இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிரஜாபதி மனுஷர்கள் கையில் ஒப்புகொடுக்கபட்டாரா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
பிரஜாபதி மனுஷர்கள் கையில் ஒப்புகொடுக்கபட்டாரா?
Permalink  
 


சமீபத்தில் ஒரு ஆட்டோவின் பின்னால் "பிரஜாபதி" என்ற
பெயரில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தேன்.  அந்த போஸ்டரில் உடம்பு முழுவதும் வாரினால் அடிக்கப்பட்ட வரி வரியான காயங்களுடன் நமது  ரட்சகர் இயேசு சிலுவையில  தொங்கிக்கொண்டு இருந்தார். அக்காட்சியை 
பார்க்கும்போது மனதிலே மிகுந்த வேதனையும் துக்கமும் 
உண்டானாலும்   அச்சயம்  எனக்குள் எழுந்த சில கேள்விகளை இங்கு பதிவிடுகிறேன்! 
 
1. பிரஜாபதி என்றும் "வல்லமையுள்ள தேவன்" என்றும் சொல்லப்படும்  இயேசு அலங்கோலமாக சிலுவையில் அறையப்பட்டு தொங்குவதற்கு சரியான காரணம் என்ன?
ஏன்? எதற்கு? யாருக்காக? அவர் சிலுவையில் பாடுகளை தாங்கினார்?
 
2. தேவனிடம் அனைத்து வல்லமையும் இருந்தால், இந்த அகங்கார மனிதர்களிடம் ஒப்புகொடுக்கபட்டு  வாரினால் அடியும், சிலுவையில் ஆணியும் கடவப்படாமல்
பாவியாகிபோன மனிதர்களை மீட்க முடியாதா?
 
3. தேவ  குமாரனாகிய இயேசு இவ்வளவு பாடுகளை அனுபவித்து சிலுவையில் தொங்கியும் இந்த உலகத்தில் எந்த ஒரு தீமையும்  இன்றுவரை குறைந்தபாடில்லையே ஏன்?
 
4. இயேசுவை அவ்வளவு பாடுகளுக்குள்ளாக்கி சித்திரவதை செய்து கொன்றது தேவனா?  சாத்தானா? அல்லது மனுஷனா?       
 
5. இவ்வுலகில் நடக்கும்  அனைத்து செயல்கும்  தேவனுடைய 
சித்தப்படி விருப்பத்துடன்தான்  நடக்கிறது என்றும் எடுத்து கொண்டால் இயேசுவை அவ்வாறு சிலுவையில் அடிபட
ஒப்புகொடுத்ததற்கு முழு காரணம் தேவனா?   
 
என்னடா இவன், தொடக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் கேட்கிறான் என்று கருதவேண்டாம். எனக்கு பலர் சொல்லும் விளக்கங்களை ஏற்க்க முடியவில்லை அதனாலேயே சரியான விளக்கத்தை எதிர்பார்த்து இக்கேள்விகளை முன் வைக்கிறேன்.   
 


-- Edited by இறைநேசம் on Saturday 28th of May 2011 02:49:20 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

எங்கள் ஊர் எல்லையில் இந்து கோவிலில் ஒரு ஆண் சாமியின்  சிலை உண்டு. அந்த சிலையானது ஒரு கையில்  பெரிய வீச்சரிவாளை தூக்கி பிடித்துகொண்டு இன்னொரு கையில் பெரிய கஜாயுதம் ஒன்றை வைத்துகொண்டு கண்களை உருட்டியபடி  பெரிய மீசையோடு காட்சியளிப்பதை பார்த்தாலே பயம் அளிப்பதாக இருக்கும்.
   
அதேபோல் பல இந்து சாமிகள், சிங்கம் மீதும், புலியின் மீதும் அமர்ந்து கொண்டிருப்பதோடு கையில் டஜன் கணக்கில் ஆயுதங்களை பிடித்துகொண்டு அமர்ந்திருப்பதை பார்த்திருக்க முடியும்.
 
எரேமியா 10:11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
 
வானத்தையும் பூமியையும் படைக்காத அழிந்துபோகக்கூடிய அந்த சாமிகள் எல்லாம்  கம்பீரமாக  நிற்கும்போது.......  
 
வானத்தையும் பூமியையும் படைத்த நமது ரட்ச்சகரோ  அவர்கள் நிலைமைக்கு தான் உண்டாக்கிய மனுஷர்கள் கையாலே கொடிய பாடுகளுக்குள்ளாகி தலையில் முள் முடியுடன் கோர  சிலுவையில் தொங்கியபடி அலங்கோலமாக  காட்சியளிக்கிறார்.   
 
 
முற்றிலும் நேர் எதிரான ஒரு நிலை.  என்ன ஆச்சர்யம்.
 
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: பிரஜாபதி மனுஷர்கள் கையில் ஒப்புகொடுக்கபட்டாரா?
Permalink  
 


Nesan wrote:
 
வானத்தையும் பூமியையும் படைக்காத அழிந்துபோகக்கூடிய அந்த சாமிகள் எல்லாம்  கம்பீரமாக  நிற்கும்போது.......  
 
வானத்தையும் பூமியையும் படைத்த நமது ரட்ச்சகரோ  அவர்கள் நிலைமைக்கு தான் உண்டாக்கிய மனுஷர்கள் கையாலே கொடிய பாடுகளுக்குள்ளாகி தலையில் முள் முடியுடன் கோர  சிலுவையில் தொங்கியபடி அலங்கோலமாக  காட்சியளிக்கிறார்.   
 
 
முற்றிலும் நேர் எதிரான ஒரு நிலை.  என்ன ஆச்சர்யம்.
 
 

கீழ்படிதல் /தாழ்மை/ விட்டுகொடுத்தல்/அறிப்பணித்தல்/ தன்னையே இழக்க துணிதல்  இவைகளின் மூலம் மட்டுமே ஒருவர் தனது ஆவிக்குரிய  எதிரியாகிய சாத்தனை ஜெயிக்க முடியும். அதையே ஆண்டவராகிய இயேசு செய்தார்.

அதற்க்கு சரியான காரணம் அறியவேண்டும் என்றால் "பலி" ஏன் உண்டானது  என்பது குறித்து அறிவது அவசியம். பலியிடப்படும் எந்த உயிரும்  பலியிடுகிரவனை எதிர்த்து ஜெயிக்க கூடாது . அவ்வாறு ஜெயித்தால் அங்கு பலியில்லாமல் போய்விடும் நாமும் நம்மை ஜீவபலியாக ஒப்புகொடுக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது         

ரோமர் 12:1 , சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்;

மற்றபடி தன்னுடய அதிகாரத்தையோ பண பலத்தை வைத்தோ அரிவாளை காட்டியோ  சாதித்தலும், ஜெயித்தலும் இந்த மாம்சத்துக்குரிய உலகத்தில் வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் மறுமை வாழ்வுக்கு அது பயன்படாது.      

இழந்தவனே பெற்றுக்கொள்வான் என்ற இந்த கருத்தை நம் ஆண்டவர் பல இடங்களில்  பதிவிட்டுள்ளார்:

மத்தேயு 10:39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.

மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

 லூக்கா 17:33 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

அய்யா உங்கள் விளக்கஙகளில் நான் எதிர்பார்க்கும் கேள்விக்கான பதில் இல்லயே.

 

தேவன் மிகபெரியவரும் எல்லாம் செய்ய முடிந்தவருமாக இருக்கிரார்.

 

அவர் எதர்க்காக இந்த பாவியான மனுஷர்கலிடம் வந்து அடி வாஙக வேண்டும் என்பதர்க்கு சரியான விளக்கம் இல்லை.

 

விளக்கம் கிடைக்குமா



__________________


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
பிரஜாபதி மனுஷர்கள் கையில் ஒப்புகொடுக்கபட்டாரா?
Permalink  
 


அன்பு சகோதிரரே,
                                  தேவன் நீதிக்கு உட்பட்டவராய் இருக்கிறார்.எனவே சாத்தான் கொள்ளையிட்டு சென்ற மனிதனை மீட்க அவர் நீதியோடே செயல்பட்டு ஆகவேண்டும் .  மனிதன் சாத்தானுக்கு கிழ்படிந்து பாவம் செய்தான். அதனால் அவனுடைய பாவம் மன்னிக்கப்பட ஒரு மனிதன், தேவனுக்கு கிழ்படிந்து ஆகவேண்டும்.பாவம் மனிக்கபட இரத்தம் சிந்தி ஆகவேண்டும். அதனால்தான் தேவ குமாரன், மனுஷ குமாரனாக மாறி இப்புமிக்கு வந்து அடிமையின் ரூபம் எடுத்து பாவ நிவாரண பலியாக பாடுகள்
அனுபவித்து மரித்தார்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் கூட, ஒரு பாவம் செய்தால் அதற்க்கு பாவ நிவாரண பலி தேவைபடுகிறது. இதற்க்கு ஆதாரமாக கீழ்கண்ட வசனத்தை பார்ப்போம்....

எண்ணாகமம் 15:25 அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

மனிதன் நரகம் சென்று சாத்தானிடம் சிக்கிவிட கூடாது,
என்பதற்காக  மனிதனின் முழு பாவத்தையும் , அவரே
சுமந்தார்.

இதை சமந்தபடுத்தி ஒரு கதையை சொல்வார்கள்,
அது என்னவென்றால்.......

        "ஒரு வாலிபன் கடன் பிரச்சனையின்  விரக்தியால் தற்கொலை செய்து கொள்ள முயன்றான். அவ்வழியாக வந்த ஒருவர் அதனை கண்டு , மனதுருகி அவனுக்கு ஆறுதல் கூறி,அவனுக்கு பணம் கொடுத்து , அவன் கடனை அடைக்க உதவி செய்தார். அதே வாலிபன், சில நாளைக்கு பின்பு ஒரு தவறு  செய்து சட்டத்தின் கையில் அகப்பட்டு கொண்டான். அவ்வழக்கில் நிதிபதியாக இருந்தவர், இதற்க்கு முன் அவனை காப்பாற்றியவர்..... இப்போதும் அவனை காப்பாற்றுவார் என்று எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் நீதிபதியின் ஸ்தானத்தில் இருந்த அவர் அவனுக்கு தண்டனையாக மூன்று மாதமும், பின்பு மூன்று இலட்சமும் கட்ட வேண்டும் என்றும் தீர்பளித்தார்.

 

அந்த வாளிபனுக்கு  அதிர்ச்சி...!!!!!!.
முன்பு என்னை காபற்றியவர் இபோழுது ஏன் என்னை காப்பாற்ற வில்லை என்று..????

அதற்கான கேள்வியையும் அவரிடம் கேட்டான்...

அதற்க்கு அவர் அன்று நான் ஒரு சாதாரண மனிதனாகவும், உனது நண்பனாகவும் உன்னக்கு உதவி செய்தேன் ....


இன்றோ நான் ஒரு நியாதிபதி ....
எனவேதான் இப்படி தீர்பளித்தேன்  என்றார்..

பின்பு அவர் நீதிபதி ஸ்தானத்தை விட்டு இறங்கி வந்து
அவன்(அவனால் செலுத்த முடியாத) செலுத்த வேண்டிய பணத்தை அவரே செலுத்தினார் ...

அவன் அனுபவிக்க கூடிய (அவனால் முடிந்த),தண்டணையை அவன் அனுபவித்து வீடு திரும்பினான்...


இப்படித்தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம்
அனுபவிக்க முடியாத , நித்தியாகினையை  அவரே ஏற்று
நமக்கு சகாயம் செய்தார்.

ஆனால் நம்மால் அனுபவிக்க கூடிய
உலக பாடுகளை ,(பெண்களுக்கு பிரசவவலி ,

ஆண்களுக்கு வியர்வை பிரயாசம்)

நாமே அனுபவிக்க விட்டுவிட்டார்..

திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம் ...


ஆகவே பிரஜாபதியாகிய இயேசு கிறிஸ்து ,
மனிதர்கள் கையில் ஒப்புகொடுக்கபட்டது  உண்மையே....



-- Edited by Sugumar S T on Sunday 16th of September 2012 10:15:56 PM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard