இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?
Permalink  
 


HMV wrote:

-------------------------------------------------------------------------------------------

// ஜெநிப்பித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கிறது //

சிறிய வேறுபாடு தானா..எவ்வளவு "சிறிய" என்று விளக்க முடியுமா..?

//தேவன் அவரை உருவாக்கினார் ?//

 அப்படியானால் தேவன் இயேசுவை உருவாக்கினார் எனும் கூற்றை திரும்பப்பெற உங்களுக்கு சம்மதமா, என்று அறிய விரும்புகிறேன்.


 

சகோதரரே ஜெநிப்பித்தார் என்பதற்கு நேரடி வசனஆதாரம கேட்டீர்கள் தந்துள்ளேன். இபொழுது எனது கருத்துக்களை எடுத்துகொண்டு ஏதோ புதிதாக பேசுகிறீர்கள்.   தங்கள் பதிவின் பொருள் என்னவென்பது எனக்கு புரியவில்லை. நான் எங்கும் "தேவன் இயேசுவை  உருவாக்கினார்" என்று சொல்லவில்லையே பிறகு என்ன வாபஸ் வாங்குவது. ஜெனிப்பித்தலுக்கும் உருவாக்கு தலுக்கும் உள்ள வேறுபாட்டை நான் வேறொரு பதிவில் விளக்கியிருக்கிறேன்.  உங்கள் விளக்கம்
என்னவென்பதை தரலாமே!     

"ஜெனிப்பித்தல்" என்பதற்கு "பிறப்பித்தல்" என்று பொருள் கொள்ளலாம். வசனம் குறிப்பிடுவதுபோல்  தேவன் இயேசுவை "இன்று" என்ற ஒரு  குறிப்பிட்ட நாளில் தன் குமாரனாக பிறப்பித்துள்ளார். இதைதான் நான் துவக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.  இதில் வாபஸ் வாங்குவதற்கு எந்த மாறுபாடும் இல்லை.
 
அடுத்தவர் கருத்தை தேவ தூஷணம் என்று குறிப்பிடுபோது உங்கள் கருத்து கருத்து என்ன வென்பதை முன் வைக்கவேண்டும் அப்பொழுதுதான் அதிலுள்ள
குறையை சுட்டிகாட்ட முடியும். உங்கள் கருத்து என்வென்று சொல்லாத பட்சத்தில் நாம் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொள்ள  முடியும். இன்று அநேகர் அதைதான் செய்துகொண்டு இருக்கிரர்கள். நான் எத்தனை முறை கேட்டும்
"திரித்துவம் சொல்லும் கிறிஸ்த்தவ விசுவாசம்"  என்றால் என்னவென்பதை யாரும் சரியாக பதிவிட முன்வரவில்லை. யாரோ சில வெளிநாட்டவர் எழுதிய
கருத்தை படிக்க சொல்வதனால் என்ன பயன்? அவரிடம் நான் கேள்வி கேட்கவும் முடியாது அவர் எனக்கு பதில் சொல்லவும் மாட்டார்.  
 
தேவன் எனக்கு தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் இங்கு வெளியரக்க்காகமாக எழுதப்பட்டு இருப்பதுபோல் ஆதியில் இருந்து இன்றுவரை  நடப்பது குறித்த. உங்கள் கருத்து என்னவென்பதை முதலில் ஒரு தனிப்பதிவாக சுருக்கமாக
தாருங்கள்  சகோதரரே. பின்னர் எங்கு குறை இருக்கிறது என்பதை ஒப்பிட்டு
பார்க்கலாம்.     
     

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

//"ஜெனிப்பித்தல்" என்பதற்கு "பிறப்பித்தல்" என்று பொருள் கொள்ளலாம். வசனம் குறிப்பிடுவதுபோல்  தேவன் இயேசுவை "இன்று" என்ற ஒரு  குறிப்பிட்ட நாளில் தன் குமாரனாக பிறப்பித்துள்ளார். இதைதான் நான் துவக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.  இதில் வாபஸ் வாங்குவதற்கு எந்த மாறுபாடும் இல்லை.//

 

நல்லது சகோ. சுந்தர். தங்களுடைய பதில்களில் சில விளக்கங்களுக்கு பிறகு தொடரலாம் என்று நினைக்கிறேன். சங்கீதம் 2 ல் வருகிற ஜெனிப்பித்தல் இயேசு கிறிஸ்துவின் ஆதியை குறிக்கிறதா?  தேவன் பிறப்பிக்க முடியுமா? Can God Procreate Like other creatures? உலக வழக்கத்தின் படி ஜெனிப்பிகபட்டதும், ஜெனிப்பிதத்துவும் தன்மையிலும்,  சக்தியிலும் ஒரு மாதிரி இருக்குமா அல்லது வேறு மாதிரி இருக்குமா?  கிறிஸ்துவை ஜெனிப்பிக்கும் முன்பு கிறிஸ்து இல்லாமல்  இருந்தாரா? தேவன் மாறாதவராயிற்றே.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?
Permalink  
 


John wrote:

 சங்கீதம் 2 ல் வருகிற ஜெனிப்பித்தல் இயேசு கிறிஸ்துவின் ஆதியை குறிக்கிறதா?  தேவன் பிறப்பிக்க முடியுமா? Can God Procreate Like other creatures? உலக வழக்கத்தின் படி ஜெனிப்பிகபட்டதும், ஜெனிப்பிதத்துவும் தன்மையிலும்,  சக்தியிலும் ஒரு மாதிரி இருக்குமா அல்லது வேறு மாதிரி இருக்குமா?  கிறிஸ்துவை ஜெனிப்பிக்கும் முன்பு கிறிஸ்து இல்லாமல்  இருந்தாரா? தேவன் மாறாதவராயிற்றே.


சகோதரர் ஜான் அவர்களே தங்கள்  கேள்விக்கு மிக்க நன்றி. இந்த கேள்விக்கு நான் ஏற்கெனவே ஒரு பதிலை பதிவிட்டுள்ளேன் அதை இங்கு தருகிறேன். அதாவது இயேசுவானவர் தேவனின் வார்த்தையாக தேவனுடன்  காலங்கள் உருவாகும் முன்னரே அனாதியாக இருந்தவர்.   

 /////Bro. Nissi Wrote
////கிரேக்க பாஷையில் உள்ளபடி பார்த்தால் … In the beginning was the Logos , andthe Logos was with
THE GOD and a god was the Word . என்றுள்ளது. பிதாவாகிய தேவனை THE GOD - மகாதேவன்
குமாரனாகிய இயேசுவை a God - ஒரு தேவனாயிருந்தார்.////
 
மிகவும் அருமையான காரியத்தை சுட்டியிருக்கிறீர்கள் ஆனால் அதற்க்கு தாங்கள் போருள்கொண்டுள்ள விதம்தான் தவறாக தெரிகிறது.
 
In the beginning was the Logos - தொடக்கத்திலே  அல்லது  ஆதியிலே  வார்த்தை இருந்தது.  
 
"தொடக்கத்திலேயே வார்த்தை இருந்தது" என்று இறந்த காலத்தில்தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர தொடக்கத்தில் வார்த்தை உண்டானது என்றோ உருவாக்கப்பட்டது என்றோ சொல்லப்படவில்லை.
 
உதாரணமாக 
 
"தொடக்கத்தில் இந்த ஊரில் ஒரு கிணறு இருந்தது" என்று சொல்வோமாகில் நாம் எப்பொழுது அந்த ஊரைப்பற்றி அறிய வந்தோமோ அப்பொழுதே ஒரு கிணறு அந்த ஊரில் இருந்தது. அந்த கிணறு எப்பபொழுது உருவானது என்பது குறித்து நமக்கு தெரியாது என்றே பொருள்படும்.
 
அதேபோல் "தொடக்கம்" என்று சொல்லப்படும் நாளிலேயே வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை எப்பொழுதில் இருந்து தேவனோடு இருக்கிறது என்பது இங்கு சொல்லப்படவில்லை. 
 
சுருக்கமாக காலங்கள் உருவாகும் முன்னமே அந்த வார்த்தை தேவனோடு இருந்திருக்கிறது. காலங்கள் உருவாகும்போது அதாவது "தொடக்கத்தில்" அது தொடர்ந்து தேவனோடு ஒருதேவனாக இருந்தது என்றே பொருள்கொள்ள முடியும்.     இந்த கருத்தின் அடிப்படையில் ஆண்டவராகிய இயேசு, தேவனின் வார்த்தையாக காலங்கள் உருவாகும் முன்னரே அவரோடு தேவத்துவம் உள்ளவராக இருந்திருக்கிறார்.
  
Bro. Nissi Wrote 
////தேவன் ======ஆதியும் அந்தமும் இல்லாதவர் jesus=======தொடக்கமும் முடிவும்உண்டு////
வெளி 22:13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
 
ஆதாவது கிறிஸ்த்து தேவனோடு தேவனின் வார்த்தையாக இருந்த முந்திய காலங்கள் அனாதியானவை. ஆனால் "தேவனின் சிருஷ்ட்டிப்பில் தொடக்கமும் அதன்  முடியும் இயேசுவுக்காக  இயேசுவாலேயே நடந்தது"  என்பதை குறிக்கவே  இந்த வார்த்தைகள் பயன்படுகிரதேயன்றி, கிறிஸ்த்துவுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு என்று சொல்வதற்காக அல்ல.     
 
யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
ரோமர் 11:36 சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; 
 
காலங்களின்  தொடக்கம் என்பது இயேசுவின் மூலமே ஆரம்பம் ஆகிறது, அவர் மூலமே அது முடிகிறது
என்பதை குறிக்கவே"ஆதியும் அந்தமும்" என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது.
 
5. அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

 

இயேசுவின் மூலம் ஆரம்பமான காலம் அல்லது தொடக்கம் இங்கு ஒரு முடிவுக்கு வருகிறது. இதுவே "ஆதியும் அந்தமும்" ஆனவர் என்று குறிப்பிடப்படுள்ளது. //// 
 
 
தேவன் அன்றும் இன்றும் என்றும் மாறவில்லை! ஆனால்,  மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்னும் மூன்று நிலைகளின் தொகுப்பா இருக்கிறான். சாத்தானும் ஆவியாக இருந்து  மனிதனின் அவனின் மூன்று நிலைகளோடும் மூன்றுவித யுக்தியோடு போரிடுகிறான். எனவே அவர் தனது வல்லமையை  பிரித்து செயல்படுகிறார் என்பதே எனது பதில். 

மேலும் சகோதரர் அவர்கள் அறியவேண்டியது!  நான் எந்த ஒரு மனிதன் சொல்லியும் இந்த கோட்பாட்டுக்குள் வரவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். நான் இயேசுவை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் தாங்கள் அறியவேண்டும். 

ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்  
 
"தேவன் எந்த வார்த்தை மூலம் மாம்சமான மனிதனை படைத்தாரோ அந்த
வார்த்தை மூலமே மாம்சமாக வெளிப்பட்டு நமக்காக பலியானார்" என்று ஏற்க்க வில்லை என்றால் ஒருவர்  பாவ மன்னிப்பு பெறமுடியுமா? என்பதே கேள்விக்குறியே. எனவே இயேசுவை தேவனில்லை என்று சொல்கிறவர்கள் முற்றிலும் தவறான ஒரு நிலையில் இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.   
 
ஆனால் வேத வசனத்தில் உள்ள காரியங்களை அப்படியே கைகொண்டு நடக்க வாஞ்சிக்கும்  நான், ஒரு சிறு விஷயத்திலும் வசனம் சொல்வதற்கு மாறுபாடாக நடக்க விரும்பவில்லை. மேலும்  இயேசுவே கூட தேவனைத்தான்  தொழவேண்டும் என்று  ஏன்  சொன்னார்  என்பதற்கான முக்கிய காரணத்தையும் நான் அறிந்து
விளக்கியிருப்பதால், சில கேள்விகளை கேட்கவேண்டிய நிலையில் இருக்கிறேன்.
 
 
நீங்கள் வசனத்தை சுட்டினால் நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். மற்றபடி என்னை தவறாக கருதவேண்டாம்  
 


-- Edited by SUNDAR on Tuesday 19th of April 2011 08:45:53 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
RE: தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?
Permalink  
 


//
ஆனால் வேத வசனத்தில் உள்ள காரியங்களை அப்படியே கைகொண்டு நடக்க வாஞ்சிக்கும்  நான், ஒரு சிறு விஷயத்திலும் வசனம் சொல்வதற்கு மாறுபாடாக நடக்க விரும்பவில்லை.  
நீங்கள் வசனத்தை சுட்டினால் நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். மற்றபடி என்னை தவறாக கருதவேண்டாம்  // 
 
இது போதும் சகோ. சுந்தர். நான் ஒரு போதும் உங்களை தவறாக கருதவில்லை. நாம் பொறுமையாக, சாந்தமாக உரையாடினால் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொள்ளலாம்.
 
//மேலும்  இயேசுவே கூட தேவனைத்தான்  தொழவேண்டும் என்று  ஏன்  சொன்னார்  என்பதற்கான முக்கிய காரணத்தையும் நான் அறிந்து
விளக்கியிருப்பதால், சில கேள்விகளை கேட்கவேண்டிய நிலையில் இருக்கிறேன். //
 
நான் நண்பர் பெரேயன் மற்றும் டினோ ஆகியோருக்கு சொன்னதை இங்கேயும் பதிக்கிறேன். தேவனாகிய கர்த்தர் அல்லது கர்த்தர்(YHWH) போன்ற பதங்கள் எப்போதும் பிதாவையே குறிக்கின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
 
  • அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. (யாத்திராகமம் 3:2)

  • ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். (யாத்திராகமம் 4:5)

மோசேக்கு தரிசனம் ஆனது இயேசு கிறிஸ்துவே ஆனால் யாத்திராகமம் 4:5 ல் "தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை " என்று எழுதியுள்ளதை வாசிக்கவும்.

தேவனாகிய கர்த்தர் பிதா மட்டுமே என்றால் தரிசனமான அவர் எப்படி தரிசனமாக முடியும்? சிந்தியுங்கள் விடை கிடைக்கும்.

யேகோவா என்ற நாமத்தை வேறு யாராவது உபயோகிக்கலாமா? இல்லை என்றால் கிழே உள்ள வசனத்தில் வருகிற கர்த்தர் (யேகோவா) யார்? 
  • உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (ஏசாயா 6:1)
  • அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய (YHWH)  ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5)

 ஆதியாகமம் 18 அதிகாரத்தில் வருகிற கர்த்தர் (YHWH) ஆபிரகாமுடைய கனவில் வந்தாரா அல்லது நேரடியாக (Visible) வந்தாரா?

  • அப்பொழுது கர்த்தர் (YHWH) ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ((YHWH)  ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்., (ஆதியாகமம் 18:13-14)

தொடர்ந்து ஜெனிபித்தல் என்றால் என்ன என்பதைக்குறித்து உரையாடலாம்....



__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

John wrote:
நான் நண்பர் பெரேயன் மற்றும் டினோ ஆகியோருக்கு சொன்னதை இங்கேயும் பதிக்கிறேன். தேவனாகிய கர்த்தர் அல்லது கர்த்தர்(YHWH) போன்ற பதங்கள் எப்போதும் பிதாவையே குறிக்கின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

வேதத்திலே தேவனாகிய கர்த்தர் அல்லது கர்த்தர்(YHWH)  என்று வரும் இடமெல்லாமே அதரிசனமான காணக்கூடாத இறைவனையே குறிக்கவில்லை என்பது புதிய தகவலாக இருக்கிறதே; அப்படியானால் சர்வவல்ல தேவன் எப்போதுமே காணக்கூடாதவரல்ல, சில விசேஷித்த சமயங்களில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற நிலைக்கே நாம் வந்தாக வேண்டும் அல்லது நண்பர் டினோ அவர்களே ஒப்புக்கொண்டபடி அவர் பழைய ஏற்பாட்டிலும் பணியாற்றின இயேசுகிறிஸ்துவாகவே இருக்கவேண்டும்;அப்படியானால் இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டில் மிகாவேல் தூதனாக செயல்பட்டார் எனும் கொள்கையையுடைய அவர்கள் எப்படி அவரை யெகோவா தேவனுடன் ஒப்பிடமுடியும்? தேவசாயலில் வெளிப்பட்ட காரணத்தினால் மிகாவேல் தூதனை யெகோவா என்று அழைக்கமுடியுமா? சர்வவல்ல தேவனுக்கு இணையான அத்தனை வல்லமையுடன் தன்னை ஒரு தூதன் வெளிப்படுத்துவானா அல்லது அவனையும் யெகோவா என்று அழைக்கலாமா என்று சொல்லுவார்களா?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?
Permalink  
 


ஆபிரகாம் பார்த்ததும் மோசே முட்செடியில் பார்த்ததும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவே என்று பொருள் கொள்வோமானால் "அவர் ஒரு தூதர்" என்ற கருத்தையும் ஏற்க்கவேண்டுமே! "மிகாவேல்" என்ற பெயருக்கு "மிக் என்றால் தற்சொரூபம், ஏல் என்றால் தேவன்" என்ற  ஒரு பொருள் கொடுத்து யகோவாவின் தர்சொரூபம்  அவர்தான் இயேசு என்று சொல்கிறார்கள். அதைதானே சகோதரர் அன்பு அவர்களும் சொல்லிக்கொண்டு  இருக்கிறார்கள்.       

 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்.
 
என்னால் அதை நிச்சயமாக ஏற்க்க முடியவில்லை. என்னை பொறுத்தவரை சில வேதாகம மனிதர்கள் "தேவனை கண்டேன்" என்று சொல்வதற்கு மறைமுகமான ஏதோ பொருள்இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அதற்க்கு  ஆதாரமாக கர்த்தர் மோசேயை குறித்து சொன்ன இந்த வசனத்தையே நாம் எடுத்துகொள்ளலாம்,
 
யாத்திராகமம் 33:11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் 
எண்ணாகமம் 12:8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்  
 
என்று சொல்லும் கர்த்தர், அவன் காண்பது கர்த்தரின் சாயல் என்று சொல்கிறார். 
 
அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்
 
எனவே கர்த்தரை காண்கிறேன் என்று சொல்கிறவர்கள் கர்த்தரின் சாயலைத்தான் காண்கிறார்கள் என்பதே எனது கருத்து.   
 
ஆகினும் கர்த்தருக்கு சித்தமானால் அதைபற்றிய உண்மையை விரைவில் தியானித்து அறிந்து எழுத முயல்கிறேன்.


-- Edited by SUNDAR on Thursday 21st of April 2011 08:39:05 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?
Permalink  
 


இத்திரியில் நீண்ட நாட்களாக பதிவுகள் இல்லையே!

சம்பந்தப்பட்டவர்கள் விவாதத்தைத் தொடரும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

SUNDAR wrote:

HMV wrote:

-------------------------------------------------------------------------------------------

// ஜெநிப்பித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கிறது //

சிறிய வேறுபாடு தானா..எவ்வளவு "சிறிய" என்று விளக்க முடியுமா..?

//தேவன் அவரை உருவாக்கினார் ?//

 அப்படியானால் தேவன் இயேசுவை உருவாக்கினார் எனும் கூற்றை திரும்பப்பெற உங்களுக்கு சம்மதமா, என்று அறிய விரும்புகிறேன்.


 சகோதரரே ஜெநிப்பித்தார் என்பதற்கு நேரடி வசனஆதாரம கேட்டீர்கள் தந்துள்ளேன். இபொழுது எனது கருத்துக்களை எடுத்துகொண்டு ஏதோ புதிதாக பேசுகிறீர்கள்.   தங்கள் பதிவின் பொருள் என்னவென்பது எனக்கு புரியவில்லை. நான் எங்கும் "தேவன் இயேசுவை  உருவாக்கினார்" என்று சொல்லவில்லையே பிறகு என்ன வாபஸ் வாங்குவது.


EDWIN SUDHAKAR wrote:
John wrote..
__________________________________________________________________________________
இந்த தளத்தில் எழுதும் மற்ற சகோதரர்களின்  விசுவாசமும் இதுதானா? சகோ. சுந்தர் சொல்லுவதை ஏற்று கொள்ளுகிறீர்களா?
______________________________________________________________________________

நண்பர் john  அவர்களே  

இயேசு கிறிஸ்து என்பவர் யார் ? 
 
தேவன் அவரை எப்படி உருவாக்கினார் ?
 
என்பதை சில வரிகளில் நீங்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கின்றேன்.....

 தேவன் அவரை உருவாக்கினார் என்பதற்கும் தேவனால் ஜநிப்பிக்கப்பட்டவர் என்ற வார்த்தைக்குமுள்ள வித்தியாசத்தை இன்னும் சுந்தர் அவர்களோ எட்வின் அவர்களோ விளக்கவில்லை;இந்த தளத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்பதோடு சுந்தர் நிறுத்திக்கொண்டார்;ஆனால் அதுபோன்ற கூற்றை முன்வைத்த எட்வின் அமைதிகாக்கிறார்; இயேசுவானவர் சிருஷ்டிகரா சிருஷ்டிக்கப்பட்டவரா சிருஷ்டிப்பின் பணிக்காக சிருஷ்டிக்கப்பவரா என்பதைக் குறித்து விளக்க இயலாதோர் வேதத்தின் மற்ற போதனைகளுக்கு எவ்வாறு விளக்கம் தர முடியும் என்று புரியவில்லை. ஐயம் கேட்போரிடமே கேள்வியைத் திருப்பும் சாதுரியம் யாருக்குமே தெளிவைத் தராது.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?
Permalink  
 


Hmv wrote : 
____________________________________________________________________________________
தேவன் அவரை உருவாக்கினார் என்பதற்கும் தேவனால் ஜநிப்பிக்கப்பட்டவர் என்ற வார்த்தைக்குமுள்ள வித்தியாசத்தை இன்னும் சுந்தர் அவர்களோ எட்வின் அவர்களோ விளக்கவில்லை
____________________________________________________________________________________________________________
 
 
 
நான் முன்பு தேவன் இயேசுவை ஏன் உருவாக்கினர் என்று கேட்டதற்கு காரணம் நான் உருவாக்கினார் என்று சொன்னவுடனே
 
நீங்கள் இயேசு எப்படி வந்தார் அவர் யார் அதாவது தேவன் அவரை உருவாக்கவில்லை  அவரை ஜநிப்பித்தார்  என்றோ அல்லது அவர் ஆதியிலே இருக்கின்றார்
 
 
அவரை யாரும் உருவாக்க முடியாது யாரும்  ஜநிப்பிக்கவும்   இல்லை என்று ஏதாவது ஒன்று சொல்வீர்கள் என்று  எதிர்பார்த்தேன்  ஆனால் நீங்களே
 
 
 
Hmv  wrote  :
________________________________________________________________

//தேவன் அவரை உருவாக்கினார் ?// -என்பதே தேவதூஷணம் என்பது என் கருத்து.

________________________________________________________________

 

வேறு எந்த கருத்தையும் சொல்லவில்லை சரி இப்பொழுதாவது நீங்கள்

இயேசு கிறிஸ்துவை பற்றி உங்கள் கருத்தை ஒரு கட்டுரையின் மூலம் முழுமையாக எழுதுங்கள்

 

பின்பு  நாம் இதை பற்றி விவாதிக்கலாம்.............



-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 8th of October 2011 12:18:49 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையா?
Permalink  
 


HMV wrote:
தேவன் அவரை உருவாக்கினார் என்பதற்கும் தேவனால் ஜநிப்பிக்கப்பட்டவர் என்ற வார்த்தைக்குமுள்ள வித்தியாசத்தை இன்னும் சுந்தர் அவர்களோ எட்வின் அவர்களோ விளக்கவில்லை;

சகோதரர்(ரி) அவர்களே, 

ஆண்டவராகிய இயேசு யார் என்பது குறித்த எங்கள் புரிதல்களை பல்வேறு திரியில் தெளிவாக  விளக்கியாகி விட்டது. மீண்டும் மீண்டும்  அவரை  விவாத பொருளாக்கி விவாதிக்க விரும்பாததாலேயே  இந்த திரியை  அப்படியே விட்டுவிட்டேன்.
 
கீழ்கண்ட திரிகளை சற்று படித்து பார்க்கவும்.     
 
 
ஆகினும் மேலும் உங்களுக்கு விளக்கம் தேவைபட்டால் நான் விளக்க தயார்!
 
தேவன் இயேசுவை  THIS DAY என்ற ஒரு குறிப்பிட்ட நாளில் ஜெநிப்பித்தார் என்றும் இயேசுவே தேவனின் ஒரே ஜெனிப்பிக்கபட்ட மகன் என்றும் வேதம் சொல்கிறது.
 
Psalm 2:7 
I will declare the decree: the Lord hath said unto me, Thou art my Son; this day have I begotten thee

John 3:18   He that believeth on him is not condemned: but he that believeth not is condemned already, because he hath not believed in the name of the only begotten Son of God.

begotten - (of offspring) generated by procreation; "naturally begotten child ". biological - of parents and children; related by blood; "biological child" ...
 
தேவனால் ஜெனிபிக்கபட்டு பிறப்பிக்கபட்ட ஒரே மகன் ஆண்டவராகிய இயேசு!
 
பொதுவாக "குழந்தை பிறப்பை" பற்றி சொல்லும்போது மட்டும்தான் "பிள்ளை ஜெனித்தது" என்று சொல்வார்கள். பிள்ளை எப்படி ஜெனிக்கிறது  என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது தகப்பனின் சத்துவம் அல்லது தகப்பனின் ஒரு கருப்பொருள் மூலமே ஒரு குழந்தை ஜெனிக்க முடியும்.
 
ஒரு விஞ்ஞானியை எடுத்துக்கொண்டால், தன்னை போன்ற  ஒரு குழந்தையை  பிறப்பிக்க மட்டுமே அவனுக்கு தன்னுடையதோ அல்லது தன்னை போன்ற ஒரு தகப்பனின் அணுக்களோ தேவைப்படும்  மற்றபடி ஒரு பொருளை  படைப்பதற்கு அவனுக்கு அவனுடய சத்துவம் தேவையில்லை.
 
அதேபோல் தேவன் முதன் முதலில் தன்னுடய சத்துவமாகிய "வார்த்தை" என்னும் கருப்பொருளை கொண்டு  ஜெநிப்பித்தார். இதைதான் ஆதியில் தேவனோடு இருந்த வார்த்தை மாம்சமானது என்று யோவான் சொல்கிறார். மற்ற எல்லா படைப்பும்  தேவனின் வார்த்தையாலே உண்டாக்கபட்டது எதில் தேவனின்  சத்துவம் எதுவும் பயன்படுத்தபடவில்லை. (சுருக்கமாக சொன்னால் தேவன் இயேசுவை ஜெனிப்பித்ததன் மூலம் ஒரே தேவன் தன்னையே இரண்டு பரிணாமமாக ஆக்கிகொண்டார்)     
 
நான் எழுதியிருக்கும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து பார்த்து புரிந்தால் எடுத்துகொள்ளுங்கள் அல்லது உங்களின் கருத்துப்படி "இன்று ஜெநிப்பித்தேன்" என்றால் என்ன பொருள் என்று கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் சரியாக இருந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
 
அடுத்து:
HMV WROTE
///இயேசுவானவர் சிருஷ்டிகரா சிருஷ்டிக்கப்பட்டவரா சிருஷ்டிப்பின் பணிக்காக சிருஷ்டிக்கப்பவரா என்பதைக் குறித்து விளக்க இயலாதோர் வேதத்தின் மற்ற போதனைகளுக்கு எவ்வாறு விளக்கம் தர முடியும் என்று புரியவில்லை.///
   
உங்கள் விளக்கம் என்னவென்பதே இங்கு எழுதப்படாத நிலையில் இதுபோன்ற வார்த்தைகள் அவசியம் தானா அன்பரே? 
 
இயேசுவுக்கு  கூடத்தான் அவர்  எப்பொழுது  திரும்பி  வருவோம்  என்று தெரியாமல்
இருந்தது அதற்காக அவர் மற்ற விளக்கங்களை ஏற்க்க முடியாது என்று சொல்ல முடியுமா?
 
அனைத்தும் அறிந்தவர் எவரும் இல்லை! நாங்கள் எதையம் பிடிவாத நோக்குடன் போதிப்பவர்கள் அல்ல! எனது கருத்துக்களை நான் இங்கு விளக்கமாக  எழுதி விட்டேன்  அதைபடித்துபார்த்து தங்களுக்கு புரியாதது எதுஇருந்தாலும் கேள்வியை முன்வைக்கலாம் அல்லது இயேசுவை பற்றிய தங்களின் கருத்து என்ன என்பதை  இங்கு விளக்கலாம் அல்லது அதற்க்கான விளக்கம் எங்குஇருந்தாலும் சுட்டலாம். அதில் நாங்கள் முன்வைக்கும்  கேள்விகளுக்கு வசன  ஆதாரத்துடன்  ஏற்பான பதிலை நீங்கள்  கொடுத்துவிட்டால் உங்கள் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  
 
அப்படியொரு முடிவு தெரியாதவரை யாருக்கு விளக்கம் தரமுடியவிலை  என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது!    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard