இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிறுமையும் எழிமையுமானவர்கள் மாத்திரம் இதை படிக்கவும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சிறுமையும் எழிமையுமானவர்கள் மாத்திரம் இதை படிக்கவும்!
Permalink  
 


இந்த  உலகத்தில் உள்ள மனுஷர்களிடையே  அநேகே என்ற தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
ஒரு சிலர்  ஒரு நேரத்து உணவுக்கும் கூட போதிய  பணமில்லாமல் அனுதினமும் கஷ்டப்படுகின்றனர் ஆனால் ஒரு சிலரோ சம்பாதித்த  பணத்தை எங்குகொண்டு புதைத்து வைப்பது என்று வழி தெரியாமல் தவிதுகொண்டிருக்கின்றனர். .
 
ஒருசில பெண்கள்  எல்லா அங்கங்களும் மிக  நேர்த்தியுடனும் அழகுடனும் படைக்கப்பட்டு பார்ப்பதற்கு தேவதைகள்போல் இருக்கின்றனர் ஆனால் சில பெண்களை பார்ப்பதற்கு எந்த அழகும் இல்லாமல் போதிய நிறமும் இல்லாமல் அற்ப்பமாக் படைக்கப்பட்டுள்ளனர்.   
 
ஒருசிலருக்கு அளவுக்கு  அதிக ஞானத்தை ஆண்டவர்  கொடுத்துள்ளார் ஆனால் ஒரு சிலருக்கோ  சிறு காரியத்தைகூட புரிந்துகொள்ளும் ஞானம் இருப்பதில்லை. 
 
ஒரு சிலருக்கு மூன்றும் ஆண் குழந்தையை தேவன்  கொடுத்துள்ளார் அவர்கள் பெண் குழந்தைக்காக ஏங்குகின்றனர்! ஒருசிலருக்கு மூன்றும் பெண் குழந்தையை கொடுத்து அவர்கள் ஒரு ஆண் குழந்தை இல்லாமல் மிகுந்த  துயரடைகின்ற்னர்
இன்னும் சிலருக்கு ஒரு குழந்தைகூட இல்லாமல் அடுத்த வீட்டு  பிள்ளைகளை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கின்றனர்.
 
ஒருசில உட்காந்த இடத்திலேயே ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பாதித்து விடுகின்றனர் ஆனால் ஒருசிலரோ ஒருநாள் உயிரைகொடுத்து வெயிலில் வேலை செய்தாலும் 100௦ ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் அல்லாடுகின்றனர்.
  
இப்படி எங்கு பார்த்தாலும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த உலகமாகவே இந்த உலகம் இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் பார்த்து ஆண்டவரை  "ஓர வஞ்சனை" செய்பவர் என்று நான்  பலமுறை கருதியதுண்டு.   
 
ஒரு அழகில்லாத அவலட்சனமான  பெண்ணை எந்த ஆணும் திரும்பிகூட  பார்க்க விரும்புவதில்லை. அவ்வாறு பல பெண்கள் 35-40  வயதுக்கு மேல் ஆகியும் திருமணமாகாமல் இருப்பதை  கிராமங்களில் பார்க்க முடியும். அப்படிபட்ட பெண்களை பார்க்கும் போதெல்லாம் எனது மனதில் மிகுந்த பாரம் உண்டாகும். நல்ல அழகான பெண்ணை பார்க்கும்போது   இந்த பெண்ணின் மனது எவ்வளவு பாடுபடும். ஆண்டவர் ஏன்  இப்படி  செய்கிறார்? ஒரு ஆடுமாட்டை படைப்பது போலவாவது எல்லோரையும் ஒரேமாதிரி படைத்திருக்கலாமே என்று எண்ண தோன்றும்.
 
இவ்வாறு பலநாள் புலம்பி  பாரப்பட்ட நான், ஓர்நாள்  அறிந்துகொண்ட  அறிந்து கொண்ட உண்மை என்னவெனில்! . 
 
அதிக பணம் படைத்தவர்கள், அதிக ஞானம் உள்ளவர்கள்  பூரண அழகுள்ளவர்கள் மற்றும்  தேவையான எல்லாவற்றையும் இந்தஉலகில் பெற்றவர்கள் எல்லோருமே இந்த உலக வாழ்விலேயே போதிய திருப்தியடைந்து தேவனைதேடாதே போய்விட வாய்ப்பிருக்கிறது.  அவர்களுக்கு எல்லாமே தேவையான அளவு கிடைப்பதால் இந்த உலகத்தின் இன்பங்களில் மூழ்கிய நித்தியத்தை தவறவிட்டுவிடுகின்றனர்.    
 
ஆனால் குறையுள்ளவர்களோ அனுதினமும் நொந்து துயரப்பட்டு என்னை ஏன் இப்படி படைத்தீர் ஆண்டவரே? என்று புலம்பி துக்கத்துடனேயே  தங்கள் நாட்களை கழிக்கின்றனர்.  இவர்களே தேவனை நெருங்கி வருகின்றனர். துன்பமும் துயரமும் வரும்போது மட்டும்தான் மனுஷன் கடவுளை தேடி ஓடுகிறான்.
 
நமது  தேவனும்  துயரப்படுகிரவர்களுக்கு ஆறுதல் தரும் தேவனாக இருக்கிறார்.  
 
மத்தேயு 5:4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
 
ஆண்டவர்  தெரிவித்தபடி அழகும் ஐஸ்வர்யமும் கொஞ்சகாலம் இருப்பதும் இந்த உலகோடு சேர்த்து  மனிதனை படுகுழிக்கு இழுத்து செல்லும் சுருக்கு கண்ணி போன்ற கேடான காரியங்கள் என்பதுவே சரியான கணிப்பு.
 
நீதிமொழிகள் 31:30 சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்
 
யாக்கோபு 1:11 சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்
 
ஆனால் மனுஷர்களுக்கு உள்ள குறைவுகளோ, அவனை  தேவனை நோக்கி நடத்துவதும் தேவனை தெரிந்துகொள்வதற்கும் இவர்களுக்கு தேவனால் வழங்கப்பட வெகுமதியாகவே நான் கருதுகிறேன்.  
 
இந்த உலகத்தில் மாம்சமாக பிறந்து தேவனுடைய பாதுகாப்பு வளையத்துக்குள் வராத ஒவ்வொருவரையும் தனது இஸ்டம்போல வாட்டி வதைக்கும் அதிகாரம்
சாத்தானிடம் இருக்கிறது. பற்றாக்குறைகளையும் பெலகீனங்களையும் ஏற்ப்படுத்தி மனுஷர்களை  வதைப்பதன் மூலம்  மனுஷர்களுக்கு மனமடிவையும்  அவனை  படைத்த தேவனுக்கு மனவேதனையை ஏற்ப்படுத்துவதுமே சாத்தானின் நோக்கம்.
 
ஆனால் தேவனோ என்றுமே சிறுமையும் எழிமையுமானவன்மேல்தான் அதிக நோக்கமாயிருக்கிறார்
 
சங்கீதம் 35:10 சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே
 
சங்கீதம் 40:17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்
 
ஏசாயா 41:17 சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
 
செப்பனியா 3:12 உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்;
 
கூச்ச பார்வையிநிமித்தம் அற்பமாக எண்ணப்பட்ட லேயாளையே கர்த்தர் கவனித்தார்.  
 
ஆதியாகமம் 29:31 லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்;
 
"நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்.  I சாமு 18:13"   என்று சொன்ன இந்த அற்பமான தாவீதுவே பின்னாளில் பெரிய ராஜாவானான்.
 
 I சாமுவேல் 1: 6. கர்த்தர் அவள் (அன்னாளின்)  கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்     
 
இவ்வாறு மலடியாயிருந்து  துக்கப்பட்டு விசனப்பட்ட அன்னாளே பின்னாளில் சாமுவேல் என்னும் மிகப்பெரிய தீர்க்கதரிசிக்கு தாயானாள்.
 
எனவே குறைவுகளால் துயரங்களில் சிறுமைபட்டு  அனுதினமும்  வாடும் அன்பான சகோதரனே சகோதரியே! நீங்கள் பாக்கியவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! உங்கள்மேல் சிந்தையுள்ள தேவன் ஒருவர்உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!  
 
உங்கள் குறைகள் துயரங்கள் எல்லாவற்றையும் தேவனின் பாதத்தில் கொட்டி தீருங்கள்!  என்னை ஏன்  இவ்வாறு   படைத்தீர்?  என்மீதான உம்முடைய நோக்கம் என்ன?  என்று தேவனை நோக்கி  கேள்வி கேளுங்கள். யோபு புலம்பியதுபோல புலம்புங்கள்! உங்களின் எல்லா குறைவுகளையும் நிறைவாக்கும் நன்மையான பதில் தேவனிடம் நிச்சயம்  உண்டு!   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
RE: சிறுமையும் எழிமையுமானவர்கள் மாத்திரம் இதை படிக்கவும்!
Permalink  
 


சகோதரே நானும் தங்களைபோல்தான் நினைதத்ததுண்டு.

ஏன் இவ்வாறு மனிதனின் படைப்பில் ஏற்ற தாழ்வுகள் என்று பல நாள்கள் எண்ணியதுண்டு. எல்லாவற்றிற்கும் தேவனிடத்தில் பதிலுண்டு தேவனை நோக்கி வேண்டி நிற்கும்போது கர்த்தர் நிச்சயமாய் அதற்கான தீர்வை கட்டளையிடுவார் என்பது எனது அனுபவம்.

மாறாக தங்களுடைய சொந்த முயற்சியினால் மனிதன் எதையும் மாற்றிவிட முடியாது ஆனால் மனிதனுடைய இன்றைய நிலைமை தேவனிடத்தில் போய் நிற்பதை கட்டிலும் மனிதர் தங்களுக்கு உதவி செய்வார்கள என்று நினைபவர்கள்தான் அதிகம் எந்த மனுசனும் பொய்யன் என்று வேதம் சொல்லுகிறது.

சங்கீதம் 116:11 எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.

ரோமர் 3:4 அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.


இன்றைக்கு மனிதன் தேவனுடைய வார்த்தையை காட்டிலும் மனுசருடைய வார்த்தைக்குத்தான் செவிகொடுகிறான்.

நீதிமொழிகள் 17:4 துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.


ஒரு மனுஷன் எப்போது தேவனை நோக்கி வருகிறானோ அப்போதுதான் அவனுடைய வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் கிடைக்கும்.



__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
சிறுமையும் எழிமையுமானவர்கள் மாத்திரம் இதை படிக்கவும்!
Permalink  
 


எனக்கு  ஒரு சிறு சந்தேகம் ஆழகானவர்களையும் தேவன் தான் படைக்கின்றார்

அதிக ஞானம் உள்ளவர்களையும் தேவன் தான் படைக்கின்றார்

இப்படி இருக்க நாம் மனிதர்களை ஒன்றும் கேட்க முடியாது ஏனென்றால் இது மனிதர்களால் உண்டானது அல்ல அவன் உருவாக்கியது அல்ல அவர்களை உண்டாகியது தேவன்

என் கருத்து என்னவெனில் அழகானவர்களும் அதிக ஞானம் உள்ளவர்களாய் இருந்தாலும் பணக்காரனாய் இருந்தாலும் சில குணங்களும் சில நல்ல எண்ணங்களும் இருந்தால் போதும்

மற்றும் தேவன் மனிதர்களுக்கு நல்லது கட்டது என்ன வென்று தெரிவித்து விட்டார் இனி தேர்ந்து எடுக்க வேண்டியது அவர்கள் கடமை

பிச்சகாரனாய் இருந்தாலும் அவனுக்கு இச்சை உணர்வுகளும் ஆசைகளும் இருக்கும் அல்லவா

பணக்காரன் அழகு உள்ளவனாய் இருந்தாலும் அவனுக்கும் இதே இச்சை உணர்வுகளும் ஆசைகளும் இருக்கும் அல்லவா

இங்கு அவர்கள் குணங்கள் மனதின் சிந்தனையை பொறுத்து தான் தீர்ப்பு அமையும் என்று நான் நினைக்கிறேன்

அதிக பணமும் ஆஸ்தியும் ஆப்ரகாமிடத்தில் இருந்தது (அவன் உண்மையாய் இல்லையா )  

வேதத்தில் பல பெண்களை மிக அழகு உள்ள ஸ்திரி ரூபவதி என்று வேதம் கூறி உள்ளது அவர்களும் தேவனுக்கு உண்மையாய் இருந்தார்கள் என்று நினைக்கின்றேன்

அவர்களை மட்டும் அல்ல தாவிது போன்ற ஆண்களையும் வேதம் அழகு உள்ளவர்கள் என்று குறிப்பிட பட்டுள்ளது

என்னை பொறுத்த வரை தேவனே அழகானவர்களை உண்டாகி அந்த அழகை அவர்களுக்கு ஒரு கன்னியாக வைக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.................



-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 9th of April 2011 01:06:36 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: சிறுமையும் எழிமையுமானவர்கள் மாத்திரம் இதை படிக்கவும்!
Permalink  
 


EDWIN SUDHAKAR wrote:

என்னை பொறுத்த வரை தேவனே அழகானவர்களை உண்டாகி அந்த அழகை அவர்களுக்கு ஒரு கன்னியாக வைக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.................

 


சகோதரர்  எட்வின்  அவர்களே தேவன் எதையும் யாருக்கும் கண்ணியாக வைப்பது இல்லை.  தாங்கள்  சொல்லும் கருத்துபடி அழகும் ஐஸ்வர்யமும் அதிகம்பெற்றும் தேவனுக்கு ஏற்றவாறு நடந்த ஒரு சில மனுஷர்களைபற்றி வேதம நமக்கு விளக்கியிருக்கிறது    

மகா ரூபவதி யாக இருந்தும் மிருந்த தாழ்மை  மற்றும் இரக்கத்துடன் ஆரஹாமின்
வேலைக்காரனுக்கு வேண்டிய தண்ணீர் வார்த்த ரெபெக்காள்.
 
மற்றும் 
 
வெள்ளியும் பொன்னும் உடைய சீமானாக இருந்தும் தேவனுக்கு கீழ்படிந்து நடந்து விசுவாசத்தின் தகப்பன் என்று பெயர்பெற்ற ஆப்ரஹாம் போன்றவர்கள் பற்றி நாம் அறிவோம்!
 
ஆகினும்  ஐஸ்வர்யமும். அழகும். மனிதனை கெடுக்கும் கண்ணிகள் என்பதை
வேதம் நமக்கு திட்டமாக போதிக்கிறது  
 
வசனம் இவ்வாறு சொல்கிறது: நீதி 31:30 சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்
  
வஞ்சனை என்றால்  அது ஒருவரை  வஞ்சிக்க கூடியது! அதாவது ஏறக்குறைய ஒரு கண்ணி போன்றதுதான். அதாவது அது தேவனால் அது நன்மைக்க்காகதான் அருளப்பட்டது அனால் அதை அதிகம் பெற்றதிநிமித்த்ம் பலர் மேட்டிமையாகி திசைமாருகின்றனர். உதாரணமாக சினிமா நடிகைகளை எடுத்துகொள்ளுங்கள்   
  
லூசிபர் எதனால் மேட்டிமையானான் என்று வேதம் சொல்கிறது
 
எசேக்கியேல் 28:17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்;
 
அவனுடய அழகும் மினுக்குமே அவனை தேவனுக்குமேலாக தன்னை உயர்த்தும் அளவுக்கு கெடுத்துபோட்டது.  
 
அழகு என்பது  ஒருபுறத்தில் அனேக நன்மைகளை தவருவது போல் தெரிந்தாலும் இன்னொருபுறம் அது நம்மை சுலபமாக தேவனைவிட்டு பிரித்துவிடும் வஞ்சனை கொண்டது.
 
ஐஸ்வர்யமும் அதுபோன்றதே எனவேதான் ஆண்டவராகிய இயேசு 
 
மத்தேயு 19:24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
என்று சொல்லியிருக்கிறார்.
 
ஐஸ்வரையும் அழகும் மனதில் கர்வத்தையும் திமிரையும் அகங்காரத்தையும் கொண்டுவரும் கண்ணிகள்! ஆனால் கர்த்தருக்கு பயந்து நடப்பவர்கள்  இவற்றை மேற்கொள்ள முடியும்.  
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard