மேசேக்கு முட்செடியில் தரிசனமான கர்த்தர், அவனை எகிப்த்துக்கு பார்வோனிடத்துக்கு போகும்படி கட்டளையிடுகிறார். அதன் அடிப்படையில் மோசே எகிப்த்துக்கு போகும்போது
யாத் 4:20. அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.
யாத் 4:24வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.
இங்கு கர்த்தர் சொல்லித்தான் மோசே எகிப்த்துக்கு போகிறான். பின்னர் ஏன் மொசேயை கொல்ல பார்த்தார்? என்றொரு கேள்வி எழும்புகிறது.
இக்கேள்விக்கு மோசேயின் மனைவி செய்த செய்கையிநிமித்தம் நமது அனுமானத்தின் அடிப்படையில் இக்கேள்விக்கு கீழ்கண்ட பதிலை தரலாம்.
மோசேயின் மனைவி மற்றும் குமாரர்கள் மோசேயோடு சேர்ந்து எகிப்துக்கு போனார்கள் என்று வேதம் சொல்கிறது. ஆண்டவர் ஆப்ரஹாமோடு செய்துள்ள நித்திய உடன்படிக்கை இவ்வாறு சொல்கிறது
ஆதியாகமம் 17:13உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.
14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
இவ்வாறு நுனித்தோலுள்ள ஆத்துமா அறுப்புண்டு போகும் என்று கர்த்தர் நித்திய கட்டளையை சொல்லியிருக்க மோசே தனது குமாரருக்கு விருத்தசேதனம் பண்ணாமல் இருந்து, கர்த்தரின் கட்டளையை உதாசீனம் செய்த காரணத்தால்தான் கர்த்தர் மோசேயை கொல்லபார்த்தார் என்பதே எனது அனுமானம்.
மேலும் நாம் அறிவது:
இந்த "விருத்தசெதனம்" குறித்து மேசே தான் மனைவியிடம் ஏற்கெனவே சம்பாஷித்திருக்க வேண்டும். ஏதோ காரணத்தால் இந்த காரியம் நடைபெறாமல் தடைபட்டிருக்க வேண்டும். இப்பொழுது கர்த்தர் கொல்லபார்த்ததும் மோசேயின் மனைவிக்கு அந்த நியாபகம் வர, அல்லது மோசே நினைப்பூட்ட உடனே அவள் அந்த காரியத்தை நிறைவேற்றி மோசேயை தப்புவிக்கிறாள்.
யாத்திராகமம் 4:25அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.
யாத்திராகமம் 4:26பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்
இங்கு மோசேயின் மனைவியாகிய சிப்போறாள் தாமதிக்காமல் புத்தியுள்ள ஸ்திரியாக செயல்பட்டு மோசேயை காப்பதை அறியமுடிகிறது.
மேலும் நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கைகொள்ளுவதில் அசட்டையாக இருக்காமல், சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் நமக்கு போதிக்கிறது.
-- Edited by SUNDAR on Monday 25th of April 2011 10:33:46 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)