யோவா 14:9; பிலிப்பு என்னும் சீஷன் இயேசுவிடம் “பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என்று கேட்டான்.
யோவா 1:18; பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. யாத் 33:20; ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடுயிருக்க கூடாது என்றார். (யோவா.5:37; கொலோ.1:18; 1தீமோ.6:16-17) ஆகிய வசனங்கள் பிதா அதரிசனமானவர் என்று கூறக்கூடியதாக உள்ளது.
யோவா 14:7; என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரை கண்டும் இருக்கிறீர்கள். யோவா 8:19; எபே 1:17-19; இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர். தம்மை நீங்கள், அறிந்து கொள்வதற்காக… தாம் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி … தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் ,நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்
இந்த பதிவிலிருந்து தாங்கள் சொல்லவரும் கருத்து என்னவென்பது சரியாக புரியவில்லை சகோதரரே.
என்னுடைய விசுவாசத்தின்படி பிதாவாகிய தேவன் எல்லோரிலும் உயர்ந்தவர்
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்;
இவ்வார்த்தைகளை இயேசுவே தனது வாயால் சொல்லியிருக்க அந்த வார்த்தைக்கு சற்றும் மதிப்பு கொடுக்காமல், திரித்துவம் என்றொரு மூன்று சமதேவ கொள்கையை போதித்து இயேசுவை பிதாவுக்கு சமமாக்க அதிகமதிகமாக முயற்ச்சிகள் நடக்கிறது. அதைவிடுவோம்!
இங்கு இயேசு என்னை காண்கிறவன் பிதாவை காண்கிறான் என்று சொல்ல காரணம் என்ன?
தேவன் ஆவியாயிருப்பதால் அவரை ஒருவரும் ஒருகாலும் கண்டதில்லை என்று வேதம் சொல்கிறது.
யோவான் 6:46தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை
யோவான் 1:18தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,
ஏனெனில் அவர் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறார்
யோவான் 14:10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
இவ்வாறு அரூபமான பிதா மாம்சமான இயேசுவுக்குள் வாசம் செய்ததால், இயேசு "என்னை காண்கிறவன் பிதாவை காண்கிறான்" என்று சொல்ல முடிந்தது.
தேவன் நமக்குள்ளும் வந்து வாசம் செய்யமுடியும் ஏனெனில் வசனம் இவ்வாறும் சொல்கிறது
யோவான் 14:23ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
அவ்வாறு பிதாவும் இயேசுவும் ஒரு மனுஷனுக்குள் வந்து வாசம் பண்ணினாலும், மனுஷன் ஒருநாளும் "என்னை காண்கிறவன் தேவனை காண்கிறான்" என்று ஒருகாலும் சொல்லமுடியாது ஏனெனில் மனுஷனானவன் மண்ணினால் உருவாக்கபட்டவன் ஆனால் இயேசுவோ "தேவனின் வார்த்தையாக தேவனாக இருந்தவர்" எனவே அவர் மாத்திரமே அவ்வாறு சொல்ல முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)