Stephen wrote:ஒன்றும் இல்லாத ஒன்று, எல்லாவட்ரையும் உடைய ஒன்ரைஅழிக்கிரது.
ஒன்றும் இல்லாத ஒன்று எது,,,,,,,,,,,?
எல்லாவட்ரையும் உடையது எது..........?
ஒன்றுமில்லாத ஓன்று என்பது பணத்தை குறிக்கிறது என்று கருதுகிறேன்.
ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு என்பது ஒன்றுமில்லாத ஒரு காகிதமே. மனுஷன் அதை மதிக்காத பட்சத்தில் அந்த
காகிதத்துக்கு ஒரு நேர பசியை ஆற்றும் சக்திகூட கிடையாது.
"எல்லாவற்றையும் உடைய" என்பது மானிடனை குறிக்கலாம் என்று கருதுகிறேன். ஏனெனில் அவனுக்குதான் எல்லா தன்மைகளும் உண்டு. உயிர் உடல் ஆவி ஆத்துமா பகுத்தறிவு போன்ற எல்லாமே இருக்கிறது.
அதாவது ஒன்றுமில்லாத பணமானது அனைத்து வலிமையும்
உள்ள மானிடர்களை அழிக்கிறது என்று பொருள் கொள்ளலாமா?
பணம்பணம் என்று பேயாய் அலைபவர்கள் அந்த பணத்தாலே பிடிக்கப்பட்டு தாங்கள் நல்ல குணநலன்கள், இரக்கம், பாசம்,
சகோதரரே பழைய ஏற்பாட்டு காலத்தில் யார் அந்நியபாஷை பேசினார் என்பதை நாமும் பலமுறை யோசித்து பார்த்துவிட்டேன் யாரும் பேசியதாக எனக்கு தெரிய வில்லை.
சவுல் சாமுவேலால் அபிஷேகிக்கபட்டு கர்த்தருடய ஆவி அவன்மேல் இறங்கிய போது அவன் தீர்க்கதரிசனம் சொன்னான் என்றுதான் வேதம் சொல்கிறது, வேறு பாஷை எதுவும் பேசியதுபோல் வசனம் இல்லை.
அடுத்து ஏசாயா தீர்க்கதரிசி புத்தகத்தில் ஒரே ஒரு இடத்தில் ஏசாயா இவ்வாறு சொல்கிறார்:
ஏசாயா 28:11பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்
இவ்வசனத்தின்படி கர்த்தர் ஜனங்களோடு அந்நிய பாஷையில் பேசுவார் என்றுதான் வசனம் உள்ளதேயன்றி அவ்வாறு பேசியதாக எங்கும் தகவல் இல்லை.
எனவே விடுகதைக்கு விடையை தாங்களே சொல்லிவிடும்படி கேட்டுகொள்கிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோதரரே நான் சொல்லும் இந்த விடுகதையின் அர்த்தம் சிலருக்கு சிரிப்பாகவும்
சிலருக்கு ஆவிக்குரிய வாழ்க்கையில்யோசிக்க கூடிய விஷயமாகவும்
இருக்கலாம்..
எண்ணாகமம் : 22
28. உடனே கர்த்தர் கழுதையின் வாயைத்திறந்தார்; அதுபிலேயாமைப் பார்த்து: நீர்என்னை இப்பொழுது மூன்றுதரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
29. அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம்பண்ணிக் கொண்டுவருகிறாய்; என்கையில் ஒருபட்டயம் மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
30. கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள் வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.
இந்த வசனத்தின் படி பேசாத ஒரு மிருகம் தன வாயைதிறந்து
மனிதனுடைய பாஷையை பேசியிருக்கின்றது என்றால்
அந்த மிருகம் பேசியது அன்னியபாஷை தான் என்பது என் கருத்து..
ஒரு மனிதனின் சொல் கேட்டு கர்த்தர் செய்த மிகப்பெரிய அற்புதம் என்றால் "யோசுவா" என்ற மனிதன் செய்த அற்புதம் தான்.
யோசுவா 10 : 12. கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
யோசுவா 10 : 13. அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.
யோசுவா 10 : 14. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப்பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்
ஒரு மனிதனின் சொல் கேட்டு கர்த்தர் செய்த மிகப்பெரிய அற்புதம் என்றால் "யோசுவா" என்ற மனிதன் செய்த அற்புதம் தான்.
யோசுவா 10 : 12. கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
யோசுவா 10 : 13. அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.
யோசுவா 10 : 14. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப்பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்
சகோ : Muthu அவர்களே மிக அழகாக சரியாக சொல்லிவிட்டீர்கள் உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்த அற்புதம் பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை ஏன் சில ஊழியர்களுக்கு கூட தெரியாது இந்த அற்புதத்தை நாம் அதிகமாக பிரசங்கத்திலே அல்லது பாடல்களிலும் கூட கேட்டிருக்க கூட முடியாது
அநேகருக்கு தெரிந்த மிக பெரிய அற்புதம் செங்கடலை பிளந்தது தான் ஆனால் நீங்கள் சொன்ன இந்த அற்புதம் எல்லாவற்றையும் விட
மிக பெரிய பிரம்மாண்டமான அற்புதம் நானும் இந்த
அற்புதத்தை மனதில்வைத்து கொண்டுதான் இங்கு விடுகதையாக எழுதினேன்
நீங்கள் இந்த விடுகதைக்காக நேரம் எடுத்து சரியாய் எழுதியதற்காக நன்றி சகோதரரே...................
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 1st of December 2011 03:15:21 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
இந்த விடுகதையின் பதில் ' இயேசு' என்பதை கீழ்க் காணும் வசனம் உணர்த்துகிறது.
யோவான் 19 : 23. போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
///ஒரு பாசறை ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஆனால் சிலருக்கே விடை தெரிந்திருந்தது. மிக்க மகிழ்ச்சி.////
ஆம். இப்படி ஒரு விடுகதை கேட்டால் சிலருக்கு மட்டுமே விடை தெரியும். விடுகதை கேட்கபட்ட விதமே தப்பாக இருபதுபோல் தெரிகிறதே சகோதரரே!!!!????
முதலாவது இயேசுவை "தேவ மனிதர்" என்று குறிப்பிட்டது தவறு. வேதம் அவரை குறித்து சொல்கையில்
ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர்நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
வசனம் அவரை "வல்லமையுள்ள தேவன்" என்று குறிப்பிட்டிருக்கையில் நாம் அவரை "தேவ மனிதன்" என்று சொல்வது ஏற்றது அல்ல. வேண்டுமானால் வசனம் சொல்வதுபோல் "தேவ குமாரன்" என்றோ அல்லது "மனுஷ குமாரன்" என்று சொல்லி கொள்ளலாம் மற்றபடி நீங்கள் சொல்வதுபோல் சொன்னால் யாரும் இயேசுவை நினைத்துகூட பார்க்கமாட்டார்கள்.
இரண்டாவது //////மேலிருந்து கீழ்வரை நெய்யப்படாதிருந்தது////
இயேசுவின் அங்கி முழுதும் நெய்யப்பட்ட தாயிருந்தது . ஆனால் தங்கள் விடுகதையில் நெய்யப்படாதிருந்தது என்று இருக்கிறது.
இது எழுத்துபிழையால் உண்டாயிருக்கலாம் என்றாலும் எல்லோரும் யாருடைய அங்கி நெய்ய படாதுஇருந்தது என்றுதானே யோசிப்பார்கள்.
எனினும் சகோ. முத்து அவர்கள் இந்த பிழைகளை எல்லாம் ஊடுருவி சரியான பதிலை தந்திருப்பது பாராட்டப்படவேண்டிய காரியமே.
சகோதரர் நேசன் அவர்களின் பின்னூட்டதிற்கு இயேசுவின் நாமத்தில் நன்றி.
ஒரு முறை இயேசுவின் சிலுவை பாடுகளை குறித்து தியானித்துக் கொண்டிருந்தபோது , அவரின் வஸ்திரங்களை கிழிக்காமல் சீட்டுபோட்டு ஒருவன் எடுத்து கொண்டான் என்பதை வாசித்தபோது மனது மிகவும் துக்கப்பட்டது. காரணம், அந்த 'ஒருவன்' இயேசுவின் வஸ்திரங்களை கிழிக்காமல் எடுத்துக் கொண்டதால் பெற்றுக் கொண்டது ஒன்றும் இல்லை. ஒருவேளை அந்த வஸ்திரங்களை அணிந்து மகிழ்ந்து இருக்கலாம். வேதத்தில் அந்த 'ஒருவனைக்' குறித்து அதன்பின்பு எதுவும் சொல்லப்படவில்லை.
மாறாக அந்த 'ஒருவன்' இயேசுவின் வஸ்திரங்களுக்குப் பதிலாக, இயேசுவை தன்னோடு தன்னுடைய சொந்த ரட்சகராக எடுத்து சென்றிருப்பான் என்றால் அவனுக்கு இவ்வுலகில் மட்டும் அல்ல நித்தியத்திலும் மகிழ்ச்சி கிடைத்திருக்குமே, மாத்திரமல்ல அவன் பெயர்கூட ஒருவேளை வேதத்தில் ஆண்டவர் எழுதப்படும்படி கிருபை செய்து இருக்கலாம் அல்லவா! அதை அறிந்து கொள்ளாதபடி இயேசுவின் ஆடைமீது ஆசைப்பட்டானே! என்று மனது மிகவும் துக்கப்பட்டது.
இவைகள் என் இருதயத்தில் இருந்ததினால், சகோதரர் Johndanu விடுகதையாக கேட்டவுடன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அணிந்து இருந்த ஆடைதான் என முடிவு செய்தேன்.
தேவன் இந்த தளத்திற்கு வரும் அனைவருக்கும் ஆவிக்குரிய நன்மைகள் கிடைக்க கிருபை செய்வராக!
வேதத்தில் கர்த்தரை அறியாத ஒரு ராஜாதிராஜன் கர்த்தருக்கு ஊழியகாரனாய் இருந்தான்.. அவனை இஸ்ரவேலர் அனைவரும் சேவிக்கும் படி கர்த்தர் கூறினார்..அந்த ராஜாதி ராஜன் யார்??
வேதத்தில் கர்த்தரை அறியாத ஒரு ராஜாதிராஜன் கர்த்தருக்கு ஊழியகாரனாய் இருந்தான்.. அவனை இஸ்ரவேலர் அனைவரும் சேவிக்கும் படி கர்த்தர் கூறினார்..அந்த ராஜாதி ராஜன் யார்??
தாங்கள் குறிப்பிடும் அந்த ராஜா நேபுகாத் நேச்சார் என்று கருதுகிறேன். அவன் கர்த்தரை அறியாத பாபிலோன் தேசத்தை சார்ந்த புரஜாதிக்காரனாக இருந்தாலும் கர்த்தர் அவனை பற்றி சொல்லும்போது என் ஊழியக்காரன் என்று சொல்வதை அறிய முடியும்.
எரே 25:9இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி,
எரேமியா 27:6இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்;
இதன் மூலம் கர்த்தரை அறியாத வேற்று மனுஷர்களை கொண்டு கூட தேவன் தன் ஊழியத்தை செய்ய வைக்க முடியும் என்பதை நாம அறியமுடிகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)