இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனே உம் சித்தம் சீக்கிரமாய் நிறைவேறுவதாக


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
தேவனே உம் சித்தம் சீக்கிரமாய் நிறைவேறுவதாக
Permalink  
 


இந்த பூமியிலேநடக்கின்ற கொடூரங்கள் கொலைகள் போன்றவற்றை பார்த்தால் 
 
தேவனுடைய வருகை மிக சமிபம்  என்று தெரியவருகின்றது 
 
3 வயது குழந்தையும் தாயும் ஒரு லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிர் போய் இருந்க்கின்றது
 
ஒரு முறை யோசித்து பாருங்கள் அந்த 3  வயது குழந்தை எப்படி துடித்து இருக்கும்
 
ஐயோ அந்த குழந்தை மேல் அவ்வளவு பெரிய லாரி
ஏறும் பொழுது என்ன ஒரு கொடுமை பாருங்கள் நம்மால் யோசிக்க கூட முடியவில்லை
 
இன்னும் எத்தனை கொடூரமான சம்பவங்கள் இந்த பூமியிலே நடக்கின்றது
 
 
இதே சம்பவம் நம் குழந்தைக்கு நடந்து இருந்தால் நாம் எப்படி துடித்து இருப்போம்
 
ஏதோ துரத்தில் நடக்கின்றது என்று அந்த நொடியில் கஷ்ட பட்டு பின்பு எப்பவும் போல் இருக்கின்றோம் என்னையும் சேர்த்து தான்
 
நண்பர்களே நான் சொல்ல வருவது என்னவென்றால் இவை எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கின்றது
அந்த முடிவு தேவனுடைய சித்ததில்தான் இருக்கின்றது
 
தேவன் அந்த சித்தத்தை ஒரு மனிதன் மூலம் தான் செய்து முடிக்க போகின்றார்
 
எனவே நாம் ஜெபிக்கும் பொழுது தேவனே உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும் என்று ஒவ்வொரு நாளும் சொல்லி ஜெபியுங்கள்
 
ஏனென்றால் தேவனுடைய சித்ததில்தான் சமாதானமும் மகிழ்ச்சியும் சந்தோசமும் பசி இல்லாத வாழ்வும்
நிம்மதியும் உண்டு
 
இந்த உலகத்தில் நாம் இருக்கும்  வரை
ஒரு பறவையை பிடிக்க வேடன் வலையை விரிப்பது போல
பிசாசானவன் ஒவ்வொரு வலையை விரித்து வைத்து இருக்கின்றான் மனிதர்களை நரகத்தில் தள்ளி கொடுமை படுத்த


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 25th of May 2011 05:09:36 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
 
3 வயது குழந்தையும் தாயும் ஒரு லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிர் போய் இருந்க்கின்றது
 
ஒரு முறை யோசித்து பாருங்கள் அந்த 3  வயது குழந்தை எப்படி துடித்து இருக்கும்
 
ஐயோ அந்த குழந்தை மேல் அவ்வளவு பெரிய லாரி
ஏறும் பொழுது என்ன ஒரு கொடுமை பாருங்கள் நம்மால் யோசிக்க கூட முடியவில்லை
 
இன்னும் எத்தனை கொடூரமான சம்பவங்கள் இந்த பூமியிலே நடக்கின்றது
 
இதே சம்பவம் நம் குழந்தைக்கு நடந்து இருந்தால் நாம் எப்படி துடித்து இருப்போம்
 
 

சகோதரர்  எட்வின் அவர்களே நம்மைப்போல ஒரு சிலர் மட்டும்தான் இதுபோன்று காரியங்களை யோசித்து  குழம்பிகொண்டு இருக்கிறோம். அநேகர் இதெல்லாம்தான் தேவனின்  சித்தம் என்றும், தேவனே சாத்தானை இதுபோலெல்லாம் செய்ய வைக்கிறார் என்றும் தீர்மானித்து எதைபற்றியும் கவலையின்றி இருக்கின்றனர்.

அனைத்துக்கும் அடிப்படை காரணகர்த்தாவாகிய  தேவனை பற்றியே சரியாக அறியாதவர்களுக்கு எதை எழுதி என்னபயன் என்று தெரியவில்லை. 

தேவனை "அனுபவபூர்வமாக" அறிவதற்கும் "அறிவுபூர்வமாக" அறிவதற்கு அனேக வேறுபாடுகள் உண்டு. 
 
சாலமோன் தேவனை அறிவுபூர்வமாக அறிந்தவன் ஆனால் தாவீதோ தேவனை அனுபவபூர்வமாக அறிந்தவன். இருவருமே ஒரு நிலையில் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள் ஆனால் தாவீது தேவனின் இருதயநிலையை அறிந்திருந்ததால், ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடி மீண்டும் தேவனுடன் நல்லுறவை வளர்த்துகொண்டான். ஆனால் சாலமொனோ கர்த்தர் பல முறை எச்சரித்தும் மதியீனமாக நடந்துகொண்டான். அறிவை வைத்து வேத வசனத்தை ஆராய்ந்து தேவனை அறிந்துகொண்டவர்கள் ஏறக்குறைய சாலமோனை போலவே  
 
பிரசங்கி 1:13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
 
என்று சொல்லி தேவன்மேல் பழியை போட்டு காரியத்தை முடித்துவிடுவார்கள்.
 
ஆனால் தேவனை அனுபவபூர்வமாக அறிந்த தாவீது போன்றவர்களோ:
 
சங்கீதம் 32:7 ; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)   என்றும்
 
சங்கீதம் 68:20 நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
 
என்று கெம்பீரமாக பாடமுடியும்!  தேவனின் இருதய நிலையை வெளிப்படுத்தும் அருமையான சங்கீதங்களை தாவீது போன்றவர்களாலேயே எழுதமுடியும்.


-- Edited by SUNDAR on Wednesday 25th of May 2011 10:04:38 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard