல் காணப்பட்டலும் இன்னொருபுறம் அவருடைய ஆள்த்துவத்தை குறிப்பிடும் வசனமும் உள்ளது.
தங்களுடைய பார்வைக்கு நான் இங்கு வைக்கிறேன். சற்று நிதானமாக திறந்த மனதுடன் வாசிக்கும்படி வேண்டுகிறேன்.
மாற்கு 1:10 அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
மாற்கு 1:12 உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
யோவான் 1:33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.
அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர் : நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;
அப்போஸ்தலர் 8:39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
அப்போஸ்தலர் 10:19 பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர் : இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
அப்போஸ்தலர் 13:2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 21:11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
ரோமர் 8:26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
I பேதுரு 1:11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
I பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
I யோவான் 5:6 இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
சகோதரே நான் தாங்கள் சொல்வதுபோல ஆவியானவர் சில நேரங்களில் ஆள்தத்துவம் இல்லாதவராய் வேதம் வெளிபடுத்திருகிறது. அதை நானும் வேத வசனத்தின்படி நானும் ஏற்றுகொள்கிறேன்.
அதைபோல் அவர் ஆள்தத்துவம் உள்ளவர் என்பதை வேதம் அதைகட்டிலும் அதிகமான இடங்களிலே சொல்லப்பட்டு இருக்கிறதே தாங்கள் ஏன் அதை ஏற்க மனதில்லாமல் இருகிறேர்களே ....
நான் அவரை ஆள்தத்துவம் உள்ளவராய் அறிவதற்கு முன்பு வரை அது ஒரு ஆவி அல்லது வல்லமை என்றுதான் நினைத்திருந்தேன். அது தவறு அல்ல ஆனால் முழுமையாய் அறியாமல் அவருடைய ஒரு தன்மையை மாத்திரம் அறிந்து அதுமட்டும்தான் என்று சொல்லுவது முற்றிலும் தவறு சகோதரே...........
-- Edited by Stephen on Saturday 9th of April 2011 12:20:27 PM
-- Edited by Stephen on Saturday 9th of April 2011 12:22:40 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
இந்த ஒரு வசனம் போதும் எனக்கு
சுருக்கமாக நான் எழுதுகிறேன் பரிசுத்த ஆவியானவர்ரூபம் கொண்டு புறாவை போல் வந்து ஆண்டவர் மேல் இறங்கினார்
இந்தகாரியத்தை நீங்கள் நம்புகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்
நீங்கள் பரிசுத்த ஆவியானவரை வல்லமை மட்டும் தான் என்று கூறுகின்றீர்கள்
நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
பரிசுத்த ஆவியானவர் புறாவாக மாறி அதாவது புறாவின் மீது வந்து அல்ல அவர் புறாவை போலவே மாறி இருக்கின்றார்
நன்றாக கவனித்து பாருங்கள் ரூபம் கொண்டு புறாவை போல் வந்து என்று தெளிவாய் கூறி இருக்கின்றது
இப்படி பரிசுத்த ஆவியானவர் அவர் இஷ்டபடி ரூபம் எடுக்க முடிகின்றது என்றால்
அவரால் ஒரு மனிதனாகவோ அல்லது ஒரு தெய்வ ரூபமாகவோ மாற முடியாதா
நான் சொல்கின்றேன் அவர் கழுதையை பேச வைக்க வல்லமையாகவோ கழுதையின் மீது இறங்கினார் (பிலேயாமின் கழுதை)
இயேசு மீது வந்து தங்க புறாவை போல மாறினார்
மோசே மற்றும் பல பரிசுத்தவான்களிடத்தில் தேவ தூதர்கள் பேசினார்கள் அல்லவா அந்த தூதர்கள் உள்ளத்தில் வந்து தங்கி அவர் கூட பேசி இருப்பார் இந்த காரணத்தினால் தான் தூதர்களையும் கர்த்தர் என்று வேதம் குறிப்பிடுகின்றது என்று நான் எண்ணுகின்றேன்
லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
நன்றாக கவனித்து பாருங்கள் ரூபம் கொண்டு புறாவை போல் வந்து என்று தெளிவாய் கூறி இருக்கின்றது
சகோதரர் ரோஷன் அவர்களே இங்கு சகோ. எட்வின் சுதாகர் அவர்கள் ஓர் முக்கியமான கருத்தை முன் வைத்துள்ளர்கள் அதாவது
"பரிசுத்த ஆவியானவர்ரூபம் கொண்டு புறாவை போல் வந்து ஆண்டவர் மேல் இறங்கினார்"
பரிசுத்த ஆவியானவர் வெறும் வல்லமை மட்டும்தான் என்று போதிக்கும் தாங்கள், வெறும் வல்லமையால் ரூபம் கொள்ள முடியுமா என்பதை ஆராயும்படி அன்புடன்கேட்கிறோம்.