ஆணடவராகிய இயேசு மனுக்குலத்தின் பாவத்துக்காக சிலுவையில் மரித்து உயிர்தெளுந்தபோது நடந்த சில விசேஷ சம்பவங்களை மத்தேயு இவ்வாறு குறிப்பிடுகிறார்:
மத்தேயு 27:50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. 52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
"அதாவது இயேசு உயிர்தெழுந்த பிறகு, நித்திரை அடைந்திருந்த அல்லது அதற்க்கு முன்னர் மரித்திருந்த பல பரிசுத்தவான்களின் சரீரங்கள்எழுத்து அவர்கள் கல்லறையில் இருந்து புறப்பட்டு நகரத்துக்குள் பிரவேசித்து அநேகருக்கு காணப்பட்டார்களாம்." என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.
ஆனால் பவுல் தீமோத்தேயுக்கு எழுதிய நிருபத்தில் :
II தீமோ 2:16. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; 17. அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; 18 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
இந்த வார்த்தைகளின்படி'உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று" என்று சொல்லும் சிலரை பவுல் கள்ள போதகர்கள்போல எழுதியுள்ளார்.
பவுல் இவ்வாறு எழுத காரணம் என்ன?
மத்தேயு சொல்வதுபோல் உண்மையில் பரிசுத்தவான்கள் உயிர்த் தெழுந்தார்களா? அல்லது பவுல் சொல்வதுபோல் உயிர்த்தெழுதல் நடந்தாயிற்று என்று சொல்லுவது கள்ள போத்கமா? அல்லது பவுலும் மத்தேயுவும் வேறு வேறு உயிர்தெழுதல் பற்றி கூறுகின்றனரா?
கிறிஸ்த்துவின் உயிர்த்தெழுதலை தொடர்ந்து உயிர்பிக்கபட்டவர்கள பழைய ஏற்ப்பாட்டு பரிசுத்தவான்கள். ஆனால் இந்த உயிர்பித்தலை வேதம் உயிர்த்தெழுதல் என்று குறிப்பிடவில்லை "சரீரங்கள் எழுந்திருந்தது" என்றே குறிப்பிடுகிறது. அதாவது பாதாளத்தில் இருந்த இவர்கள் பரதீசு என்னும் இடத்துக்கு மாற்றப்பட்டார்கள் "JUST A TRANSFER" அவ்வளவே! எனவே இவர்களுக்கும் இறுதிநாளில் இன்னொரு உயிர்த்தெழுதல் உண்டு என்பதை அறியமுடியும்.
இதுபோக இன்னும் இரண்டு உயிர்த்தெழுதல்கள் இருக்கிறது என்பதை வேதம்
நமக்கு தெளிவு படுத்துகிறது.
வெளி 20:4. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். 5 ... இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
இந்த உயிர்த்தெழுதலின் போது "மரணமடைந்த மற்றவர்கள் யாரும் உயிரடைய வில்லை" என்று வேதம் சொல்கிறது! எனவே இன்னொரு உயிர்த்தெழுதலும் உள்ளது. தானியேல் மற்றும் இயேசு குறிப்பிட்டுள்ள இந்த உயிர்த்தெழுதலே இறுதியானது!
தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
வெளி 20:12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
இந்த இறுதி உயிர்த்தெழுதலை பற்றியே பவுல் எழுதியிருப்பார் என்றே நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)