இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தலர்கள், நோயுற்ற ஒரு பையனை.....


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
அப்போஸ்தலர்கள், நோயுற்ற ஒரு பையனை.....
Permalink  
 


மத்தேயு 17 :20௦- இன் படி,அப்போஸ்தலர்கள், நோயுற்ற ஒரு பையனை, ''தங்கள் அவிசுவாசத்தினாலே தான்" சுகப்படுத்த முடியவில்லை. எனினும், மாற்கு 9 :29 - ல் அவர்களால் முடியாமற்போனது ஜெபத்திக்கான தேவையோடு இணைக்கப்பட்டிருகிறது. வெவ்வேறு சுவிசேஷ விவரங்களில், ஏன்  வெவ்வேறு காரணங்கள் கொடுக்கப்பட்டிருகின்றன?
 
கேள்விக்கான பதில் தொடரும் ....





__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

உண்மையில், இந்த விவரப்பதிவுகள் இரண்டிலும், ஒன்றில் விடுபட்ட விஷயம் மற்றொன்டால் பூர்த்தி செய்யப் 
படுகிறதே தவிர, ஒன்றுக்கொன்று முரண்படுவதாக இல்லை. முதலாவதாக, மத்தேயு 17 :14  -20 ஐப் பாருங்கள். ஒருவன், தன மகன் சந்திரரோகி என்றும் இயேசுவின் சிஷசர்களால் கூட அந்த இலஞ்சர்களைக் சுகப்படுத்த முடியவில்லை என்றும் அறிவித்தான். பின்பு இயேசு, அந்த இலஞ்சனை அலைக்கழித்துக் கொண்டிருந்த ஒரு பிசாசை துரத்துவதன் மூலம் அவளைக் சுகப்படுத்தினார். அந்தப் பிசாசை, தங்களால் மட்டும் ஏன் துரத்த முடியவில்லை என்று சீசர்கள் கேட்டார்கள். மத்தேயுவினுடைய    விவரத்தின் பிரகாரம், இயேசு இவ்வாறு பதிலளித்தார்: "உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்".
இப்போது மாற்கு 9 :14 -29  - க்குத் திரும்புங்கள். அங்கே மேலுமான நுட்பவிவரங்களை காண்கிறோம். உதாரணமாக இந்த சந்தர்ப்பத்தில் வலிப்பு நோய் வகையான அந்தத் தாக்குதல்கள் ஒரு பொல்லாத ஆவியால் உண்டுபண்ணப்பட்டன என்ற நுட்பவிவரத்தை மாற்கு 9:17 அளிக்கிறது. பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் இயேசு சொஸ்தமாக்கினார்  என்று பைபல் வேறு இடத்தியில் சொல்வது கவனிக்கத் தக்கது.  (மத்தேயு 4 :24 ) இந்த ஒரேவொரு சந்தர்ப்பத்தில்   'ஊமையும் செவிடுமான ஆவியால்' அதாவது ஒரு பொல்லாத ஆவியால் அந்த வலிப்புகள் ஏற்படும்படி செய்யப்பட்டன; இதை வைத்தியராகிய லுக்கா உறுதிப்படுத்துகிறார்´:. ( லுக்கா 9 :39   கொலேசெயர் 4 :14 )  "அது அவனை எங்கே பிடித்தாலும்" என்ற சொற்தொடரை மாற்கு 9 : 18 - ல் கவனியுங்கள்.  ஆகையால் அந்தப் பிசாசு அந்த இளைஞ்சனை தொடர்ந்து தாக்கிக்கொண்டில்லை, எப்போதாவதே தாக்கினது. இருப்பினும், சீசர்கள் அந்தப் பிசாசை துரத்தி அவ்வாறு அந்தப் பையனை சுகப்படுத்த முடியவில்லை. ஏன் முடியவில்லை என்று அவர்கள் கேட்டபோது, இயேசு பதிலளித்தது: 'இவ்வகை பிசாசு ஜெபத்தினால் அன்றி  மற்றேவே விதத்தினாலும் புறப்பட்டு போகாது என்றார்''. 
 
எனினும்,  மாற்குவின் விவரத்தைக் கவனமாக வாசிப்பது, மத்தேயு பதிவு செய்த விவரத்தோடு அது 
முரன்படுகிறதில்லை என்று காட்டுகிறது. அந்தச் சந்ததியின் விசுவாசம் இன்மையேக் குறித்து இயேசு வருந்தினார் என்று மாற்கு 9 :19  - ல் நாம் வாசிக்கிறோம். மேலும் 23 -.ம் வசனத்தில், அந்த இலஞ்சர்களின் தகப்பனிடம் அவர்: "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" என்று சொன்னதாகப் பதிவுசெய்யப்பட்டிருகிறது. ஆகையால் மாற்குவும் கூட விசுவாசத்தின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறார். 29 -வது வசனத்தில் மாத்திரமே கூடுதலான ஒரு நுட்ப விவரத்தை மாற்கு அளிக்கிறார். ஜெபத்தைப் பற்றி இயேசு சொன்னதை மாற்கு சேர்த்து இருக்கிறார்,  இதை மத்தேயுவுவோ லூக்காவோ சேர்க்கவில்லை.
 
அப்படியானால், நாம் என்ன சொல்லலாம்? மற்ற சந்தர்ப்பங்களில், 12  அப்போஸ்தலர்களும் 70௦ சீசர்கலும் பொல்லாத ஆவிகளைத் துரத்தி இருந்தார்கள். ( மாற்கு 3 :15 , 6 :13 , லுக்கா 10௦:17 )  ஆனால் இந்தச் சந்தர்ப்பங்களில், சீசர்கள் அந்தப் பிசாசைத் துரத்த முடியவில்லை. ஏன்?  பல்வேறு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நுட்ப விவரங்களை நாம் ஒன்று சேர்த்தால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறு செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை என்ற முடிவுக்கே நாம் வரவேண்டும். இந்த வகைப் பிசாசின் காரணமாக ஒருவேளை அவ்வாறு இருந்திருக்கலாம்; ஏனெனில் பிசாசுகளுக்கு வெவேவேறுபட்ட ஆளுமைகளும்,  அக்கறைகளும், திறமைகளும் கூட இருக்கலாம் மெனத் தோன்றுகிறது. இந்த வகையேக் குறித்ததில், முக்கியமாய் உறுதியான விசுவாசமும்,  கடவுளுடைய உதவிக்காக ஊக்கமான ஜெபமும் தேவைப் பட்டன. நிட்சயமாகவே இயேசுவுக்கு அத்தகைய விசுவாசம் இருந்தது. மேலும், ஜெபத்தைக் கேட்கிறவராகிய தம்முடைய பிதாவின் ஆதரவும் அவருக்கு இருந்தது. (சங்கீதம் 65:2) அந்தப் பிசாசைத் துரத்தி, அதனால் பீடிக்கப் பட்ட இலஞ்சனை இயேசு சுகப்படுத்தக் கூடியவராக இருந்தது மட்டும்மல்லாமல், அவ்வாறு அதைச் செய்தும் முடித்தார்.  நன்றி




-- Edited by Rajan26 on Friday 27th of May 2011 05:52:56 AM

__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard