இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1யோவான் 5:7யில் "பரிசுத்தஆவி" ???


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
1யோவான் 5:7யில் "பரிசுத்தஆவி" ???
Permalink  
 


1யோவான் 5:7யில் (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே; இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள், பரலோகத்திலே) என்று பிராக்கட்டுக்களுக்குள் காணப்படும் இந்த வசனம், திரியேகத் தத்துவத்தை ஸ்தாபிக்க ஏதோ ஒரு குருவானவரால் வேதாகமத்தில் கி.பி.500க்கு பிறகு தவறாக சேர்க்கப்பட்டுவிட்டது.

 ஆனால் இந்த வசனம் கி.பி.மூன்றாம் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வெகு பூர்வ கிரேக்க வேதாகமங்களில் இல்லாததால் இப்போது அச்சிடப்படும் எல்லா திருத்திய மொழிபெயர்ப்புகளிலும் இந்த வசனம் நீக்கப்பட்டிருக்கிறது.

தேவனுடைய வேதாகமத்தில் “ஒன்றும் கூட்டவும், ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” என்ற கட்டளைக்கு நேர் விரோதமாய்ச் சேர்க்கப்பட்ட வசனம். நியாயப்படி இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது உபா 4:2, வெளி 22:18-19.

ஒன்றான மெய்த்தேவனாகிய யேகோவா, அவர் அனுப்பிய அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து நமது இரட்சகர்; பரிசுத்த ஆவி, தேவனிடமிருந்து வரும் உன்னத பலன் என்று வேதாகமம் திட்டவட்டமாய் கற்பிக்கிறது.

www.biblegreatmystery.com

9750114410 cell no.



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
1யோவான் 5:7யில் ???
Permalink  
 


nissi wrote:

1யோவான் 5:7யில் (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே; இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள், பரலோகத்திலே) என்று பிராக்கட்டுக்களுக்குள் காணப்படும் இந்த வசனம், திரியேகத் தத்துவத்தை ஸ்தாபிக்க ஏதோ ஒரு குருவானவரால் வேதாகமத்தில் கி.பி.500க்கு பிறகு தவறாக சேர்க்கப்பட்டுவிட்டது.

ஒன்றான மெய்த்தேவனாகிய யேகோவா, அவர் அனுப்பிய அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து நமது இரட்சகர்; பரிசுத்த ஆவி, தேவனிடமிருந்து வரும் உன்னத பலன் என்று வேதாகமம் திட்டவட்டமாய் கற்பிக்கிறது.

www.biblegreatmystery.com

9750114410 cell no.


தாங்கள்  சொல்வதுபோல்  அடைப்பு  குறிக்குள் உள்ள இந்த வசனம் கூடுதலாக சேர்க்கபட்டிருக்கலாம்  ஆனால் அந்த ஒரே வசனத்தை  நீக்குவதன் மூலம் ஆவியானவர் வெறும் "தேவனின் வல்லமை" என்ற முடிவுக்கு நாம் எப்படி வரமுடியும்?

ஆவியானவரை ஆள்தத்துவம் உள்ளவராக காட்டும் வேறு வசனங்களே வேத புத்தகத்தில் இல்லையா சகோதரரே?
 
லூக்கா 12:12 நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
 
தாங்கள் தேவனிடம் இருந்து வரும் உண்ணத பெலன்  என்று சொல்லும்ஆவியானவரால் ஒருவருக்கு போதிக்கமுடியுமா  என்ற கேள்விக்கு என்ன பதில்?
 
அப்போஸ்தலர் 20:23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்
 
அப்போஸ்தலர் 21:11   இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
 
இங்கு பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறார் என்று வசனம் சொல்கிறது. தாங்கள் 'வல்லமை" என்று சொல்லும் ஒரு
"பெலத்தால்"இன்னொருவரிடம்  பேசமுடியுமா சகோதரரே?  
 
இன்னும் இதுபோல் அனேக வசனங்கள் வேதத்தில் உள்ளன!
 
ஒருவர் ஆள்தத்துவம் உள்ள மனுஷராக இருந்தால் அவருக்கு ஒரு பெலமும் இருக்கத்தான் செய்யும் அதன் மூலம் அவர் பேசலாம், நடத்தலாம், கடிந்து கொள்ளலாம் புத்திசொல்லலாம் எது வேண்டுமானாலும்  செய்யலாம். ஆனால் ஆள்தத்துவம் இல்லாத வெறும் "பெலம்" அல்லது  "வல்லமை"க்கு பேசி போதிக்கும் சக்தி இருக்க முடியாதே.  
 
எனவே இங்கு எமது கருத்து என்னவெனில் "பரிசுத்த ஆவியானவர்  என்பவர் உன்னதத்தில் இருந்து இறங்கி வந்த  ஆள்தத்துவமுள்ள  வல்லமை" என்பதே சரியான பதில் என்று நான் கருதுகிறேன்
 
பரிசுத்த ஆவியானவர்தான் "தேவனின் ஆவியானவர் என்றும் அவர்தான் தேவன் அவர் ஒரு தனிப்பட தேவன் இல்லை  என்றும் வேண்டுமானால் சொல்லுங்கள் அதை  பரிசீலிக்கலாம்.
 
பவுலிடமும், விசுவாசிகளிடமும்   மற்றும் அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகளிடமும்  பேசியும், உணர்த்தியும், கடிந்து கொண்டும் போதித்தும் வழிநடத்தும் ஒரு தேவஆவியை  வெறும் "வல்லமை" என்று எந்த பொருளில் குறிப்பிடுறீர்கள் என்பது புரியவில்லை.   சற்று விளக்குவீர்களா?    
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard