தேவன் "புசிக்கக்கூடாது" என்ற என்று விலக்கிய கனியை புசித்ததால் நன்மை தீமையை அறிந்து மரணத்தை சுமந்துகொண்டு தேவனால் ஏதேன தோட்டத்தை விரட்டப்பட்டு வெளியேறிய ஆதாமின் நிலை என்பதைப்பற்றி சிலர் தவறான கருத்து கொண்டிருப்பதால் அதை பற்றி சற்று ஆராயலாம் என்று கருதுகிறேன்.
ஆதாம் தான் செய்த பாவத்துக்காக 6000௦௦௦ வருடம் நரகத்தில் துன்பபடுகிறார் என்பதோ அல்லது அவர் பரதீசில் இளைப்பாறினார் என்பதோ ஒரு சரியான கருத்து அல்ல என்றே நான் கருதுகிறேன்.
பூர்வ காலத்தில் இருந்து தேவனால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படும் காலம் வரை வாழ்ந்த ஒவ்வொருவரும் மனசாட்சியின் பிரமாணத்தின் அடிப்படையிலும், நியாயப்பிரமாண காலத்தில் வாழ்ந்தார்கள் நியாயப்பிரமாணம் அடிப்படையிலும்
நியாயம்தீர்க்கப்படுவர். அவ்வாறு அவரவர் செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் பூமிக்கு கீழிருக்கும் பாதாளம் என்னும் படுகுழியில் அவமானத்தை சுமந்தார்கள் அல்லது நித்திரை செய்து இளைப்பாறினார் என்பதை வசனம் மூலம் தெளிவாக அறியமுடியும்!
ஏசாயா 57:2நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
என்று வேதம் சொல்கிறது. அதற்க்குஏற்ப மரித்த சாமுவேல் எழும்பி வந்தபோது
I சாமுவேல் 28:15சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான்
அதுபோல் துன்மார்க்கமாக நடந்தவர்கள் பாதாளத்தின் இன்னொரு பகுதியில் அவமானத்தை சுமந்தார்கள் என்பதையும் வசனம் சொல்கிறது.
எசேக்கியேல் 32:30இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்
இவ்வசனப்படி பழைய ஏற்பாட்டுகால மனுஷர்கள் மரித்தபின்னர் மூன்று அடுக்குகள் கொண்ட பாதாளத்தில் மேல் பாதாளம், தாழ்வான பாதாளம், நரக பாதாளம் என்ற இடங்களில் தங்கியிருந்தனர்.
ஆண்டவராகிய இயேசு பாவங்களுக்காக மரித்து உயிர்த்தபோது மேல்பாதாளத்தில் நித்திரை நிலையில் இருந்த பரிசுத்தவான்கள் மாத்திரம் மீட்கபட்டு பரதீசு என்னும் இளைப்பாறும் ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டனர். அந்த பரதீசுக்குதான் தன்னோடு மரித்த கள்ளனையும் இயேசு அழைத்து சென்றார்
லூக்கா 23:43இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இந்த "பரதீசு" என்பது ஏதோ புதிய இடம் என்று நினைக்க வேண்டாம் "பரதீசு" என்றால் தோட்டம் என்று பொருளாம். இதுதான் ஆதியில் தேவன் உண்டாக்கிய ஜீவ விருட்சம் இருக்கும் தேவனின் தோட்டம்.
வெளி 2:7ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
பாவம் செய்ததால் ஆவிக்குரிய கண்கள் அடைக்கபட்டு தோட்டத்தை விட்டு வெளியேறிய மனுஷன், இயேசு பாவங்களுக்காக மரித்தபின் மீண்டும் அங்கு சென்று இளைப்பாறும் சிலாக்கியத்தை பெறுகிறான். "ஆகினும் ஜீவவிருச்சத்துக்கு வீசும் சுடரொளி பட்டயமும் கேரூபீங்களும் காவல் இருப்பதால், அதை ஒருவரும் நெருங்க முடியாது. இயேசு குறிப்பிடும் "ஜெயம் கொண்டவன்" மட்டுமே அதை புசிக்க முடியும். பின்னர் அவர் மூலமே மற்ற மனுஷர்களுக்கும் அதிலுள்ள ஜீவன் பாய்ந்து உயிர்ப்பிக்கும். எப்படி ஒரே மனுஷனின் பாவத்தால் எல்லோருக்கும் மரணம் வந்ததோ, அதேபோல் ஒரே மனுஷன் ஜெயம்கொண்டு ஜீவ விருட்த்தை புசிப்பதன் மூலம் அனைவருக்கும் ஜீவன் உண்டாகும். (மற்றபடி கூட்டமாகபோய் கும்மாளம் அடிப்பது எல்லாம் நடக்கிற காரியம் அல்ல)
ஆண்டவராகிய இயேசு ஜீவாதிபதியாக இருந்ததால் அவர் மரித்தபின் பாதாளத்துக்கு இரங்கி நித்திரை நிலையில் இருந்த பழைய ஏற்பாடு பரிசுத்தவான்ககளை மட்டும் மீட்டு பரதீசு என்னும் ஒரு இடத்துக்கு கொண்டு சென்றார்.
எபேசியர் 4:8அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். 9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? 10. இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
இந்த மீட்பை தொடர்ந்து கிறிஸ்த்துவுக்குள் மரிப்பவர்கள் பரதீசில் சென்று இளைப்பாறும் தகுதியை பெறுகின்றனர். இந்த பரதீசுதான் ஐஸ்வர்யாவான் லாசரு
சம்பவத்தில் ஆபிரஹாமையும் லாசருவையும் ஐஸ்வர்யவன் பார்த்த இடம்.
ஆனால் இயேசுவின் ரத்தத்தால் தங்கள் பாவங்கள் கழுவப்பட்டாமல் மரிக்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் உடனடியாக பாதாளம் என்னும் படுகுழியில் இறங்குகின்றனர். அங்கு நியாயத்தீர்ப்பு நாள்வரையில் ஐஸ்வர்யவானை போல வேதனையை அனுபவிக்க வேண்டும்
லூக்கா 16:23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
எனவே அன்பானவர்களே!
பழைய ஏற்பாட்டு காலத்து மனுஷர்களின் நிலைபற்றி ஆராயந்துகொண்டிருப்பதில் எந்த பயனுமில்லை. தேவன் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறனர் எனவே தற்போதைய தங்களுக்கான நிலை என்னவென்பதை முதலில் ஆராயுங்கள். நீங்கள் என்னதான் சன்மார்க்கமாக ஜீவிததாலும் இயேசுவை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்று, அவர் பரிசுத்த இரத்தத்தால் உங்கள் பாவங்கள் கழுவப்பட்டாமல் மரித்தால் உடனடியாக நீங்கள் இறங்குவது பாதாளம் என்னும் படுகுழிதான் என்பதையும் "அங்கு வேதனை உண்டு" என்பதையும் அறியகடவீர்கள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)