ஆம்! நமது தேவன் நம் கண்ணீரை காண்கிறவரும், நமது துக்கத்தில் நமக்கு
ஆறுதல் தருகிறவருமாக இருக்கிறார்.
தேவனது பாதத்தில் சிந்தப்படும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் அவரிடத்தில் கணக்கு உண்டு. அந்த கண்ணீரின் உவர்ப்பு தன்மையை மாற்றி அதை இனிப்பாக்கி தரும் நமது தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக!
அன்னாளின் கண்ணீரை கண்ட தேவன் அவளுக்கு சாமுவேலை கொடுத்து அங்கே ஆனந்தத்தை கட்டளையிட்டார். அதுபோல் பக்தனாகிய தாவீது "எனது கண்ணீரெல்லாம் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?" என்று பாடுகிறான்
நம் தேவனாகிய கர்த்தர் எல்லா முகங்களிலும் உள்ள கண்ணீரையும் துயரத்தையும் துடைத்து அதை முற்றிலும் நீக்கபோகும் நாள் வெகு தூரத்தில்
இல்லை!
ஏசாயா 25:8கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)