ஆதியாகமம் 2:17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
என்று ஆதியாகமத்தில் சொல்லப்பட்ட வசனத்தை பொறுத்தவரை அதை மாம்ச மரணத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால் "தேவன் சொன்னது அங்கு அப்படியே நிறைவேறவில்லை. கனியை புசித்த நாளில் ஆதாமும் ஏவாளும் அங்கு சாகவில்லை. அதனால் சாத்தான் சொன்ன: "அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை"(ஆதி 3:4) என்ற வார்த்தைதான் உண்மைபோல தோன்றுகிறது.
இதன் அடிபடையில் பார்த்தால், தேவன் பொய் சொன்னதுபோலவும் சாத்தான்தான் உண்மையை சொன்னதுபோலவும் தெரிகிறது. ஆனால் வேதமோ தேவனை பற்றி "அவர் பொய் சொல்ல மனுபுத்திரர் அல்ல" என்றும் சாத்தானை குறித்து "பொய்யனும் பொய்க்கு பிதாவானவன்" என்றும் சொல்கிறது! எனவே தேவன் சொன்னது பொய்யாக இருக்கவோ அல்லது சாத்தான் சொன்னதில் உண்மை இருக்கவோ வாய்ப்பில்லை.
இந்த கருத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் இருவருமே குறிப்பிட்ட அந்த "சாவின்" உள்ளருத்தம் இந்த "மாம்ச மரணம்" அல்ல என்பதையும் அது "நித்திய மரணம்" அல்லது "இரண்டாம் மரணம்" என்று வேதம் சொல்லும் நித்திய ஆக்கினையாகிய ஆத்தும மரணத்தை பற்றியதே என்பதை அறியமுடியும்!
மனுஷனின் பாவத்துக்கு ஆடுமாடை பலிகொடுத்து விடுவித்த ஒரு தற்காலிக நிகழ்வை போன்று, இடையில் தேவன் ஏற்ப்படுத்திய ஒரு தற்காலிக சாதாரண நிகழ்வே இந்த "மாம்ச மரணம்" என்பது. தேவனின் வார்த்தை எவ்விதத்திலும் பொய்போல் தோன்றகூடாது என்பதற்காகவே, தேவனுக்கு ஒரு நாளாகிய "ஆயிரம் வருடத்துக்குள்" ஆதாம் மாம்சத்தில் மரிக்க நேர்ந்தது
ஆனால் தேவன் சொன்னதுபோலவே ஆதாம் அந்த விலக்கபட்ட கனியை புசித்த நாளிலிருந்தே அவர் குறிப்பிட்டு எச்சரித்த அந்த நித்திய மரணத்துக்குட்பட்டு அதை நோக்கியே நடந்தான். இடையில் நடந்தது/நடப்பது எல்லாமே அவனை எப்படியாவது மீடுவிடவேண்டும் என்ற ஆதங்கத்தில், தேவனால் நிறைவேற்றப்பட்டு வரும் மீட்பின் திட்டங்களே!
உதாரணமாக:
ஒருவர் தன் மகனிடம் "நீ இந்த விஷத்தை சாப்பிடும் நாளிலே சாகவே சாவாய்" என்று சொல்கிறார். ஆகினும் அம்மகன் அவர் வார்த்தையை கேட்காமல் விஷத்தை சாப்பிட்டுவிடான் என்று வைத்துகொள்வோம். உடனே அத்தகப்பன் அவனை அப்படியே விட்டு விடுவதில்லை! நிச்சயம் அவனை காப்பாற்றவே முயற்ச்சிப்பார். ஒருவேளை காப்பாற்றிவிட்டார் என்று வைத்துகொண்டால்
இங்கு முதலில் அவர் சொன்ன "நீ விஷத்தை சாப்பிடும் நாளில் செத்துவிடுவாய்" என்ற வார்த்தையும் பொய்யல்ல! (அவ்வார்த்தை அந்த விஷத்தின் தன்மையை குறிப்பதாகும் நம்மை எச்சரிப்பதாகவுமே உள்ளது.) அதே நேரத்தில் அவனை சாகாமல் நாம் காப்பாற்றி விட்டதும் பொய்யல்ல. அது அவரது உடனடி அறிவு பூர்வமான நடவடிக்கையால் நடந்தது.
அதுபோல் தேவன் அந்த விலக்கபட்ட கனியின் தன்மையை குறித்து சொல்லும் போது "இந்த கனியை சாப்பிடும் நாளில் அது உனக்கு நித்திய மரணத்தை கொண்டுவரும்" என்று சொன்னார். அவ்வார்த்தையின் அடிபடையில் அக்கனியை சாப்பிட்ட நாளில் இருந்தே அக்கனி நம்மை நித்திய மரணத்தை நோக்கி நடத்துகிறது. இடையில் சர்வவல்ல தேவன் விரைந்து செயல்பட்டு "மிருக பலி" என்னும் முதலுதவி, மற்றும் "இயேசுவின் பலி" என்ற நித்திய மீட்பின் திட்டங்கள் மூலம் மாம்ச மரணம் என்றொரு தற்காலிக மானத்துக்கு ஒப்புகொடுத்து, இரண்டாம் மரணம் என்னும் நித்திய மரணத்தில் இருந்து மனுஷர்களை தப்புவிக்க பிரயாசம் எடுக்கிறார்.
இந்த பிரயாசத்தின் இறுதியில் ஒருவன் நித்திய மரணத்தை அடைந்தாலோ அல்லது
அநேகர் அம்மரணத்தில் இருந்து மீட்கப்பட்டாலோ தேவனின் எந்த வார்த்தையும்
பொய்யாகாது.
அனால் இங்கு சாத்தானோ "நித்திய மரணம் என்று ஒன்றும் இல்லை" என்று ஒரு பொய்யை போதிக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டுகிறேன்.
"மாம்ச மரணம்" என்பது ஒன்றுமில்லை! மனுஷன் ஒரே நொடியில்கூட இறந்து விடலாம். அதனால் "என்றென்றும் மீட்கவேமுடியாத நித்திய மரணத்தை" பற்றியே தேவன் கவலை கொள்கிறார். எனவேதான் இயேசு, இந்த சாதாரண மாம்ச மரணத்தை பற்றி பயப்பட வேண்டாம் ஆத்துமாவை கொல்ல வல்லவருகே பயப்படுங்கள் என்று போதித்தார்.
மத்தேயு 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
ஆனால் சாத்தானோ தேவன் சொல்லும் அந்த "ஆத்தும மரணத்தை" மறைத்து அப்படி நடக்காது என்று பொய் சொல்லுகிறான். அப்படி ஒன்றுமே இல்லை என்பது போல காட்டி ஏமாற்றுகிறான். அநேகர் அதை நம்பவும் செய்கிறார்கள் என்பது இங்கு வேதனையே!
-- Edited by SUNDAR on Wednesday 8th of June 2011 10:42:29 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)