ஆண்டவராகிய இயேசுவை பற்றி வேதம் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையில் அவர் "தேவனின் வார்த்தை" என்பதை நம்மால் தெளிவாக அறியமுடியும்.
சுருங்கசொல்லின் தேவனின் வார்த்தையானது உருவாக்கும் தேவவல்லமையுடன் (creating power) தேவனாக தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை என்னும் வல்லமையே தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டு பின்னர் மாம்சமானது. எனவே இயேசுவானவர் தேவனும், தேவனுக்கு சமமானவருமாக இருக்கிறார். இவர்களுக்கு இடையில் எந்த பிரிவினையும் இல்லை!
வெளி 19:13இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தைஎன்பதே.
யோவான் 1:1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி யது
I யோவான் 1:1ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
இவ்வளவு தெளிவாக பலவசனங்கள் ஆண்டவராகிய இயேசு"தேவனின் வார்த்தை" என்பதை விளக்கியும் அதை ஏற்க்க மனதில்லாமல், இயேசுவை தேவனுக்கு சமமான தனி தேவனாக்கி, அவரை தொழுதுகொள்வதால் தங்களை பெரியவர்கள் என்பது போல் காண்பித்து, தேவனின் வார்த்தைக்கும் தேவனுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்ப்படுத்த நினைப்பது மனுஷனின் சதி என்பதே எனது கருத்து.
இயேசு தொழத்தக்க தேவன் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை ஆனால் ஒன்றான மெய்தேவனால் அனுப்பபட்ட அவரை ஒரு தனி தேவனாக காட்டி, அவரை தொழுதுகொள்வதால் தாங்கள் ஏதோ ஒரு மேன்மையானவர்கள என்பதுபோல காட்ட நினைப்பதுவே சதியின் ஆரம்பம்
எபிரெயர் 1:6மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்த போது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
இயேசுவையும் அவரது மகிமையையும் அறியாமல் அவரை மிகாவேல் தூதனதுக்கு சமமாக்கி அவரது தேவனுக்கு சமமான மேன்மையை ஒரு தூதனின் லெவலுக்கு குறைக்க நினைப்பதும் ஒரு மனுஷ தந்திரமே!
தேவனும் அவரது வார்த்தையும் மாறுபாடான காரியங்களை போதிக்குமோ?ஒருநாளும் கிடையாது! தேவன் சொன்னது எதுவோ அதைதான் அவர் வார்த்தயாகிய இயேசுவும் நமக்கு சொன்னார்
யோவான் 8:28நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
எனவே இயேசுவின் வார்த்தைகள் எல்லாம் பிதாவின் வார்த்தைகளே அவ்வாறிருக்க, இன்று தேவனையும் அவர் வார்த்தையையும் பிரிக்க நினைப்பது சாத்தானின் சதியல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?
எங்கெல்லாம் பிரிவினையை உண்டாக்க முடியுமோ அங்கெல்லாம் புகுந்து பிளவை ஏற்படுத்தும் சாத்தான் தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையிலேயே பிரிவினையை உண்டாக்கி வருகிறது என்பதே நவீன கால உண்மை! தேவனின் வார்த்தையை கைகொள்ள விரும்பாமல் குறுக்கு வழியில் பரலோகத்துக்கு போய்விடலாம் என்று எண்ணும் சில குதர்க்கவாதிகளே இந்த பிரிவினை நாடகத்தின் சூத்திரதாரிகள்.
"தேவனும் அவரது வார்த்தையும் மாறுபாடான காரியங்களை ஒருநாளும் போதிப்பது இல்லை" என்ற உண்மை நமக்கு தெளிவாக தெரிந்தாலும் சாத்தானின் தந்திரத்தால் அவ்வாறு பிரித்து போதிக்கப்படும்போது நாம் விழுந்துவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது.
"இயேசுவின் வார்த்தைகள்" என்னும் கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்ட வீடானது ஒருபோதும் விழுந்துபோகாது என்று வேதம் நமக்கு சொல்கிறது.
மத்தேயு 7:24ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். மத்தேயு 7:25பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
எனவே இயேசுவின் வருகம் சமீபித்திருப்பதால் அடுத்தவரை குறை கண்டுபிடித்து கால நேரத்தை வீணடித்து கொண்டு இருக்காமல் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு அதை தான் வாழ்வில் கைகொண்டு நடக்க வாஞ்சிப்பவர் எவரோ அவரை எந்தவிதமான கள்ள உபதேசமும், வஞ்சனைகளும், மார்க்க பேதங்களும், பரியாசங்களும், உலக சோதனைகளும் ஒன்றுமே செய்துவிட முடியாது
ஆனால் அவரது வழிகளை கைகொண்டு நடக்க பிரயாசம் எடுக்காமல் அதிகம் ஆராய்ச்சி செய்து, பட்சபாதம் பண்ணினால் தேவனின் கடும்கொபமே நம்மேல் வரும்.
மல்கியா 2:9நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்
எனவே அன்பானவர்களே! உங்கள் அஸ்திபாரம் கன்மலையாம் இயேசுவின் மேல் இருப்பதோடு, அவர் வார்த்தைகளை உங்கள் வாழ்க்கையில் அப்பியாசித்து கை கொள்ள வாஞ்சியுங்கள்! அதையே தேவன் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறார். அவர் வழிகளை கைகொண்டு நடப்பவரை எவரும் என்றென்றும் அசைக்கவே முடியாது!
நீதிமொழிகள் 10:29கர்த்தரின்வழிஉத்தமர்களுக்கு அரண்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// இயேசுவை தேவனுக்கு சமமான தனி தேவனாக்கி, அவரை தொழுதுகொள்வதால் தங்களை பெரியவர்கள் என்பது போல் காண்பித்து, தேவனின் வார்த்தைக்கும் தேவனுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்ப்படுத்த நினைப்பது மனுஷனின் சதி என்பதே எனது கருத்து. //
யார் இப்படி சொன்னது என்று விளக்குவீர்களா? இயேசு பிதாவுக்கு சமமானவரா இல்லையா?
//இயேசு தொழத்தக்க தேவன் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை ஆனால் ஒன்றான மெய்தேவனால் அனுப்பபட்ட அவரை ஒரு தனி தேவனாக காட்டி, அவரை தொழுதுகொள்வதால் தாங்கள் ஏதோ ஒரு மேன்மையானவர்கள என்பதுபோல காட்ட நினைப்பதுவே சதியின் ஆரம்பம் //
தேவனை தவிர வேறு யாரையாவது தொழலாமா? கிறிஸ்தவத்தில் மொத்தம் எத்தனை தேவர்கள் இருகிறார்கள்? நீங்கள் உங்களுடைய நிலையை தெளிவு படுத்திவிட்டு மற்றவர்களை தாக்கினால் நலமாய் இருக்கும்
SUNDAR wrote:...இயேசு தொழத்தக்க தேவன் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை ஆனால் ஒன்றான மெய்தேவனால் அனுப்பபட்ட அவரை ஒரு தனி தேவனாக காட்டி, அவரை தொழுதுகொள்வதால் தாங்கள் ஏதோ ஒரு மேன்மையானவர்கள என்பதுபோல காட்ட நினைப்பதுவே சதியின் ஆரம்பம் ...
...இயேசுவையும் அவரது மகிமையையும் அறியாமல் அவரை மிகாவேல் தூதனதுக்கு சமமாக்கி அவரது தேவனுக்கு சமமான மேன்மையை ஒரு தூதனின் லெவலுக்கு குறைக்க நினைப்பதும் ஒரு மனுஷ தந்திரமே!
// இயேசுவை தேவனுக்கு சமமான தனி தேவனாக்கி, அவரை தொழுதுகொள்வதால் தங்களை பெரியவர்கள் என்பது போல் காண்பித்து, தேவனின் வார்த்தைக்கும் தேவனுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்ப்படுத்த நினைப்பது மனுஷனின் சதி என்பதே எனது கருத்து. //
யார் இப்படி சொன்னது என்று விளக்குவீர்களா? இயேசு பிதாவுக்கு சமமானவரா இல்லையா?
கிறிஸ்த்துவை தொழுகிறோம் என்று சொல்பவர்கள் அநேகர் தங்களை ஏதோ தனிப்பட்டவர்களாகவும் மற்றவர்களை அற்பமானவர்களாக எண்ணி பதிவிடுவதும்
அவ்வப்பொழுது நடைபெறுவதே. அவ்வாறான கருத்துக்கள் சில தளங்களிலே இருக்கிறது, அந்த கருத்துக்கள் இயேசுவை தனியே பிரித்து உயர்த்தி அவரை அனுப்பிய தேவனை உதாசீனம் பண்ணும் நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தியை எழுதநேர்ந்தது. இவர்கள் ஒன்றான மெய்தேவனையும் அவர் அனுப்பிய கிறிஸ்துவையும் பிரிக்க நினைப்பவர்கள்.
"பிதாவாகிய தேவனின் வார்த்தைதான் இயேசு" என்று இருக்கும்போது இயேசு பிதாவுக்கு சமமானவரா இல்லையா என்ற கேள்வியே சரியானதுஅல்ல. ஏனெனில் இருவரும் வெவேறு அல்லவே அல்ல! பவுல் அந்த வார்த்தையை பயன்படுத்திய காரணம் ஒப்பீடுகாக அல்ல
இரண்டுபேர் இருக்கும்போதுதான் அவர்களுக்கு இடையில் உயர்ந்தவரா, தாழ்ந்தவரா, சமமானவரா என்ற ஒப்பீட்டு கருத்தே உண்டாகும். அனால் இங்கு "தேவன் ஒருவரே" என்று இருக்கும்போது இவர் உயர்ந்தவர் இவர் சமாமானவர் என்ற கருத்துக்கே இடமில்லை. தேவனுக்கு சமன் தேவன் ஒருவரே! அவருக்கு "கிறிஸ்த்து" என்று இன்னொரு சமமான தேவன் இல்லை! காணமுடியாத தேவனின் தர்சொரூபம் "இயேசு" அவ்வளவே!
உங்கள் நிலையே குழப்பமேயன்றி என்னுடய நிலை தெளிவானது!
John wrote:////தேவனை தவிர வேறு யாரையாவது தொழலாமா? கிறிஸ்தவத்தில் மொத்தம் எத்தனை தேவர்கள் இருகிறார்கள்? நீங்கள் உங்களுடைய நிலையை தெளிவு படுத்திவிட்டு மற்றவர்களை தாக்கினால் நலமாய் இருக்கும்///
எனது நிலை தேவனையும் இயேசுவையும் தனித்தனியே பிரிக்காதீர்கள் என்பதே! மேலதிக விளக்கங்களுக்கு கீழ்கண்ட தொடுப்பை வாசிக்கவும்
சுருங்க சொல்லின் ஆண்டவராகிய இயேசு மனுஷராக பூமியில் பிறந்து விட்டதால் அவருக்கென்று ஒரு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தேவனுக்கு எந்த உருவமும் கிடையாது அவர் ஆவியாய் இருக்கிறார். இன்று இயேசுவை தொழுகிறேன் என்று சொல்கிறவர்கள் "இயேசுவை சிலுவையில் கண்டேன்" "அவர் முள்முடி சூட்டப்பட்டு இருப்பதை கண்டேன்" "அவர் அவர் என் அருகே காரில் அமர்ந்திருப்பதை கண்டேன்" என்று சொல்வதெல்லாம் இதுபோல் ஒரு உருவத்தை அவருக்குகொடுத்துள்ளதால் வந்த நிகழ்வுகளே. எனவே எந்த ஒரு உருவத்தையும் இமேஜ் செய்யாமல் ஆவியாயிருக்கும் தேவனை ஆயியோடும் உண்மையோடும் தொழுவதே பிதா விரும்புவது!
//அந்த கருத்துக்கள் இயேசுவை தனியே பிரித்து உயர்த்தி அவரை அனுப்பிய தேவனை உதாசீனம் பண்ணும் நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தியை எழுதநேர்ந்தது. இவர்கள் ஒன்றான மெய்தேவனையும் அவர் அனுப்பிய கிறிஸ்துவையும் பிரிக்க நினைப்பவர்கள். //
இதற்க்கு நீங்கள் ஒரு உதாரணம் கொடுத்தால் நலமாய் இருக்கும். எனக்கு தெரிந்து பிதாவாகிய தேவனை யாரும் உதாசீனம் பண்ணியதை படித்ததாக நினைவில்லை. மாறாக இயேசுவை தொழக்கூடாது என்று சொன்னவர்களுக்கு நீங்கள் ஒத்துழைத்த உதாரணங்களை என்னால் காட்டமுடியும். இயேசுவை தொழக்கூடாது என்று சொல்லுபவன்தான் தேவனை உதாசீனம் பண்ணுகிறவன்.
//இரண்டுபேர் இருக்கும்போதுதான் அவர்களுக்கு இடையில் உயர்ந்தவரா, தாழ்ந்தவரா, சமமானவரா என்ற ஒப்பீட்டு கருத்தே உண்டாகும்.//
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? இயேசுவும் பிதாவும் ஒரே ஆள்தத்துவம் உடையவர்களா? இயேசு தாழ்ந்தவர் என்று சொலுகிற கூட்டத்தை நோக்கி உரத்து சொல்ல வேண்டிய காரியங்களை "இயேசு தொழத்தக்கவரே" என்று சொல்லும் எங்களை பார்த்து சொல்லுவது வேதனை! இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார் என்ற காரியத்தில் F.F Bruce ஐ Refer பண்ணின நீங்கள் திரித்துவத்தை குறித்து அவர் என்ன சொல்லுகிறார் என்றும் தேடி பார்க்கலாமே?
//"தேவன் ஒருவரே" என்று இருக்கும்போது இவர் உயர்ந்தவர் இவர் சமாமானவர் என்ற கருத்துக்கே இடமில்லை. தேவனுக்கு சமன் தேவன் ஒருவரே! //
அமென்!! இதைத்தான் நாங்கள் முதலிலே சொல்லிவருகிறோம்.
சகோ. ஜான் அவர்களே முதலில் நான் இங்கு எழுதுவதன் பிரதான நோக்கம் இயேசுவின் மேல் அன்பாயிருந்து அவர் வார்த்தையை கைகொண்டு மரணத்தை ஜெயிப்பது தான் என்பதை கருத்தில்கொண்டு படியுங்கள்! .
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக்கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லைஎன்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்
John wrote:
/// பிதாவாகிய தேவனை யாரும் உதாசீனம் பண்ணியதை படித்ததாக நினைவில்லை.///
பிதாவை யாரென்று சரியாக அறிந்தால்தானே அவரை உதாசீனம் செய்கிறோமா
இல்லையா என்பதே ஒருவருக்கு தெரியவரும். பிதா எல்லோரிலும் மேலானவர் என்று இயேசுவே தனது வாயால் சொல்லியிருக்க,
யோவான் 10:29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்
யோவான் 15:1நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். யோவான் 14:28ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்
அந்த வசனங்களை இரட்டடிப்பு செய்து அவரை இயேசுவுக்கு சமமானவர் என்று போதிப்பதன் மூலமே நீங்கள் பிதாவை சரியாக அறியவில்லை என்பது புரிகிறது.
John wrote:
///மாறாக இயேசுவை தொழக்கூடாது என்று சொன்னவர்களுக்கு நீங்கள் ஒத்துழைத்த உதாரணங்களை என்னால் காட்டமுடியும்.///
"இயேசு மிகவேல் தூதன்" அவர் "தொழத்தக்க தெய்வம் அல்ல" என்று சொல்லப் படுவதையே நான் மறுக்கிறேனேயன்றி, இயேசுவின் வார்த்தையை கைக்கொள்ள வேண்டும் என்று பிரயாசம் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும் நான், இயேசுவே
"தேவனை தொழுது கொள்ளுங்கள்" என்று வழிகாட்டி சொல்லியிருக்க அவ்வார்த்தைக்கு செவிகொடாமல் அதைமாற்றிஇயேசுவைத்தான் தொழவேண்டும் என்று பிடிவாதத்துடன் போதிக்கப்படும் கருத்தை ஏற்க்கவேண்டிய அவசியமில்லையே!
John wrote:
////இயேசுவை தொழக்கூடாது என்று சொல்லுபவன்தான் தேவனை உதாசீனம் பண்ணுகிறவன்///
இது தங்களின் மன கற்ப்பனையே! இதற்க்கு எனக்கு ஒரு வசன ஆதாரம் தாருங்கள்! இயேசு எங்காவது அவ்வாறு சொல்லியிருக்கிறாரா?
என்னை பொறுத்தவரை "இயேசு தேவனின் வார்த்தை" என்றும் அவரும் மெயதேவனின் ஒருபகுதி என்ற நோக்கில் தேவனை தொழுதுகொண்டால் தேவ்த்துவத்துக்குள் இயேசுவும் அடங்கிவிடுவார்! அனால் இயேசுவை மாத்திரம் தொழுது கொண்டால் இயேசுவுக்குள் தேவன் அடங்கமாட்டார். ஏனெனில் இயேசு தேவனால் அனுப்பபட்டவர் தேவன் இயேசுவைவிட பெரியவர்!
யோவான் 10:36பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான்
யோவான் 13:16அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
உடனே "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்று இயேசு சொன்னார் என்று சொல்லாதீர்கள். இயேசு அவ்வாறு சொன்ன காலத்தில் இயேசுவை ஒருவர் பிடித்துவிட முடியும் ஆனால பிதாவை யாரும் பிடித்திவிட முடியாது. அவர் ஆவியாய் இயேசுவுக்குள் இருந்தார் அதனாலேயே இயேசு அவ்வாறு சொன்னார்.
இயேசுவை தொழுவது தவறான நிலை என்பது எனது கருத்தல்ல எந்த ஒரு உருவத்தையும் இமேஜ் பண்ணாமல் தொழுவத்தில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதையே நித்திய ஜீவனுக்கு தகுதியாக பெரிதுபடுத்துவது சரியல்ல. இயேசுவின்மூலம் பிதாவை தொழுவதே சிறந்தது. ஆண்டவராகிய இயேசுவே பிதாவை நோக்கிதான் ஜெபித்தார் நம்மையும் பிதாவை நோக்கிதான் தொழசொன்னார். வசனம் யாரை தொழுதுகொள்ள வேண்டும் என்று கையை காட்டுகிறதோ அவரை தொழுவதுதான் சரியான செயல்.
இயேசுவின் வார்த்தைகளே நியாம்தீர்க்கும் என்று வசனம் சொல்கிறது அவர் வார்த்தையை கைக்கொள்பவன் மரணத்தை காண்பதில்லை என்றும்
வசனம் சொல்கிறது. எனவே அவர் வார்த்தை கைகொண்டு தவறிப்போக வாய்ப்பில்லை. அவர் வார்த்தைகள் புரட்டப்படுவதை நான்விரும்பவில்லை.
அவர் வார்த்தைக்கு மீறி வேறு ஒரு நியாயதீர்ப்பு இருக்க வாய்ப்பே இல்லை!
எனது பணிகள்:
இயேசுவை அறியாதவர்களுக்கு இயேசுவை அறிவிப்பது எமது முதல் பிரதான பணி!
இயேசுவை அறிந்தவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை குறித்து போதித்து அவரை வாஞ்சித்து பெற்றுக்கொள்ள வைப்பது இரண்டாம் முக்கிய பணி. (ஆவியானவரை அறிந்துகொண்டாலே இயேசு யாரென்பதை அறிந்துகொள்ள முடியும்)
இயேசுவை அறிந்து ஆவியானவரையும் பெற்றவர்களுக்கு "இவற்றை எல்லாம் செய்பவர் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்செய்யும் ஒன்றான மெய் தேவனே" என்று அவரின் மேன்மையை புரியவைப்பது எமது அடுத்த பணி!
இதன் அடிப்படையிலேயே எனது பதிவுகள் எல்லாமே இருக்கும்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//இயேசுவுக்கு சமமானவர் என்று போதிப்பதன் மூலமே நீங்கள் பிதாவை சரியாக அறியவில்லை என்பது புரிகிறது.// ஒரு ரெண்டு பதிவுகளுக்கு முன்பு நீங்களே எழுதினது //இயேசுவானவர் தேவனும், தேவனுக்கு சமமானவருமாக இருக்கிறார். // பிதாவை அறியாதவர்கள்தான் இயேசு பிதாவுக்கு சமம் என்று சொல்லுவார்களா? பவுல் "தேவனுக்கு சமமாய் இருப்பதை..." என்று இயேசுவை குறித்து சொல்லுகிறாரே? அவருக்கு பிதாவை தெரியாதா?
//இயேசுவைத்தான் தொழவேண்டும் என்று பிடிவாதத்துடன் போதிக்கப்படும் கருத்தை ஏற்க்கவேண்டிய அவசியமில்லையே! // நீங்கள் திரும்பத்திரும்ப தவறான கருத்துக்களை சொல்லிவிட்டு உதாரணம் தர மறுக்கிறீர்கள். இயேசுவை மட்டும்தான் தொழவேண்டும் என்று சொன்ன புரட்டன் யார்? உதாரணம் தருவீர்களா?
//////இயேசுவை தொழக்கூடாது என்று சொல்லுபவன்தான் தேவனை உதாசீனம் பண்ணுகிறவன்/// இது தங்களின் மன கற்ப்பனையே! இதற்க்கு எனக்கு ஒரு வசன ஆதாரம் தாருங்கள்! இயேசு எங்காவது அவ்வாறு சொல்லியிருக்கிறாரா? //
கிழே உள்ள வசனத்தை படியுங்கள். தேவனை ஒரு மனிதன் எப்படி கனம் பண்ண முடியும்? Mr.God என்று கூப்பிடுவதா கனம்? தேவனை தொழுவதன் மூலமே அவரை கனம் பண்ண முடியும். பிதாவை தொழுவது போல குமாரனையும் தொழவேண்டும் அப்படி செயாதவன் தேவனை உதாசீனம் பண்ணுகிறவன்.
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:22-23)
//என்னை பொறுத்தவரை "இயேசு தேவனின் வார்த்தை" என்றும் அவரும் மெயதேவனின் ஒருபகுதி என்ற நோக்கில் தேவனை தொழுதுகொண்டால் தேவ்த்துவத்துக்குள் இயேசுவும் அடங்கிவிடுவார்! அனால் இயேசுவை மாத்திரம் தொழுது கொண்டால் இயேசுவுக்குள் தேவன் அடங்கமாட்டார். ஏனெனில் இயேசு தேவனால் அனுப்பபட்டவர் தேவன் இயேசுவைவிட பெரியவர்! //
தேவனுக்கு எத்தனை பகுதி இருக்கிறது? ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் நான், நீ என்ற உறவு இருக்க முடியுமா? இயேசு பிதாவின் ஒரு பகுதி என்றால் அவர் தேவனல்ல, இயேசு இல்லாமல் பிதாவும் ஒரு தேவனல்ல ஆனால் வேதம் இயேசுவையும் தேவன் என்று சொல்லுகிறது பிதாவையும் தேவன் என்று சொல்லுகிறது. The Essence or தேவத்துவம் என்பது இயேசுவுக்குள் பரிபூரனமாய் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது.
//வசனம் யாரை தொழுதுகொள்ள வேண்டும் என்று கையை காட்டுகிறதோ அவரை தொழுவதுதான் சரியான செயல். //
ஸ்தேவான் , பேதுரு , மரியாள், யோவான் மற்றும் பவுல் போன்றவர்கள் இயேசுவை தொழுது கொண்டார்கள். அது சரியான செயலா? இயேசுவும் அய்யோ என்னை தொழுது கொள்ளாதீர்கள் என்று சொல்லவில்லை அதுவும் தவறா? இந்த தளத்தில் எழுதும் மற்ற சகோதரர்களின் விசுவாசமும் இதுதானா? சகோ. சுந்தர் சொல்லுவதை ஏற்று கொள்ளுகிறீர்களா?
"தேவ தூஷணம்" என்ற வார்த்தையை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம் சகோதரரே. மனுஷனாகிய நாம் நமது கொள்கைக்கு மீறியது எல்லாமே தேவ தூஷணம் என்று கருதலாம். தங்கள் கொள்கைக்கு மேலாதை பேசும்போது ஆண்டவராகிய இயேசுவையும் கூட சில தேவ தூஷணம் சொல்கிறான் என்றார்களே. அனால் வசனம் எந்த ஒரு காரியத்தை தேவதூஷணம் என்று சொல்கிறதோ அதுவே தேவதூஷணம்!
"ஒருவர் தான் குமாரனை எப்படி உருவாக்கினார்" என்று கேட்பது வார்த்தை அளவில் கொஞ்சம சரியானது அல்லதான். அதற்காக அது ஒரு தூஷணம் ஆகிவிடாது!
நான் சரியாகவே கேட்கிறேன் தேவன் தன் குமாரனாகிய இயேசுவை எவ்வாறு ஜெநிப்பித்தார்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//வசனம் யாரை தொழுதுகொள்ள வேண்டும் என்று கையை காட்டுகிறதோ அவரை தொழுவதுதான் சரியான செயல். //
JOHN WROTE ////ஸ்தேவான் , பேதுரு , மரியாள், யோவான் மற்றும் பவுல் போன்றவர்கள் இயேசுவை தொழுது கொண்டார்கள். அது சரியான செயலா? இயேசுவும் அய்யோ என்னை தொழுது கொள்ளாதீர்கள் என்று சொல்லவில்லை அதுவும் தவறா?///
இயேசுவை தொழுதுகோள்ளுதல் தவறு என்றோ இயேசு தொழதக்க தெய்வம் அல்ல என்றோ இந்த தளத்தில் எங்கும் எழுதப்படவில்லையே சகோதரரே. எனவே அவர்கள் இயேசுவை தொழுதுகொன்டத்தில்
எந்த தவறும் இல்லையே.
வசனம் யாரை தொழ சொல்கிறதோ அவர்களை தொழுவதுதான் சிறந்தது என்ற கருத்தில் என்ன தவறு இருக்கிறது சகோதரரே.
JOHN WROTE ////இந்த தளத்தில் எழுதும் மற்ற சகோதரர்களின் விசுவாசமும் இதுதானா? சகோ. சுந்தர் சொல்லுவதை ஏற்று கொள்ளுகிறீர்களா?///
தாங்களின் விசுவாசம் என்னவென்பதை சரியாக சொன்னால் தானே எங்கள் விசுவாசம் சரியானதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
எனவே நீங்கள் இங்கு சரியாக விவாதிக்க விரும்பினால் முதலில் தயவுகூர்ந்து உங்களின் விசுவாசம் என்னவென்பதை ஒரு தனிபதிவில் சுருக்கமாக தாருங்களேன் அது பலருக்கு பனுள்ளதாக அமையுமல்லவா? அதுகுறித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாமே!
"தேவ தூஷணம்" என்ற வார்த்தையை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம் சகோதரரே. மனுஷனாகிய நாம் நமது கொள்கைக்கு மீறியது எல்லாமே தேவ தூஷணம் என்று கருதலாம். தங்கள் கொள்கைக்கு மேலாதை பேசும்போது ஆண்டவராகிய இயேசுவையும் கூட சில தேவ தூஷணம் சொல்கிறான் என்றார்களே. அனால் வசனம் எந்த ஒரு காரியத்தை தேவதூஷணம் என்று சொல்கிறதோ அதுவே தேவதூஷணம்!
"ஒருவர் தான் குமாரனை எப்படி உருவாக்கினார்" என்று கேட்பது வார்த்தை அளவில் கொஞ்சம சரியானது அல்ல தான். அதற்காக அது ஒரு தூஷணம் ஆகிவிடாது!
நான் சரியாகவே கேட்கிறேன், தேவன் தன் குமாரனாகிய இயேசுவை எவ்வாறு ஜெநிப்பித்தார்?
ஜநிப்பித்தல் என்பதும் உருவாக்குதல் என்பதும் சமமான ஒரே ஆதாரத்திலிருந்து ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள் தானா,சகோதரரே..?
//தேவன் அவரை உருவாக்கினார் ?//
//தேவன் தன் குமாரனாகிய இயேசுவை ஜெநிப்பித்தார்?//
-எனும் தங்கள் கூற்றுக்கு நேரடி வசன ஆதாரத்தைத் தருவீர்களா..?
ஒரு ரெண்டு பதிவுகளுக்கு முன்பு நீங்களே எழுதினது //இயேசுவானவர் தேவனும், தேவனுக்கு சமமானவருமாக இருக்கிறார். // பிதாவை அறியாதவர்கள்தான் இயேசு பிதாவுக்கு சமம் என்று
சகோ. ஜான் அவர்களே ஓன்று இன்னொன்றுக்கு சமம் என்று சொல்வதிலேயே மூன்று
வேறுபட்ட நிலைகள் இருக்க முடியும்.
உதாரணமாக:
இரண்டு கூடையில் 10௦,௦ 10௦ ஆப்பிள்கள் இருந்தால் ஒரு கூடையில் உள்ள அப்பிளும் இன்னொரு கூடையில் உள்ள ஆப்பிளும் சமம் என்று சொல்ல முடியும்
இங்கு இருப்பது மொத்தம் இருபது ஆப்பிள்கள்
மேலும்
ஒருகூடையில் இருக்கும் பத்து ஆப்பிளில் இன்னொரு கூடைக்கு ஐந்து ஆப்பிளை மாற்றி இரண்டும் சமம் என்று சொல்ல முடியும்
அடுத்து
ஒரு கூடையில் உள்ள பத்து ஆப்பிளையும் எடுத்து இன்னொரு கூடைக்குள் போட்டுவிட்டு "அந்த கூடையில் இருப்பது, முதல் கூடைக்குள் இருந்ததற்கு சமம்" என்றும் சொல்ல முடியும்.
இங்கு மொத்தம் பத்து ஆப்பிள்கள் தான்!
இங்கு மூன்று இடத்திலும் பயன்படுத்தும் வார்த்தை சமம்தான் ஆனால் நிலையோ
வேறு வேறு!
அதேபோல் தேவன் ஒருவரே! அவரிடம் இருந்த அனைத்து தேவத்துவங்கள் மாம்சமாக வந்த இயேசுவுக்குள் பரிபூரணமாக வாசம் செய்தன என்பதே உண்மை!
நீங்களோ மூன்று சம வல்லமையுடைய தேவன் அனால் ஒரே நோக்கம் அல்லதுகுணாதிசயம் என்று திரித்துவ கருத்து சொல்கிறீர்கள்!
நீங்கள் வைத்திருக்கும் கருத்துதான் சரி என்று தீர்மானித்து இங்கு வந்து அந்த கருத்துக்களை திணிக்க பார்க்கிரீர்களேயன்றி. நான் சொல்வதில் உள்ள உண்மையை அறிய உங்களுக்கு அக்கறை இல்லை. உங்கள் போன்றவர்களின் கருத்துக்கள் அனேக பதிலில்லா கேள்விகளும் வசன விரோத போக்கும் இருப்பதால்தான் நான் நான் அனேகரிடம் விசாரித்து பார்த்துவிட்டு ஒரு முழுமை இல்லாத கருத்தாக இருப்பதால் இங்கு தனியாக எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
"பவுல் இயேசுவை தேவனுக்கு சமமானவர் என்று சொன்னார்" இதை நான் ஏற்க்க வேண்டுமா? அல்லது இயேசுவே தனது வாயால் "என் பிதா என்னிலும் பெரியவர்" "என் பிதா எல்லோரிலும் பெரியவர்" என்றுசொன்னதை நான் ஏற்க்க வேண்டுமா?" பவுல் இயேசுவைவிட பெரியவரா? அல்லது இயேசுவுக்கு தெரியாதது பவுலுக்கு தெரிந்துவிட்டதா? என்று நான் கேட்டால் என்ன பதில் சொல்வீர்களோ.
ஆனால் நான் இருவர் சொல்வதையும் எந்த மாற்றமும் இன்றி அப்படியே எடுத்து கொள்கிறேன் இரண்டுக்கும் விளக்கம் தருகிறேன்.
John wrote:
////பவுல் "தேவனுக்கு சமமாய் இருப்பதை..." என்று இயேசுவை குறித்து சொல்லுகிறாரே? அவருக்கு பிதாவை தெரியாதா?///
பவுல் இயேசு தேவனுக்கு சமம்மானவர் என்று சொல்வதை நீங்கள் தவறாக புரிந்து கோண்டுள்ளீர்கள்
தேவன் = 7 (வார்த்தை என்னும் வல்லமை மற்றும் தேவத்துவத்தின் மற்ற வல்லமைகள் அதாவது 1+6)
இயேசு = 1 (வார்த்தை என்னும் வல்லமை)
இப்பொழுது சரீரமாக வந்த வார்த்தையாகிய இயேசுவுக்குள் ஆவியாயிருக்கும் தேவனின் தேவத்துவங்கள் அனைத்தும் வந்து வாசமாய் இருந்தது. எனவேதான் இயேசு "பிதாவுடையது எல்லாம் என்னுடையது" என்று சொல்கிறார் அத்தோடு தேவனின் ஏழு ஆவிகளையும் இயேசு தன்னிடத்தில் கொண்டுள்ளார் அதனால் ஆவர் தேவனுக்கு சமமாகிறார்
வெளி 3:1தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது
எனது தகப்பனார் சொத்தை எல்லாம் பயன்படுத்தும் POWER OF ATTORNY என்னிடம் இருந்தால் சட்டத்தின் பார்வையில் நானும் என் தகப்பனுக்கு சமம்தான். ஆனாலும் நான் தகப்பன் ஆகிவிட முடியாது. அது இயேசுவுக்கு தெரிந்தது அதனால்தான் "இயேசு என் பிதா எல்லாரிலும் பெரியவர்" "அவர் எனக்கு கொடுப்பவைகள் எல்லாம் என்னிடத்தில் வரும்" என்று சொல்கிறார்.
நான் சொல்லப்பட்டுள்ள எல்லா வசனத்துக்கும் பொருள் சொல்கிறேன் அனால் "என் பிதா என்னிலும் எல்லாரிலும் பெரியவர்" என்று இயேசு சொன்னதற்கு சரியான பொருள் என்னவென்பதை இதுவரை சொல்லவில்லை
ஓன்று தேவனை திரித்துவம் என்று பிரிக்காதீர்கள்! அப்பொழுது இயேசுவும் தேவனும் ஒருவரே! ஏனெனில் தேவனின் வார்த்தைதான் இயேசு! இல்லை நீங்கள் திரித்துவம் என்று பிரித்தால் பிதாவானவர் இயேசுவைவிட பெரியவர் என்பதை
அவரே தனது வாயால் சொல்லியிருக்கிறார் என்பதை ஏற்க்க வேண்டும்.
தேவன் சிகாசனத்தில் வீற்றிருக்கிறாள் இயேசு அவருக்கு வலதுபக்கத்தில் ஜெயம் கொண்டு வீற்றிருக்கிறார். நீங்கள் பிதாவாகிய தேவனின் வல்லமையை அறியவில்லை அதனால்தான் இவ்வாறு திரும்ப உங்கள் கருத்துக்களை நிலை நாட்ட முயல்கிறீர்கள்.
ஆண்டவராகிய இயேசு தான் பிதாவுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் வார்த்தைக்கு வார்த்தை கொடுக்க தவறவில்லை. ஆனால அவர் வார்த்தைகளையே அப்படியே ஏற்க்க மனதில்லாதவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது.
John wrote:
///பிதாவை அறியாதவர்கள்தான் இயேசு பிதாவுக்கு சமம் என்று சொல்லுவார்களா?////
பத்து ரூபாய் நோட்டின் மதிப்பை அறியாத சிறு பிள்ளைகள் அதை விட மதிப்பு குறைந்த ஒரு ரூபாய் நாணயத்தை பெரிதாக கருதி வாங்குவது இல்லையா?
John wrote:
ஸ்தேவான் , பேதுரு , மரியாள், யோவான் மற்றும் பவுல் போன்றவர்கள் இயேசுவை தொழுது கொண்டார்கள். அது சரியான செயலா? இயேசுவும் அய்யோ என்னை தொழுது கொள்ளாதீர்கள் என்று சொல்லவில்லை அதுவும் தவறா?
முதலில் இயேசுவை தொழுதுகொள்வதை நான் தவறு என்று எங்கும் சொல்லவில்லை சகோதரரே ஏனெனில் அவர் தொழதக்கவரே என்பதிலும் அவரை பலர் தொழுது கொண்டார்கள் தொழுது கொள்கிறார்கள் இயேசுவும் தன்னை தொழுகிறவர்களை வேண்டாம் என்று சொல்லவில்லை என்பதிலும் எனக்கு மாற்று கருத்து எதுவும் இல்லை ஏனெனில் இவருக்குள்தான் தேவத்துவத்தின் பரிபூரணமும் இருந்ததே. ஆகினும் அந்த இயேசு யாரை தொழவேண்டும் என்று போதித்தார் எனபதே எனது கேள்வி. அதற்க்கு ஏன் நீங்கள் சரியான பதில் தர மறுக்கிறீர்கள்?
John wrote:
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:22-23)//
தாங்கள் அகராதியில் கனம்பண்ணுவதற்கும் ஆராதித்தல் மற்றும் தொழுது கொள்ளுதலும் ஒன்றான பொருள் என்று இருக்கிறதா? இவை இரண்டுக்கும் வேறுபாடு இல்லையா? ஏன் இரண்டையும் சமமாக்குகிறீர்கள்?
யாத்திராகமம் 20:12உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
லேவியராகமம் 19:32நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக
இந்த கனம்பண்ணுதல் என்பது தொழுதுகொள்ள வேண்டும் என்று பொருள் ஆகிவிடுமா? கனம்பண்ணுதல் என்பது மதிப்பு மரியாதையை கொடுத்தால் மட்டுமல்ல ஸ்தோத்தரித்தல், துதி செலுத்துதல் போன்ற எல்லாவற்றயுமே கூட குறிக்கலாம். ஆனால் வேதம் "தொழுதுகோள்" அல்லது "ஆராதி" என்று சொல்வது தேவனை மட்டும்தான்.
John wrote:
தேவனுக்கு எத்தனை பகுதி இருக்கிறது? ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் நான், நீ என்ற உறவு இருக்க முடியுமா?
தேவனுக்கு எத்தனை பகுதி அல்லது வல்லமை இருக்கிறது என்பதெல்லாம் நமது கணிப்புக்கு அப்பாற்பட்டது. அதை நான் சொன்னாலும் நீங்கள் ஏற்க்கபோவது
இல்லை. வேதம் சொல்கிறது இயேசு "தேவனின் வார்த்தை" அந்த வார்த்தை மாம்சமாகி இயேசுவானது என்று! அதன் அடிப்படையில் தேவனுக்கு "வார்த்தை" என்பது ஒரு பகுதியும் தனிப்பட்ட வல்லமையுமாக இருக்கிறது! அந்த வார்த்தை மாம்சமானது என்பது மட்டுமே எனக்கு தெரியும்
புரியவில்லை என்றால்:
தேவன் சர்வ வல்லமை மிக்கவர்! வெறும் மண்ணை எடுத்து மனுஷனாக்கி நான் நீ என்று உறவை உண்டாக்கிய அவருக்கு, தனது கையில் ஒரு விரலை எடுத்து அதை ஒரு மனுஷனாக்கவும் முடியும்! அதுபோல் தேவன் தனது வார்த்தை என்னும் வல்லமையை தனியாக எடுத்து அதை மாம்சமாக்கினார் அவரே இயேசு அவருள் தேவன் தானே தன் பரிபூரணம் முழுமயாக வந்து வாசம்செய்தார்.
John wrote:
////இயேசு பிதாவின் ஒரு பகுதி என்றால் அவர் தேவனல்ல, இயேசு இல்லாமல் பிதாவும் ஒரு தேவனல்ல ஆனால் வேதம் இயேசுவையும் தேவன் என்று சொல்லுகிறது பிதாவையும் தேவன் என்று சொல்லுகிறது////
வார்த்தை என்னும் ஒரே வல்லமையை மாம்சமாக்குவதன் மூலம் தேவன் தேவனல்ல என்று எப்படி சொல்ல முடியும்? ஒருவருக்கு ஒரு விரலோ கையோ இல்லை என்றால் உடனே அவர் மனுஷனில்லை என்று ஆகிவிடுவாரா? இங்கு அதுகூட நடக்கவில்லையே! அவரே தனது திட்டத்தின் அடிப்படையில் வார்த்தை மாம்சமாக்கியிருக்கிறார். எனவே தேவன் என்றுமே தேவன்தான்!
அதேபோல் தேவன் தன்னுடைய வல்லமையில் ஒன்றை மனுஷனாக்கி அவருள் வந்து பரிபூரணமாக வாசம் செய்தால் அவருக்கு பெயரென்ன? அவரையும் தேவன் என்றுதானே சொல்ல முடியும்?
இங்கு தேவன் ஒரே ஒருவர்தான்! நீங்கள் சொல்வதுபோல் மூன்று சமதேவர்களின் தொகுப்பு அல்ல
நான் சொல்லும் கருத்தில் எந்த வசனத்துக்கு விரோதபோக்கு இருக்கிறது என்பதை சொல்லுங்கள் அதற்க்கு நான் எனது சார்பில் விளக்கம் தருகிறேன். என்னால் முடியாதபட்சத்தில் தங்கள் கருத்துக்கள் என்னவென்று சொல்லுங்கள் அதைப்பற்றி ஆராயலாம்!
-- Edited by SUNDAR on Monday 18th of April 2011 10:34:42 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஜநிப்பித்தல் என்பதும் உருவாக்குதல் என்பதும் சமமான ஒரே ஆதாரத்திலிருந்து ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள் தானா,சகோதரரே..?
//தேவன் அவரை உருவாக்கினார் ?//
//தேவன் தன் குமாரனாகிய இயேசுவை ஜெநிப்பித்தார்?//
-எனும் தங்கள் கூற்றுக்கு நேரடி வசன ஆதாரத்தைத் தருவீர்களா..?
சங்கீதம் 2:7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; நீதிமொழிகள் 8:24ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
சகோதரர் அவர்களே ஜெநிப்பித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். மனுஷ வழக்கப்படி குழந்தை ஜெனிப்பதை மட்டுமே "ஜனித்தது" என்று கூறுவோம். மற்றபடி உருவாக்குதல் என்பது எந்தொரு பொருளையோ அல்லது உருவத்தையோ உருவாக்குவதை குறிக்கிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஜநிப்பித்தல் என்பதும் உருவாக்குதல் என்பதும் சமமான ஒரே ஆதாரத்திலிருந்து ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள் தானா,சகோதரரே..?
//தேவன் அவரை உருவாக்கினார் ?//
//தேவன் தன் குமாரனாகிய இயேசுவை ஜெநிப்பித்தார்?//
-எனும் தங்கள் கூற்றுக்கு நேரடி வசன ஆதாரத்தைத் தருவீர்களா..?
சங்கீதம் 2:7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
நீதிமொழிகள் 8:24ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
சகோதரர் அவர்களே ஜெநிப்பித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். மனுஷ வழக்கப்படி குழந்தை ஜெனிப்பதை மட்டுமே "ஜனித்தது" என்று கூறுவோம். மற்றபடி உருவாக்குதல் என்பது எந்தொரு பொருளையோ அல்லது உருவத்தையோ உருவாக்குவதை குறிக்கிறது.
// ஜெநிப்பித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கிறது //
சிறிய வேறுபாடு தானா..எவ்வளவு "சிறிய" என்று விளக்க முடியுமா..?
//தேவன் அவரை உருவாக்கினார் ?//
அப்படியானால் தேவன் இயேசுவை உருவாக்கினார் எனும் கூற்றை திரும்பப்பெற உங்களுக்கு சம்மதமா, என்று அறிய விரும்புகிறேன்.