யோவா 20:17; நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன். இஸ்ரயேல் ஜனங்களின் பிதாவும் , தேவனுமாகிய யேகோவாவே இயேசுவுக்கும் பிதாவும் , தேவனுமாயிருக்கிறார்.
யோவா 17:25; பிதாவே உலகம் உன்னை அறியவில்லை. பிதாவை யார் அறிந்து கொள்வார்கள்?
மத் 11:27; குமாரன் எவனுக்கு அவரை (பிதாவை ) வெளிப்படுத்தச் சித்தமாய் இருக்கிறாரோ அவனும் தவிர , வேறொருவனும் பிதாவை அறியான். (லூக் 10:22)
பிதாவாகிய தேவன் யார்? தேவனாகிய கர்த்தர் யார்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்து யார்? என்பது உங்களுக்கும் தெரியவில்லை திரித்துவம் போதிப்பவர்களுக்கும் சரியாக தெரியவில்லை.
I கொரிந்தியர் 8:4ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். I கொரிந்தியர் 12:6எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
இந்த ஒரேதேவனே பிதாவாகிய தேவனாகவும் இருக்கிறார் தேவனாகிய கர்த்தராகவும் இருக்கிறார் பாவத்துக்கு பரிகாரியாக வந்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவாகவும் அவரே இருக்கிறார்.
இதில் யார் பெரியவர் யார் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை.
நான் ஏற்கெனவே சொன்னபடி "சமுத்திரம்"என்பது ஒன்றே ஒன்றுதான் அதன் பெயர்கள்தான்வேறு.
இப்பொழுது அட்லாடிக் ஓசனை நாம் பசிபிக் ஓசனை விட சிறியது சொல்கிறோம் ஏனெனில் அது அமைந்திருக்கும் நிலப்பரப்பு குறுகியது. மற்றபடி எல்லாம் ஒரே நீர்பரப்புதான்.
அதேபோல் ஆண்டவராகிய இயேசு
யோவான் 10:29 என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்;
என்று சொல்கிறார்! ஏனெனில் அவர் வந்த நோக்கம் மற்றும் அவர் எடுத்திருந்த அடிமை மாம்ச ரூபம் அவரை பிதாவைவிட சிறியவராக காட்டுகிறதேயன்றி மற்றபடி எல்லோரும் ஒருவரே.
யகோவா தேவனாகிய கர்த்தர் தன்னை தேவன் என்று சொல்வது போலவே பல இடங்களில் தனனை ஆண்டவராகிய இயேசுவாகவும் சித்தரித்து கூறியிருப்பதை வசனங்களில் அறிய முடியும்.
எனவே இங்கு பிதாவின் அடையாளம் என்னவென்று தனியாக எதையும் பிரித்து காட்டமுடியாது. பிதாவின் அடையாளத்தில் ஆண்டவராகிய இயேசுவும் அடங்குவார்!
இயேசுவை தன்னுள் அடக்காத பிதாவானவர் ஒரு முழுமை பெறாத தேவனின் நிலையேயன்றி வேறல்ல.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)