பாவம் செய்த ஆதாம் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டான் எனவே அல்லா அவனது பாவத்தை மன்னித்துவிட்டார்! எனவே அத்தோடு அவன் பாவம் முடிந்துவிட்டது! இங்கு "ஆதி பாவம்" என்பதும் அது அனைவரையும் தொடர்கிறது என்பதுவும், அதற்க்கு இயேசுவின்பலி ஒன்றே தீர்வு என்பது வெறும் கற்ப்பனை என்பதுபோல் ஒருகருத்தை சரியான உண்மையை அறியாமல் இஸ்லாம் சகோதரர்கள் சொல்லி வருகின்றனர்
ஆண்டவர் மன்னித்தாலும்கூட ஆதாமின் பாவம் எப்படி அடுத்த சந்ததியை தொடர்கிறது என்பதற்கான பதிலை இங்கு தருகிறேன்.
ஒரு மனிதனிடம் பாட்டிலில் இருக்கும் ஒரு விஷத்தை காட்டி "இதை குடித்தால் நீ நிச்சயம் செத்து போவாய்" என்று சொல்லி வைக்கிறோம். ஒரு நாள் அந்த மனிதன் அந்த விஷத்தை குடித்துவிட்டு தெரியாமல் குடித்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்கிறான். நாம் வெறும் மன்னிப்பு மட்டும் கொடுத்து விட்டால் போதுமா? அவனுக்கு உள்ளேபோன விஷத்தை எடுக்கவில்லை என்றால் அவன் மரிப்பது நிச்சயம் அல்லவா?
அதேபோல்
"நன்மை தீமை அறியும் கனியை புசித்தால் சாகவே சாவாய்" என்று தேவன் சொன்னார். அதை புசித்த ஆதாம் மன்னிப்பு கேட்டிருக்கலாம் ஆண்டவரும் மன்னித்திருக்கலாம் ஆனால் அவன் நன்மை தீமையை அறிந்தது அறிந்ததுதான்! தேவன் மன்னித்த உடன் அவன் மீண்டும் நன்மை தீமை அறியாத நிலைக்கு போய்விட முடியாது! எனவே அதன்பின்னர் அவர் "தீமையே செய்யக்கூடாது" என்ற கட்டாய நிர்பந்தத்துக்குள் வருகிறான். ஆனால் எந்த ஒரு மனுஷனாலும் எந்த ஒரு தீமையும் செய்யாமல் இருக்கவே முடியாது! எனவே அவனுடைய எத்தனை பாவத்தை இறைவன் மன்னித்தாலும், அவன் எண்ணம் சித்தனை இவற்றில் உண்டாகும் பாவத்தை அழிக்கவே முடியாது அதுவே நித்திய பாவமும் தொடர்ந்து வருவதாகவும் இருக்கிறது.
இன்னும் புரியவில்லை என்றால் இன்னுமொரு உதாரணம் சொல்கிறேன்!
"எய்ட்ஸ்" என்பது உயிர்கொல்லிநோய் என்பது தெரியும். அதைஅறிந்து அரசாங்கம் "தவறான உறவு கொள்ளாதே எய்ட்ஸ் வந்தால் நீ சாகவே சாவாய்" என்று எச்சரிக்கை கொடுக்கிறது. அதையும் மீறி ஒருவன்போய் எப்படியோ தவறு பண்ணி எய்ட்சை வாங்கிவந்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்கிறான். அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும் ஆனால் அந்த மன்னிப்பால் என்ன பயன்?
அவன் மன்னிப்பை பெற்றிருந்தாலும் அவனை பிடித்துகொண்டு அவனுள் இருக்கும் அந்த எய்ட்ஸ் கிரிமியானது அவனுக்கு எத்தனை சந்ததி உருவானாலும் அனைவரையும் தொடரும் தன்மையுடையது. அந்த கிருமியின் தொடர்ச்சியை வெறும் பாவமன்னிப்பு மட்டும் போக்கிவிடாது.
அதை அப்படியே ஆதாம் ஏவாள் நிலைக்கு பொருத்தி பாருங்கள்.
இப்பொழுது பாவம் என்னும் எய்ட்சைவிட மோசமான கொடிய நோய் கிருமியால்
பீடிக்கபட்டு நிற்கும் ஆதாமுக்கு சாவு நிச்சயம் என்றாலும் தேவன் மன்னித்த்தால் தான் அவன் அதன் பின்னும் தொடர்ந்து சிலகாலம் வாழ்ந்தான்.
எய்ட்ஸ் பிடித்தவருக்கு சாவு நிச்சயம் என்றாலும் அவர் உடனே சாவது இல்லை சில மாத்திரை மருந்து இவற்றின் மூலம் சாவை தள்ளிபோட முடியும்.
அதேபோல் பாவம் செய்த ஆதாமுக்கு சாவு நிச்சயம் என்றாலும் அவனுக்கு ஈடாக சில மிருகங்களை பலியாக்கி அவனை சிலகாலம் தற்காலிகமாக காத்துவருகிறார்.
இந்த எய்ட்ஸ் நோயானது அடுத்த சந்ததிக்கு தொடராமல் முற்றிலும் அழிக்கப்பட வேண்டுமானால், அதை உண்டாக்கும் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். எய்ட்ஸ் நோயிக்கு இன்னும் மனிதனால் மருந்து கடுபிடிக்க முடியவில்லை. ஆனால் தேவனிடமோ அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது. அவ்வாறு ஜென்மஜென்மாக தொடரும் தீர்க்கமுடியாத பாவநோய்க்கு தீர்வாகவும் அனைத்து பாவங்களுக்கும் முடிவாகவும் அமைந்தது இயேசுவின் பலியும் அவரது இரத்தமும்.
அவரது இரத்தத்துக்கு மிஞ்சின பாவம் என்றும் ஒன்றும் இல்லை
ஏன் இயேசுவின் இரத்தம் மட்டும் பாவத்துக்கு தீர்வாக அமைந்தது என்பதை கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த பதிவில் விளக்குகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனால் விலக்கப்பட்ட நன்மைதீமை அறியும் கனியை புசித்ததால் நன்மை எது? தீமையை எது? என்று அறிந்து கொண்ட மனுஷனானவன் தீமையை விலக்கி நன்மையையே செய்யவேண்டும் என்ற கட்டாய நிலைக்குள் தள்ளபபட்டான்.
அவ்வாறு அவன் தீமையை விலக்கி நன்மையே செய்யவேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்தாலும், விலக்கப்பட்ட கனியை புசித்ததன் மூலம் அவனுள் சேர்ந்திருந்த சாத்தானின் பாவசுபாவ தன்மைகள் அவனை பாவம் செய்ய தூண்டிக் கொண்டே இருந்தன. இவ்வாறு நன்மை இன்னதென்று தெரிந்தும் அதை வரையறுக்கும் நியாயபிரமாணத்தை தேவன் எழுதிகொண்டுத்திருந்தாலும், அதன் அடிபடையில் நன்மையே செய்யவேண்டும் என்ற வாஞ்சை மனுஷனுக்கு இருந்தாலும் அவனால் நன்மை செய்ய முடியாத தீமையை செய்யும் நிர்பந்த நிலையில் நியாயப்பிரமாண கட்டளையை நிறைவேற்ற மாம்சத்தோடு பெரும் போராட்டமும் அதனை தொடர்ந்து நிறைவேற்ற முடியாத வீழ்ச்சியும் தவிர்க்க முடியாததாகிவிடது.
ரோமர் 7:18என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்தி லிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை
இந்த அனைத்து காரியங்களில் இருந்து மனுஷனை விடுவிக்க திட்டமிட்ட தேவன், மனுஷனால் செய்யமுடியாத நியாயப்பிரமாண கட்டளைகளை தேவனே செய்து மனுஷனை மீட்கும் பொருட்டு தனது குமாரனை பாவ மாம்சமாக்கினார்.
இவ்வாறு மாம்சத்தில் வந்த ஆண்டவராகிய இயேசு இந்த உலகின் பல்வேறு சோதனைகளூடே கடந்தும், பரிசுத்தராக ஜீவித்து மனுஷனால் செய்ய முடியாத நியாயப்பிரமாணத்தை தானே செய்து முடித்து இந்த உலகத்தை ஜெயித்தார்.
யோவான் 16:33 நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
இவ்வாறு ஜெயம்கொண்டதால் பரிசுத்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடய சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது
ஒரு நாட்டை அடிமை படுத்தியிருக்கும் ஒரு ராஜா இன்னொரு நாட்டு ராஜாவால் தோற்கடிக்க படும்போது, ஜெயித்த ராஜாவை பின்பற்றி வந்த சாதாரண ஜனங்களுக்கும் விடுதலை கிடைத்ததுபோல் இயேசுவைஏற்றுக்கொண்டு அவரைபின்பற்றுவோர் அனைவர்க்கும் விடுதலை கிடைக்கும்படி இது ஆயிற்று.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)