இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனின் கோபம் - ஓர் விளக்கம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தேவனின் கோபம் - ஓர் விளக்கம்!
Permalink  
 


நமது தேவன் மிகுந்த அன்பும், இரக்கமும் கிருபையும், நீடியசாந்தமும் உள்ளவராக இருத்த போதிலும், அவர் பட்சிக்கும் அக்கினியாகவும் இருக்கிறார் என்று வேதம் நமக்கு போதிக்கிறது.
 
எபிரெயர் 12:29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
 
நாம் தேவன் பாவிகளின்மேல் கரிசனை உள்ளவரும், பாவிகளுக்காக  தன் குமாரனின் ஜீவனை கொடுக்க முன்வந்த்வருமாக இருக்கின்ற போதிலும் அவர் பாவிகளின் மேல் சினம் கொள்ளுகிரவராகவும் இருக்கிறார்.
 
சங்கீதம் 7:11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
 
வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய அதியாகமத்தில் ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது அவர்களை சபித்ததில் இருந்து கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவனின் கோப கலசங்கலாகிய வாதைகள் பூமியில் ஊற்றப்படும் வரை தேவனின் கோபமானது பல்வேறு காலகட்டங்களில் பவேறு ரூபங்களில்  வெளிப்பட்டிருப்பதை நாம் வேத புத்தகத்தின் மூலம் அறியமுடியும்.
 
தேவனின் கோபத்துக்கு முக்கிய காரணம் என்ன? சர்வ வல்லவராகிய அவர் ஒரு தவறு நடந்துவிட்டால் அதை தனது வல்லமையால்  உடனே சரிசெய்து தனது மிகுந்த இரக்கங்களிநிமித்தம் அனைத்தையும் மறந்து  மன்னித்து செயல்படாமல், இவ்வாறு பலவேளைகளில் கோபமும், சிலவேளைகளில் கடும்கோபம்கூ கொள்ள காரணம் என்னவென்பதை நாம் சற்று ஆராய்வது அவசியம்.
 
தேவனின் கோபம் குறித்த ஒரு தெளிவான கருத்து கிறிஸ்த்தவத்தில் இல்லாததால், அனேக குழப்பமான கருத்துக்கள் அங்கே குடிகொண்டுள்ளன. தேவனை தப்பு தப்பாக புரிந்து கொண்டு தனது கோபத்தை சாந்திபடுத்த தானே மனுஷனாக வந்ததாகவும் அல்லது தனது கோபத்தை தீர்க்க தனது குமாரனை தானே சிலுவையில் மரிக்க அனுப்பியதாகவும் அல்லது தனது கையாளாகிய  சாத்தானின் தூண்டுதலால் ஒருவன் தவறு செய்யும்போது தேவன் கடும் கோபம் கொள்வதாகவும் கருதும் அனேக தவறான கருத்துக்கள் கிறிஸ்த்தவர்களிடைய அமுலில் உள்ளது. 
 
தேவனை எவ்விதத்திலும் குற்றமற்றவராகமும், காரணமின்றி யாரையும் துன்ப படுத்தாதவறாகவும்,  மிகுந்த நீதி நியாயம் இரக்கம் உள்ளவராகவும், ஒவ்வொரு ஆத்துமாவுக்காகவும் பரிதபிக்கிரவராகவும், உலகில் நடக்கும்  கொடூரங்களை பார்த்து  மிகுந்த வேதனை கொள்கிறவராகவும் அறிந்துள்ள நான்,   மனிதனை தவறுசெய்யவைக்க  சாத்தானை தூண்டிவிட்டு பின்னர் நீ தவறு செய்யாதே என்று எழுதிகொண்டுத்து சோதிக்கும் ஒரு சோதனைகாரராக கருதாமல், தெரியாமல பாவத்தில் விழுந்துவிட்ட ஒரு பிள்ளையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று  ஏக்கத்தில் பரிதபிக்கும் ஒரு தகப்பனாக கருதி அவரது கோபத்துக்கான காரணத்தை சில வசனங்களின் அடிப்படையில் அறிய முற்படலாம்.....................


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மனுஷர்கள்மேல் தேவன் கோபம் கொளவதர்க்கும் விசனப்படுவதர்க்கும்  பல்வேறு காரணங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமாக மூன்று  காரியங்களை தேவன்  கோபம்கொள்வதற்கு அடிப்படையாக கொள்ளலாம். கர்த்தருக்கு  சித்தமானால்,  அவற்றைபற்றி ஒரு சிறு குறிப்பை பார்த்துவிட்டு 
தொடர்ந்து தேவன் இப்படிபட்ட காரியங்களுக்கு கடும்கோபம் கொள்ள காரணம் என்னவென்பதை  ஆராயலாம்!  
 
1. மனுஷனின் கீழ்படியாமை: 
 
ஏசாயா 46:12 முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச்செவிகொடுங்கள்.
என்று கூப்பிட்டு சொல்லும்   கர்த்தர்
லேவியராகமம் 26:21 நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி, தண்டிப்பேன் என்றும் எச்சரிக்கிறார்!
 
தேவனின் வார்த்தையுடன் மனம்பொருந்தி செவிகொடுத்தால் நன்மையும் எதிர்த்து நின்றால் பட்டயமும் உண்டு என்று கோபத்துடன் எச்சரிக்கும் வசனம்:
 
ஏசாயா 1:19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். 20. மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
 
என்று ஆங்காங்கே வேத புத்தகம் முழுவதும் தேவன் தனக்கு செவிகொடுத்து கீழ்ப்படியாதவர்கள் மேல் கோபமடைவதை அறிய முடிகிறது!
 
தேவனை அதிகமதிகமாப கோபபடுத்துவது மனுஷனின் கீழ்படியாமையே தங்கள் கீழ்படியாமையால் தேவனை கோபப்படுத்தி மாண்டுபோனவர்களும் தண்டனை பெற்றவர்களும்தான் வேத புத்தகததில் அதிகமாக உள்ளனர். அதில் சில முக்கியமானவர்கள்    
 
தேவமனுஷனாகிய மோசே:  தேவன் கன்மலையை பார்த்து பேச சொன்னபோது அதற்க்கு அப்படியே கீழ்படியாமல் இஸ்ரவேல் புத்திரர்களால் எரிச்சலூட்டப்பட்டு கன்மலையை கோலினால்  அடித்து அந்த மீருதலிநிமித்த்ம் கானானில் பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்துபோனவன்.
 
உபாகமம் 4:21 கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்.
 
ராஜாவாகிய சவுல்:  அமலேக்கியருடன் யுத்தம் செய்து அவர்களை மடங்கடித்து சுவாசம் உள்ள எல்லாவற்றையும் சங்காரம் செய்யும்படி தேவன் கட்டளையிட அதற்க்கு அப்படியே கீழ்படியாமல் "முதல் தரமான ஆடுமாடுகளை தப்பவிட்டு" அதனால் தண்டனைபெற்று மாண்டுபோனவன்.
 
ஆண்டவராகிய இயேசுவை தேடிவந்து "நித்திய ஜீவனை சுதந்தரிக்க என்ன செய்யவேண்டும்?' என்று கேட்ட வாலிபனிடம்   இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு மத்19:21  என்று சொல்ல அதற்க்கு கீழ்படிய விரும்பாத வாலிபன் ஜீவனை அடைய விருப்பம் இல்லாமல்  விலகிபோனான்.
 
இவ்வாறு கீழ்படியாமையினால் தேவனை கோபபடுத்தி தாங்கள் மேன்மையை இழந்துபோனவர்கள் போகிறவர்கள் இன்றும் அனேகம்பேர் உள்ளனர்.
 
தேவனால் சொல்லப்படும் எந்த ஒரு வார்த்தையும் விரயமானது அல்ல. அவர் வாயில்இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மனுஷனை பிழைக்கவைக்கும் என்று வேதம் சொல்கிறது. மேலும் தேவனே நான் விருதாவாக யாரையும் எதையும் செய்ய சொல்வதில் என்று என்று திட்டமாக சொல்கிறார்.
 
ஏசாயா 45:19 நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
 
எனவே தேவன் ஒரு காரியத்தில் எழுதிகொண்டுத்திருந்தால் அதற்க்கு கீழ்படிவதில் நிச்சயம் ஒரு மேன்மை இருக்கும் என்பதை அறியவேண்டும். அதிலுள்ள உண்மை ஒருவேளை நமக்கு மறைபொருளாக இருக்கலாம் ஆனால் அனாதியாய் என்றும் இருக்கும் தேவனுக்கே அதை பற்றிய உண்மை தெரியும். எனவே நமது கடமை  தேவ சத்தத்துக்கு அப்படியே  கீழ்படிதலே! அதன்மூலம்  தேவனின் கோபத்தில் இருந்தும் நாம் தப்பித்து கொள்ள முடியும் என்று வேதம் நமக்கு தெளிவாக சொல்கிறது.
 
வெளி 3:8. உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்,10 என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
 
எனவே அன்பானவர்கள்! தேவனின் வார்த்தைக்கு செவிகொடுத்து கீழ்படியுங்கள் உங்களின் கீழ்படியாமையால் தேவனுக்கு கொபமூட்டாதீர்கள் "கீழ்படியாமையால் இழந்துபோன அனைத்தையும்  கீழ்படிதல் மூலமே மீட்கமுடியும்"  என்ற உண்மையை அறிந்து செயல்படுங்கள்
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நல்ல பதிவு அண்ணா

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard