இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் இரட்சிப்பு எல்லார்மேலும் தானாக ஏன் பலிப்பதில்லை?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
இயேசுவின் இரட்சிப்பு எல்லார்மேலும் தானாக ஏன் பலிப்பதில்லை?
Permalink  
 


முதல் மனிதனாகிய ஆதாம் விலக்கப்பட்டகனியை புசித்தான் எனவே அவன் நன்மை தீமை அறிந்து பாவம் செய்தவன் ஆனான்!  அந்த பாவத்தின் தன்மையானது ஒருவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இந்த பூமியில் பிறக்கும்  எல்லோர் மீதும் தானாகவே  விழுகிறது என்பதை வேதம் சொல்கிறது.
 
I கொரிந்தியர் 15:22  ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல
 
இங்கு எனது கேள்வி என்னவெனில்   ஆதாமின் பாவமானது  விசுவாசித்தாலும்  விசுவாசிக்கவிட்டாலும்கூட எப்படி எல்லோர் மேலும் விழுகிறதுவோ அதுபோல,  இயேசு தரும் இரட்சிப்பும் பாரபட்சமினறி  பூமியில் பிறக்கும் எல்லோர் மேலும் விழுந்து எல்லோரையும் மீட்கலாமே   ஏன் அது மட்டும் விசுவாசிதவர்கள் மேல் மட்டும் பலிக்கிறது ? 
 
ரோமர் 10:9   கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்
  
அடுத்து ஆதாம் பாவம் செய்ததால்தான் அவனுக்கு மாம்ச மரணமே உலகினுள் வந்தது. அவனை தொடர்ந்து இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும் அந்த மாம்ச மரணம் ஆட்கொண்டது  
 
ரோமர் 5:14  மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது
 
ஆனால் இயேசு தரும் மீட்பால் ஏன் இந்த மாம்ச மரணத்தை மேற்கொள்ள முடியவில்லை? தொடர்ந்து மாம்ச மரணத்தை எல்லோரும் சந்தித்தே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலை இருக்க காரணம் என்ன?
 
 
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இறைநேசம் wrote:
இங்கு எனது கேள்வி என்னவெனில்   ஆதாமின் 
பாவமானது  விசுவாசித்தாலும்  விசுவாசிக்கவிட்டாலும்கூட எப்படி எல்லோர் மேலும் விழுகிறதுவோ அதுபோல,  இயேசு தரும் இரட்சிப்பும் பாரபட்சமினறி  பூமியில் பிறக்கும் எல்லோர்மேலும் விழுந்து எல்லோரையும்
 மீட்கலாமே.   ஏன் அது மட்டும் விசுவாசிதவர்கள் மேல் மட்டும் பலிக்கிறது ? 
 
ரோமர் 10:9   கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்
 
 
 

ஆண்டவராகிய இயேசுவின் மீட்பு எல்லோர்மேலும் தானாக பலிக்காததற்கு காரணம், மனுஷன் சுயசித்தம் செய்யும்  வல்லமை பெற்றதினாலேயே!   

சிறு உதாரணத்தை நான் இங்கு கூறுகிறேன்:
 
ஒரு கணவன்  மனைவி இருவருக்கு இடையே தகராறு  விவாகரத்துவரை வந்து பிரியும்நிலை ஏற்ப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு  6 மாதத்தில் ஒரு குழந்தை  இருக்கிறது என்று வைத்து கொண்டால், அந்த குழந்தை நீதிமற்ற தீர்ப்பின் அடிப்படையில் தாயாரிடமே  ஒப்படைக்கப்படும்.  அந்த பிள்ளையிடம் எந்தஒரு விசாரணையும் நடைபெறுவதில்லை காரணம் அதற்க்கு நன்மை தீமை அறிய தெரியாது. 
 
அதே நேரத்தில் அந்த குழந்த ஒரு ஐந்து வயது நிரம்பிய சுயமாக சிந்திக்க தெரிந்த பிள்ளையாக இருந்தால், அந்த பிள்ளையிடம் "நீ உன் அம்மாவுடன் இருக்கிறாயா? அல்லது அப்பாவுடன் இருக்கிறாயா? என்று கேடடு, அதன் பிரகாரம் முடிவு எடுக்கப்படும். 
 
அதுபோல், பாவம் செய்வதற்கு முன்னர் மனுஷன் நன்மை தீமை அறியாதவனாக இருந்தான். எனவே அந்த பாவமானது எல்லோர் மேலும் தானாகவே பற்றிக் கொண்டது. ஆனால பாவம் செய்தபின்னர் மனுஷன் நன்மை தீமையை அறிந்து சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனை பெற்றுவிட்டான்.  எனவே அதன்பின்னர ஒருவர் இயேசுவை  ஏற்று மீட்பில்  பிரவேசிக்கவும் அல்லது இயேசுவை நிராகரித்து தன் பாவத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பவதும் அவனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். 
 
"இயேசு எனது பாவத்துக்காக மரித்தார்" என்று தான் சுய நினைவோடு முழு மனதோடு ஏற்று அறிக்கை செய்தால் மட்டுமே அங்கு இயேசு தரும் இரட்சிப்பு கிரியை செய்கிறது.  
 
இதற்க்கு முக்கிய  காரணம் தேவன் மனுஷனுடன் போராடி மேற்கொள்ள விரும்புவதில்லை. நன்மை தீமையை அவனுக்கு சொல்லிகொண்டுத்து "நன்மை செய்தால் மேன்மை. தீமை செய்தால் அழிவு" என்று கூறி, தேர்ந்தெடுக்கும் பணியை அவனது கையிலேயே விட்டுவிடுகிறார்.
 
எரேமியா 21:8 பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
சரியானதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நமது கரத்திலே விட்டுவிட்டார்.   காரணம் நன்மை தீமையை வரையறுத்து முடிவெடுக்கும் ஞானம் மனுஷனிடம் அதிகமாகவே உள்ளது. இந்த உலகில் எப்படி அதிகமதிகமாக பணம் சம்பாதித்து சுகமாக வாழலாம் எந்த நாட்டுக்கு போனால் அதிகம் சம்பாதிக்கலாம்  என்பதை தனது சுய ஞானத்தால் ஆராய்ந்து  அதை  செயல்படுத்தி வருவதுபோல், அதைவிட அதிமுக்கியமான நித்தியத்துக்கடுத்த காரியங்களையும் அதிகமாக ஆராய்ந்து அல்லது ஆண்டவரை விடாதுதேடி, தேவன் தரும் மீட்பை பெறவேண்டியது அவனுடைய கடமையாக உள்ளது.        
 
தேவனை வாஞ்சையோடு தேடுபவர்கள் உண்மையை நிச்சயம் கண்டடைவார்கள்!   
உலக சுகங்களையே நோக்கி வாழ்பவர்கள் நித்தியத்தை இழந்துபோவார்கள்!
 
இக்காரியங்கள் அவரவர் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே நடைபெறும்.
 


-- Edited by SUNDAR on Wednesday 1st of June 2011 04:20:00 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: இயேசுவின் இரட்சிப்பு எல்லார்மேலும் தானாக ஏன் பலிப்பதில்லை?
Permalink  
 


இறைநேசம் wrote:
 அடுத்து ஆதாம் பாவம் செய்ததால்தான் அவனுக்கு மாம்ச மரணமே உலகினுள் வந்தது. அவனை தொடர்ந்து இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும் அந்த மாம்ச மரணம் ஆட்கொண்டது  
 
ரோமர் 5:14  மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது
 
ஆனால் இயேசு தரும் மீட்பால் ஏன் இந்த மாம்ச மரணத்தை மேற்கொள்ள முடியவில்லை? தொடர்ந்து மாம்ச மரணத்தை எல்லோரும் சந்தித்தே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலை இருக்க காரணம் என்ன?
 
 
 

மாம்ச  மரணத்தை  மேற்கொள்ள வேதாகமத்தில் வழி சொல்லப்படவில்லை என்பது ஒரு தவறான கூற்று. 

"சாகும் தன்மையுள்ள இந்த மாம்சமானது சாவாமையை தரித்துகோள்வது"வே மாம்ச  மரணத்தை மேற்கொள்ளும் நிகழ்வு ஆகும்.  அதுபற்றிய குறிப்புகள் வேதத்தில் அனேக இடங்களில் வெளிப்படுத்தபட்டுள்ளது. 
 
சங்கீதம் 68:20  ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
ஓசியா 13:14 ; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்
 
என்று பழைய ஏற்பாட்டில் வாக்கு கொடுத்த தேவன்,
 
கொரிந்தியர் 15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
I கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்
 
என்ற முடிவை கொடுத்து, கிறிஸ்த்துவின் வருகையின்போது சாவுக்கேதுவான இந்த மாம்சம் சாகாமையை  தரித்துகொள்வதன் மூலம் "மாம்ச மரணமும் மேற்கொள்ளப்படும்"  என்ற உண்மையை ஆண்டவர் தெரிவித்துள்ளார்.    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard