"கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது".(சங்கீதம் 103 : 19 ) அரசதிகாரதைப் பற்றிய அடிப்படை உண்மையே இவ்வார்த்தைகளின் மூலம் சங்கீதக்காரன் தெரிவித்தார். தேவன் படைப்பாளராக இருப்பதால் இந்தக் சர்வலோகத்தையும் ஆட்சி செய்ய அவருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.
குடிமக்கள் இருந்தால் தான் ஓர் அரசரால் ஆட்சி செலுத்த முடியும். ஆரம்பத்தில், கர்த்தர் தாம் படைத்த ஆவி சிருஷ்டிகளின் மீது ஆட்சி செலுத்தினார். முதலில் கோடிக்கணக்கான தேவதூதர்கள் மீதும் ஆட்சி செலுத்தினார். (கொலேசெயர் 1 : 15 -17 ) கர்த்தர் பரலோகத்தில் ஆட்சி புரியும் காட்சியே ஓரளவு காணும் வாய்ப்பு வெகுகாலத்துக்குப் பிறகு திர்க்கதரிசியாகிய தானியேலுக்கு கிடைத்தது. " நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. 10. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.'' என்று அவர் எழுதினார். (தானியேல் 7 :9 ,10௦)''நீண்ட ஆயுசு உள்ளவரான'' கர்த்தர், கோடிக்கணக்கான ஆவி குமாரர்களை உடைய தம் ஒழுங்கமைக்கப் பட்ட குடும்ம்பத்தையும் யுகா யுகங்களாக ஆண்டு வந்திருக்கிறார். இவர்கள் கர்த்தருடைய சித்தத்தைக் செய்யும் ''பணிவிடைக்காரராய்'' இருகிறார்கள். (சங்கீதம் 103 : 20 ,21 )
காலப்போக்கில், கர்த்தர் இந்த பரந்த, சிக்கலான பிரபஞ்சத்தையும், அதிலுள்ள பூமியும் படைத்தது தமது ஆட்சியின் எல்லையே விரிவுபடுத்தினார். ( யோபு 38 :4 ,7 ) வான்வெளியில் இருக்கும் நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை இவ்வளவு ஒழுங்காகவும் துல்லியமாகவும் இயங்குவதைப் பார்க்கும்போது, அவற்றை இயக்கவோ கட்டுப்படுத்தவோ யாருமே தேவை இல்லை என்று பூமியில் இருந்து பார்ப்போருக்கு தோன்றும். இருப்பினும், "5. அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. 6. அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்''. என்று சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 148 :5 ,6 )பரலோகத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையும் வழிநடத்தி, ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்துவதன் மூலம் கர்த்தர் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார். - நெகேமியா 9 :6
முதல் மனித ஜோடியேப் படைத்த பிறகு, கடவுள் மற்றொரு விதத்தில் ஆட்சி செலுத்தினார். அர்த்தமுள்ள, திருப்தியான வாழ்க்கை வாழ அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அளித்தார். அதோடு மற்ற உயிரினங்களை ஆண்டுகொள்ளும் படி கூறி, அவற்றின்மீது அதிகாரமும் அளித்தார். (ஆதியாகமம் 1 :26 -28 ; 2 :8 ,9 ) கடவுள் கனிவாகவும், பிறருக்கு நன்மையளிக்கும் விதத்திலும் ஆட்சி செய்கிறார் என்பது மட்டுமன்றி, தம் குடிமக்களை கனப்படுத்தி அவர்களை கண்ணியமாக நடத்துகிறார் என்பதும் இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. ஆதாமும் ஏவாளும் கர்த்தரின் ஆட்சிக்குக் கீல்ப்படிந்து இருந்தவரை, ஆசிர்வாதமான பூமியில் என்றென்றும் வாழ்வதற்கான எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. (ஆதியாகமம் 2 :15 -17 ) இவற்றை எல்லாம் கவனிக்கையில் நாம் என்ன முடிவுக்கு வரலாம்? முதலாவதாக, தம்முடைய எல்லா படைப்பின் மீதும் கர்த்தர் எப்போதும் ஆட்சி செலுத்தி வந்திருக்கிறார். அடுத்ததாக, தம் படைப்புக்களுக்கு நன்மையளிக்கும் விதத்திலும் அவர்களை கண்ணியப்படுத்தும் விதத்திலும் கடவுள் ஆளுகிறார். கடைசியாக, அவருடைய ஆட்சிக்குக் கீல்படிந்து, அதை ஆதரித்தால் நாம் முடிவில்லா காலத்திற்கும் ஆசிவாதன்களைப் பெறலாம். அதனால்தான், பண்டைய இஸ்ரவேலரை ஆண்ட தாவீது ராஜா பின்வருமாறு சொல்லத் தூண்டப்பட்டார். " கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்''. (I நாளாகமம் 29 : 11 ) தொடரும் ..
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/
சர்வலோகத்தின் உன்னத அரசரான கர்த்தரே எப்போதும் தம் அதிகாரத்தை செலுத்தி வந்திருகிறாரே, அப்படியிருக்க கடவுளுடைய ராஜ்ஜியம் ஏன் தேவைப்பட்டது? ஓர் ஆட்சியாளர் தம் குடி மக்கள் மீது அதிகாரம் செலுத்த பொதுவாக அரசு சார்ந்த ஓர் அமைப்பைக் கருவியாகப் பயன்படுத்துவார். ஆகவே, கடவுளுடைய ராஜ்ஜியம் என்பது படைப்புக்கள் மீது கடவுள் தம் உன்னத அரசதிகாரத்தை செலுத்துகிற ஓர் ஏற்பாடாக, அவர்களை புரிவதற்கான ஒரு கருவியாக இருக்கிறது.
கர்த்தர் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாக ஆட்சி புரிந்து இருக்கிறார். ஒரு புதிய சூழ்நிலை உருவானபோது, தம் அரசதிகாரத்தைக் செலுத்துவதற்க்கான ஒரு புதிய முறைக்கு அவர் வித்திட்டார். எப்படியெனில், கடவுளுடைய ஆவி குமாரர்களில் ஒருவனான சாத்தான், கலகக்காரனாகி, ஆதாமையும் ஏவாளையும் கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக செயல்பட வைத்தான். அந்தக் கலகம் கடவுளுடைய உன்னத அரசாதிகாரத்தை தாக்குவதாக அமைந்தது. எவ்விதத்தில்? கடவுள் சாப்பிடக் கூடாதென்று சொல்லி இருந்த அந்தப் பழத்தைச் சாபிட்டால் ஏவாள் " நீங்கள் சாகவே சாவதில்லை'' என்று சாத்தான் கூறினான். இப்படியாக, கர்த்தரை பொய்யர் என்றும், அதனால் அவரை நம்ப முடியாது என்றும் மறைமுகமாக கூறினான். அதுமட்டுமன்றி, "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது''. என்பதாகவும் கூட சாத்தான் கூறினான். ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய கட்டளைகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, தாங்கள் இஷ்டப்படி வாழ்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்று சாத்தான் இதன்மூலம் குறிப்பிட்டான். (ஆதியாகமம் 3 :1 -6 ) இது, கடவுளுக்கு ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறதா,
அவர் சரியாக ஆளுகிறாரா என்று நேரடியாக சவால்விடுவதுபோல் இருந்தது கர்த்தர் இதை எப்படித் தீர்ப்பார்? பதில் தொடரும் ....
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/