கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக சேவை செய்ய இயேசுவைத் தகுதி உள்ளவராக்கிய குணங்களில் சில யாவை?
இயேசு இறுதிவரை பரிபூரண உத்தமதைக் காட்டினார்!! நேர்மையும் நீதியும் உள்ளவராக நடந்துகொண்டார். கடவுளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். மக்கள் மீது ஆழ்ந்த அக்கறை காட்டினார். வேலை செய்ய மனமுள்ளவராக இருந்தார்.
பின்குறிப்பு:- இதை இன்னும் யாராவது நன்கு விவரமாக விளக்க கூடியவர்கள் விலக்கினாள் நன்றாக இருக்கும். வேற்று தளத்து நண்பர்கள் கூட இதை விளக்கலாமே.
-- Edited by Rajan26 on Wednesday 4th of May 2011 02:59:40 PM
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக சேவை செய்ய இயேசுவைத் தகுதி உள்ளவராக்கிய குணங்களில் சில யாவை?
தங்களின் இந்த தலைப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை சகோதரரே!
இயேசு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல அவரே கடவுள் என்று வேதம் சொல்கிறது.
ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா,வல்லமையுள்ள தேவன்,
எனவே தேவனின் தர்சொரூபமான அவர் செய்தவைகள் அல்லது அவரிடம் இருந்த குணநலன்கள் எல்லாமே நமக்கு ஒரு முன்மாதிரிதானேயன்றி அவரின் குண நலன்களில் தகுதியுள்ளது தகுதியில்லாதது என்று பிரித்து எடுக்க முடியாது என்றே கருதுகிறேன்.
ஆண்டவராகிய இயேசு பாலகனாக பிறந்ததில்இருந்து அவர் சிலுவையில் ஜீவனை கொடுத்த கடைசி நிமிடம்வரை அவரிடம் காணப்பட்ட ஒவ்வொரு குண நலன்களும் நமக்கு பாடமும் முன்மாதிரியுமாக இருக்கிறது. ஏனெனில் அவர் பிதாவாகிய தேவனின் சித்தத்தையே எப்பொழுதும் செய்தார் என்று வேதம் சொல்கிறது..
யோவான் 8:29என்னை அனுப்பினவர் என்னுடனேகூடஇருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)