இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் உலகத்தார் யாவரும் காணத்தக்கதாய் மாம்ச சரீரத்தில் வருவார் என்பது பற்றி தப்பிதமான உபதேசங்கள்:
இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் மாம்ச சரீரத்தில் மரித்து ஆவிக்குரிய மகிமையான சரீரத்தில் எழுப்பப்பட்டு பரலோகத்திற்குச் சென்றார். 1பேது 3:18. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். என்று இயேசு கிறிஸ்து தமது சீஷருக்குச் சொன்னார். யோவான் 14:19.
நாங்கள் கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும்,இனி ஒரு போதும் அவரை (கிறிஸ்துவை) மாம்சத்தின்படி, அறியோம் என்று அப்.பவுல் கூறினார். 2கொரி. 5:16.
இதனால் இயேசு கிறிஸ்து தன்னுடைய இரண்டாம் வருகையில் உலகத்தார் யாவரும் காணத்தக்கதாய் மாம்ச சரீரத்தில் வரப்போவதில்லை என்று அறிகிறோம். இயேசுகிறிஸ்து தம்முடைய மகிமையான (ஆவிக்குரிய) சரீரத்தில் வரும்போது, அவருடைய திருச்சபையார் மாத்திரமே தாங்கள் மறுரூபமாக்கப்டும் சரீரத்தில் அவரைக்காண்பார்கள் என்று அறிகிறோம். 1கொரி. 15:51-52; பிலிப் 3:20-21; 1யோவான் 3:2;
“நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்”. என்றபடி நிறைவேறும். சங் 17:15. அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். 1யோவா. 3:2
அன்பான சகோ.நிசி அவர்களே தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
nissi wrote: //இதனால் இயேசு கிறிஸ்து தன்னுடைய இரண்டாம் வருகையில் உலகத்தார் யாவரும் காணத்தக்கதாய் மாம்ச சரீரத்தில் வரப்போவதில்லை என்று அறிகிறோம். இயேசுகிறிஸ்து தம்முடைய மகிமையான (ஆவிக்குரிய) சரீரத்தில் வரும்போது, அவருடைய திருச்சபையார் மாத்திரமே தாங்கள் மறுரூபமாக்கப்டும் சரீரத்தில் அவரைக்காண்பார்கள் என்று அறிகிறோம். 1கொரி. 15:51-52; பிலிப் 3:20-21; 1யோவான் 3:2;//
இயேசு மாம்ச சரீரத்தில் வரமாட்டார் என்பது மெய்தான். ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தவர், அதே ஆவிக்குரிய சரீரத்தில்தான் வருவார். ஆனால், ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்த அவரை, மாம்ச சரீரத்தில் இருந்த அவரது சீஷர்கள் பார்க்கத்தானே செய்தனர்? அவர் பரமேறுகையில் அவரது சீஷர்கள் அனைவரும் அவரைப் பார்க்கத்தானே செய்தனர்? அப்போது அவர்கள் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தில் பாராமல், மாம்ச சரீரத்தில்தானே பார்த்தனர்?
இயேசு பரமேறுகையில் எப்படி அவரது சீஷர்கள் தங்கள் மாம்ச சரீரத்தில் அவரைப் பார்த்தனரோ, அப்படியே அவரது 2-ம் வருகையிலும் பூமியிலுள்ள அனைவரும் அவரை தங்கள் மாம்ச சரீரத்தில் பார்க்கக்கூடுமல்லவா? பின்வரும் வசனமும் அதற்கு ஆதரவாக உள்ளதே?
வெளிப்படுத்துதல் 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
பூமியின் கோத்திரத்தெல்லாரும் அவரைப் பார்ப்பார்கள் என வசனம் சொல்லும்போது, மறுரூபமாக்கப்பட்ட திருச்சபையார் மட்டும் அவரைப் பார்ப்பார்கள் என நீங்கள் சொல்வது தவறுதானே?