இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடைசி காலங்களில் சாத்தானின் யுத்தம் யாரோடு?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கடைசி காலங்களில் சாத்தானின் யுத்தம் யாரோடு?
Permalink  
 


இந்த கடைசி  காலகட்டங்களில் எந்த ஒரு விசுவாசியோ அல்லது ஊளியக்காரர்களோ தங்களுக்கு எந்தஒரு துன்பம் அல்லது பிரச்சனை நோய் நொடிகள் வந்தாலும் "சாத்தானின் சோதனை அல்லது  சாத்தானின் தாக்குதல்" என்று சொல்லி சாத்தான்மேல் பழியை போட்டுவிட்டு தங்கள் நிலையிலேயே  தொடரவதை அறிய முடிகிறது.  
 
உத்தமனாகிய யோபுக்கு சாத்தானால் வந்த துன்பங்களை  அடிப்படையாக கொண்டு, தாங்கள் எல்லோருமே யோபுபோல உத்தம  நிலையில் இருப்பதாகவும், சாத்தான் தேவையற்ற துன்பங்களையும், அறுவை சிகிச்சை கேன்சர் வரையிலான நோய்  நொடிகளையும் தாங்கள் வாழிவில் கொண்டுவந்து தங்களோடு யுத்தம் பண்ணுவதாகவும்  கற்ப்பனை பண்ணி தங்களை தாங்களே சமாதானம் செய்துகொள்கின்றனர்.
 
இவ்வாறு இவர்கள் சாத்தான் மேலே பழியை போட்டுவிடுவதால் தங்களின் உண்மை நிலையை நிதானித்து பார்க்க தவறியவர்களாக  காணப்படுகின்றனர். 
 
ஆண்டவராகிய இயேசு ஒருவரே பிறருடைய மீறுதலுக்காக காயப்பட்டு அடிக்கப்பட்டவர். மற்றபடி மனுஷர்களாகிய  நமக்கு வரும் துன்பங்களுக்கும்
நோய்நொடிகளுக்கும் நமக்கு நன்மை வராதிருப்பதர்க்கும் நமது மீறுதலும் நமது பாவங்களுமே காரணமேயன்றி வேறொன்றும் அல்ல! 
 
எரேமியா 5:25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
 
நம்மிடம் தவறுஇல்லாமல் சாத்தனால் நம்மை எவ்விதத்திலும் தண்டிக்கமுடியாது என்பதை நாம் முதலில் அறியவேண்டும்.
 
இந்த கடைசி காலங்களில் சாத்தானின் யுத்தம் யாரோடு என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம் என்றே கருதுகிறேன்.
 
வெளி 12:17 அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று
 
ஸ்திரியின் வித்து அல்லது சந்ததி என்று வேதம் சொல்வது யாரெனில் கீழ்கண்ட இரண்டு தகுதிகளை உடையவர்கள் மட்டுமே!
 
1தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும்,
2. இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய.  
 
தேவனின் கற்பனையை கைகொண்டு இயேசுவை ஏற்க்காதவராக இருந்தாலும் சரி, இயேசுவை பற்றிய சாட்சியுடையவராக இருந்து தேவனின் கற்பனையை கைகொள்ளாதவர்களாக இருந்தாலும் சரி,  இவர்களுடன் சாத்தானுக்கு எந்த யுத்தமும் இல்லை. எனவேதான் இன்று இயேசுவைபற்றிய  சாட்சியை உடைய அனேக ஊழியக்காரர்கள் நல்ல சொகுசு வாழக்கை வாழ்கின்றனர்.    
 
நல்லதுதானே? நமக்கு சாத்தனோடு உத்தம் எதற்கு? என்று விட்டு விடுவோமாகில் யுத்தம் இல்லை என்றால் அங்கு ஜெயமும் இல்லை! 
 
வசனம் இவ்வாறு சொல்கிறது:
 
எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
 
பொல்லாதஆவிகள் அரிவாள் கம்போடும் AK47 துப்பாக்கியோடும் போராட வருவது இல்லை. அவைகளின் முக்கிய குறியெல்லாம் நம்மை தேவனின் வார்த்தைகளை விட்டு சற்றேனும் தடம்புரள வைக்கவேண்டும் என்பதே!  இயேசுவை சாத்தான் சோதித்த நிகழ்வுகளை மனதில் சிந்தியுங்கள்!  
 
தேவனின் கற்பனையையும் இயேசுவின் வார்த்தையையும் கைகொள்ளுவதன் முக்கியத்துவம் பற்றியும் நீதி நேர்மையின் மேன்மைபற்றியும் வேதம் முழுவதுமே தேவன் திரும்ப திரும்ப சொல்லி புலம்பி தீர்த்திருக்க, இன்று வந்த  அபூர்வ
விசுவாச கூட்டத்துக்கு "கற்பனையை கைகொள்" "நீதி நேர்மையாக  நட" என்று சொன்னாலே உள்ளுக்குள் பற்றிக் கொண்டுவருகிறது. 
 
தேவனின் வார்த்தையை கைகொள்வதன் முக்கியத்துவத்தை எத்தனையோ வழிகளில்  வசன ஆதாரங்களுடன்  எடுத்துசொல்லியும் எவ்வளவோ புரியவைத்தும் இவர்களுக்கு புரிந்துகொள்ள மனதில்லாமல் போய்விட்டது.  பாம்பாட்டிகள் எவ்வளவு விநோதமாக ஊதியானாலும் காதை அடைக்கும்  செவுட்டு விரியங்களுக்கு எப்படி கேட்க முடியும் என்று வசனமே சொல்கிறதே!
 
சங்கீதம் 58:5 பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.

ஆண்டவர் சொல்கிறார்:
 
யோவான் 14:23  ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்என்று!
 
ஆனால் அதிமேதாவிகள் சொல்கிறார்கள் "நாங்கள் எந்த கற்பனையையும் யாருடைய வார்த்தைகளையும் கைகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, ஆகினும் நாங்கள் இயேசுவின் மேல் அன்பாயிருக்கிறோம்" என்று!  
 
இப்படிபட்டவர்களை பார்த்துதான் இயேசு: 
 
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
என்று சொல்லியிருப்பாரோ?
 
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!
 
பிதாவின் சித்தம் என்னவேற்று வேதம் சொல்கிறது என்பதை வசனத்துடன் அறிந்து கொள்ள கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: கடைசி காலங்களில் சாத்தானின் யுத்தம் யாரோடு?
Permalink  
 


நமது நீதி எல்லாம்  அழுக்கான கந்தைகள்போல் இருக்கிறது என்று ஏசாயா சொல்கிறார். மனுஷனின் எந்த நற்கிரியைகளும் அவனை தேவனிடம் கொண்டு சேர்ப்பதில்லை என்பது  நிச்சயமான உண்மை.
 
தேவனுக்கேற்ற கிரியைகளே ஒரு மனிதனை தேவனிடம் கொண்டு சேர்க்கும் என்று அறிவோம். இயேசுவை நோக்கி சிலர் இவ்வாறு கேட்டனர்:    அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
யோ 6:28

யோவான் 6:29
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
 
தேவன்அனுப்பிய இயேசுவை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை என்று எழுதியிருக்கிறது. confuseconfuse      


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இறைநேசம் wrote:
 தேவன்அனுப்பிய இயேசுவை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை என்று எழுதியிருக்கிறது. confuseconfuse      

ஒரு மாணவன் கல்லூரியில் சேர விரும்பி ஒரு படித்தவரிடம் "நான் BCOM படிக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால். அவர் "நீ ஒரு நல்ல காலேஜாக பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்" என்று கூறினார் என்று வைத்துகொள்வோம். 

அவ்வாறு விண்ணப்பித்து விட்டால் BCOM  படித்து முடித்ததாக ஆகிவிடுமா? ஒரு டிகிரியை முடிக்க அதன் பின்னர் FEE கட்டவேண்டும், புத்தகம் வாங்கி படிக்க வேண்டும் இன்னும்எத்தனையோ செயல்பாடுகள் இருக்கிறதே. நான் அப்ளிகேசன் போட்டுவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு அடுத்து எதுவும் செய்யாமல் இருந்தால அவன் டிகிரி படிக்க முடியுமா?   

அதுபோலவே,  தேவனுக்கேற்ற கிரியைகளில் முதல் கிரியையாக "அவர் அனுப்பி இயேசுவை விசுவாசிப்பது" இருக்கிறது அத்தோடு ஆவிக்குரிய வாழ்வு முடிந்துபோவதில்லை! அந்த ஒரே வசனத்தை பிடித்துகொண்டிருந்தால் எல்லாம் முடிந்துவிடாது. அதன் தொடர்ச்சியாக பல வசனங்கள் வேதத்தில் இல்லாமல் இல்லை. அவர் அனுப்பியவரை விசுவாசித்தால், அவர் சொல்லியுள்ள வார்த்தைகளை கைகொண்டு நடக்க பிரயாசப்படுவது அவசியம்.        

I யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
 
என்று வேதம் திடமாக சொல்கிறதே!
 
வேதத்தில் இருந்தே இதற்க்கு ஒரு உதாரணம் சொல்வோமாகில் 
 
யோவான் 1:7 அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
 
என்ற வசனத்தை மட்டும் எடுத்துகொண்டு மன்ற வசனங்களை கண்டுகொள்ளாமல்
எப்படியும் நமது பாவத்தையும் சேர்த்து இயேசுவின் இரத்தம் சுத்திகரித்துவிடும் என்று தொடர்வது சரியா?
 
இயேசுவின் இரத்த்தம் பாவங்களை சுத்திகரிக்க வல்லது! என்றாலும் ஒருவர் அவரை விசுவாசிக்க வேண்டும், ஞானஸ்தானம் பெறவேண்டும், ஆவியும் அபிஷேகத்தை பெறவேண்டும் போன்ற அடுத்த காரியங்களை நமக்கு தெரிவிக்க வெவ்வேறு வசனங்கள் ஆண்டவரால் அருளப்பட்டுள்ளன அவைகளையும் நாம் பின்பற்றவேண்டும்.
 
அதபோல். "அவர் அனுப்பிய இயேசுவை விசுவாசிப்பதே" தேவனுக்கேற்ற முதல் முக்கியமான கிரியையாக உள்ளது. அந்த விசுவாசம் இல்லாமல் அடுத்த எந்தஒரு நிலைக்கும் முன்னேற முடியாது என்பதை குறிப்பிடவே அவ்வசனம் பயன்படுத்த  பட்டுள்ளது.  தொடந்து தேவனுக்கேற கிரியைகள் மற்றும் தேவனின் சித்தங்கள் என்னவென்பது வெவேறு வசனங்களில் நமக்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது அவை அனைத்தையும்  பின்பற்றுவதே ஒருமுழுமையான கிறிஸ்த்தவ வாழ்க்கை ஆகும். 
 
ஒரே ஒரு வசனத்தை பிடித்து தொங்கிகொண்டிருந்தால் 
 
வெளி 3: 1.  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
2. ; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
 
என்று சொல்லி ஜீவ புஸ்தகத்தில் இருந்து பெயர் கிறுக்கிபோடபடலாம்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard