ஆனால் தேவன் வார்தையை நான் கேட்காமல் அசட்டை செய்து விட்டேன்..........
சகோதரரே இந்த சம்பவம் எதை நமக்கு உணர்த்துகிறது என்று ஆராய்வோமானால் "என்னதான் தேவனின் வார்த்தைகள் தெளிவாக நமக்கு தெரிவிக்கப்பட்டாலும் நமக்கு ஒரு காரியம் நிகழவேண்டும் என்று தீர்மானிக்கபட்டிருந்தால் நாம் அந்த காரியத்தில் தானாக மாட்டி கொள்வது நிச்சயம்" என்பதை அறிய முடிகிறது.
இஸ்ரவேலரை நேபுகாத் நேச்சார் சிறைபிடிக்கும் முன்னர்
தேவன் எத்தனையோ தீர்க்கதரிசிகள் மூலம் திடமாக எச்சரித்தார். ஆனால் அவர்கள் கேட்கவா செய்தார்கள்? தேவனின் வார்த்தைக்கு கீழ்படியாமையினால் அவர்களுக்கு நிர்ணயித்திருந்த எல்லா துன்பமும் அப்படியே நடந்தேறியதல்லவா?
ஆகினும் உங்களின் இந்த சம்பவம் கீழ்படியாமையினால் வந்தது அல்ல என்றே நான் கருதுகிறேன். "நண்பனின் இக்கட்டில் அவனுக்கு எப்படியாகிலும் உதவி செய்யவேண்டும்" என்ற நல்ல எண்ணத்தால் நடந்தது எனவே ஆண்டவர் அதற்க்கான பலனை நிச்சயம் தருவார் என்றே நான் கருதுகிறேன்.