இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தங்கள் போதனையின் முக்கிய நோக்கம் என்ன?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
தங்கள் போதனையின் முக்கிய நோக்கம் என்ன?
Permalink  
 


நமது  தளத்தில் பதிவிட்டுள்ள சில சமீப  காலத்தைய பதிவுகளை 
கண்நோக்கும்போது அந்த பதிவுகளில்  சில கருத்துக்கள் நமது விசுவாசத்துக்கு முரணாக இருப்பதை அறிய முடிகிறது.
 
முக்கியமாக
 
1. "பரிசுத்த ஆவி" என்பது "ஒரு தேவ வல்லமை" அல்லது
"தேவ சிந்தை" என்றும் ஆவியானவர் ஒரு தனி ஆள்தத்துவம்
 உள்ள தேவனல்ல என்றும். சொல்லபட்டிருக்கிறது  
 
2. மனிதனுக்கு ஆத்துமா என்று எதுவும் தனியாக கிடையாது. ஆவியும் சரீரமும் சேர்ந்த ஒரு மனுஷனே ஒரு ஆத்துமா என்று பொருள்கொள்ளப்படுகிறது.  
 
3. பாதாளம் மற்றும் நரகம் என்று எதுவும்கிடையாது பாதாளம் பிரேதகுழி என்றும் நரகம் "குப்பை எரிக்கிற மேடு"  என்று சொல்லப்பட்டுள்ளது.
 
4. சுவிசேஷம்  சொல்லவேண்டிய  தேவையில்லை என்று போதிக்கப்படுகிறது.
 
5. "எல்லோருக்கும் மீட்பு" யாருக்கும் தண்டனை இல்லை  என்பதுபோன்றதொரு கொள்கை போதிக்கப்படுகிறது.
 
இப்பொழுது இங்கு எனது கேள்வி என்னவெனில்,: இந் நாட்களில் மட்டுமல்ல ஆதி நாட்களிலும்:
 
மாற்கு 16:15  நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
 
என்ற வார்த்தை அடிப்படையில், ஆத்துமாக்களின் மீதுள்ள கரிசனையில்  சுவிஷேசம் சொல்வதற்காக பலர் தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து  காடுகள் மேடுகள் என்று 
சுற்றி ஆத்துமாக்களுக்காக பரிதபிபுடன் அலைந்து ஆண்டவரைபற்றியும் அவர் தரும் ஆத்துமா இரட்சிப்பு பற்றியும் எடுத்து சொன்னதாம் நம் போன்றவர்கள் இன்று ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அழிவில் இருந்து தப்பித்திருக்கிறோம் என்று அறியமுடிகிறது.
 
அதாவது சுருக்கமாக சொன்னால், நாம் கஷ்டப்பட்டு பிரயாசம் எடுத்து செய்யும்  ஒவ்வொரு காரியத்துக்கும் தாவது ஒரு முக்கிய காரணம் நிச்சயம் இருக்கும். தேவையற்ற காரியங்களுக்கு யாரும் பெரிய பிரயாசம் எடுப்பது இல்லை. 
 
"அவனவன்  செய்த கர்மாவுக்கு தக்க பலன் உண்டு" என்று இந்துக்கள் கருதுவதால்  அவர்கள் இறைவனை நம்பி நல்லதை செய் என்று  போதிக்கிறார்கள்.
 
"அவனவன்  கிரியைக்கு தக்க சொர்க்கமோ நரகமோ உண்டு" என்று இஸ்லாமியர் போதிக்கின்றனர்  எனவே  அவர்களும் இறைவனுக்கு பிரியமாய் நடவுங்கள் என்று போதிக்கிறார்கள்.  
 
"இயேசுவை ஏற்றுக்கொண்டால் ஆத்துமா மீடுபு உண்டு" என்று கிறிஸ்தவர்கள் போதிக்கிறார்கள் எனவே  இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் வலியுருத்துகிரர்கள்  
 
இவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒருஅடிப்படை
நோக்கம் இருக்கிறதை அறியமுடிகிறது.   
 
இந்நிலையில்  இங்கு எனது கேள்வி என்னவெனில்:   .
 
"இன்று செத்தால்  ஒன்றுமில்லை" " நாளை  உயிர்த்தெழும்போது  எல்லோருக்கும் நீதி போதிக்கப்பட்டு மீட்பு  நிச்சயம் உண்டு"   என்ற ஒரு கொள்கையுடன் இருக்கும் தாங்கள் இவ்வளவு  சிரமம்  எடுத்து யாருக்கு எதற்காக போதனை செய்கிறீர்கள்? என்ற உண்மையை  அதாவது தாங்கள் ஆண்டவரை பற்றியும் அவரது வசனத்தை பற்றியும் எல்லா இடங்களிலும் ஊடுருவி எழுதுவதன் நோக்கம் என்ன?
 
நாங்கள் ஆண்டவரை  பற்றி எழுதுவதன்  மெயின் நோக்கம் "பாவம் செய்த ஆத்துமா முதலில் பாதாளத்தில் வேதனை அனுபவிக்கும் பின்னர் நரகத்தில் அழிக்கப்படும்" என்று கருதுவதால்  அந்த அழிவுக்கு மனுஷர்கள் தப்பித்துகொள்ள வேண்டும் என்ற வாஞ்சையால் உருவானது   
 
அதுபோல் தங்களின் மெயின் நோக்கம் என்ன?  அது எவ்வித வாஞ்சையால் உருவானது?
 
இந்த திரியில் தயவுசெய்து விளக்குங்கள் என்று அன்புடன் 
கேட்டுகொள்கிறேன்.


 



__________________


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
Permalink  
 

எங்களை பற்றி

நாங்கள் வேத அன்பர் மன்றம் (biblel lovers assembly) சபையை சார்ந்தவர்கள்.
Reg.No: 105 IV/2011
எந்த ஒரு தனி மனிதனையும் பின்பற்றாமல், வேதத்தின் ரகசியங்களை விருப்பமுள்ளவர்களுக்கு, விரிவாகவும், விளக்கமாகவும் தெரிவிக்க
ஒன்று சேர்கிறோம். கலா.1:10;
நாங்கள் வேதமாணவர் சபையையோ, யோகோவாவின் சாட்சிகள் சபையையோ, வேறே எந்த ஒரு சபையையும் சார்ந்தவர்கள் அல்ல.
சத்தியத்தை சத்தியமாகவே சொல்வதில் பெருமைகொள்கிறோம். யோவான்.17:17;

மேலும் எங்களின் நோக்கம் பணம் வாங்குவதும் அல்ல.
பரிசுத்த வேதாகமத்தின் மீது கொண்ட பற்றுதலாலும், கிறிஸ்துவமார்க்கம் தவறாகப்போவதாலும், ஏற்பட்ட உந்துதலினால் உருவாக்கப்பட்டதுதான் எங்களின் இந்த (biblel lovers assembly) குழு.

குறிப்பு :

பிதாவை சென்றடைய குமாரன் மூலமாய் பரிசுத்த ஆவி துணையோடு போராடும் எவரும் எங்களின் சகோதர சகோதரிகளே; சபை பாகுபாடின்றி வரவேற்கிறோம் .

எச்சரிக்கை :

வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலா.8:7
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலா.8:8.

இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலா.8:10.
உண்மை சத்தியத்தில் அவர் வரும் வரை நிலை நிற்போம் என்ற மனஉறுதி உள்ளவர்கள் மட்டும் துணிச்சலோடு உள்ளே வாருங்கள் .
தேவ சமாதனம் ஆமென்.

http://bibleloversassembly.com/bible/index.php?option=com_content&view=article&id=46&Itemid=1

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

nissi wrote
////பிதாவை சென்றடைய குமாரன் மூலமாய் பரிசுத்த ஆவி துணையோடு போராடும் எவரும் எங்களின் சகோதர சகோதரிகளே; சபை பாகுபாடின்றி வரவேற்கிறோம்///
 
நல்ல அருமையான விசுவாச அறிக்கை சகோதரரே.
 
கிறிஸ்த்துவின் வழியில் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதும் மற்றவர்களை
அவ்வழியில் நடத்துவதும்தான் எங்கள் பணியும் கூட.  அத்தோடு அதைவிட  முக்கிய அல்லது உயர்ந்த நிலையாகிய "ஜெயம்கொண்டு ஜீவ விருட்சத்தை சுதந்தரிப்பது" என்பதுவே எங்களின் அடிப்படை போதனை     .  
 
வெளி 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
 
அதற்க்கான அவசியமும் அதை அடையும் வழிமுறையும்  இங்கு அதிகம் போதிக்கபட்டு வருகிறது.          
 
14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்
 
என்று வசனம் சொல்வதால், முக்கியமாக ஆண்டவரின் வார்த்தைகள்படி வாழ வேண்டிய அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டு  போதிக்கபடுகிறது.
 
 Nissi Wrote
////உண்மை சத்தியத்தில் அவர் வரும் வரை நிலை நிற்போம் என்ற மனஉறுதி உள்ளவர்கள் மட்டும் துணிச்சலோடு உள்ளே வாருங்கள்//// .
 
உண்மை சத்தியத்தில் நிற்பதா?   வார்த்தைகளில் நிலை நிற்பதா எது சரியானது?
 
இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றார்.
 
எனவே கிறிஸ்துவுக்குள் நிலை நிற்ப்பது சத்தியத்தில் நிலைநிர்ப்பது இரண்டும் ஒன்றுதான்.    
 
அடுத்து
 
யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

தேவனுடைய வார்த்தைகளே சத்தியம் என எழுதப்பட்டுள்ளது. அவ்வார்த்தைகளில் நிலைநிற்பதும் சத்தியத்தில் நிலைநிர்ப்பதுதான் எனவேதான் சத்தியமாகிய இயேசு      
யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
என்று சொல்கிறார்.  மற்றபடி வேறு எந்த குழப்பமோ அல்லது மார்க்க பிரிவினைகளோ தேவையற்றது.   முக்கியமான காரியங்களை விட்டுவிட்டு தேவையற்ற காரியங்களை திரும்ப திரும்ப ஆராய்ந்துகொண்டு இருப்பதால்தான் பிரச்சனைகளை ஏற்ப்படுகிறது.
 
சத்தியம் என்பது இங்கு  ஒன்றே ஒன்றுதான் அது "ஆண்டவராகிய இயேசுவும் 
அவரது வார்த்தைகளும்" மற்றபடி  உண்மை சத்தியம் பொய் சத்தியம் என்று எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
 
ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரது வார்த்தைகளில் நிலைநிர்ப்பதைவிட பெரிய சத்தியம் எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை!
 
அவரின் வார்த்தைகளில் நிலைநிர்ப்பதர்க்கே மன உறுதி மற்றும் துணிச்சல் அவசியமேயற்றி  வேறு  எந்த காரியத்தில் நிலைநிற்ப்பதற்கு  மனஉறுதி அவசியம் என்று  தாங்கள்  கருதுகிறீர்கள்?  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

சகோதரர்  நிசி அவர்களே,  வணக்கம்.  தங்களைப் பற்றியும் தங்களின் விசுவாசத்தைப் பற்றியும் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே.  எனது நண்பர் மூலம் இன்னும் உங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். எம் பதிவுகளை நாம் ஒருமித்து தொடர்வோம்.  நன்றி



__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard