ஆத்துமாவை குறித்த வேத மாணவர்களை கருத்துக்களை நாம் பல நாட்களாக மனதில் வைத்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில் இருந்தேன். ஆத்துமா என்று ஓன்று மனிதனுக்குள் "நான்" என்ற வடிவில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்:
"நான்" என்ற வார்த்தை நமது சிலநேரங்களில் சரீரத்தை குறிப்பதுபோல் இருந்தாலும் நமது சரீரம்தான் ஆத்துமாவா? என்றொரு கேள்வியை எழுப்பினால் இல்லை என்றே பதில் சொல்லவேண்டும்.
உதாரணமாக "எனக்கு கை வலிக்கிறது" "எனது உடம்பு வலிக்கிறது" என்று சொல்கிறோம். இங்கு "எனது" எனப்படும் "நான்" வேறு "கை" வேறு என்று பொருளாகி விடுகிறது.
இவ்வாறு "நான்" என்று சொல்லப்படும் ஒரு தனிப்பட்ட ஆத்துமா மனிதனுக்குள் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது! மேலும் ஆண்டவராகிய இயேசுவும் மிக தெளிவாக
மத்தேயு 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
என்ற வசனத்தின் மூலம் ஆத்தும வேறு சரீரம் வேறு என்றும், சரீரத்தை தனியே கொல்ல முடியும் ஆத்துமாவை தனியே கொல்லமுடியும் என்பதை பிரித்து கூறியிருக்கிறார்! ஆனால் வேத வசனத்தில் அடிப்படையில் ஆத்துமா எங்கு உருவாகிறது என்பதை நிர்ணயிப்பது கடினமாகவும் குழப்பமாகவும் இருந்தது!
அதுகுறித்து அதிகமாக தியானிக்கையில் சமீபத்தில் ஒரு புரிதலின் மூலம் அந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.
ஆணிடத்தில் உற்பத்தியாகும் உயிரணுக்களும் பெண்ணிடத்தில் உற்பத்தியாகும் உயிரணுக்களும் தனித்தனியே இருப்பதுவரை அங்கு அழியாத கடினமான ஒரு பொருள் உருவாவதில்லை ஆனால் இரண்டும் சேரும்பொழுது அங்கு புது உயிரும் அத்தோடு சுலபத்தில் அழிக்கமுடியாத மண்டையோடும் உருவாகிறது.
அதேபோல் ஆதாம் பாவம் செய்யாது, நன்மை தீமை அறியாது இருந்தவரை அவன் சாதாரண ஜீவாத்துமாகவே இருந்தான். ஆனால் எப்பொழுது அவன் அந்த கனியை புசித்து நன்மை தீமையை அறிந்தானோ அப்பொழுது அந்த கனியில் இருந்த சாத்தானின் காரியங்கள் அவனுடன் இணைத்து அங்கு அழியாத ஆத்துமா ஓன்று உருவாகியது.
தேவன் விலக்கிய கனியை நாம் ஒரு சாதாரண கனியாக எடுத்து கொள்ள முடியாது! அதை ஒரு "விருட்சத்தின் கனி" என்று வேதம் குறிப்பிட்டிருந்தாலும் அந்த கனியுடன் சாத்தான் இணைந்திருந்தான் என்பதை நாம் அறியமுடியும். சாத்தான் என்பவன் நித்திய அக்கினிக்கு போகும் தன்மையுடன் நித்தியமானவனாக இருந்தான். மனுஷன் சாத்தனுடன் கூடிய அந்த கனியை புசித்தபோது அவனும் அதே சாத்தானின் தன்மையை தன்னுள் பெற்றான். எனவே அவனும் "நான்" என்ற ஒரு நித்திய ஆத்துமாவை உடயவனானான்.
இந்த கருத்தை புரிந்துகொள்ள தேவனின் அடுத்த வாக்கியத்தை நாம் சற்று தியானிப்பது நல்லது.
நன்மை தீமை அறிந்த மனிதன் தேவர்களில் ஒருவரைப்போல ஆனான்! என்று வேதம் சொல்கிறது. தேவனின் சாயலில் படைக்கபட்ட மனுஷன் சாத்தனுடன் கூடிய இந்த கனியை உண்டதன் மூலம் தேவர்களைப்போல நித்தியமானவன் ஆனான்.
அடுத்து ஆண்டவர் ஆதாமை பார்த்து:
ஆதியாகமம் 3:19நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
இவ்வசனத்தின் நிறைவேறுதலாக மரிக்கும் எல்லோருமே மண்ணுக்கு திரும்புவதும், அவனோடு இருக்கும் அழியாத ஆத்துமாவானது பூமிக்குள்ளே இருக்கும் பாதாளம் என்னும் குழிக்குள் இறங்குவதும் நிறைவேறியது.
மரித்த பிரேதங்களை எல்லாம் மண்ணுக்குள் புதைப்பது நாம் எல்லோரும் அறிந்தே. அதுபோல் "நான்" என்று சொல்லப்படும் இந்த அத்துமாவும் பூமின் கீழ் இருக்கும் பாதாளம் என்னும் படுகுழிக்குள் இறங்குகிறது.
சங்கீதம் 89:48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்?
இந்த சங்கீதத்தில் மாம்சமானது நிச்சயம் மரணத்தை காண்கிறது, பின்னர் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது என்பதையும் அத்தோடு இருக்கும் ஆத்துமா வானது பாதாள வல்லடிக்கு தப்பவே முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது என்பது எனது புரிதல்.
-- Edited by SUNDAR on Monday 25th of April 2011 04:29:49 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மனுஷன் சாத்தனுடன் கூடிய அந்த கனியை புசித்தபோது அவனும் அதே சாத்தானின் தன்மையை தன்னுள் பெற்றான். எனவே அவனும் "நான்" என்ற ஒரு நித்திய ஆத்துமாவை உடயவனானான்.
ஆதி 2 : 17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
இந்த வசனத்தின்படி "கனியை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்றுதானே கர்த்தர் சொல்கிறார் அழியாத ஆத்துமா உருவாகுதல்பற்றி வார்த்தை எதுவும் இல்லை என்பதுபோன்ற கேள்வி எழ வாய்ப்புள்ளதே.
மனுஷன் சாத்தனுடன் கூடிய அந்த கனியை புசித்தபோது அவனும் அதே சாத்தானின் தன்மையை தன்னுள் பெற்றான். எனவே அவனும் "நான்" என்ற ஒரு நித்திய ஆத்துமாவை உடயவனானான்.
ஆதி 2 : 17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். இந்த வசனத்தின்படி "கனியை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்றுதானே கர்த்தர் சொல்கிறார் அழியாத ஆத்துமா உருவாகுதல்பற்றி வார்த்தை எதுவும் இல்லை என்பது போன்ற கேள்வி எழ வாய்ப்புள்ளதே.
தேவன் "கனியை புசிக்கும்நாளிலே சாகவே சாவாய் என்று சொன்னார் எப்பொழுது அந்த கனியை அவர்கள் புசித்தார்களோ அப்பொழுதே அவர்களுக்கு சாவு நிச்சயமானது அவர்கள் மண்ணுக்கு திரும்பும் நிலை ஏற்ப்பட்டது அந்த சேப்டரும் அத்தோடு முடிந்துபோனது. மற்றபடி நித்தியஜீவனைபற்றியோ அல்லது மனிதனை குறித்த வேறு எந்த வாக்குத்தத்தாமோகூட அங்கு சொல்லப்படவில்லை
அதன் பின்னர் தேவன் நடத்தியே எல்லா செயல்பாடுகளுமே அழிவில்ல நிலையை பெற்ற ஆத்துமாவின் மீட்புக்காததான்.
"சாகவே சாவாய்" என்று சொன்ன தேவன் அவனுக்கு சாவு சர்வ நிச்சயம் என்று தெரிந்தும் பின்னர் "இதோ மரண வழியையும் ஜீவ வழியையும் உங்கள் முன் வைக்கிறேன்" என்று திரும்ப சொல்ல காரணம் என்ன?
இங்கெல்லாம் தேவன் காட்டிய வழியானது அழிவில்லா நித்திய நிலையை பெற்ற ஆத்துமாவின் நித்தியத்துகாகதான்.
மனுஷனின் மீருதலினிமித்தம் சரீரத்தின் சாவுஎன்பது முன்னமே தீர்மானிக்கபட்டு விட்டதால், அடுத்து வரும் நிலைகளை "பாவம் செய்கிற ஆத்துமாவுக்கும் சாவு வரும்"என்று எசேக்கியேலில் விளககியுள்ளார். அந்த சாவு மண்ணோடு மண்ணாகி போவது அல்ல "ஆத்துமாவை நரகத்தில் தள்ளி அழிக்கும்" சாவு.
வேதத்தில் உள்ள எஞ்சிய பகுதிகளில் சொல்லப்படும் மீட்பு என்பது அனேக இடங்களில் ஆத்தும மீட்பை குறித்தே சொல்லப்பட்டுள்ளது. நித்திய தன்மையை பெற்ற ஆத்துமாவானது நித்திய அழிவை நோக்கி செல்லாமல் தப்புவிக்கப்படவே
தேவன் தன குமாரனின் மரணத்தின் மூலம் மீட்பை கட்டளையிட்டார்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)