நீங்கள் உங்களுடையவர்களல்லவென்று அறியீர்களா? கிரயத்திற்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகவே உங்கள் சரீரத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள்.(1கொரி. 6:19-20).
இப்புதுவருடத்திலே மற்றெல்லா வார்த்தைகளை விட இவ்வசனம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாம் நம்முடையவர்களல்ல. ஏனெனில் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டோம். இனி நம் சுயசித்தத்தை நிறைவேற்றவோ, அல்லது நம்மை பிரியப்படுத்தவோ முடியாது. நம்மைக்கிரயத்திற்குக் கொண்டவரின் சித்தத்தைச் செய்து, அவரையே பிரியப்படுத்த வேண்டும். சுய சித்தத்தை நடப்பிக்கிறவர்கள், கிரயத்திற்குக் கொண்டவரை மறுதலிக்கிறவர்களாக இருப்பார்கள். தன் சித்தத்தை வெறுத்து, அவர் சித்தத்தை நிறைவேற்றுவது பூரண பரிசுத்த ஜீவியமாகும். இது பாவத்தினின்று விலக்கி நீதிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் சுய சித்தத்தினின்று நம்மைப் பிரித்து, கிறிஸ்துவின் மூலம் தேவ சித்தத்தை நிறைவேற்றச்செய்கிறது. (1கொரி.7:22-24; 1பேது.1:18-19; எபே.6:6-8).