இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனுஷனால் தேவனை காண முடியுமா? காண முடியாதா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
மனுஷனால் தேவனை காண முடியுமா? காண முடியாதா?
Permalink  
 


எந்த ஒரு மனுஷனும் தேவனை காணமுடியாது, ஒருகாலும் கண்டதும் இல்லை என்பதை கீழ்கண்ட வசனங்கள் நமக்கு விளக்குகிறது   
 
I யோவான் 4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; 
 
யாத்திராகமம் 33:20 நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.
 
I தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
 
ஆகினும் சில மனுஷர்கள் தேவனை கண்டதாக வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
ஆதியாகமம் 32:30 அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
 
நியாயாதிபதிகள் 13:22 தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.

ஏசாயா 6:1 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்
 
"தேவனை ஒருவரும் ஒருகாலும் காண முடியாது"  என்பது முற்றிலும் உண்மையெனில்  ஒரு மனுஷனால் ஒருவரை காணமுடிந்தது என்றால் அவர் தேவனல்ல என்று ஆகிவிடும்.

இந்நிலையில் "தேவனை கண்டேன்" என்று சில மனுஷர்கள் சொல்லியிருக்கும் இந்த  இரு வேறுபட்ட கருத்துகளுக்கு  சரியான விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடவும்!  
 


-- Edited by SUNDAR on Monday 4th of April 2011 03:57:55 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

நல்ல கேள்வி சகோ. சுந்தர். இந்த கேள்விகளும் , இன்னும் பல கேள்விகளும் பதிலளிக்கப்படாமல் இருந்தாலும் இவர்கள் திரும்ப, திரும்ப ஒரே (ரசலின்) கருத்துக்களை வெட்டியும், ஒட்டியும் காலத்தை ட்டி கொண்டு இருப்பார்கள். சகோ. சில்சாம் தளத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு இந்த தளத்திலாவது பதில் சொல்லுகிறார்களா பார்க்கலாம். இவர்கள் இங்கே வந்து இந்த குப்பைகளை பதிப்பத்தின் காரணம் அவர்கள் உங்களையும் இந்த தளத்தில் உள்ள மற்ற சகோதரர்களையும் வஞ்சிக்க முடியும் என்று நம்புவதால் தான் ஆகையால் ஜாக்கிரதை!!
 
 
 
 
//நான் விளக்கம் கேட்டால் நீங்கள் ஏதோ எழுதுகிறீர்களே!! பிதா ஒருவர் தான் தேவன் என்று வசனம் சொல்லுகிறபோது, அது என்ன பொருள் கொண்டால்!! வசனத்தின் அடுத்த பகுதி கிறிஸ்து மட்டுமே கர்த்தர் என்று வருகிறது மிகவும் சரியே!!
ஜானின் பதில்:
அப்போ பிதாவை கர்த்தர் என்று அழைக்கலாமா? கர்த்தருக்கும், தேவனுக்கும் என்ன வித்தியாசம், எதில் வித்தியாசம் என்று தங்களுக்கு தெரியுமா?
நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதற்கு எந்த விதத்திலும் பொருந்தாத ஒரு பதிவை தருகிறார், இதை தான் எஸ்கேப்பிஸம் (Escapism) என்பார்கள்!! //
 
யாரு எஸ்கேப் ஆகுறது? Adonai என்று பழைய ஏற்ப்பாட்டில் விளிக்கபடுகிற கர்த்தர் இயேசுவா? பிதாவா? இதற்க்கு பதில் சொல்லாமல் நீங்கள் தான் எஸ்கேப் ஆகி கொண்டு இருகிறீர்கள்.
 
//ஆமாங்க இதை யோவான் எழுதுகிறார், அவர் எழுதியபோது கிறிஸ்து மாம்சத்தில் வந்ததினால், ஆதியில் அவர் வார்த்தையாக இருந்ததை குறித்து எழுதுகிறார், தொடக்கம் என்பது அநாதியாக முடியாது!! There is a difference between Eternal and Beginning!! உங்களுக்கு புரியவில்லை அல்லது உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்பதற்கு என்ன செய்ய முடியும்!! வேத புரட்டர்களின் சரித்திரம் யோவான் காலத்திலிருந்தே இருக்கிறதே!! //

அபாரம்! அபாரம்! யோவான் Past Tense ல் எழுதுவதாக இருந்தால் "ஆதியிலே வார்த்தை உண்டாக்கப்பட்டது" என்று எழுதியிருப்பார். (ஆதியிலே தேவன் வானத்தையும் , பூமியையும் சிருஷ்டித்தார் என்று மோசே எழுதினது போல). யோவான் எழுதியதில் Past Tense Was applied to the Subject (i.e Word) not the Action. சொல்லப்போனால் Action யோவான் 1:3 ல் தான் ஆரம்பிக்கிறது. யோவான் 1:1-2 முழுவதுமே கிறிஸ்துவும் சர்வவல்லமையுள்ள தேவனே என்பதற்கான வசனகளே! இன்னும் நீங்கள் யோவான் 1:3 ல் உள்ள "உண்டாக்க பட்டது எல்லாம் அவராலே உண்டாக்கப்பட்டது" என்ற வசனத்தை விளக்கவில்லை.அது சரி மீகா 5:2 பற்றி வாயே திறக்கலையே?

//எனக்கு அங்கே ஒரு கேள்வியும் இருப்பதாக தெரியவில்லை!! //

நெசமாவா?? நீங்கள் பதிலளிக்க மறுத்த (தெரியாத) கேள்விகளை திரும்பத்தருகிறேன். நீங்கள் இதற்க்கு உருப்படியான பதிலை சொல்லமுடியாது என்று தெரிந்தாலும் எப்படி மழுப்புகிறீர்கள் என்று எல்லோரும் அறிந்து கொள்ளுவார்களே.

 
 
இயேசு சர்வ வல்லைமையுள்ள கர்த்தர்: கிழே உள்ள வசனத்தில் இருக்கிறவரும் என்றால் "டாக்கப்படாமல்எப்போதும் இருக்கிறவர் என்று அர்த்தம்"
 
  • இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் (Almighty God) : (வெளி 1:8)
 
யூத ராஜ சிங்கம் யார்? பிதாவா? அல்லது இயேசுவா?
 
  • நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன். ஓசியா (5:14)
  • அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். (வெளி 5:5)
 
தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும் யார்? பிதாவா? இயேசுவா?
 
  • .....தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். (ஏசாயா 8:14-15)

  • ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; (1 பேதுரு 2:7)
 
எந்த கர்த்தர் வருகிறார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? இல்லை இல்லை இது இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைப்பற்றிய வசனம் இல்லை என்று மறுத்தாலும், திரும்பவும் வரப்போவது அவரே!
  • "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் " (ஏசாயா 40:3)"
கிழே உள்ள வசனத்தை படியுங்கள். வேறு தேவன் இல்லை என்றால் யோவான் 1:1 இல் உள்ள தேவன் யார்? மொத்தம் எத்தனை தேவன்கள்? இஸ்ரவேலின் ராஜா யார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? ரட்சகர் யார்? கர்த்தர் யார்? ஒரே கர்த்தர் இயேசு என்று கொரிந்தியரில் வாசிக்கிறோமே?
  • நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
  • எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை (ஏசாயா 43:10-11)
"தேவத்துவம் தேவனில்லாத ஒருவரிடத்தில் பரிபூரனமாய் இருக்கமுடியுமா?" தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
  • ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது."(கொலோசெயர் 2:9)
தேவன் ஆவியாய் இருக்கிறார். தேவனுடைய ஆவி அளவில்லாமல் (Infinitely) தேவனைத்தவிர யாரிடமாவது இருக்குமா?
  • தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். (யோவான் 3:34)
"சகலமும்" , "உண்டானதெல்லாம்" என்கிற வார்த்தை இந்த வசனங்களை புரட்டர்கள் புரட்டக்கூடாது என்ற நோக்கில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. "உண்டானது எல்லாம்" அந்த இயேசு கிறிஸ்துவை கொண்டே உண்டாக்கப்பட்டு இருந்தால் அவர் எப்படி உண்டானவரை இருக்க முடியும்? நீங்கள் தயவு செய்து யோவான் 1:3 விளக்குமாறு கேட்கிறேன். "சகலமும்" , "உண்டானதெல்லாம்" போன்ற வார்த்தைகளுக்கு உங்கள் விளக்கம் என்ன?
குறிப்பு: நான் கேட்டபது யோவான் 1:3 க்கு விளக்கம் திரும்பவும் நிதிமொழிகளுக்கு போகாதீர்கள். ஆதியிலே இயேசு உருவாக்கப்பட்டவர் என்றால் ஆதியிலே வார்த்தை "இருந்தது" என்று Past Tense ல் சொல்லுவது தவறு
கிழே உள்ள வசனத்தின் படி "குத்தப்பட்டது யார்"?
  • நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)
கிழே உள்ள வசனத்தில் யாரை குத்தினார்கள்?
  • யோவான் 19:37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
கடைசிநாளில் பரிசுத்தவான்களோடு நியாயம் தீர்க்க வருகிறவர் இயேசுகிறிஸ்துவா?
  • இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது (I தெசலோனிக்கேயர் 3:13 )
  • தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா 1:15 )
கிழே உள்ள வசனத்தில் வருகிறவர் யார்?
  • இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.. கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள். (ஏசாயா 66:15-16)
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவர் இயேசு கிறிஸ்துவா?
  • மத்தேயு 21:4 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவர் எகோவாவா?
  • சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சகரியா 9:9 )
யாருக்கு கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்? ஜெகோவா தேவனுக்கா?
  • அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன் (சகரியா 11:12-13 )
இல்லை இயேசு கிறிஸ்துவிற்கா?
  • நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். (மத்தேயு 26:15 )
  • அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப்போடலாகாதென்று சொல்லி, ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். (மத்தேயு 27:5 -7 )
நல்ல மேய்ப்பன் யார்? யேகோவா தேவனா?
  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். (சங்கீதம் 23 : 1 )
இயேசு கிறிஸ்துவா?
  • யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

சபையின் மணவாளன் யேகோவா தேவனா?

  • ஓசியா 2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.



  • நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 31:32)

 

 
  • நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.(எசேக்கியேல் 16 :8 )
அல்லது இயேசு கிறிஸ்துவா? இயேசுதான் மிகாவேல் என்று சொல்லுபவர்கள் தேவனை ஒரு அருவருப்பான பாவம் செய்தவராக்குகிறார்கள்
  • நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். (வெளி 19:9 )

  • நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். (II கொரிந்தியர் 11:2)
    

தேவன் ஆதியில் (மன்னிக்கணும் அநாதியில்) இருந்தே பிதாவாக இருந்தாரா? அநாதியில் அவருக்கு அன்பு என்றால் எப்படி தெரியும்? எப்படி வெளிப்படுத்தினார்?
கிழே உள்ள வசனத்தில் அநாதியானவர் யார்?
  • எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மிகா 5:2)

''தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை...."

என்பதும் உண்மை கிழே உள்ள வசனமும் உண்மையென்றால்? ஒன்று இரண்டு தேவர்கள் இருக்க வேண்டும்(அது விபச்சாரம்) அல்லது ஒரே தேவனுக்குள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்த்ததுவம் இருக்கவேண்டும். ஒரு ஆள்த்தத்துவம் பிதாவாகிய தேவன் அவர் ஒருவரும் காணக்கூடாதவர் மற்ற்றொரு ஆள்த்தத்துவம் குமாரனாகிய தேவன், தேவனை கண்டவர்கள் எல்லாம் அவரைத்தான் கண்டார்கள் (இது புதிய மற்றும் பழைய ஏற்பாட்டு பக்தர்களுக்கு பொருந்தும்)

 
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (ஏசாயா 6:1)

 

யோவான் ஏசாயா கண்டது இயேசுவின் மகிமையை என்று சொல்லுகிறார்.

  • ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். (யோவான் 12:41)
     
    அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 32:30)
  • ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; (யாத்திராகமம் 33:11)
     
    இவர்கள் எல்லாம் யாரை கண்டார்கள்?

கிழே உள்ள வசனத்தின் படி, அவர் மனுஷருபம் எடுப்பதற்கு முன்பு பிதாவுக்கு சமமாய் இருந்தாரா? அல்லது மனுஷரூபம் எடுத்து சம்பாதித்தாரா? குறிப்பு : தயவு செய்து உங்களுக்கு தவறாக போதிக்கப்பட்ட படி லூசிபர் புராணம் படாதீர்கள் ஏனென்றால் அவன் தேவனுக்கு கிழே இருந்து அவரை விட மேலாக வேண்டும் என்று நினைத்தான் இங்கே இயேசு தேவனுக்கு சமமாய் இருந்து கிழே இறங்குகிறார்.

  • அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் (பிலிப்பியர் 2:6 )
 


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தளத்தில் பதிவிடும் சகோதரர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை 
மட்டும் எடுத்துகொண்டு அதற்க்கு ஒரு சரியான முடிவை எட்டும் வரை அந்த ஒரே கருத்தை குறித்த விவாதத்தை நடத்தி செல்லும்படி அன்புடன் கேட்கிறேன். பத்து பதினைத்து  பதிவுகளை கொடுத்துவிட்டு அதற்க்கு எதிர் கேள்வி வரும்போது எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது சரியான விவாதம் அல்ல. 
  
ஒவ்வொரு பிரிவில் இருப்பவர்களும் தங்களுக்கென்று ஒரு கருத்தை கொண்டிருப்பது சகஜம்தான் அனால் உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான்! ஒரு சரியான பொறுமையுடன்  கூடிய  விவாதத்தின் மூலமே நாம உண்மையை வெளிக் கொண்டுவர முடியும்.  
 
சகோ. ஜான் அவர்கள்  ஆண்டவராகிய இயேசுவை குறிக்கும் பல வசனங்கள பழையஏற்பாட்டில் இருப்பதாக மிகதெளிவாக வசன ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்கள். இதற்கும் தங்களின் பதில் என்னவென்பதை அறியவிரும்புகிறேன்.  அதுபோல் பரிசுத்த ஆவி என்றால் என்ன?  என்ற திரியில் விவாதிக்கபட்ட பரிசுத்த ஆவியானவர் குறித்த விளக்கங்களுக்கு தங்களின் பதில் என்னவென்பதையும் தொடர்ந்து பதிவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்.  அதுபோல் சகோ அன்பு அவர்கள் கேட்ட கேள்விகள் சில பதில் இல்லாமல் இருக்கிறது அதையும் தொடர வேண்டுகிறேன்.         

 



__________________


இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

///இந்நிலையில் "தேவனை கண்டேன்" என்று சில மனுஷர்கள் சொல்லியிருக்கும் இந்த  இரு வேறுபட்ட கருத்துகளுக்கு  சரியான விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடவும்!  ////
 
யோவான் 1 :18  ''தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்".
யோவான் 5 :37  "என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை".

இந்த  வேதப் பதிவை  பார்க்கும் போது அவர் சத்தத்தைக் கூட யாரும் கேட்கவில்லை, யாரும் அவரின் ரூபத்தையும் பார்த்ததில்லை என்று இருக்கும் போது::::  பழைய ஏற்பாடு புத்தகத்தில் ஆதாம் ஏவாள் முதல் நோவா மற்றும் பல பேருடன் பேசிய அந்த தேவன் யார்?  சந்தேகமே இல்லை இது  இயேசு கிறிஸ்துவே ...



__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.



இளையவர்

Status: Offline
Posts: 18
Date:
Permalink  
 

அக்காலத்திலே தேவன் எல்லா  மனிதர்களோடும் பேச   கடவுள் சில ஆட்களை வைத்தார் , அவர்கள் தீர்க்க தரிசிகள்  என்று அழைக்கபட்டார்கள் , ஆனால் தற்காலத்தில் , ஆண்டவர் தமது வார்த்தையை எல்லா மக்களுக்கும் கொடுத்து விட்டார் . அதனால் தீர்க்க தரிசிகளோ , கடவுளிடம் பேசும் மத்தியஸ்தர்களோ, தற்போது தேவை இல்லை, ஏன் என்றால் ஆண்டவர் தற்போது நேரிடையாகவே (வசனத்தின் முலம் )பேசுகிறார்.... 

நமது "தேவன் ஆவியாகவே இருக்கிறார் "  (invisible god)   அதனால் நாம் அவரை பார்க்க முடியாது என்பது எனது கருத்து...........................



__________________

வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு 



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Roshan wrote:
  
யோவான் 1 :18  ''தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்".
யோவான் 5 :37  "என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை".

இந்த  வேதப் பதிவை  பார்க்கும் போது அவர் சத்தத்தைக் கூட யாரும் கேட்கவில்லை, யாரும் அவரின் ரூபத்தையும் பார்த்ததில்லை என்று இருக்கும் போது::::  பழைய ஏற்பாடு புத்தகத்தில் ஆதாம் ஏவாள் முதல் நோவா மற்றும் பல பேருடன் பேசிய அந்த தேவன் யார்?  சந்தேகமே இல்லை இது  இயேசு கிறிஸ்துவே ...


 

அப்படிஎன்றால் ஆதாம் ஏவாளை படைத்தது மற்றும் பகலின்  குளிர்ச்சியான வேளையில் அவர்களோடு பேசியது எல்லாம் யகோவா தேவன் இல்லையா? ஆப்ரஹாமோடு பேசியது மற்றும்  மோசேயுடன் சீனாய்  மலையில் பேசியது அதாவது
"தேவனாகிய கர்த்தர்" என்று  வேதம் குறிப்பிடுவது  யஹோவா தேவன் இல்லையா? சகோதரரே!
 
தேவனை "ஒருவனும் ஒருகாலும்" கண்டதில்லை என்று சொல்லும் வசனம்  "நீங்கள்" ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை என்று ஒரு குறிப்பிட கூட்டத்தை பார்த்து சொல்வதுபோலவே உள்ளது.  அதற்க்கு ஒப்ப மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்கள் நீர் போய் தேவனோடு பேசும்
 
உபாகமம் 5:25   நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்.
என்று சொல்லியிருப்பதாலும் 
 
 24.  தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்
 
என்று வசனம் சொல்வதாலும் அங்கு மோசேயுடன் பேசியது யகோவா தேவன் என்றே நான் கருதுகிறேன். வேத வசனங்களும் அவர் யஹோவா என்றுதானே குறிப்பிடுகிறது.  
 
இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

 



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

கீழ்கண்ட இரண்டு வசனங்களை படித்து இதை எவ்வாறு பொருள் கொள்வது   என்பதை அறிந்தவர்கள் சற்று விளக்குங்கள்.
 
யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,,
1:18 No one has ever seen God
 
மத்தேயு 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
5:8 “Blessed are the pure in heart, for they will see God.

"தேவனை ஒருவரும் ஒருகாலும் கண்டதில்லை" என்று சொல்லும் வேத வசனமே  "இருதயத்தில்  சுத்தம் உள்ளவர்கள் தேவனை காண முடியும்" என்றும் சொல்கிறது.
  இரண்டு  வேதவார்த்தைகளின்  வல்லமையையும்  குறைக்காமல்
விளக்கம் தரவும்!
 


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard