வேத வசனங்கள் முந்திரிக்கப்பட்டு இருப்பதால் அதை பொருள்கொள்வது என்பது ஒரு கடினமான காரியம். ஆவியானவரின் துணையே அன்றி ஒருவராலும் வசனங்களுக்கு சரியான பொருள் கொள்ளுதல் இயலாது என்பது நாம் திட்டவட்டமாக அறிந்த ஓன்று. எனவேதான் ஆவியானவரை அறியாமல் வேதத்தை ஆராய்பவர்கள் பல உண்மைகளை அறியாமல் இடறுகிறார்கள்.
நடந்த உண்மை சம்பவங்கள், உவமைகள் உவமானங்கள் விடுகதைகள் திருஷ்டந்திரங்கள் தேவனின் வார்த்தைகள், தேவ தாசர்களின் வார்த்தைகள், தீர்க்க தரிசனங்கள், தேவகுமாரனின் வார்த்தைகள் ஆவியானவரின் அற்ப்புதவார்த்தைகள் மனித வார்த்தைகள் சாத்தானின் வார்த்தைகள், செய்யக்கூடியவைகள், செய்ய கூடாதவைகள் போன்றவற்றோடு இன்னும் அனேக உண்மைகளை தன்னுள் கொண்டதே நமது கையில் இருக்கும் வேதாகமம்.
அடுத்தவரை நல்வழிப்படுத்தும் சில பொதுவான கட்டளைகள் மற்றும் நீதி நியாயங்களை தவிர அனேக காரியங்கள் வேதத்தில் மறைபொருளாகவே வைக்கபபட்டுள்ளன. அவற்றை அறிந்துகொள்ள ஆண்டவர் நமது இருதயத்தை திறக்கவேண்டும் என்பது முதல் தகுதி.
அது ஒருபுறமிருக்க ஒருவர் தனது ஞானத்தால் வேதத்தை ஆராய முயலும்போது, அவர் எவ்வாறு அதன் பொருளை அறிந்துகொள்ள முடியும், என்பதை குறித்து நாம் ஆராய முற்ப்ப்படும்போது சகோ. ஜான் அவர்கள் சொல்லியுள்ள கீழ்கண்ட கருத்து எனக்கு புரிவதற்கு சற்று சிரமமாக இருக்கிறது
BRO JOHN WROTE
///வேதத்த்தை வாசித்து ஒரு வசனத்தை புரிந்து கொள்ளும்போது, நாம் புரிந்து கொண்ட விதம் மற்றொரு வசனத்தை Contradict பண்ணினால் வசனம் தவறல்ல, ஆனால் முதல் வசனத்தை குறித்த நம் புரிந்து கொள்ளுதல் தவறு என்று தீர்க்கவேண்டும்"///
மற்றவர்களின் கருத்து என்னவோ நமக்கு தெரியாது ஆனால் சகோதரர் ஜான் அவர்கள் சொல்லும் இந்த வார்த்தையில் உண்மை இருப்பது தெரிந்தாலும், அதை என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை! எனவே நாம் இந்த கருத்தை சற்று ஆழமாக ஆராய்தல் அவசியமாகிறது.
அதாவது ஒரு வசனத்தை நாம் வாசித்து அதற்க்கு ஒரு பொருளை புரிந்துள்ளோம், ஆனால வேதத்தில் இன்னொரு வசனத்தை வாசிக்கும் போது அது நாம் முதலில்
வாசித்ததற்கு எதிரான ஒரு பொருளை இரண்டாம் வசனம் தருகிறது என்றால், முதலில் நாம் புரிந்துள்ள பொருள் தவறானது என்று சகோதரர் அறிவுறுத்துகிறார்.
எதை முதலில் வாசிக்க வேண்டும் எதை இரண்டாவது வாசிக்கவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, சகோதரர் கூறும் இந்த கருத்து சரியான ஒன்றா?
உதாரணமாக: நான் முதலில் ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தயாகிய கீழ்கண்ட வார்த்தையை படிக்கிறேன்.
மத்தேயு 5:18வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்த வார்த்தைகள் மூலம் "தேவன் கொடுத்த நியாயப்பிரமாணமானது அது முற்றிலும் நிறைவேறும்வரை ஒளிந்துபோகாது அல்லது முடிந்துபோகாது" என்று பொருள் கொள்கிறேன்.
அடுத்து தொடர்ந்து படிக்கும்போது பவுலின் நிரூபத்தில் உள்ள கீழ்கண்ட வசனத்தை படிக்கிறேன்:
ரோமர் 10:4விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
இப்பொழுது இயேசு ஒழிந்து போகாது என்று சொன்ன நியாயப்பிரமாணமானது
எல்லாம் நிறைவேறும் முன்னமேயே ஒழிந்தது அல்லது முடிந்தது என்று சொல்லப்பட்டிருப்பதை அறிய வருகிறேன்.
உடனே நான் முதலில் பொருள் கொண்டது தவறு என்று எண்ணி திரும்ப அந்த முதல் வசனத்தை படிக்கிறேன். அந்த வசனமோ மிக தெளிவாக "நியாயப் பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது" என்று சொல்கிறது.
இந்நிலையில் சகோ. ஜான் சொல்வதுபோல் "வசனம் ஒருகாலும் தவறு அல்ல" என்பதை நான் ஏற்கிறேன். எனவே அதை நாம் பொருள் கொண்டவிதம்தான் தவறு என்று எடுத்துகொண்டு, இரண்டு வசனமுமே சரியாக வரும்படி இதை எப்படி பொருள் கொள்ளுவது என்பது எனக்கு தெரியாமல் முழிக்கிறேன். எனவே உண்மை அறிந்த என்னைவிட அதிக ஞானம் உள்ள பிற சகோதரர்களிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
இதுபோல் நேர் எதிர் கருத்துக்களை சொல்லும் அனேக வசனம் வேதாகமத்தில் இருப்பதால் ஒன்றை எப்படி பொருள் கொள்வது என்று அறிவதன்மூலம் மற்ற எல்லா வசனத்தையும் நான் சுலபமாக புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
எனவே தள சகோதரர்கள் யாராவது இந்த வசனம் குறித்த விளக்கத்தையும் தங்கள் கருத்தையும் எனக்கு புரியும் அளவுக்கு சற்று விளக்குங்களேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///வேதத்த்தை வாசித்து ஒரு வசனத்தை புரிந்து கொள்ளும்போது, நாம் புரிந்து கொண்ட விதம் மற்றொரு வசனத்தை Contradict பண்ணினால் வசனம் தவறல்ல, ஆனால் முதல் வசனத்தை குறித்த நம் புரிந்து கொள்ளுதல் தவறு என்று தீர்க்கவேண்டும்"///
உதாரணமாக: நான் முதலில் ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தயாகிய கீழ்கண்ட வார்த்தையை படிக்கிறேன்.
மத்தேயு 5:18வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்த வார்த்தைகள் மூலம் "தேவன் கொடுத்த நியாயப்பிரமாணமானது அது முற்றிலும் நிறைவேறும்வரை ஒளிந்துபோகாது அல்லது முடிந்துபோகாது" என்று பொருள் கொள்கிறேன்.
அடுத்து தொடர்ந்து படிக்கும்போது பவுலின் நிரூபத்தில் உள்ள கீழ்கண்ட வசனத்தை படிக்கிறேன்:
ரோமர் 10:4விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
இப்பொழுது இயேசு ஒழிந்து போகாது என்று சொன்ன நியாயப்பிரமாணமானது
எல்லாம் நிறைவேறும் முன்னமேயே ஒழிந்தது அல்லது முடிந்தது என்று சொல்லப்பட்டிருப்பதை அறிய வருகிறேன்.
உடனே நான் முதலில் பொருள் கொண்டது தவறு என்று எண்ணி திரும்ப அந்த முதல் வசனத்தை படிக்கிறேன். அந்த வசனமோ மிக தெளிவாக "நியாயப் பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது" என்று சொல்கிறது.
இந்நிலையில் சகோ. ஜான் சொல்வதுபோல் "வசனம் ஒருகாலும் தவறு அல்ல" என்பதை நான் ஏற்கிறேன். எனவே அதை நாம் பொருள் கொண்டவிதம்தான் தவறு என்று எடுத்துகொண்டு, இரண்டு வசனமுமே சரியாக வரும்படி இதை எப்படி பொருள் கொள்ளுவது என்பது எனக்கு தெரியாமல் முழிக்கிறேன்.
சுந்தர் அவர்களே, கடவுள் உங்களுக்கு மிக அதிகமான பொறுமையையும் மாத்திரமல்ல,ஞானத்தையும் அதனுடன் தாழ்மையையும் சேர்த்தே கொடுத்துள்ளார்;எனவே இவ்வளவு அழகாக நிதானிக்கிறீர்கள்;ஆனால் இறுதியில் தடுமாற்றம் ஏனோ?
நீங்கள் தீர்வை எட்டியபிறகும் திரும்பிப் பார்க்கவேண்டிய என்ற அவசியமென்ன? இயேசுகிறித்துவுக்குள் நியாயப்பிரமாணம் நிறைவேறியது என்பதே சரியான பதில்; நியாயப்பிரமாணம் கீழ்ப்படியாதவர்களுக்கும் அடங்காதவர்களுக்குமே கொடுக்கப்பட்டதாம்; நாம் தான் இயேசுவுக்கு கீழ்ப்படிய ஆயத்தமாக இருக்கிறோமே..? பிறகு எப்படி நியாயப்பிரமாணம் நம்மை கட்டுப்படுத்தும்? அது இயேசுவின் நிறைவேறிவிட்டதே..!
HMV wrote:நீங்கள் தீர்வை எட்டியபிறகும் திரும்பிப் பார்க்கவேண்டிய என்ற அவசியமென்ன? இயேசுகிறித்துவுக்குள் நியாயப்பிரமாணம் நிறைவேறியது என்பதே சரியான பதில்; ......பிறகு எப்படி நியாயப்பிரமாணம் நம்மை கட்டுப்படுத்தும்? அது இயேசுவின் நிறைவேறிவிட்டதே..!
சகோ. HMV அவர்களே தாங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்கிறேன். ஆகினும் சொல்லப்பட்டுள்ள வசனத்தின் சரியான கருத்து என்னவென்பதை அறிந்தால் மட்டுமே நாம் தேவனின் வழிகளில் சரியாக பயணிக்க முடியும்! நான் சுட்டியுள்ள இந்த கருத்தில் எனக்கு சில குழப்பங்கள் இருப்பதால், இந்த வசனத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக தியானித்து பார்ப்பது நல்லது என்று கருதுகிறேன்
"நியாயபிரமாணத்தில் சொல்லப்பட்டவைகளே இன்று வரை பூமியில் நிறைவேறி வருகின்றன" என்பது நாம் அறிந்த உண்மை. ஆண்டவராகிய இயேசுகூட, அவரைப் பற்றி பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்ட காரியங்களை நிறைவேற்றவே பூமிக்கு வந்தார்! ஆகவே அவரும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அவரைப்பற்றி எழுதியவைகளை அவர் நிறைவேற்றிவிட்டார் என்பதும் உண்மை! நிறைவேற்றுவதற்கும் முடிப்பதற்கும் உள்ள வேறுபாடு தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
ஒரு கைதிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிவிட்டால் அந்த தூக்கு தண்டனையே முடிவுக்கு வந்துவிடாது என்பதை நாம் அறிவோம். அவ்வாறு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிய இயேசு அதை முடித்து விட்டாரா? என்பதுதான் எனக்கு புரியவில்லை!
காரணம்!
இயேசுவின் வார்த்தைகள் தெளிவாக சொல்கிறது "நியாயப்பிரமாணத்தில் உள்ளவைகள் எல்லாம் நிறைவேறும் வரை நியாயப்பிரமாணமானது ஒழிந்து போகாது! என்று!
இயேசுவின் மரணத்துக்கு பின்னும் இன்னும் நிறைவேறாத சில வார்த்தைகள் நியாயப்பிரமாணத்தில் இருக்கிறதே
தானியேல் 12 :2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
நியாயப்பிரமாணத்தில் உள்ள இந்த வசனங்கள் இன்னும் நிறைவேறவில்லை அவ்வாறிருக்க நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும் முன்னரே நியாயபிரமாணத்தை இயேசு முடித்துவிட்டார் என்று எவ்வாறு சொல்லமுடியும் சகோதரரே? இங்கு முரண் இருப்பதுபோல தெரிகிறதே!
HMV wrote:////நியாயப்பிரமாணம் கீழ்ப்படியாதவர்களுக்கும் அடங்காதவர்களுக்குமே கொடுக்கப்பட்டதாம்; நாம் தான் இயேசுவுக்கு கீழ்ப்படிய ஆயத்தமாக இருக்கிறோமே..?////
நல்லது சகோதரரே! நியாயப்பிரமாணத்தில் உள்ள கட்டளைகள் இயேசுவுக்கு கீழ்படிந்துள்ள நமக்கு இல்லை என்றால்
என்று பவுலால் பட்டியலிட்டுள்ள நியாயப்பிரமாணத்தின் இந்த கிரியைகளை செய்யகூடாது என்று பவுல் யாருக்கு சொல்லியிருக்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன்! சகோதரரே. இதுகூட கிறிஸ்துவை அறிந்துகொண்ட மக்கள் உள்ள கொரிந்து சபைக்கு எழுதப்பட்டதுதானே?
என்ற வசனத்தின் அடிப்படையில் இயேசு நியாயப்பிரமாணத்தின் சாபத்துக்கு நம்மை நீக்கலாகிவிட்டார் என்பதை நான் ஏற்கிறேன் ஆனால் ஒருபுறம "நியாயப் பிரமாணம் முடிந்துவிட்டது" "நாம் சாபத்தில் இருந்து விலக்கபட்டு விட்டோம்" என்று சொல்லும் பவுல், இன்னொருபுறம் "நியாயப்பிரமாணம சொல்லும் பாவங்களை செய்யகூடாது செய்தால் தேவனின் ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது" என்று சொல்ல காரணம் என்ன?
இதற்க்கு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் அல்லவா? யாரும் இதற்க்கு பதில் சொல்லமாட்டேன் என்கிறார்கள், நீங்களாவது சொல்லுங்கள் நான் ஒரு முடிவுக்கு வர எதுவாக இருக்கும் சகோதரரே.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பலரிடம் கேட்டும் சரியான பதில் சொல்லமுடியாத இந்த கேள்விக்கு நான் எனது புரிதலை எழுதி வைப்பது நல்லது என்று கருதுகிறேன்.
நியாயப்பிரமாணம் என்பது நான்கு பிரிவுகளை கொண்டது
1. ஆசாரிப்பு கூடாரத்துக்கடுத்த பிரமாணங்கள்
2. பலியிடுதல் மற்றும் இரத்தம் சிந்துதல் விருத்த சேதனம் சம்பந்தமான
பிரமாணங்கள்
3. தேவனின் கட்டளைகள்
4. தேவனின் நீதி நியாயங்கள்.
இந்த நான்கில் முதல் இரண்டு பிரமாணங்கள் மட்டுமே இயேசுவின் பலியின் மூலம் முடிவுக்கு வந்தது. இதையே பவுல் நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இயேசு இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.
அந்த முதல் இரண்டு பிரமாணங்கள் கீழ்கண்ட வசனத்தின் மூலம் மாற்றப்படுகின்றன:
ஆசாரிப்பு கூடாரம் மற்றும் தேவாலயம் மட்டுலம்மல் பிதாவை எங்கும் தொழும் காலம் இப்பொழுது வந்திருக்கிறது.
இயேசு எல்லா பாவங்களுக்காகவும் ஒரே தரம் பலியானதன் மூலம் "பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்" என்ற தேவனின் விருப்பம் அமுலுக்கு வந்தது.
ஆனால் தேவனின் கட்டளைகளும் நீதி நியாயங்களும் ஒருநாளும் முடிந்து போகவில்லை! எனவேதான் "நியாயப்பிரமாணம் முடிந்து விட்டது" என்று சொன்ன பவுல் நியாயப்பிரமாணம் சொல்லும் சில பாவங்களை பட்டியலிட்டு இவைகளை செய்பவன் தேவனுடய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று சொன்னார்.
சங்கீதம் 119:160உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
"தேவனுடய நீதி நியாயங்கள் நித்தியமானவைகள்" என்று வசனம் சொல்லியிருக்க, அவ்வசனங்களுக்கு விரோதமாக "அவைகள் முடிந்து விட்டன" என்று போதிப்பது தவறான ஒருநிலை! நித்தியமான நீதி நியாயங்கள் ஒருநாளும் முடிந்துபோக வாய்ப்பில்லை நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் வரை அவை முடிந்து போகாது இதையே ஆண்டவராகிய இயேசு வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் ஒழிந்துபோகாது என்று குறிப்பிட்டார்.
I யோவான் 5:3நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
பிரசங்கி 12:13 , தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
யாத்திராகமம் 20:6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்
என்று அனேக வசனங்கள் வேதத்தில் அவரது கற்பனையை கைக்கொள்ளுவதன் மேன்மையை போதித்திருக்க, அதிலிருந்து தப்பிக்க நினைக்து ஒரு சில வார்த்தைகளை தவறாக புரிந்துகொண்டு ஒரேயடியாக தேவனின் கட்டளைகளை விலக்குவது சரியான நிலை அல்ல என்பது உறுதி.
"திருடாதே, கொலை செய்யாதே, விபச்சாரம்பண்ணாதே. தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு" போன்ற கட்டளைகள் இந்த உலகம் உள்ளளவும் முடிவுக்கு வராது
ஒருவேளை நியயப்பிரமானத்தில் உள்ள எல்லாமே முடிந்துவிட்டது என்றால் பவுல் கீழ்கண்ட வார்த்தையை சொல்லியிருக்க மாட்டார்
I கொரிந்தியர் 7:19விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதேகாரியம்.
எனவே அன்பானவர்களே! வேத வசனத்தை புரிதலுக்கு பாடம் சொல்லும் தாங்கள் அதை தவறான நிலையில் புரிந்துகொண்டு தவறிவிடாத படிக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
நான் இங்கு நியாயப்பிரமாணத்தை திரும்ப நடைமுறைக்கு கொண்டு வருகிறேன் என்று என்னை பற்றிய தவரான கருத்து வேண்டாம். "உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்"என்று சொல்லப்பட்டுள்ள சங்கீதத்தின் வார்த்தையின் நடைமுறை நிலையையும். "தேவனுடைய கற்பனையை கைகொள்வதே காரியம்" என்று சொல்லும் பவுல், சில பாவங்களை பட்டியலிட்டு அவைகளை செய்தால் தேவனுடய ராஜ்ஜியம் இல்லை என்று சொல்வதற்குமான காரணத்தையே இங்கு விளக்கியுள்ளேன்
வேத வார்த்தைகள் ஒவ்வொன்றம் தன்னில் தானே வல்லமை உடையது. ஒரு வேத வார்த்தை இன்னொரு வசனத்துக்கு பதிலி அல்ல! ஒரு வசனந்த்த உதாசீனம் செய்து இன்னொரு வசனத்தின் கருத்தை மட்டும் எடுத்து கொள்வது சரியான நிலை அல்ல. எதிரெதிர் கருத்துக்களாக தோன்றும் இரண்டு வசனமுமே, இந்த உலகம முடியும்வரை நடைமுறையில் இருக்கும். பிற மனுஷனை சார்ந்தோ அல்லது நமது மனுஷ ஞானத்தாலோ பொருள் கொள்வதைவிட தேவனை சார்த்து நின்று பொருள் கொள்வதே சிறந்தது. இணை வசனம் இல்லாத வசனங்களை பொருள்கொள்ளும்போது அதிகம் கவனம் தேவை.
எனது இந்த புரிதலுக்கும் கருத்துக்கு சரியான விளக்கம் சொல்லும் மாற்றுகருத்து
எதுவும் இருக்குமாயின் பதிவிடலாம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)