சாத்தான் ஓர் ஆவி ஆள் உண்மையில் இருக்கிறான் என நாம் எவ்வாறு அறியக்கூடும்?
சாத்தான் எங்கிருந்து வந்தான்?
சாத்தான் மனிதவர்க்கத்தை மோசம்போக்க இன்னும் எவ்வளவு காலம் அனுமதிக்கப்படுவான்?
கேள்விக்கான பதில் தொடரும்.....
சகோ. ராஜன் அவர்களே தாங்கள் இந்த திரியை தொடர்ந்து எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்திருக்கிறோம். சாத்தனை பற்றிய சரியான உண்மை தெரியாத காரணத்தினாலேயே அநேகர் அவனின் தந்திரங்களில் வீழ்ந்துபோய் விடுகின்றனர்.
முக்கியமாக,சாத்தான் எங்கிருந்து வந்தான்? என்ற கேள்விக்கு வேதத்தில் வேதத்தில் பதில் உள்ளது!
ஏசாயா 14:12அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
என்ற வசனத்தில் அடிப்படையில், தேவனால் தரையில் விழ வெட்டப்பட்ட தேவ தூதனே "சாத்தான்" எனப்படுபவன் என்பதை அறிய முடிகிறது.
ஆனால் மற்ற கேள்விகளுக்கு முக்கியமாக
///சாத்தான் மனிதவர்க்கத்தை மோசம்போக்க இன்னும் எவ்வளவு காலம் அனுமதிக்கப்படுவான்?///
என்ற தங்களின் கேள்விக்கு வசன அடிப்படையில் பதில் அறிய ஆவல்.
ஆதாம் ஏவாள் படைக்கப்படும் முன்னரே சாத்தான் அங்கு இருந்தானா? அல்லது அதன் பின்னர்தான் இறைவனால் தள்ளபட்டுபோனபிறகு எதேன் தோட்டத்துக்கு வந்து ஏவாளை தன் வலையில் வீழ்த்தினானா? என்பதற்குகூட தெளிவான வசன விளக்கம் இல்லை என்றே கருதுகிறேன்.
சர்ப்பத்தை பற்றி முதல் முதல் விவிலியம் இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது.
ஆதி 3:1தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.
.
என்று வசனம் சொல்கிறது. அந்த சர்ப்பத்தை கர்த்தர்தான் உண்டாக்கினாரா அதற்க்கு மேலான தந்திரத்தை அவர்தான் கொடுத்தாரா? அல்லது கர்த்தர் உண்டாக்கின ஜீவன்களை பார்க்கிலும் தந்திரமுள்ள சர்ப்பம் அங்கு ஏற்கெனவே இருந்ததா?" என்பது குறித்து விளங்க முடியவில்லை.
.
இறைவன் பூமியை ஆதியிலே சிருச்டித்தார் என்று வசனம் சொல்கிறது:
ஆதி: 1 31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது;
.
மேலேயுள்ள வசனத்தின் அடிப்படையில் இறைவனால் உண்டானது எல்லாமே நன்றாகவே இருந்ததாக அறிய முடிகிறது. எனவே நன்றாகயில்லாத தீமையை உருவாக்கும் பாவம் செய்யும் சாத்தானை இறைவன் உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
.
பிறகு சாத்தான் யார்? அவன் எவ்வாறு உண்டானான்? சாத்தானின் குணங்கள் எவ்வாறு உண்டாயின ?