இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகத்தின் சிந்தையே அல்ல, கடவுளுடைய சக்தியேப் பெறுங்கள்!!


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
உலகத்தின் சிந்தையே அல்ல, கடவுளுடைய சக்தியேப் பெறுங்கள்!!
Permalink  
 


I கொரிந்தியர் 2:12  "நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்".

உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் ஒரு போரில் ஈடுபட்டு இருக்கிறோம்!!!  நம்முடைய எதிரி பலமிக்கவன், வஞ்சகன், போரில் கைதேர்ந்தவன். அவனிடம் திறம்பட்ட ஓர் ஆயுதம் இருக்கிறது; அதைப் பயன்படுத்தி மனிதர்களின் பெரும்பாலோரை வீழ்த்தி இருக்கிறான். ஆனால், அவனை எதிர்க்க நமக்குச் சக்தி இல்லை என்றோ எதிர்த்தால் தோல்விதான் மிஞ்சும் என்றோ நினைக்க வேண்டியதில்லை.

ஏசாயா 41:10  "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்".

தர்க்கமுடியாத ஓர் ஆயுதம் நம்மிடமும் இருக்கிறது; அதன் உதவியால் எந்தவொரு தாக்குதலையும் எதிர்த்து நிற்க முடியும்.

நாம் நிஜமான போரில் அல்ல, ஆன்மீகப் போரில் ஈடுபட்டு இருக்கிறோம்!!! நம்முடைய எதிரி பிசாசாகிய சாத்தான், அவன் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் ''இந்த உலகத்தின் சிந்தை''. அவனுடைய தாக்குதலை எதிர்த்து நிற்க நாம் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் கடவுளுடைய சக்தி. இந்தப் போரில் அவனை ஜெயித்து ஆன்மீக ரீத்தில் திடகாத்திரமாய் இருக்க நாம் கடவுளுடைய சக்திக்காகச் கேட்கவேண்டும், அது பிறப்பிக்கிற குணங்களை வாழ்கையில் வெளிக்காட்ட வேண்டும்.

கலாத்தியர் 5 : 22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

அப்படியென்றால், இந்த உலகத்தின் சிந்தை என்பது என்ன?, அது எப்படி உலகத்தை இந்தளவுக்குக் கட்டுப்படுத்த ஆரம்பித்தது?  இந்தச் சிந்தை நம்மீது செல்வாக்கு செலுத்துகிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? கடவுளுடைய சக்தியேப் பெற்றுக்கொள்வதில் ...  இந்த உலகத்தின் சிந்தையே எதிர்ப்பதில்... இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
RE: உலகத்தின் சிந்தையே அல்ல, கடவுளுடைய சக்தியேப் பெறுங்கள்!!
Permalink  
 


உலகத்தின் சிந்தை - ஏன் இந்தளவுக்குப் பரவி இருக்கிறது!!!

"இந்த உலகத்தை ஆளுகிற'' சாத்தானே உலகச் சிந்தைக்கு மூலக்காரணன்; இந்தச் சிந்தை கடவுளுடைய சக்திக்கு எதிராகச் செயல்படுகிறது. I யோவான் 5 : 19. ''நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்'' என்று வசனம் சொல்கிறது!!
இது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் மனப்பான்மை, மக்களைச் செயல்படத் தூண்டும் மனப்பான்மை. இது கடவுளுடைய சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் எதிராக மக்களை செயல்படத் தூண்டும்.

சாத்தான் தூண்டுவிகிற இந்தச் சிந்தை எப்படி இந்தளவுக்குப் பரவியது? முதலாவது, ஏதேன தோட்டத்தில் சாத்தான் ஏவாளை ஏமாற்றினான். கடவுளை விட்டு விலகினால் நன்றாக வாழ முடியும்மென அவளை நம்ப வைத்தான்.  ஆதியாகமம் 3:13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
அவன் எப்பேர்ப்பட்ட பொய்யன்!! யோவான் 8:44  ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்''.
பிறகு, அவளைப் பயன்படுத்தியே ஆதாமையும் கர்த்தருக்குக் கீல்படியாமல் போகச் செய்தான். அப்படி அவன் கில்படியாமல் போனதால் மனிதர்கள் எல்லாரும் பாவத்துக்குள் தள்ளப்பட்டார்கள்; இப்படிதான், கில்படியாமை எனும் சாத்தானுடைய சிந்தையே மனிதர்கள் பின்பற்ற ஆரம்பித்தார்கள் -
எபேசியர் 2 : 1. அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
2. அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
3. அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

சாத்தான் எக்கச் சக்கமான தேவதூதர்களையும் கூட ஏமாற்றினான்; அவர்கள் பிசாசுகளாக மாறிவிட்டார்கள். வெளி 12 : 3. அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
4. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது''.

நோவாவின் காலத்தில் பெருவெள்ளம் வருவதற்கு முன்பே அவர்கள் இப்படிக் கடவுளுக்கு கில்படியாமல் போய்விட்டார்கள். பரலோகத்தில் கடவுள் கொடுத்திருந்த ஸ்தானத்தை விட்டுவிட்டு பூமிக்குச் சென்று இயல்புக்கு மாறான ஆசைகளைத் திருப்தி செய்து மனம்போல் வாழ்ந்தால் நன்றாக இருக்க முடியுமென அந்தத் தூதர்கள் நம்பினார்கள். யூதா 6. "தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்".
இப்போது ஆவி உருவில் இருக்கிற அந்தப் பேய்களின் உதவியோடு அவன் 'உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான்' (வெளி 12 :9 ) என்றாலும், இன்று பெரும்பாலோனோர் பேய்களின் செல்வாக்கை அறியாதவர்களாகவே இருப்பது வருத்தமான விஷயம்!!! IIகொரிந்தியர் 4 : 4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்தொடரும்....



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Rajan26 wrote:

 
நாம் நிஜமான போரில் அல்ல, ஆன்மீகப் போரில் ஈடுபட்டு இருக்கிறோம்!!! நம்முடைய எதிரி பிசாசாகிய சாத்தான், அவன் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் ''இந்த உலகத்தின் சிந்தை''. அவனுடைய தாக்குதலை எதிர்த்து நிற்க நாம் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் கடவுளுடைய சக்தி. 


 சகோதரர்  அவர்களே மிக சரியான உண்மையான  கருத்தை தெரிவித்திருக்கிறீர்கள். 

ஏன் இந்த ஆவிக்குரிய போராட்டம்? அது எவ்வாறு எதற்கு உருவானது? என்பது குறித்து தொடர்ந்து விளக்கம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.


__________________


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

உலகத்தின் சிந்தை உங்கள் மீது செல்வாக்கு செலுத்துகிறதா?

சாத்தானுடைய செல்வாக்கை அநேகர் அறியாது இருகிறார்கள்; ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் அவனுடைய தந்திரங்களை அறிந்து இருக்கிறான். ( II கொரிந்தியர் 2 : 11 ) சொல்லப் போனால், நாம் இடங்கொடுத்தால் மட்டுமே இந்த உலகத்தின் சிந்தை நம்மீது செல்வாக்கு செலுத்தும். நம்மீது செல்வாக்கு செலுத்துவது கடவுளுடைய சக்தியா, இந்த உலகத்தின் சிந்தையா என்பதை அறிந்துகொள்ள நான்கு கேள்விகளை ஆராய்வோம்.

நான் தேர்ந்து எடுக்கும் பொழுதுபோக்கு என்னைப் பற்றி என்ன சொல்கிறது? (யாக்கோபு 3 :14 -18 வாசி) வன்முறையில் ஆர்வத்தைக் தூண்டிவிட்டு கடவுளிடமிருந்து நம்மை விலக்க சாத்தான் முயற்சிக்கிறான். வன்முறையில் பிரியப்படுகிற யாரையுமே கர்த்தருக்குப் பிடிக்காது என்பதைப் பிசாசு அறிந்திருக்கிறான். (சங்கீதம் 11 :5 ) எனவே, புத்தகங்கள், திரைப்படங்கள், இசை, ஏலத்ரானிக் கேம்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி நம்முடைய ஆர்வத்தீயே மூட்டிவிடுகிறான். எலோற்றோனிக் கேம்ஸ் படுமோசமான ஒழுக்கக் கேட்டையும் வன்முறையும் தூண்டிவிடுகின்றனர். நாம் நன்மையானவற்றை நேசிக்கிற அதேசமயம் சாத்தான் தூண்டுவிக்கிற தீமையானவற்றையும் நேசித்தால் அவனுக்கு சந்தோசமே. (சங்கீதம் 97 :10 )

ஆனால், கடவுளுடைய சக்தியேப் பெறுவோர், ஒழுக்க விஷயத்தில் சுத்தமானவர்களாக, சமாதானம் பண்ணுகிரவர்களாக, இறக்கம் நிறைந்தவர்களாக இருக்க அந்தச் சக்தி தூண்டுகிறது. எனவே, "நான் தேர்ந்து எடுக்கிற பொழுதுபோக்கு நல்ல குணங்களைக் காட்ட ஊக்குவிகிறதா''? என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பரலோகத்தில் இருந்து வருகிற ஞானம் வெளிவேசமற்றது. கடவுளுடைய பெற்று இருப்பவர்கள் ஒழுக்கச் சுத்தத்தையும் சமாதானத்தையும் பற்றி மற்றவர்களிடம் பேசிவிட்டு, கொடூரமான வன்முறையும் ஒழுக்கக் கேட்டையும் சித்தரிக்கும் காட்சியே வீட்டில் தனியாக இருந்து கண்டுகளிக்க மாட்டார்கள். தொடரும்...



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

தமக்கு மட்டுமே முழு பக்தியையும் செலுத்தவேண்டுமென கர்த்தர் எதிர்பாக்கிறார். ஆனால், தன்னை ஒரேவொரு முறை வணங்கினால் போதுமென சாத்தான் நினைக்கிறான், அதைத்தானே அவன் இயேசுவிடமும் எதிர்பார்க்கிறான்!! (லூக்கா 4 :7 ,8 ) அதனால் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: கடவுளுக்கு மட்டுமே முழு பக்தியையும் செலுத்துகிறேன் என்பதை நான் தேர்ந்துதேடுக்கிற பொழுதுபோக்கு காட்டுகிறதா? அந்தப் பொழுதுபோக்கு உலகத்தின் சிந்தையே எதிர்த்து நிற்க எனக்கு உதவுகிறதா அல்லது அதை இன்னும் கஷ்டமாக்குகிறதா? இனி பொழுதுபோக்கை தேர்ந்து எடுக்கும் போது நான் எப்படி கவனமாக இருக்கலாம்?... 



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

இறைநேசம் wrote:
நண்பர் இறைநேசன்  அவர்களே, இந்த திரியே பல குறிப்புக்கள் எடுத்தபின்பே எழுத ஆரம்பித்தேன். அதற்குள் எனது சொந்த வியாபாரம் விடயமாக வெளிநாட்டுக்கு செல்லவேண்டி இருந்ததின் நிமித்தம் இதை எழுதி முடிக்க கால தாமதம் ஆகிவிட்டது. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பதிவுகள் தொடரும் .:  நன்றி
Rajan26 wrote:

 
நாம் நிஜமான போரில் அல்ல, ஆன்மீகப் போரில் ஈடுபட்டு இருக்கிறோம்!!! நம்முடைய எதிரி பிசாசாகிய சாத்தான், அவன் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் ''இந்த உலகத்தின் சிந்தை''. அவனுடைய தாக்குதலை எதிர்த்து நிற்க நாம் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் கடவுளுடைய சக்தி. 


 சகோதரர்  அவர்களே மிக சரியான உண்மையான  கருத்தை தெரிவித்திருக்கிறீர்கள். 

ஏன் இந்த ஆவிக்குரிய போராட்டம்? அது எவ்வாறு எதற்கு உருவானது? என்பது குறித்து தொடர்ந்து விளக்கம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Rajan26 wrote:

 "இந்த உலகத்தை ஆளுகிற'' சாத்தானே உலகச் சிந்தைக்கு மூலக்காரணன்; இந்தச் சிந்தை கடவுளுடைய சக்திக்கு எதிராகச் செயல்படுகிறது.  


அநேகர் இந்த உலக சிந்தையைக்குள் மூழ்கி கடவுளின் சித்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அல்லது தான் கடவுளின் சிந்தையில் இருப்பதாக கருதிக் கொண்டு உலக சிந்தையில் மூழ்கி வாழ்கின்றனர்.

மிகவும் அருமையான கட்டுரை பலருக்கு பயன்தரும்  நல்ல கருத்துக்கள். தொடர்ந்து எழுதும்படி அன்புடன்  வேண்டுகிறேன்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

பொருள்களைச் சேர்ப்பதில் என்னுடைய மனப்பான்மை எப்படி இருக்கிறது? (லூக்கா 18 :24 -30 ஐ வாசி) இந்த உலகத்தின் சிந்தை, பேராசையேம் பொருளாசையும் 'கண்களின் இச்சையும்' முடுக்கிவிடுகிறது. (1 யோவான் 2 :16 ) இது பணக்காரராக வேண்டுமென்ற ஆசையே அநேகருடைய மனதில் வளரச் செய்திருக்கிறது. (1 தீ 6 :9 ,10 ) பொருள்களைக் வாங்கிக் குவித்தால் கவலையியே இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று நம்மை நம்ப வைக்க முயலுகிறது. (நீதிமொழிகள் 18 :11 ) ஆனால், நாம் கடவுள் மீது அன்பு காட்டுவதற்குப் பதிலாக பணத்தின் மீது அன்பு காட்டினால் சாத்தானுக்கு வெற்றிதான். ஆகவே, 'சொத்து சுகங்களையும் சுகபோகங்களையும் நாடுவதிலேயே நான் குறியாக இருக்கிறேனா? என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

 

பண விஷயத்தில் சமநிலையான கண்ணோட்டத்துடன் இருக்கும்படியும், நம் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கஷ்டப்பட்டு உழைக்கும் படியும் கடவுளுடைய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தை ஊக்குவிக்கிறது. ( 1 தீமோ 5 :8 ) கர்த்தருடைய பரிசுத்த ஆவி அவரைப் போலவே தாராள குணத்தைக் காட்ட நம்மைத் தூண்டுகிறது. அப்படிப்பட்ட குணத்தைக் காட்டும்போது நாம் பெற்றுக்கொள்பவராக அல்ல, ஆனால் கொடுப்பவர்களாக இருப்போம். நாம் பொருள்களை விட மக்களை உயர்வாக மதிக்கிறோம். முடிந்தபோதெல்லாம் நம்மிடம் உள்ளதை மற்றவர்களுடன் சந்தோஷமாய் பகிர்ந்துகொள்கிறோம். ( நீதி 3 :27 ,28 ) கடவுளுக்குச் சேவை செய்வதை விட்டுவிட்டு பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கவே மாட்டோம்.

என்னுடைய சுபாவத்தில் எது மேலோங்கி இருக்கிறது- கடவுளுடைய சக்தியா, உலகத்தின் சிந்தையா? (கொலேசெயர் 3 :8 -10 ; 13 வாசி) இந்த உலகத்தின் சிந்தை பாவ இயல்புக்குரிய செயல்களை ஊட்டி வளர்கிறது. (கலாத்திய 5 :19 -21 ) பிரச்சனைகள் தலைதூக்கும் போதுதான் நம்மிடம் கடவுளுடைய சக்தி இருக்கிறதா அல்லது இந்த உலகத்தின் சிந்தை இருக்கிறதா என்பது தெரிய வருகிறது; உதாரணமாக, கிறிஸ்தவ சகோதரனோ சகோதரியோ நம்மை அசட்டை செய்யும்போது, புண்படுத்தும்போது அல்லது நமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது அது தெரிய வருகிறது. அதோடு, வீட்டில் தனிமையில் இருக்கும்போது அது பளிச்சென தெரிய வருகிறது. இதற்குச் சுயபரிசோதனை செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும். ஆகவே, "கடந்த ஆறு மாதங்களில் என்னுடைய சுபாவம் கிறிஸ்துவின் சுபாவத்தைப் போல் பெருமளவு மாறி இருக்கிறதா  அல்லது என்னுடைய பேச்சும்  நடத்தையும் பழையபடி மோசமாகி விட்டதா? என்று உங்களையே கேட்டுக்கொள்கிறேன்.

"பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்க வழக்கங்களையும் களைத்துப் போட்டு .... புதிய சுபாவத்தை" அணிந்துகொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. அது அன்பையும் கருணையெஉம் அதிகமதிகமாக காட்ட நமக்கு உதவும். மற்றவர்கள் மீது நியாயமாகவே ஏதாவது மனக்குறை இருந்தால் கூட தாராளமாக மன்னிப்போம். நியாயமாகத் தோன்றும் காரியங்களைப் பார்க்கும்போது, "மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பலிப் பேச்சையும்'' வெளிப்படுத்தமாட்டோம். மாறாக, 'கரிசனை காட்ட' முயற்சி செய்வோம். எபேசியர் 4 :31 ,32



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
உலகத்தின் சிந்தையே அல்ல, கடவுளுடைய சக்தியேப் பெறுங்கள்!!
Permalink  
 


பைபளில் ஒழுக்க நெறிகளை நான் மதிக்கிறேனா ? அவற்றை நேசிகிறேனா?
(நீதிமொழிகள் 3 :5,6    ஐ வாசி)உலகத்தின் சிந்தை கடவுளுடைய வார்த்தைக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்த சிந்தை உள்ளவர்கள், தங்களுக்கு சரிப்பட்டு வராத பைபல் பகுதிகளை ஓரங்கட்டிவிட்டு, மனிதரின் பாரம்பரியங்களையும் தத்துவங்களையும் பின்பற்றுகிறார்கள். ( 2 தீ 4 : 3 ,4 )சிலர் மொத்தத்தில் பைபலையே மதிப்பதில்லை. இவர்கள் தங்களையே ஞானிகள் ஆகச் கருதிக்கொண்டு, பைபளின் பயனையும் நன்பகத்தன்மையும் சந்தேகிக்கிறார்கள். மணத்துணைக்குத் துரோகம் செய்வது, ஒரே பாலினத்தவரை மணப்பது, விவாகரத்து செய்வது சம்மந்தமான பைபல் நெறிகளின் வலிமையேக் குறைகிறார்கள். "தீமையே நன்மையென்றும், நன்மையேத் தீமை என்றும்'' கட்பிகிரார்கள்.( ஏசாயா 5 :20 )  இந்தச் சிந்தை நன்மையும் தொற்றி இருக்கிறதா? பிரச்சனைகளை எதிர்ப்படும்போது அவற்றைச் சமாளிக்க நாம் மனித ஞானத்தையும் நம்முடைய சொந்த கருத்துக்களையும் சார்ந்து இருக்கிறோமா? அல்லது பைபளின் அறிவுரையேப் பின்பற்ற முயற்சி செய்கிறோமா?
 
பைபல் மீது மதிப்பு மரியாதையே வளர்த்துக் கொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. சங்கீதக்காறனைப் போலவே நாமும் கடவுளுடைய வார்த்தையே நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாகக் கருதுகிறோம். (சங்கீதம் 119 :105 ) 
எது சரி, எது தவறு என்பதைச் தீர்மானிக்க நம்முடைய சொந்தஞானத்தின் மீது சார்ந்துஇராமல்௦, கடவுளுடைய வார்த்தையே முழுமையாகச் சார்ந்து இருக்கிறோம். பைப்லை மதிப்பதோடு கூட அதைத் நேசிக்கவும் நாம் கற்றுக்கொள்கிறோம். - சங்கீதம் 119 :97 
 
தொடரும் ...... 
 
(சபையில் உள்ள அணைத்து விசுவாசிகளுக்கும் இதை வாசிக்கும் அனைவருக்கும் மற்றும் அஞ்சல் அனுப்பிய அனைவர்க்கும் எனது நன்றிகள். அடுத்து இதேதிரியில் ''இயேசுவிடம் இருந்து கருக்கொள்ளுங்கள்'
என்ற உபதலைப்பில் அருமையான குறிப்புக்கள் கொடுக்கிறேன். வாசித்து பயன்படுங்கள். நன்றி )


-- Edited by Rajan26 on Sunday 22nd of May 2011 03:30:57 PM

__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
RE: உலகத்தின் சிந்தையே அல்ல, கடவுளுடைய சக்தியேப் பெறுங்கள்!!
Permalink  
 


"இயேசுகிறிஸ்துவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்''
 
கடவுளுடைய ஆவியேப் பெற நாம் 'கிறிஸ்துவின் சிந்தையே' வரர்துக்கொள்ள வேண்டும். (1  கொரி 2 :16 ) "கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையே'' பெற, அவர் கற்பித்த விதத்தையும் அவர் நடந்து கொண்ட விதத்தையும் தெரிந்துகொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். (ரோமர் 15 :5  /  பேதுரு 2 :21  ) அதற்கு உதவும் சில வழிகளை சிந்திப்போம்.
 
கடவுளுடைய ஆவிக்காக ஜெபம் செய்யுங்கள். சோதனைகளை சந்திக்கவிருந்த சமயத்தில் கடவுளுடைய உதவிக்காக (சக்தி)  இயேசு ஜெபம் செய்தார். ( லுக்கா 22 :40௦,41 )  நாமும் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்ய வேண்டும். விசுவாசத்தோடு கேட்கிற எல்லாருக்கும் கர்த்தர்  அதைத் தாராளமாகத் தருகிறார். (லுக்கா 11 :13 ) இயேசு இவ்வாறு சொன்னார்: ''கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்''. (மத்தேயு 7 :7 ,8 )
 
கர்த்தருடைய ஆவிக்காகவும் அவருடைய உதவிக்காகவும் ஒரு சில தடவை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாதிர்கள். நாம் அடிக்கடி ஜெபம் செய்யவேண்டும், நீண்ட நேரம் ஜெபிக்கவும் வேண்டும். சில சமயங்களில் தம்மிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு பதில் அளிப்பதற்கு முன்பாக அவர்கள் எவ்வளவு ஊக்கத்தோடு கேட்கிறார்கள், எந்தளவு விசுவாசத்தோடு கேட்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த கர்த்தர் அவர்களுக்கு வாய்ப்பளிப்பார். ( ஜெபம் தொடர்பான கூடுதல் பதிவுகளை வேறு திரியில் கொடுக்கிறேன்)

கர்த்தருக்கு முழுமையாக கீல்படியுங்கள். இயேசு தம்முடைய தகப்பனுக்குப் பிரியமானவற்றையே எப்போதும் செய்தார். ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு பிரச்சினையே எப்படிச் சமாளிப்பது என்பதில் இயேசுவின் கருத்து அவருடைய தகப்பனுடைய கருத்தில் இருந்து வேறுபட்டு இருந்தது.   என்றாலும் தம்முடைய தகப்பனிடம், "என் சித்தத்தின் படி அல்ல, உங்களுடைய சித்தத்தின் படியே நடக்கட்டும்'' என்று நம்பிக்கையுடன் சொன்னார். எனவே  'எனக்குக் கஷ்டமாக இருந்தால் கூட நான் கடவுளுக்குக் கீல்படிகிறேனா?' என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். வாழ்வைப் பெற நாம் கடவுளுக்குப் கில்படிவது மிக முக்கியம். அவர் நம் படைப்பாளர், நம் உயிரின் ஊற்று மூலர், நம்மை பராமறிப்பவர், எனவே, அவருக்கு முழுமையாய்க் கில்படிய நாம் கடமைப் பட்டிருக்கிறோம். (சங்கி 95 :6 ,7 ) கீழ்ப்படிதளுக்கு வேறேதும் இல்லை. கடவுளுடைய  பிரியத்தைச்  சம்பாதிக்க அது மிக முக்கியம். 

பைபலையே நன்கு அறிந்து இருங்கள். சாத்தான் நேரடியாக இயேசுவின் விசுவாசத்தை சோதித்தபோது, அவனை எதிர்க்க அவர் வேத வசனங்களை மேற்கோள் காட்டினார். (லுக்கா 4 :1 -13 )  தம்மை எதிர்த்த மதத் தலைவர்களிடம் அவர் கடவுளுடைய வார்த்தையே ஆதாரங் காட்டிப் பேசினார். (மத்தேயு 15 :3 -6 ) கடவுளுடைய சட்டத்தை அறிந்து அதை நிறை வேற்றுவதற்கே இயேசு வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்தார். (மத் 5 :17 ) நாமும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் கடவுளுடைய வார்த்தையால் நம் மனதை நிரப்ப வேண்டும். (பிலிப் 4 :8 ,9 ) தனிப்பட்ட படிப்புக்கும் குடும்பப் படிப்புக்கும் நேரம் கிடைப்பது சிலருக்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், நேரம் கிடைகிறதா என்று பார்க்காமல் அதற்க்காக நேரத்தை ஒதுக்குவது முக்கியம். (எபேசியர் 5 : 15 -17)

கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுவதற்க்கு, உலகத்தின் சிந்தையே நாம் எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் அது எளிதல்ல. அதற்காக கடினமாய் போராட வேண்டி இருக்கலாம். (யூதா 3  = 3. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
Beloved, when I gave all diligence to write unto you of the common salvation, it was needful for me to write unto you, and exhort you that ye should earnestly contend for the faith which was once delivered unto the saints.)  என்றாலும், வெற்றி நிச்சயம்!!   இயேசு தம்முடைய சீடர்களிடம், "இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனால் தைரியமாய் இருங்கள்!! நான் இந்த உலகத்தை ஜெயித்து விட்டேன்'' என்று சொன்னார்,. (யோவான் 16 :33 )  உலகத்தின் சிந்தையே எதிர்த்து நிற்பதோடு, கடவுளுடைய ஆவியேப் பெருவதற்க்கு தேவையான அனைத்தையும் செய்யும் போது நம்மாலும் உலகத்தை ஜெயிக்க முடியும். ஆம், "கடவுள் நம் பக்கம் இருக்கும் போது யாரால், நம்மை எதிர்க்க முடியும்?'' (ரோமர் 8 :31 )
கடவுளுடைய சக்தியேப் பெற்று; பைபல் தருகிற அதன் வழி நடத்துதலைப் பின்பற்றும் போது திருப்தியே, சமாதானத்தை, சந்தோசத்தை காண்போம்,; அதோடு, சீக்கிரத்தில் வரவிருக்கும் புதிய பூமியில் முடிவில்லா வாழ்வையும் பெறுவோம்.

நன்றி சகோதர்களே, வேறு ஒரு திரியில் சந்திக்கிறேன்.






__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
உலகத்தின் சிந்தையே அல்ல, கடவுளுடைய சக்தியேப் பெறுங்கள்!!
Permalink  
 


சகோதரர்  ராஜன் அவர்களே  எனக்கு மிகவும் பிடித்தமான தத்துவப்பாடலை தாங்கள் இங்கு இணைப்பு கொடுத்தமைக்கு  மிக்க நன்றி!
 
"நல்லவருக்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு"  என்ற பாடலில் வரும்   
 
"மனிதனம்மா மயங்குகிறேன், தவறுக்கு துணிந்த மனிதன் அழுததில்லையே"  
என்ற வரியும்
 
"ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை"
 
என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்.  
 
ஆனால், இதுபோன்ற பாடல்கள் எல்லாம் கிறிஸ்தவ உலகத்துக்கு அவ்வளவு பிடிக்காத ஓன்று. அவர்கள் இதுபோன்ற பாடல்கள் சொல்லும் கருத்தை எல்லாம் அறியவிருபாத அதிக பரிசுத்தர்கள்?!  இந்நிலையில் தாங்கள் இந்த பாடலை இங்கு தொடுப்பு கொடுத்தன் நோக்கத்தை ஓரிரு வரிகளில் சொல்லலாமே.    
 
தங்களின் சில கருத்துக்கள்  என்னுடைய மன நிலையோடு ஒத்துபோவதுபோல் நான் உணர்கிறேன். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!  


-- Edited by SUNDAR on Tuesday 24th of May 2011 10:44:50 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard