இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தளத்தில் பதிவிடும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தளத்தில் பதிவிடும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
Permalink  
 


சகோதரர்களே  இந்த தளத்தின் விசுவாசம் என்னவென்பதை கீழ்கண்ட திரியில்
தெளிவாக கொடுத்துள்ளோம்.  
 

 

இந்த விசுவாசம் என்பது வெறும் வேதஆராய்ச்சி மற்றும் அறிவினால் உண்டாகாமல், பல்வேறு இக்கட்டில் கடந்து வந்து, அதிகமதிகமாக  ஜெபித்து, ஆண்டவரிடமிருந்து  அனுபவ பூர்வமாகவும் அறிந்துகொண்டது.  அதற்க்கு ஏற்ற வசன  ஆதாரங்களும்  இருப்பதால் எனது கருத்துகளை  புரிந்து ஏற்றுக்கொண்ட நண்பர்களுடன் நான் இந்த தளத்தில் பதிவிட்டு வருகிறேன். கிரிஸ்த்தவத்துக்குள் எத்தனை மார்க்க பிரிவுகள் இருக்கிறது அதன் அடிப்படை என்னவென்பது எல்லாம் எனக்கு தெரியாது. எனது கருத்துக்களில் நான் தெளிவாக இருக்கிறேன்! 
 
கிறிஸ்த்தவத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் என்று கருதும்  அனைத்துக்குமே என்னுடைய விளக்கங்கள் இந்த தளத்தில் எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக:
 
   
மீண்டும் மீண்டும் அதையே விவாதித்துகொண்டு இருப்பதால் என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை. சிலர்  எப்படி தங்கள்  கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களோ அதேபோல் நாங்கள் எங்கள் கருத்தில் உறுதியாகஇருக்கிறோம். அதற்க்கு சரியான வசன ஆதாரங்களும் தந்துவிட்டோம். இந்நிலையில் இலவசமாக கிடைக்கும் வலைதளத்தை ஏற்ப்படுத்தி  அவரவர் கருத்துக்களை எழுதி வைப்போம். தேவன் யாருக்கு எந்த கருத்தை சரி என்று உணர்த்துகிறாரோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளட்டும்.   
 
மற்றபடி நான் சில சகோதரர்களிடம் சர்ச்சைக்குரிய  சம்பந்தமாக நீண்ட நாட்கள் நேரடியாகவே  விவாதித்தும்,  எந்த பயனும் இல்லை அவர் நமது கருத்தை ஏற்க்கவில்லை, நானும் அவரது கருத்தை ஏற்க்க முடியாது ஏனெனில் நான் தேவனிட மிருந்து நேரடியாக விளக்கம் பெற்றவன். எனவே மனுஷனுடைய மார்க்கபேத கருத்துக்களை ஏற்று  எனது கருத்தை மாற்றினால் தேவனுக்கு  நான் பதிலசொல்லியாக வேண்டும்.    
 
ஆகினும்  நீங்கள் வசனஆதாரத்துடன் இங்கு முன்வைத்திருக்கும் எந்த ஒரு கருத்தையும் தவறு என்று தீர்க்க விரும்பவில்லை.  அதே நேரத்தில் அது சரியானது என்றும் நான் சொல்ல முடியாது ஏனெனில் சரியான உண்மையை தேவன் ஒருவரே அறிவார். 
 
எனது கருத்துக்களில் தவறுகள் இருந்தால் அந்த குறிப்பிட்ட கருத்தை சுட்டி, அது வசனத்திலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்று ஓரிரு வசன ஆதாரத்துடன் கேள்விகளை ஒவ்வொன்றாக  முன் வைக்கவும்.  ஆனால் எனது கருத்துக்கு ஆதரவாக ஒருவசனம் இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றே ஆகவேண்டும். மற்றபட தாங்கள் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கும் பழைய  கட்டுரைகளை இங்குபதிவிட்டு விளக்கம் கேட்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன். உங்களுக்கு விளக்கம் சொல்லும் அளவுக்கு நான் பெரியவனல்ல மேலும் என்ன விளக்கம் கொடுத்தாலும்  நீங்கள் ஆவியானவரை அறியாத காரணத்தால் அதை ஏற்க்க போவ்தும் இல்லை    
 
நான் யாருக்கும் எதிராவனவன் அல்ல என்றாலும் எனக்கு கிடைப்பதோ கொஞ்ச நேரம் அதில் ஆண்டவரின் வார்த்தைகளை தியானித்து அறிய கருத்துக்களை பதிவிடவே விரும்புகிறேன். பழைய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் எந்த பயனும் இல்லை.  என்னை பொறுத்தவரை ஒருவருக்கு "தேவன் தெரிவித்தால் மட்டுமே அவர் உண்மையை அறிய முடியும்" என்று உறுதியாக கருதுகிறவன். வசனம் என்பது இருபுறமும் பேசும் இருபுறம் கருக்குள்ள பட்டயம் அதை எடுத்து யார்
வேண்டுமானாலும் எடுத்து எப்படி வேண்டு மானாலும் சுழற்றி  யாரையும் நியாயம் தீர்க்கலாம் அதை நான் செய்ய விரும்பவில்லை.  எனது கருத்துக்கு என்ன வசன ஆதாரம் என்பதை மட்டுமே நான் எழுத விரும்புகிறேன். எனது கருத்தில் உள்ள குறைகள் என்னவன்பதர்க்கு மட்டுமே நான் விளக்கம் கொடுக்க விளைகிறேன்.
 
"இயேசு யார்" என்ற தலைப்பில் மட்டும் மூன்று நான்கு  திரிகள் இங்கு உருவாகி விட்டன. ஆண்டவரின் வருகை நெருங்கி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கிறிஸ்த்தவத்தின் அடிப்படையாகிய இயேசுவையே  யார் என்று தீர்மானிக்க முடியாமல் இன்னும்  தவித்து கொண்டிருந்தால் எப்படி அவரோடு போகமுடியும் என்பது புரியவில்லை! 
 
மாம்பழத்தின் சுவை என்னவன்பதை என்னதான் விளக்கி எழுதி கொடுத்தாலும்
அதை சுவைத்து பார்த்த நிலைக்கு அது ஒத்துவராது. அதேபோல் ஒருவர் ஆவியாயிருக்கும் தேவனை அனுபவத்தில் சுவைத்து, அவர் ஒருவருக்கு  உண்மையை உணர்த்தாவிட்டால்  அவர் ஒருநாளும் உண்மையை அறிந்து கொள்ளவே முடியாது அடிப்படையே தெரியாமல் அல்லாட வேண்டியதுதான். 
 
பரிசுத்த ஆவியானவரை பற்றி பல பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். அவரின் முக்கியத்துவம் பற்றி முடிந்தவரை சொல்லிவிட்டேன்.  அனால் அதை யாரும் காதில் கேட்டதுபோலவே தெரியவில்லை. நீங்கள் "தேவனுடய ஆழங்களை அறிந்திருக்கும் ஆவியானவரை அறியவில்லை என்றால் ஒன்றையுமே சரியாக அறியமுடியாது! சாத்தான் உங்களை அறிய விடவும்மாட்டான் என்பதை நான் இங்கு மிக மிக உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.  ஆவியானவரும் கூட எல்லோருக்கும் எல்லா உண்மைகளையும் தெரிவிப்பது இல்லை. அவரவர் தகுதி,  நீதி நேர்மை மேலுள்ள  பிரியம் அடுத்தவருக்காக பரிதபிக்கும் நிலை இவற்றுக்கு தகுந்தால்போல் மட்டுமே  உண்மைகளை தெரிவிப்பார் அவர் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்கும் நிச்சயம் வசனஆதாரம் இருக்கும்   
 
'துன்மார்க்கர்கள் மரித்தபின் பாதாளத்தில் பாடு அனுபவிக்கிறார்கள்" என்று
தேவன் எனக்கு தெரிவித்ததால், அப்படியொரு இடத்துக்கு யாரும் போககூடாது என்ற பரிதப்பிலேயே, பாரத்துடன் ஆண்டவரை  அறிந்துகொள்ளும்  வழிகள், மற்றும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டபின் நான் வாழ வேண்டிய வாழ்க்கை போன்றவற்றை  பற்றி எழுதிவருகிறேன். ஒருவேளை  சிலர்சொல்வதுபோல் "எல்லோருக்கும் மீட்பு"
"நரகம் பாதாளம் இல்லை" என்று எனக்கு ஆண்டவர் தெரிவித் திருந்தால்  நான்
இயேசுவை மட்டும் ஏற்றுக்கொண்டு எல்லா இன்பத்தையும்  அனுபவித்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டு கட்டிலில் படுத்து தூங்கி எழுவேன். அனேக வேலை பழுக்கள் இடையில்  இவ்வளவு கஷ்டபட்டு பதிவுகளை தர  வேண்டிய அவசியம் இல்லையே! ஏனெனில் எல்லோருக்கும் மீட்பு உண்டே பிறகு எனக்கு ஏன் வீண் வேலை.
 
எனவே சகோதரர்களே தாங்கள் சொல்லும் சில காரியங்களை நான் ஏற்றுக் கொண்டாலும் இறுதியில் தாங்கள் சொல்லும் கருத்தாகிய " துன் மார்க்கனுக்கு தண்டனை இல்லை நரகம் இல்லை" என்ற கருத்து  என்னை
 மிகவும் சிந்திக்க வைக்கிறதுகாரணம் என்னவெனில் இன்று ஜனங்கள்
"பாவத்துக்கான தண்டனைஉண்டு" என்பதை அறியாததினாலேயே ஏனோ தானோ என்று வாழ்ந்து ஆடுமாடுகள் போல் அழிந்து பாதாளம் போய்  சேர்கின்றனர். ந் நிலையில் இயேசுவை ஏற்றுக்கொண்டும்  அதேகருத்தை சொல்ல ஒரு ஆள் தேவையா என்பது புரியவில்லை.
 
தங்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் இரண்டே இரண்டுதான்:
       
1. இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கும் பரிசுத்த ஆவியை வாஞ்சித்து பெற்றுக் கொள்ளுங்கள். அதற்க்கான வழிமுறைகள் என்னவென்று கீழ்கண்ட திரியில் எழுதியிருக்கிறேன்.
 
 
 
அதற்க்குபின்னர் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நான் ஏற்கிறேன் ஏனெனில் உங்கள் கருத்து நிச்சயம் மாறியிருக்கும். அல்லது வசன ஆதாரத்துடன் எழுதப் பட்டிருக்கும் அந்த கட்டுரையில் என்ன தவறு இருக்கிறது என்பதை விளக்கமாக சுட்டுங்கள்
 
2. எல்லோருக்கும் மீட்பு உண்டு யாருக்கும் நரகம் இல்லை வேதனை இல்லை பாவத்துக்கு தண்டனை இல்லை என்று உங்களுக்கு தீர்மானமாக் தெரிந்தால், ஏன் இவ்வளவு மினக்கட்டு கஷ்டபட்டு எழுதி உங்கள் நேரத்தையும் பெலனையும் செலவு செய்யவேண்டும்? 
 
ஒரு வேளை நீங்கள் சொல்வது உண்மையாக இருந்து நாங்கள் தவறான பாதையில் இருந்தால்கூட எங்களுக்கும் எல்லோருக்கும்தான்  தான் மீட்பு உண்டே. இறுதி நாளில் உண்மையை அறிந்துவிட்டு போகிறோம்!  ஒருவேளை கள்ள ஊழியம் செய்தால் என்ன? தசம பாகம் வாங்கினால் என்ன? இயேசுவை தொழுது கொண்டால் என்ன? நீதியின் தேவன் வரும்போது  எல்லோருக்குமேதான் மீட்பும் உண்மையை அறியும் வாய்ப்பும்  இருக்கிறதே! பிறகு என்ன கவலை?  யாருக்கும்  சுவிசேஷம்  சொல்ல விரும்பாத உங்களக்கு இந்த  கிறிஸ்த்தவர்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு கரிசனை?  
 
ஆனால் ஒருவேளை நாங்கள் சொல்வதுபோல் நரகம் இருக்குமாயின் சற்று யோசித்து பாருங்கள்!
 
நீங்களும் கெட்டு நரகத்துக்கு போய், உங்கள் எழுத்தின் மூலம் அநேகரை கெடுத்த கொடிய பாவத்தையும் சுமந்து நிற்க வேண்டியது வரும். அதன் பின்னர் நீங்களோ அல்லது உங்களால் வழி மாற்றபட்ட அவரோ, உண்மையை அறிந்துகொண்டோம் என்று கதறினால் கூட எந்தபயனும் இல்லாமல்  போய்விடும்.  
      
நீங்கள் எழுதிய வசனம் மட்டும் வசனம் அல்ல, நாங்கள் எழுதும் வசன ஆதரங்களையும் கண்ணோக்கி விளக்கத்துடன் பதிவுகளை தாருக்னால்.  ஒருவர் தன்  கருத்தை விளக்க  பத்து வசனங்கள் எழுதினாலும் அதற்க்கு எதிராக ஒரே ஒரு வசனம் இருந்தால்கூட அதுவும் வசனம்தான் அதற்கும் வல்லமை உண்டு என்பதை கருத்தில் கொண்டு சிந்தியுங்கள்.   
 
தாங்கள் எழுதியுள்ள கருத்துக்களுக்கு முடிந்த அளவு விளக்கம் தர விளைகிறேன். அதற்க்கு சரியாங்க விளங்கங்களுடன் பதில்தரவும். அதுவரை தாங்கள் ஜனங்களை நல்வழிப்படுத்தும் நல்ல கட்டுரை இருதால் மட்டும் இங்கு பதிவிடவும்.         
 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

ஆண்டவராகிய  இயேசுவின் வார்த்தைகளை தாங்கள் வாழ்க்கையில் கைகொள்ள  சற்றேனும் பிரயாசம் எடுக்காமல் ஆண்டவர் வெறுக்கும் காரியங்களை செய்துகொண்டு கிறிஸ்த்தவர்கள் என்று மார்தட்டி கொள்ளும் கூட்டத்தாரின் சில தவறான வழிகளையும் அவர்களின் வ்சன விரோத போக்கையும் விமர்சித்து   நான் இங்கு எழுதி வருவதாலும், வேத வசனங்களுக்கு சற்று வேறுபட்ட விளக்கம் தருவதாலும், சில மாறுபட்ட உபதேசத்தை நான் முழுவதும் எதிர்க்காததினாலும்  நான் யாருடைய அறிவுரையையும் கேட்டு என்னுடைய வழியை மாற்றி கொள்வேன் என்று எண்ணம் கொள்ளவேண்டாம்.     
 
வெறும் விசுவாசத்தின் அடிப்படையில் "கிறிஸ்த்தவரான ஒருவரை ஒரு வேளை வேற்று வழிக்கு திருப்பிவிடலாம் ஆனால்  எனக்கு தேவனால் ஒப்புவிக்கப்பட்ட்வைகளில் நான் மிகவும் உறுதியானவன்.  எப்படி சிலர்
வேதவசனத்தின் அடிப்படையில் நான் உறுதியானவர்கள் என்று சொல்கிறீர் களோ, அதுபோல் நான் எனக்கு தேவனால் தெரிவிக்க பட்டவைகளில் மிக மிக உருதியானவ்னும் தேவனுக்கு பயந்தவனும் அவருக்கு கணக்கு ஒப்புவிக்க டமைபட்டவனுமாக இருக்கிறேன். 
 
எனவே என்னுடைய நம்பிக்கை குறித்தும்  நான் பெற்ற அபிஷேகம் மற்றும்
வேத வசனத்தின் அடிப்படையில் தேவன் எனக்கு தெரிவித்த மாறுபட்ட விளக்கங்கள் குறித்தும் அறிய விரும்புகிறவர்கள் மாத்திரம் இங்கு கேள்விகளையோ அல்லது விளக்கங்களையோ முன்வைக்கலாம் மற்றபடி தங்களுக்கென்று சிலபோதனைகள் இருக்குமாயின் அதை தனி தளங்களில் எழுதி வையுங்கள் என்பது எனது அன்பின் வேண்டுகோள்! நாங்கள் எல்லாவற்றையும் படித்து நலமானதை பிடித்துகோள்கிறோம்.
 
மிக முக்கியமாக "பரிசுத்த ஆவியானவரை"  ஓர் ஆள்தத்துவம் உள்ளவராக ஏற்று அவரை வாஞ்சித்து பெற்று ஜெபத்துடன் அவரின் ஆலோசனை மற்றும் வழிநடத்துதல் அடிப்படையில் நடக்க விரும்பாதவர்களிடம் எந்த உண்மையை பேசியும் பயனில்லை
 
ஏனெனில் ஆவியானவரை பெற்றிராதவர்கள் இடத்தில் முக்கியமாக ஜெபம் இருக்காது, அவர்களுக்கு தேவனுடன் ஒரு சுமுகமான உறவு இருக்காது, அடுத்தவருக்காக பரிதபிக்கும் அன்பு  இருக்காது.  அப்படிப் பட்டவர்கள் வேத வார்த்தையை கையில்  வைத்துகொண்டு ஆயிரம் உபதேசமும் விளக்கமும் செய்யலாம், ஆனால் ஒரு உண்மையையும் சரியாக அறிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை என்பது எனது முடிவான கருத்து.


-- Edited by SUNDAR on Friday 1st of April 2011 03:38:05 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard