எங்கள் கம்பனியில் AUDIT வேலைகள் நடந்துகொண்டு இருப்பதால் வேலை பளுவினிமித்தம் அதிக பதிவுகளை தர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
மேலும் 1992ம வருடம் ஆண்டவர் என்னை 6 நாட்கள் தனது ஆவியால் அபிஷேகித்து தெரியப்படுத்திய காரியங்களில் அநேகமானவைகளை நான் இங்கு எழுதி வைத்துவிட்டேன் விரைவில் அவற்றின் தொகுப்பு ஒன்றை ஒரே தனி திரியில் தரலாம் என்று கருதியுள்ளேன்.
நான் இங்கு எழுதியுள்ள கருத்துக்கள் குறித்த சந்தேகம் எதுவும் இருந்தாலோ அல்லது இறைவன் குறித்த பொதுவான கருத்தில் எதுவும் விளக்கம் தேவை பட்டலோ இந்த தளத்திலோ அல்லது sundararaj.p@gmail.com என்ற எனது தனி மெயிலுக்கு எழுதி கேள்விகளை கேட்கலாம்.
தெரிந்த கேள்விகளுக்கு உடனடியாகவும், தெரியாத கேள்விகளுக்கு ஆண்டவர் சமூகத்தில் அமர்ந்து விசாரித்தும் பதில் தர தயாராக இருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை நான் யாரையும் அல்லது எந்த போதகத்ததையும் முற்றிலும் தவறு என்று சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு பிரிவினரும் சில
உண்மைகளை அறிந்திருக்கின்றனர் சில உண்மைகளை அறியாமல் தங்களுக்கு தெரிந்த சொந்த கருத்தை எழுதுகின்றனர். யாரும் முற்றும் அறிந்தவர் இல்லை! எனவே யாரையும் குறைகூறுவது நமது நோக்கமல்ல!
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்றொரு பழமொழி எல்லோரும் அறிந்ததே. அதேபோல் வெறும் எழுதப்பட்ட வசனத்தை மட்டும் படித்து ஆண்டவரை சரியாக அறிந்துவிட முடியாது. தேவனை அனுபவபூர்வமாக அறிந்தால் மட்டுமே, தேவ ஆவியானவர் யார்? கர்த்தருடைய ஆவியானவர் யார்? பரிசுத்த ஆவியானவர் யார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து யார்? போன்ற உன்மைகள துல்லியமாக அறிய முடியும்!
ஆண்டவரே ஒருவருக்கு ஒரு உண்மையை விளக்க தயாராக இல்லை என்றால் அவர் யாரிடம் கேட்டாலும் அந்த உண்மை அவருக்கு புரியாது. ஏனெனில் சில முக்கியமான காரியங்களை பிசாசால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனுஷ கூட்டத்துக்கு தேவன் தெரிவிக்க விரும்பவில்லை.
"நமது அறிவு குறையுள்ளது" என்று வேதம் சொல்வத்தால், நாம் அறிந்ததுதான் சரி என்று நிர்விசாரமாக இருக்காமல்:
கடந்த காலங்களில் அதிகமான தரக்குறைவான வார்த்தைகளாலும் சாபங்களாலும் நம்மை மிகவும் மனமடிவாக்கிய சகோதரரை பற்றி இங்கு வரும் நண்பர்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! பலவிதமான சூட்சிகள் எல்லாம் செய்து நம்மை கவிழ்க்க பார்த்து தொடந்து நம்முடைய பதிவுகள் எல்லாவற்றிலும் ஏதாவது குறைகண்டுபிடித்து எழுதி, தேவனின் திட்டங்கள்பற்றிய சரியான உண்மை எல்லோரிடமும் சென்றடைவதை தடுக்க முயன்றார்.
இன்றும்கூட அதேபோல " உன்னை ஒருகன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு" என்று சொல்லி மிகுந்த தாழ்மையை போதித்து சென்ற கிறிஸ்த்துவையும் அவரது வார்த்தையையும் காற்றில் பறக்கவிட்டு, "அவரை தொழுது கொள்கிறோம்" என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துகொண்டு மொத்த கிறிஸ்தவத்தையுமதானே காவல் காத்துகொண்டு இருப்பதுபோன்ற மமதையில், தரம்கெட்ட வார்த்தைகளை எழுதி, ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தூற்றி கிறிஸ்த்துவுக்கும் கிரிஸ்த்தவத்துக்கும தொடர்ந்து அவப்பெயரை ஏற்ப்படுத்தி வருவதும், அதையும் அனேக கிறிஸ்த்தவ அன்பர்கள் அக்கறையுடன் ரசித்து தங்கள் பங்குக்கு செய்யவேண்டிய காரியங்களை செய்து அவருக்கு கைகொடுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே.
கடந்த சில மதங்களுக்கு முன்னர் நான் அவரை குறித்து ஆண்டவரிடம் பலமுறை முறையிட்டும் ஆண்டவர் எந்த ஒரு சரியான பதிலும் எனக்கு தராமல் மௌனமாகவே இருந்தார். இறுதியில் ஒருநாள் ஆண்டவர் "யாரை பற்றியும் என்னிடம் முறையிடாமல், உன்னை மனமடிவாக்குகிறவர்களுக்காக ஜெபம்பண்ணு" என்று அறிவுறுத்தினார்.
அவ்வார்த்தைகளின் அடிப்படையில் நான் "ஆண்டவரே அந்த சகோதரர் நடத்தும் தளம் அதிகமதிகமாக விசுவாசிகளால் நிரப்பபடட்டும் என்னைவிட அதிகமதிகமாக அவர் பெருகட்டும் அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அது நிறைவேறட்டும்" என்பது போன்று ஜெபித்துவந்தேன்.
அது ஓரளவுக்கு நிறைவேறியது போல் தெரிகிறது, என்னைவிட அவரது தளத்தில் விசுவாசிகளின் எண்ணிக்கையும் அவர்களின் பங்களிப்பும் பெருகிவிட்டது. அதற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்!
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் என்னை விமர்சிப்பதை விட்டுவிட்டு மற்ற சில சகோதரர்களிடம் மட்டும் தனது கனிவான பார்வையை திருப்பி அவர்களை கடுஞ்சொற்க்களால் ஆசீர்வதித்து வந்தார். அவர்களும் தாங்கள் பங்குக்கு செய்யவேண்டியதை செய்தார்கள்
தற்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை, எந்த தொல்லையும் வேண்டாம், யாரிடமும் சாபமும் வாங்க வேண்டாம் என்று தூர விலகியிருக்கும் நம்மை மீண்டும் வம்புக்கு இழுத்து நோண்டிபார்க்கும் வேலையில் இரங்கியுள்ளார்.
அவரது பதிவுகளில் நான் பலமுறை வாசித்தது நான் அறிந்து கொண்டதில் அவர் ஆழ்மனத்தின் நோக்கம் என்னவெனில் "சுந்தர் நல்லவர் அல்ல" என்ற உண்மையை, என்னை நல்லவர் என்று கருதும் சிலருக்கு எப்படியாது நிரூபித்து காட்டிவிடவேண்டும் என்பதே.
இவ்வாறு என்னையும் தரம் கெட்டவந்தான் என்று நிரூபிபதர்க்காக என்னென்ன சூழ்ச்சி செய்யமுடியுமோ அதேயல்லாம்செய்து எப்படியெல்லாம் வம்புசண்டைக்கு இழுக்க முடியுமோ அப்படியெல்லாம் இழுத்தால், நானும் ஒருநிலையில் பொறுமையிழந்து அவரைப்போல தரம்கெட்ட வார்த்தைகளை கொட்டிவிடுவேன் என்று எதிர்பார்க்கிறார்!
ஆனால் சாத்தானின் தந்திரங்கள் நமக்கு தெரியாதா என்ன?
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே அதாவது, ஏட்டில் சுரைக்காய் படம் ஒன்றை வரைந்து கொண்டால், அதை எடுத்து குழம்பு வைத்து சாப்பிடமுடியாது. என்பதுதான் அதன் கருத்து. அதேபோல் வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள"ஆவியும் ஜீவனுமாயிருக்கிற" வார்த்தைகள் நம்முடய ஆவியிலும் ஜீவனிலும் வந்து தங்கி கிரியைசெய்யாவிடில் அதனால் எந்த பலனும் இல்லை! அதாவது "வேதபுத்தகத்தை கையில் வைத்து திரிவதாலோ, அல்லது அதை கடமைக்கு வாசிப்பதாலோ அல்லது ஆவியானவரின் துணை இல்லாமல் வெறும் மாம்ச அறிவினால் வேதத்தை வாசிப்பதாலோ" எந்த பயனும் இல்லை என்ற நோக்கில் மேலே நான் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு
//இப்போ அந்த குரங்குகளைப் போலவே தாவுகிறார்,
குதிக்கிறார்,சீன் போடுகிறார்;அறிக்கை விடவும் செய்கிறார். ///
என்று என்னைப்பற்றிஎழுதி அவர் தேவஞானத்தில் இருக்கிறார் என்பதை தொடர்ந்து நிரூபித்துள்ளார்! அவரது ஞானம் தேவனால் ஆசீர்வதிக்கப்படட்டும்!
அவருக்கு பதில் எழுதவோ அல்லது அவர்போல தரம்கெட்ட வார்த்தைகளை எழுதவோ நமக்கு நேரமும் இல்லை, அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே மீண்டும் ஆண்டவரிடம் அவருக்காக ஒரு ஜெபத்தை இங்கு ஏறெடுக்க விளைகிறேன்.
"ஆண்டவரே! நான் "நல்லவன் அல்ல" என்பது உமக்கும் தெரியும் அது சாத்தானுக்கும் நிச்சயம் தெரியும்! இந்நிலையில் என்னை "நல்லவன் அல்ல" என்று பிறருக்கு நிரூப்பதில் அதிகமாக அக்க்ரைகாட்டும் அந்த சகோதரர் சொல்வதை அவரின் அபிமானிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள கிருபைசெய்யும். அவர் என்னை குறித்து என்ன எதிர்பார்க்கிறாரோ அல்லது அவருக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறாரோ அதையே நான் செய்ய என்னை வழி நடத்தும. என்னால் யாரும் மனகஷ்டமோ அல்லது துன்பமோ அடையாத படிக்கு பார்த்து வழி நடத்தும்:
(அவரது வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் விட்டு, இந்த பதிவைகூட நான் தர வேண்டாம் என்றுதான் கருதினேன். ஆனால் "நான் யாருக்கும் எதிரியல்ல எவரொருவர் கெட்டுபோவதும், எவரொருவர் என்னால் மனநோவு அடைவதிலும் எனக்கு எள்ளளவேனும் விருப்பமில்லை" என்பதை தெரிவிக்கவே இப்பதிவை தந்துள்ளேன்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)