பாவம் என்பது தேவனின் பார்வைக்கு மிகவும் அருவருப்பாகவும் பாவத்துக்கான தண்டனை மிககொடியதாகவும் இருப்பதாலேயே ஆண்டவராகிய இயேசு மாம்ச ரூபம் எடுத்து அதற்க்கான தண்டனையாகிய கொடிய சித்திரவதையாகிய சிலுவை
மரணத்தை ஏற்றார்.
ஆண்டவராகிய இயேசு பாவங்களுக்கு மரித்துவிட்டதால் எந்த பாவம் செய்தாலும் பெரிய தண்டனை இல்லைஎன்று எண்ணிவிட வேண்டாம். பாவம் என்பது நாம் எந்த நிலையில் இருந்து செய்தாலும் அதன் பின்விளைவு மோசமானதே.
தான் ஊழிய நாட்களில் அனேக உபதேசங்களை செய்த ஆண்டவராகிய இயேசு இவ்வாறு கூறினார்:
யோவான் 12:48என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான்சொன்னவசனமே அவனைக் கடைசிநாளில்
நியாயந்தீர்க்கும்
அவருடைய நியாயம் தீர்க்கும் இந்த வார்த்தையை சற்று தியானித்து பார்த்தால் பாவம் என்பது கொடியது என்றும் அதைவிட்டு உடனடியாக விலகவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதும் புரியவரும்.
மாற்கு 9:43உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
மாற்கு 9:45உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
மாற்கு 9:47உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய், நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
பாவம் செய்வதை விட இடறல் உண்டாக்கும் உறுப்புக்களை தரித்து பிடுங்கி போடுவது நலம் என்று சொல்லும் அளவுக்கு பாவத்திற்கான தண்டனை கொடூரமானது. அந்த கொடூர தண்டனையை யாரும் அனுபவிக்க கூடாது என்ற கரிசனயிலேயே இயேசு சிலுவை சித்ரவதையை சகித்தார் அவ்வாறிருக்க அவரின்
பலியையும் அவர் அனுபவித்த பாடுகளையும் ஒன்றுமில்லாமல் காட்டி "அவியாத அக்கினியுள்ள நரகம்" என்று இயேசு போதித்து எச்சரித்த இடத்தை எருசலேமில் உள்ள குப்பைமேடு என்று போதித்து பாவத்துக்கு வரும் தண்டனையை குறைத்து காட்டுவது மனுஷர்களை நிவிசாரமாக பாவம் செய்யதூண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் மேலே ஆண்டவராகிய இயேசு நரகத்தை பற்றி சொன்ன வார்த்தைகளில் ஒருவன் மரித்த பிறகும் கையோடும் காலோடும் கூட நரக அக்கினியில் வேதனைப்பட வாய்ப்பிருப்பதை சொல்லி நம்மை எச்சரிக்கிறது.
இங்கு அன்புள்ள தேவன் இவ்வாறு அக்கினியில்போட்டு மனுஷர்களை வதைப்பாரா என்ற கேள்வி எழலாம்! அன்பானே தேவனை பட்சிக்கும் அக்கினியாகவும் அன்பை கட்டாமல் அடித்து கொல்பவராகவும் கூட வேதம் நமக்கு கட்டுகிறது.
ஆகினும் தேவனின் மிகுந்த இரக்கங்களாலும் அன்பாகவே இருக்கும் தேவனின் மிதமிஞ்சிய அன்பால்தான் சாத்தான் என்பவன்கூட இன்று வரை தேவனால் அனுமதிக்கபட்டு அனேக அக்கிரமங்களை நிறைவேற்றி வருகிறான். அனால் எல்லாவற்றிக்கும் நிச்சயமாகவே முடிவு உண்டு என்றல்லவா வேதம் சொல்கிறது. எனவே அனைத்து அக்கிரமத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டுவது இந்த உலகத்தை சீர்படுத்தும் நிலையில் தேவன் சில காரியங்களை நிறைவேற்றும் நிர்பந்தத்தில் இருக்கிறார்.
வெளி 20:15ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
உதாரணமாக நாம் நமது பிள்ளைகள்மேல் மிகுந்த அன்பும் பாசமும் உள்ளவர்கள்தான் அனால் என்னாதான் ஒரு காரியத்தில் உள்ள தீமையை எடுத்து சொல்லியும் அதை உதாசீனம்செய்து தீயவர்களுடன் சேர்ந்து தீயதே செய்யும் ஒரு பிள்ளையை, அது தண்டனையை அனுபவித்தால் தான் புத்திவரும் என்று விட்டு பிடிப்பது இல்லையா? அதுபோல் சாத்தான் எனும் தீயவனின் பிடியில் இருப்பவர்களையும் அவன் போகக்கூடிய இடத்துக்கு கூடஅனுப்பி தேவன் தண்டனையை அனுமதிக்க வாய்ப்பிருக்கிறது.
நாம் வசனங்களை கூருந்து கவனித்தல் நரகத்தில் உள்ள அக்கினிதான் அவியாத அக்கினி அல்லது நித்திய அக்கினியே அன்றி அங்கு போகும் ஆத்துமாக்கள்
நித்தியத்துக்கு வாதிக்கப்படுவதும் ஒரு குறிப்பிட்ட பிறகு மீட்கப்படுதும் தேவனின் இரக்கங்கள் அடிப்படயில் இருக்கும். இங்கு நாம் கருத்துசொல்ல இடமில்லை. வசனம் சொல்வது எதுவோ அது நிச்சயம் நடக்கும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒரு மனுஷன் இயேசு கிறிஸ்த்துவை தனது சொந்த ரட்சகராக என்றுக் கொண்டு இரட்சிப்பை பெரும்முன் செய்திருந்த எவ்வித பாவமானாலும் சரி, அவன் மனம் திரும்பி இரட்சிப்பை பெற்ற மாத்திரத்தில் ஆண்டவராகிய இயேசுவின் இரத்தம் அவனுடைய எல்லா பாவங்களையும் நீக்கி அவனை சுத்திகரிக்கிறது.
I யோவான் 1:7இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
வேறு எந்த மனுஷ முயற்ச்சியாலும் செய்யமுடியாத இந்த சுத்திகரிப்பை பெறும் போது நாம் சாத்தானின் பிடியில் இருந்து விடுபட்டு தேவனுடைய பிள்ளைகள் என்ற அந்தஸ்தை பெறுகிறோம்.
யோவான் 1:12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
"பாவம" என்பது எந்நிலையிலும் தண்டனைக்குரியது என்றாலும், ஆண்டவராகிய
இயேசு நமது பாவங்களுக்கு எல்லாவற்றிக்கும் சேர்த்து தண்டனையை அனுபவித்து கிரயம் செலுத்திவிட்டதன் அடிப்படையில் ஒருவர் இயேசுவை ஏற்றுக் கொண்டதிநிமித்தம் தன் பிறப்பில் இருந்து இயேசுவை ஏற்றுக்கொள்வது வரை செய்திருந்த அனைத்து பாவங்களில் இருந்தும் ஒருசேர விடுதலை பெறுகிறார்.
இயேசுவை ஏற்றுக்கொண்ட மனிதன் செய்யும் பாவங்கள்:
இவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொண்டு ரட்சிப்பைபெற்ற மனுஷன் தொடர்ந்து இந்த விழுந்துபோன பூமியில் பாவங்களின் மத்தியில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். பாவத்தோடும் பிசாசோடும் அனுதினம் அவனுக்கு போராட்டம் உண்டு. சாத்தான் ஒரு மனிதனை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுபவன் அல்ல. எனவே மீண்டும் பாவமானது அவனை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது சில பல நேரங்களில் மாம்ச கிரியைகளில் தவறிவிடவும் வாய்ப்பிருக்கிறது.
அவ்வாறு தவறி செய்யும் பாவங்களுக்காக நமது ஆண்டவராகிய இயேசு நமக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிறார், நாம் பாவங்களை உணர்ந்து மனம்திரும்பும் பட்சத்தில் நமக்கு மன்னிப்பை வாங்கி தருகிறார்.
I யோவான் 1:9நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்
ஆகினும் இயேசுவை ஏற்றுக்கொண்டபின்னர் செய்யும் ஒவ்வொரு பாவத்துக்கும் தேவனின் நீதிப்படி "தெரியாமல் செய்பனுக்கு சில அடி தெரிந்து செய்பவனுக்கு பல அடிகள் என்ற கணக்கில் தண்டனை நிச்சயம் உண்டு.
லூக்கா 12:48அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான்.
47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
எனவே இயேசுவை ஏற்றுக்கொண்டபின் செய்யப்படும் மீருதல்களுக்கு அனேக அடிகள் உண்டு என்ற உண்மையை கருத்தில் கொண்டு அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இயேசுவை ஏற்றுக்கொண்ட அனேக கிறிஸ்த்தவர்கள் பாவம் செய்வதை விட்டொழிக்க அதிக அக்கறை கட்டுவது இல்லை. ஆனால் பாவத்துக்கு எதிரான நமது போராட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை பவுல் இவ்வாறு சொல்கிறார்.
எபிரெயர் 12:4பாவத்திற்கு விரோதமாய்ப் போராடு கிறதில்இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.
ஆம்! ஒரு கிறிஸ்தவன் எதற்கு விரோதமாக போராடுகிறானோ இல்லையோ பாவத்துக்கு விரோதமாக போராட வேண்டியது அவசியம். அப்போராட்டத்தில் இரத்தம் சிந்தும் நிலை வந்தாலும் எதிர்த்து நிற்க்க வேண்டும் என்று வேதம் போதிக்கிறது.
ஆனால் இன்றோ இயேசுவை ஏற்றுக்கொண்டால் பாவம் செய்வதை குறித்து அக்கறை கட்டவேண்டிய அவசியம் இல்லை என்று போதிக்கும் ஒரு கூட்டமே உருவாகி விசுவாசிகளை சாத்தானின் பக்கம் சாய்த்து நிற்க செய்து வருகிறது. இவர்கள் உலக மக்களை விட கேவலமான நிலையில் பெருமை கோபம் வஞ்சம் பண ஆசை போன்றவை நிறைந்த வர்களாக இருந்து கொண்டு ஞாயிற்று கிழமை ஆனால் வேத புத்தகத்தை தூக்கிக் கொண்டு சபைக்கு ஓடுகிறார்கள். இவர்களின் சாட்சியற்ற வாழ்க்கையால் கிரிச்த்தவத்துக்கே அவப்பெயர் உண்டாகும் படி நடந்துகொள்கிறார்கள்
ஆம்! நம்முடய நற்கிரியைகள் மற்றும் நல்ல செயல்களை கண்டு மனுஷர்கள் தேவனை மகிமை படுத்தும் ஒரு பரிசுத்த வாழ்கையை வாழ நாம் பிரயாசம் எடுப்பது அவசியம்.
மத்தேயு 5:16மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப்பிரகாசிக்கக்கடவது. மற்றபடி நானும் ஒரு கிறிஸ்த்தவன் என்று சொல்லிக்கொண்டு உலகத்துக்கு ஒத்த வேஷம் போட்டு பாவத்தை விட்டொழிக்க முடியாமல் வாழும் ஒரு கிறிஸ்த்தவ வாழ்வில் எந்த பயனும் இல்லை அத்தோடு அவரர் செய்த பாவங்களுக்கு தண்டனை இல்லாமல் தப்பவே முடியாது.
வெளி 22:12இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன்என்னோடேகூடவருகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)