இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்த பூமியை யாரும் சுதந்தரித்துகோள்ள முடியுமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இந்த பூமியை யாரும் சுதந்தரித்துகோள்ள முடியுமா?
Permalink  
 


கிறிஸ்த்தவர்களாகிய  நமக்கு சபையிலும் கூட்டங்களிலும்  பலவிதமான போதனைகள் வழங்கப்படுகிறது. முக்கியமாக இயேசுவை விசுவாசித்தல் பரிசுத்தமாக வாழ்தல் சுவிசேஷம் சொல்லுதல்  பரலோகராஜ்யம் சம்பந்தபட்ட விஷயங்கள் பற்றிய கருத்துக்களும் நாம் அடிக்கடி கேட்கிறோம்.
 
இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவ மன்னிப்பை பெற்று பரிசுத்தமாக வாழ்ந்தது இயேசுவின்  வருகையில் எடுத்துகொளப்பட்டு  பரலோக ராஜ்யத்துக்கு போய் சேர்வது, நரக அக்கினிக்கு தப்புதல் போன்றவை  கிறிஸ்த்தவத்தின் முக்கிய குறிக்கோள் என்று  போதிக்கப்படுகிறது. 
 
ஆனால் பலருக்கு  புரியாத ஒரு கருத்தாகிய  "ஒருவன் பூமியை சுதந்தரித்து கொள்ள முடியும்" என்று வேதாகமம் பல இடங்களில் நமக்கு   போதிக்கிறது. என்பதை குறித்து நாம் அறிந்திருக்கிறோமா?  
 
மத்தேயு 5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
 
சங்கீதம் 37:11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

 
மேலே சொல்லப்பட்ட வசனங்கள் "சாத்த  குணம் உள்ளவர்களால் பூமியை சுதந்தரித்து கொள்ள முடியும்" என்பதை நமக்கு இணை  வசனத்தோடு வலியுறுத்துகிறது.
 
அது சாத்தியமா?  அது எவ்வாறு சாத்தியம்? பூமியை சுதந்தரித்து கொள்வதற்கான
தகுதிகள் என்று வேதம் வேறென்ன தகுதிகளை நிர்ணயித் திருக்கிறது? என்பது
குறித்து இங்கு ஆராயலாம்.        
 


-- Edited by SUNDAR on Tuesday 19th of April 2011 11:01:49 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: இந்த பூமியை யாரும் சுதந்தரித்துகோள்ள முடியுமா?
Permalink  
 


சாந்த குணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரிக்க முடியும்!  
 
வேதபுத்தகத்தை படித்தால் தேவன் சாந்தகுணத்தை அதிகமதிகமாக விரும்புகிறார் என்பதையும் அவர்களுக்கு அனேக ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார் என்பதையும் நாம் அறிய முடியும்!
 
சங்கீதம் 25:9 சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
சங்கீதம் 22:26 சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள் 
சங்கீதம் 147:6 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;
 
"என்னை சபித்தவனை நானும் சபிபேன்" என்பதும் "எனக்கு எதிர் பேசியவனை நானும் கடிந்துகொள்வேன்"  என்பதும் "எனக்கு துரோகம் செய்தவன் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்" என்று நினைப்பதும் இன்று உலகத்தில் எல்லோரும் சாதாரணமாக நினைக்கும் எண்ணங்கள். இதே காரியத்தை ஒரு கிறிஸ்தவனும் செய்வானாகில்  பிறகு அவனுக்கு மற்றவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லவே
இல்லை.  
 
பிலிப்பியர் 4:5 உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.
 
என்று நமக்கு போதிக்கும் வேதாகமானது .      
 
எண்ணாகமம் 12:3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.என்றும் சொல்வதால், மோசேயின் மூலம் சாந்த குணம் என்றால் என்னவென்பதை அறிந்து கொள்வதே சிறந்தது என்று கருதுகிறேன்.   
 
மோசேயின் வாழ்க்கையை தியாநிப்போமானால அவனிடம் காணப்பட்ட முக்கிய குணம் என்னவென்றால் தனக்கு எதிராக  எழும்புகிறவர்கள்மேலும்கூட  மிகுந்த கரிசனை உள்ளவனாக இருந்தான் என்பதே.
 
வனாந்திரத்தில் எத்தனையோமுறை  இஸ்ரவேல்ஜனங்கள் மோசேக்கு விரோதமாக எழுந்தனர்.  அப்போதெல்லாம்  அவர்களுடன் எதிர்த்து சண்டையிடாமல் அவர்களிடம் சாந்த குணத்துடன் நடந்து கொண்டு அவர்களுக்கு முன்னால் முகம் குப்புறவிழுந்து அவர்களை சமாதானப்படுத்தினான்.  
 
எண் 16 2. இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி,
3. மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: ....., கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.
எண்ணாகமம் 16:4 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
 
இதினிமித்தம் கர்த்தர் அவனுக்காக பல இடங்களில் வழக்காடியத்தை நாம் அறியமுடியும். இவ்வளவு முரட்டாட்டம் செய்த இஸ்ரவேல் ஜனங்களை  ஒட்டு மொத்தமாக  ஒரே மனுஷனை அழிப்பதுபோல் அழிந்து உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று கர்த்தர்  இரண்டுமுறை மோசேயிடம் சொல்லியிருக்கிறார்.  
யாத்திராகமம் 32:10  என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
எண்ணாகமம் 14:12. நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.
 
அப்பொழுதுகூட  மோசே, தான் வழிநடத்தி வந்த ஜனங்களை விட்டுகொடுக்காமல் மிகுந்த சாந்தகுணத்தோடு  கர்த்தருக்கே  புத்தி சொல்வதுபோல்பேசி மன்னிப்புக்காக மன்றாடிய  வார்த்தைகளை நாம் வேதத்தில்  பார்க்க முடியும்    
 
எண்ணாகமம் 14:16 கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.
19. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
 
இப்படி தனக்காக மட்டுமல்லாமல் தன்னை அழிக்க நினைத்தவர்க்ளுக்க்காகவும் பரிந்து பேசும் தாழ்மை மற்றும் சாந்தம் மிகவும் அரிதான ஓன்று எனவே தான்  தேவன் மோசேயை "பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்தசாந்தகுணமுள்ளவன்" என்று புகழ்ந்துள்ளார்.    
 
ஒரு மனிதனின் சாந்தகுணம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லும்
விதம் இதோ    
 
புலம்பல் 3:26. கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
27. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
28. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன்.
29. நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
30. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக
 
இவ்விதமாக கர்த்தரின் ரட்சிப்புக்கு காத்திருக்கும் நாம் நீதியினிமித்தம் நமக்கு வரும் பாடுகளை பொறுமையாக சகித்து  நமக்கு மிகப்பெரிய  தீமை செய்த மனிதனையும் மனதார மன்னித்து, தனை அடிப்பவனுக்கு கன்னத்தை காட்டி "ஆண்டவர் கட்டளையிட்டார் எனவே இவர் என்னை அடித்தார்" என்ற எண்ணத்துடன் கூடிய  மிகுந்த தாழ்மையும், இந்த உலகத்தில் உள்ள ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோருமே மீட்கப்படவேண்டும் என்ற உன்னத  எண்ணத்துடன் அவர்களுக்காக பரிந்துபேசும் பரிதபிப்பும் இருந்தால், அதுவே தேவன் எதிர்பார்க்கும் சாந்த குணமாகும். அப்படி பட்டவர்கள் இந்த பூமியை சுதந்தரித்து   கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதையே வேதாகமம் நமக்கு போதிக்கிறது.       
 
மத்தேயு 5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
 
சங்கீதம் 37:11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

இவ்வித தாழ்மை மற்றும் சாந்தத்துடன்  நடக்க விரும்பாத அகங்காரிகளுக்கு பூமியை சுதந்தரித்து கொள்ள வழி இருக்கிறது என்பதையே உணரும் உணர்வு இருக்காது!  அது குறித்து  ஆணடவர் சொல்லும் அவ்வசனங்களை ஏற்கும் மனம் பக்குவமும் இருக்காது!    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SUNDAR wrote:
சாந்த குணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரிக்க முடியும்!  
 
 சங்கீதம் 37:11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

இவ்வித தாழ்மை மற்றும் சாந்தத்துடன்  நடக்க விரும்பாத அகங்காரிகளுக்கு பூமியை சுதந்தரித்து கொள்ள வழி இருக்கிறது என்பதையே உணரும் உணர்வு இருக்காது!  அது குறித்து  ஆணடவர் சொல்லும் அவ்வசனங்களை ஏற்கும் மனபக்குவமும் இருக்காது!    

 

சாந்த குணம்  உள்ளவர்களோடுகூட, கர்த்தருக்கு  காத்திருந்து அவரது வழியை கைகொள்ளுபவர்களும்கூட பூமியை சுதந்தரித்துகொள்ள முடியும் என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது.   
 
சங்கீதம் 37:9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
 
சங்கீதம் 37:34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;

"மனுஷனானவன் பூமியை சுதந்தரித்துகொள்ளும்படி தேவனால் அவனை உயர்த்த  முடியும்" என்பதை வேதம்
தெளிவாக நமக்கு போதிக்கிறது. ஆவிக்குரிய அநேகரால் பெரிதாக எடுத்து கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும் இந்த
வசங்கள் குறித்த இன்னும்சில விளக்கங்களை பதிவிடலாமே.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

கர்த்தருக்கு காத்திருப்போர் பூமியை சுதந்தரிக்க முடியும்!   
 
சங்கீதம் 37:9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்;கர்த்தருக்குக்
காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
 
பொல்லாதவர்களும்  துன்மார்க்களும் ஓர்நாளில் இந்த பூமியிலிருந்து அறுப்புண்டு போவதை நாம் நிச்சயம்  பார்க்கத்தான்போகிறோம். இதற்க்கு ஒத்ததான் வசனத்தை தேவன் பல இடங்களில்  திட்டமாக கூறியுள்ளார்.  
 
மல்கியா 4:1. இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்
 
என்று நம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.  ஆனால் கர்த்தருக்கு காத்திருந்தவர்களோ பூமியை சுதந்தரித்து கொள்வார்கள்  
 
சங்கீதம் 37:34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
 
நாம்  கர்த்தருக்கு காத்திருந்தால் மட்டும் போதாது அவரது வழிகளை கைகொண்டு வாழவேண்டும். அப்பொழுதுதான் அவர்நம்மை பூமியை சுதந்தரித்துகொள்ள நம்மை உயர்த்துவார்.
 
அன்பானவர்களே  "மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது" என்று போதித்து, "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்"  என்று சொல்லி சென்ற  நமது ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகள். அது எந்த அளவுக்கு உண்மையோ  அதேபோல்,  
 
பல வசனங்கள் மூலம்  திரும்ப திரும்ப உறுதி படுத்தபட்டிருக்கும்  "நீதிமான்களும் சாந்த சாந்த குணமுள்ளவர்களாக  நடந்து கர்த்தருக்கு காத்திருந்து அவரது வழியை கைகொள்ளுகிறவர்கள் இந்த பூமியை சுதந்தரித்துகோள்ள முடியும்"  என்ற உண்மையும் என்றும் மாறாத மாற்ற முடியாத  ஓன்று.
 
இங்கு பிரச்சனை என்னவெனில், இந்த பூமியை சுதந்தரித்துகோள்ளும் நிலை குறித்து அநேகருக்கு எந்த ஒரு வெளிப்பாடோ அல்லது விசுவாசமோ இல்லை என்பதுதான்!  அதக்காக வேதவார்த்தைகள் பொய்யாகிவிடுமா? நிச்சயம் ஆகாது!
 
சங்கீதம் 37:29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
 
இந்த வார்த்தை ஓர்நாளில் நிச்சயம் நிறைவேறவே நிறைவேறும்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SUNDAR wrote:
 
பல வசனங்கள் மூலம்  திரும்ப திரும்ப உறுதி படுத்தபட்டிருக்கும்  "நீதிமான்களும் சாந்த சாந்த குணமுள்ளவர்களாக  நடந்து கர்த்தருக்கு காத்திருந்து அவரது வழியை கைகொள்ளுகிறவர்கள் இந்த பூமியை சுதந்தரித்துகோள்ள முடியும்"  என்ற உண்மையும் என்றும் மாறாத மாற்ற முடியாத  ஓன்று.
 
 

கீழ்கண்ட வேத வசனங்கள் சொல்லும் கருத்தை  கவனிக்கவும்.

II பேதுரு 3:10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.

II பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
 
இப்பொழுது இருக்கிற வானமும் பூமியும் வெந்து  அழிந்து போனால், பழைய ஏற்ப்பட்டது வசனம் சொல்வதுபோல் ஒருவர் எவ்வாறு இந்த பூமியை சுதந்தரித்து கொண்டு அதில் நித்தியமாக வாழமுடியும்?
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இந்த பூமியை யாரும் சுதந்தரித்துகோள்ள முடியுமா?
Permalink  
 


இறைநேசம் wrote:
II பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
 
இப்பொழுது இருக்கிற வானமும் பூமியும் வெந்து  அழிந்து போனால், பழைய ஏற்ப்பட்டது வசனம் சொல்வதுபோல் ஒருவர் எவ்வாறு இந்த பூமியை சுதந்தரித்து கொண்டு அதில் நித்தியமாக வாழமுடியும்?
 

இங்கு  நான்  மீண்டும்  தெரிவித்துகொள்வது  என்னவெனில் "வேத புத்தகத்தில் உள்ள ஒரு வசனம் இன்னொரு வசனத்தை அவமாக்கது, அல்லது செல்லாமல் போக பண்ணாது" காரணம் தேவன் தெளிவாக சொல்லியுள்ளார் 
 
 லூக்கா 4:4 : மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்
 
தேவனுடய ஒவ்வொரு வார்த்தையின் வல்லமை தெரியாமல் அதை ஏற்க்க முடியாமல் விசுவாசமில்லாமல் தவிக்கும் அரைகுறை கூட்டத்தார் வேண்டுமானால் அதை ஏற்க்க முடியாமல் போகலாம். ஆனால் வசனத்தின் அடிப்படையில் நான் சொல்கிறேன் "தேவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தன்னில் தானே வல்லமை உண்டு"
 
"இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு" இருக்கிறது என்பது தேவ வார்த்தையானால், அதுவும் நிச்சயம் நிறைவேறும் அதே நேரத்தில் "
 
மத்தேயு 5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
சங்கீதம் 37:11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

என்ற வார்த்தையும் நிச்சயம் நிறைவேறும். 

அது எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா?

மொத்த உலகமும் அழிந்துபோகும்போது அதிலிருந்து நோவாவின் குடும்பம் காக்கப்படவில்லையா? 

அல்லது,

எசேக்கியேல் 14:17. நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது 14 அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். என்று தேவன்தான் வாக்குகொடுக்கவில்லையா?

தேவனை விசுவாசியுங்கள்  அவரது வார்த்தைகளை முழுமையாக நம்புங்கள "அவரால் எல்லாம் கூடும்" என்று வேதம் சொல்கிறது. தேவன் மீதும் வசனத்தின் மீதும் முழு விசுவாசமற்றவர்கள் இங்குவந்து பேசவேண்டாம்.  

வசனம் சொல்வதுபோல் இந்த் உலகமே அக்கினிபற்றி எரிந்தாலும் "சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும்" தப்புவித்ததுபோல் உங்களையும் தப்புவித்து இந்த பூமியை சுதந்தரிக்கும்படி உயர்த்தமுடியும் என்று விசுவாசியுங்கள் அது நிச்சயம் நடக்கும்!    

அது எப்படி நடக்கும்? இது எப்படிநடக்கும்? என்று சந்தேகம் கொண்டாலோ அல்லது "இப்படித்தான் நடக்கும் அப்படி நடக்காது" என்று ஒரு வசனத்தை நிராகரித்தாலோ "நீ விசுவாசித்ததுதான் உனக்கு நடக்கும்" அதற்க்கு மேல் ஒன்றும் நடக்காது என்பதை வேதமே சொல்கிறது. 

அவிசுவாசம் நிறைந்த மனுஷர்களிடம்  ஆண்டவரே  கிரியை  செய்ய  முடியவில்லை. 

I யோவான் 5:4 நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.



-- Edited by SUNDAR on Saturday 4th of June 2011 11:03:00 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard