இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாலிபம் இயேசுவுக்கே!


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
வாலிபம் இயேசுவுக்கே!
Permalink  
 


Posted by Johnson kennedy on April 18, 2011 at 2:19pm

வாலிபம் இயேசுவுக்கே!

ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. - (எரேமியா 1:7).

ஒரு முறை காசி நகரில் கல்வியில் சிற்நத ஒரு சந்நியாசியுடன் சாது சுந்தர் சிங் உரையாடி கொண்டிருந்தார்.

அப்போது சந்நியாசி கூறினார், 'சாதுக்களின் ஒழுக்க முறைகளை குறித்துள்ள எங்களுடைய சட்டதிட்டங்க்ள போற்றத்தக்கவை. ஏனென்றால் முதலாவது, மாணாக்க நிலை, பின்னால் குடும்பஸ்தன், வாழ்க்கையின் பின் பாகத்தில குடும்ப கவலையிலிருந்து நீங்கி காட்டுக்கு செல்லுதல், பின் வயதான காலத்தில் சந்நியாசித்தல், அதாவது வெறுத்து விடுதல் என்பவை.

ஆனால் நீங்கள் எடுத்து கொண்ட முறையோ விபரீதமானது. உங்கள் வாலிப பிராயத்திலே சந்நியாசியாகி விட்டீர்களே' என்றார்.

அதற்கு சுந்தர்சிங் 'நான் சாதுவானதன் நோக்கம் உங்கள் நோக்கத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது. கண்ணியம் கிடைக்குமென்று நான் சாதுவாகவில்லை.

 உலகத்தில் இடையூறுகளின்றி சாதுவாக எளிய வாழ்க்கை நடத்தி கிருபையாய் என்னை இரட்சித்தவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். எனக்காக தம் உயிரை தந்தவருக்கு பலம் நிறைந்த என் வாலிப காலத்தில் சிறந்த ஊழியம் செய்ய வேண்டியது நியாயமல்லவா?' என்றார்.

இதை ஏற்க மறுத்த சந்நியாசியிடம், 'உமது சீடரில் ஒருவன், உமக்கு நன்றாய் பழுத்த மாம்பழத்தை கொடுப்பதற்கு பதிலாக சுவைமிக்க சதைப்பகுதியை உரித்து எடுத்து விட்டு, தோலும் கொட்டையுமானதை உங்களுக்கு கொடுத்தால் என்ன சொல்வீர்கள்?' என்றார்.

உடனே அவர், அப்படிபட்ட செய்கை மன்னிக்கப்படதக்கதல்ல, அது அவமானத்தின் உச்சநிலை' என்றார். அதற்கு சாது சுந்தர்சிங் ' நமது வாலிப பிரயாத்தை சிற்றின்பங்களில் கழித்து, பெலவீனமான கிழட்டு பிராயத்தில் எலும்புகளையும், தோலையும் கடவுளின் ஊழியத்திற்காக கொடுப்பது முட்டாள்தனமும், கடவுளை கேவலப்படுத்தும் செயலுமல்லவா?' என்றார்.

நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் மதம் அல்லது இறைவனை தேடுதல் என்பதற்கு எந்த இடம் கொடுக்கப்படுகிறது என்று கவனித்தீர்களா? ஒருவன் வாலிப வயதில் இஷ்டம் போல் வாழ்ந்து பின்பு தோய்ந்து போன வயதான நாட்களை இறைவனுக்கென்று ஒதுக்கி வைக்கிறான்.

இந்த எண்ண ஓட்டத்தின் தாகத்தை நம்முடைய கிறிஸ்தவ ஐக்கியத்திலும் காணலாம். வாலிபனொருவன் தன்னை ஊழியம் செய்ய அர்ப்பணிக்கும்போது, அநேகர் அதை வினோதமான காரியமாகவே பார்கின்றனர்.

ஆனால் கிறிஸ்துவின் இரட்சிப்பை அனுபவித்த அந்த வாலிபனுக்கு தெரியும், வாலிபத்தின் முழு நிறைவையும் படைத்த தேவனால் மட்டுமே தரமுடியும் என்று. அதிலும் அவருக்கு ஊழியம் செய்வது போல உன்னத திருப்தி தரக்கூடியது இவ்வுலகில் ஒன்றுமில்லை.

சில நேரங்களில் வாலிபர்களாகிய சிலருக்கு ஊழியம் செய்ய விருப்பம் இருக்கும். ஆனால் அதோடு, இந்த வயதிலே நான் எப்படி செய்ய முடியும் என்ற கேள்வியும் எழும். நீ உன்னை குறைவாய எண்ணாதே என்று எரேமியாவை அழைத்த தேவன் உன்னையும் அழைக்கிறார்.

இந்நாட்களில் வாலிபர் பலரை யோசுவாவின் சந்ததியாக தேவன் எழுப்பி கொண்டிருக்கிறார். அவரால் பயன்படுத்தப்படும் வாலிபர், தேவனுக்காக எழும்பி பிரகாசித்து கொண்டிருக்கிறார்கள்.

வாலிபனே நீ இயேசுவுக்கு தேவை. தேவன் உன்னை ஊழியத்திற்கு அழைத்திருக்கும் பட்சத்தில் உன் வாலிப வயதிலேயே ஊழியம் செய்ய உன்னை அர்ப்பணி;. நான் வேலை செய்து ஓய்வு பெற்றபின் ஊழியம் செய்வேன் என்று சொல்லுவாயாயானால், ஓய்வு பெற்றவுடன் உங்களுக்கு ஊழியம் செய்யவே ஒருவர் தேவைப்படும்.

நீங்கள் எப்படி ஊழியம் செய்வீர்கள்? வாழ்வில் சிறந்த பகுதியில் தன்னுயிரை கொடுத்த இயேசுவுக்கு உங்கள் வாலிப பிரயாத்தை கொடுப்பீர்களா?

Bro.Karthik Stephen

 



__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard