தேவன் படைத்து "நன்மையாகவே கண்ட" இந்த உலகையும் அதிலுள்ள மனுஷர்ளையும் தன் வஞ்சனையால் ஆட்கொண்டு, இன்றுவரை இந்த உலகத்தில் அனைத்து தீமைகளையும் கொடூரங்களையும் நிறைவேற்றி கொண்டிருகும் சத்துருவாகிய சாத்தானை ஜெயிக்கும்வரை இந்தஉலகக்கு முடிவில்லை என்பதை ஒவ்வொருவரும் நிச்சயம் அறியவேண்டும்!
வேத வசனங்கள் சொல்கிறபடி எல்லாமே நிறைவேறுவது நிச்சயம்! ஆனால் இந்த உலகத்தின் முடிவு என்பது அநேகர் தரிசித்து எழுதுவதுபோல் ஒரே நாளில் திட்டமாக நடக்கும் நிகழ்வு அல்ல! இயேசுவின் வருகை மற்றும் உலகின் முடிவுக்கு என்பது ஒரு காரியத்தின் நிறைவேறுதல் ஆகும். அதாவது இயேசுவின் முதல் வருகையால் நியாயம் தீர்க்கப்பட்டு புறம்பே தள்ளபட்டுள்ள சாத்தான் தன்னுடைய எந்த கிரியையிலும் பின்வாங்கவில்லை. முன்பைவிட அதிகேடான காரியங்களை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் அந்த சத்துரு முற்றிலும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்! "ஆவியானவர் பெலத்துடன் மனுஷன் அவனை ஜெயம்கொள்ள வேண்டும" அந்நேரமே முடிவுவரும். அதன்பின்னரே மனுஷர்களை மோசம் போக்காதவாறு அந்த சாத்தனை தூதனானவன் கட்டி, பாதாளத்தில் வைத்து முத்திரை போடமுடியும்.
வெளி 20:2பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
அதற்க்கு முன்னர் இந்த உலகுக்கு முடிவு வாராது என்பதை அனைவரும் அறியக்கடவது.
சாத்தனை முரியடிப்பதர்க்காக இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தை பற்றி சாதாரணமான பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் ஞானவான்களோ நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.
பரிசுத்த ஆவியானவர் இந்த உலகுக்கு அனுப்பபட்டதன் முக்கிய நோக்கம் "சத்துருவை பாதப்படியாக்கி போடுவதற்கே." அதுவரை ஆண்டவராகிய
இயேசு தேவனின் வலது பாரிசத்தின் அமர்ந்திருக்க வேண்டியது.
சங்கீதம் 110:1கர்த்தர்என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
சத்துருவை பாதப்படியாக்கிபோட உலகுக்கு வந்து, தற்போது கிரியை செய்து கொண்டிருக்கும் ஆவியானவரின் முக்கிய கிரியைகள் என்ன என்பதையும், அவர் எவாவாறு சத்துருவை ஜெயம்கொண்டு தேவதிட்டத்தை நிறைவேற்றுவார் என்பதையும் தொடர்ந்து பார்க்கலாம்.....
-- Edited by SUNDAR on Tuesday 14th of June 2011 03:17:51 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகரியா 4:6கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
என்று தீர்க்கதரிசிகளால் முன்னறிவித்த பிரகாரம்,"சாத்தானை ஜெயம்கொள்ளுதல்" என்பது எந்த மனுஷனாலும் தன் சுயபெலத்தால் செய்யமுடிந்த காரியம் அல்ல. அது தேவனாலும் தேவ ஆவியாலுமே கூடும். அவ்வேலையை நிறைவேற்றவே பரிசுத்த ஆவியானவர் இன்று பூமியில் கிரியை செய்துகொண்டுகிருக்கிறார். அவராலேயே சத்துருவை ஜெயம்கொள்ள முடியும்!
ஆவியானவரின் முக்கிய பணிகள் என்று ஆண்டவராகிய இயேசு குறிபிட்டவைகளில் கீழ்கண்ட மூன்று முக்கிய காரியங்கள் அடங்கும்
யோவான் 15:26பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்
யோவான் 16:8அவர் (ஆவியானவர்) வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்
யோவான் 16:13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
1. இயேசுவை குறித்தான சாட்சி
2. பாவம் /நீதி /நியாயத்தீர்ப்பை குறித்து உலகத்தை கண்டித்தல்.
3. சத்தியத்துக்குள் நம்மை வழி நடத்துதல்.
1. இயேசுவை குறித்தான சாட்சி
முதலில் இயேசுவை குறித்தான சாட்சியுடையவர்களாக நாம்ஜீவிக்க ஆவியானவர் நமக்கு அருள் செய்கிறார்.
வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற ஆண்டவராகியே இயேசுவை அறிந்து, அவர்மூலம் பாவமன்னிப்பை பெற்று, இயேசுவை குறித்த சாட்சியுடைய வாழ்க்கை வாழ்வதே சாத்தனை ஜெயம் கொள்வதற்க்கான முதல்வழி. அவ்வழியில் பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்துகிறார்.
அப்போஸ்தலர் 1:8பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்
அதன் அடிப்படையில் நாமெல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றதன் மூலம் அவருக்கு சாட்சிகளாக இருந்து சாத்தனை ஜெயிப்பதற்கான முதல் தகுதியை பெற்றவர்களாகிறோம். அதாவது ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எவருமே இந்த "சாத்தானை ஜெயம்கொள்ளுதல்" என்ற யுத்தத்தில் பங்குபெறும் அடிப்படை தகுதியே இல்லாதவர்கள்! எனவே அவர்கள் தேவனின் தெரிவுக்கு அல்லது திட்டத்துக்கு வெளியிலேயே இருக்கிறார்கள்.
ஆனால் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு சாட்சியாக வாழ விழையும் நாமோ "தேவ பிள்ளைகள்" என்ற தகுதியை பெற்று, ஆவியானவரால் அபிஷேகம் பெற்று "சாத்தனை ஜெயம்கொள்ளுதல்" என்ற தேவ திட்டத்தில் தேவ சேனையில் பங்குபெற தேவனால் தெரிவு செய்யப்பட்ட ஓர் மேன்மையான நிலையை அடைந்தவர்கள்.
ஆனால் இது ஒரு தொடக்கம்தான்! இதை தொடர்ந்து ஆவியானவரின் அடுத்த கிரியைகளை ஆராயலாம்...
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
2. பாவம் /நீதி /நியாயத்தீர்ப்பை குறித்து உலகத்தை கண்டித்தல்.
நம்முள் வந்து தங்கும் ஆவியானவரின் அடுத்த கிரியை "பாவம்" எது "நீதி" எது என்பதன் அடிப்படையில் தேவனின் நியாயதீர்ப்பை குறித்து உலகத்தை கண்டித்து உணர்த்துதல்.
யோவான் 16:8அவர் (ஆவியானவர்) வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்
வேதபுத்தகம் அனேக கற்பனைகளையும் கட்டளைகளையும் நமக்கு போதிக்கிறது. படிப்பறிவுள்ள ஒருவர் ஒருவேளை தேவனின் அனைத்து வார்த்தைகளையும் ஆராய்ந்து தேவனின் எதிர்பார்ப்பு என்னவென்பதை ஓரளவு ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும். ஆனால் படிப்பறிவு இல்லாதவர்களின் நிலை என்ன? மற்றும் தேவனை அறியாத அனேக உலகமக்களின் நிலை என்ன?அவர்களால் நாம் ஆராய்வதுபோல் வேதத்தை ஆராயமுடியாது. தேவனைப்பற்றியும் அவரது எதிர்பார்ப்புகள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது.
இந்நிலைகளின் ஒரு ஒருவருக்குள் வந்து தங்கும் ஆவியானவர் சபை பாஸ்டர்களின் மூலமோ அல்லது தேவ பிள்ளைகள் மூலமோ அல்லது சக விசுவாசிகள் மூலமோ உலகத்தில் இடைபட்டு அதின் பாவங்கள் மற்றும் நீதி நியாயங்கள் மூலம் உலகத்தை கண்டித்து உணர்த்துகிறார்.
ஆவியானவரின் மூலம் தேவனின் வார்த்தைகள் இன்று எங்கும் பிரசங்கிக்க படுகின்றன. இரட்சிக்க பட்டவர்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து மனுஷர்களும் கேட்கும் பிரகாரமாக T.V, ரேடியோ வலைத்தளங்கள் மூலமாக தேவனின் வார்த்தைகள் மற்றும் பாவங்கள் நீதி நியாயங்கள் பற்றிய வார்த்தைகளை ஆவியானவரே கொடுத்து வருகிறார்.
இங்கு இந்த தளத்தில் நான் எழுதும் கருத்துக்களும் ஆவியானவரின் இந்த இரண்டாம் பணியின் அடிப்படையில் உருவானதே. எத்தனையோ பணிகளின் மத்தியில எத்தனையோ எதிர்ப்புகள் மத்தியில் அவர் உந்துதலாலேயே நான் இங்கு எழுதுகிறேன். அவரே இங்கு என்னைஎழுதும்படி வழிநடத்துகிறார். அவரே இங்குள்ள எழுத்துக்கள் மூலம் பாவம்/நீதி/ நியாயதீர்ப்பு குறித்து வலைதளங்களில் வரும் அனைவருடனும் இடைபடுகிறார்.
மேலும் விடுதலை பெருவிழாக்கள், கன்வென்சன் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தெரு ஊழியங்கள் சிறுபிள்ளை ஊழியங்கள், மெஷிநெரிகள் போன்ற அனேக வழிகளில் ஆவியானவர் இந்த உலகத்துக்குள் இடைபட்டு தன்னுடய பணியை செய்துவருகிறார்.
ஆவியானவரின் பெலத்தோடு பேதுரு நடத்திய முதல் கூட்டத்திலேயே அனேக அத்துமாக்கள் தேவனை அறிந்துகொள்ள முடிந்தது! அதுபோல் ஆவியானவரின் இப்பணிகள் மூலம் அனேக புது ஆத்துமாக்கள் பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தபட்டு தேவனை அறிந்துகொண்டு சாத்தானை ஜெயம்கொள்ள போராடும் தேவசேனையோடு இணைத்து செயல்பட வாய்ப்பு உண்டாகிறது.
ஆவியானவரின் இந்த பணியின் அடிப்படையிலேயே பிலிப்பு எத்தியோப்பிய மந்திரியோடு இடைபடுகிறார்.
அப்போஸ்தலர் 8:29ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;
பேதுரு ஆண்டவரை பற்றியும் இரட்சிப்பை பற்றியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கு ஆவியானவர் இடைபட்டு கேட்பவர்களை நிரப்புகிறார்.
இவ்வாறு தன்னுடய பிள்ளைகள் மூலம் பாவம்/நீதி/ நியாயதீர்ப்பு இவற்றைப்பற்றி இந்த உலகுக்கு கண்டித்து உணர்த்தி, தேவனுக்கேற்ற கிரியை உள்ளவர்களை தேவ சேனையில் சேர்ப்பதே சாத்தானை ஜெயம் கொள்வதர்க்காக ஆவியானவர் மேற்கொண்டுவரும் இரண்டாம் பணி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனின் பரிசுத்த நிலைகளுக்கு ஒத்துவராத எந்த ஒரு காரியமுமே பாவமாக இருப்பதால், ஒருவர் என்னதான் வேதவசனங்களை அதிகமாக அறிந்து பெரிய ஞானவானாக இருந்தாலும், என்னதான் வேத வசனங்களின் அடிப்படையில் வாழ்க்கையை அமைக்க முயற்சித்தாலும் இந்த உலகத்தின் பொதுவான வாழ்வு நிலைகளில், ஒரு குறிப்பிட்ட காரியத்தை தேவனுக்கு முன்னால் அது நீதியானது தானா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் பல முறைகள் தவறிவிட வாய்ப்பு இருக்கிறது.
பாவ மாம்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு தேவனுக்கேற்ற பரிசுத்த நிலையை அடைவது என்பதும், தேவனுக்கேற்ற கிரியைகளை எப்பொழுதும் செய்வது என்பது மிக கடினமான காரியமாகவே உள்ளது. அதாவது என்னதான் ஜெபம் வேதவாசிப்பு, சபை ஐக்கியம் ஊழியங்கள் என்று அதிக கவனம் செலுத்தினாலும் நமது மாம்சத்தின் இயற்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய நாம் இந்த உலகத்துக்குள் வந்தே ஆகவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். அந்நேரங்களில் எப்பொழுது நம்மை கவிழ்க்கலாம் என்று சுற்றிதிரியும் சாத்தானின் செய்கையால் நாம் தவறிவிட வாய்ப்பிருக்கிறது!
மேலும், படிப்பறிவில்லாதவர்கள் மற்றும் வேதத்தை அதிகம் வாசிக்க முடியாதவர்கள், போன்றவர்களுக்கு போதிக்கப்படும் போதனகளுக்குள் தேவனின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் போதிக்கப்பட வாய்ப்பில்லை. இதுபோன்ற நிலைகளில் ஆவியானவர் ஒருவரே நமக்கு ஆசானாக இருந்து நம்மை சரியான பாதையில் வழி நடத்துகிறார்.
நாம் பரிசுத்தமாக நடக்க அதீதமாக முயன்றாலும் சில நேரங்களில் சில காரியங்களை நம் மாம்சத்தின் தூண்டுதலின் பெயரில் தவறி பாவம் செய்துவிட நேர்கிறது. ஆவியின் முதல் பலனை பெற்ற பேதுருகூட உலக நிலைகளில் சிலருக்கு பயந்து மாய்மாலம் பண்ண நேர்ந்தது. அதிலும் சில காரியங்கள் நமக்கு பாவம் போலவே தெரிவதில்லை! அந்நேரங்களில் ஆவியானவர் நமது தவறான செய்கையை கண்டித்து உணர்த்துவதை நம்மால் அறிய முடியும்!
ஒருநாள் நான் பார்க் செய்திருந்த என்னுடய இருசக்கர வாகனத்தை எடுத்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு ஆட்டோவின்மேல் பட்டுவிட்டது ஆனால் எந்தபாதிப்புமே அந்த ஆட்டோவுக்கு ஏற்ப்படவில்லை ஆனால் அந்த ஆட்டோகாரன் கத்த ஆரம்பித்து விட்டான். சிறிது பொறுத்த நானும் "உமது ஆட்டோவுக்கு எந்த பாதிப்பும இல்லையே பிறகு என் கத்துகிறீர்" என்று திருப்பி கேட்க. தொடர்ந்த வார்த்தை நீண்டுவிட்டது நான் கோபபட நேர்ந்துவிட்டது.
அவரைவிட்டு கடந்து வந்த சிறிது நேரத்திலேயே ஆவியானவர் மிகுந்த துக்கப்பட ஆரம்பித்து விட்டார். நீ செய்தது தவறு "உன்னிடம் எந்த தப்பும் இல்லை என்றாலும்கூட, பிறர் உன்னை திட்டும்போது எதிர்த்து பேசாதே" என்று திட்டமாக போதித்ததோடு என் தவறை உணர்ந்து "ஆண்டவரே இனி அதுபோல் நான் செய்யவே மாட்டேன்" என்று என்னுடய மனதார மன்னிப்பு கேட்டபிறகே என் மனகஷ்டம் தீர்ந்தது.
இன்றும் வலை தளங்களில் எழுதும் நான் ஏதாவது தெரியாமல் தவறாக எழுதி,
அதை படிக்கும் யாராவது அந்த வார்த்தயிநிமித்தம் மனவேதனை அடைந்தார்கள் என்றால் அதே மனகஷ்டம் என்னுள்ளும் ஏற்ப்பட்டுவிடும். பின்னர் ஆவியான்வரிடம் மன்றாடி, எழுதியதில் உள்ள தவறு எதுவென்பதை கண்டறிந்து அதை திருத்தி விடுகிறேன் என்ற முடிவுக்கு வந்தபின்னரே என்னால் நிம்மதியாக இருக்கமுடியும்.
இதுபோல் எந்த தவறும் இல்லை என்று எண்ணிக்கொண்டு எனக்கு மிகவும் பிடித்தமான சினிமாப்பாடல் கேட்டது, சிகரெட் பிடித்தது போன்ற அனேக காரியஙகளை ஆவியானவரின் கடிந்துகொள்ளுதல் அடிப்படையிலே விட்டோளித்துள்ளேன். ஆவியானவரின் வழிநடத்துதல் எப்படிபட்டது என்பதை அறிந்து உணர்ந்தவர்களே சரியாக புரியமுடியும்.
(ஆனால் இன்று கிறிஸ்த்தவர்கள் எனப்படுகிரவர்கள் என்னென்னவோ தரம்கெட்ட வார்த்தைகளை எழுதுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஆவியானவர் ஏன் எதுவும் உணர்த்துவதில்லை என்று எனக்கு புரியவில்லை)
இதுபோல் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் காரியங்களில் உள்ள பரிசுத்த குறைச்சலான காரியங்களை ஆவியானவர் நமக்கு போதித்து உணர்த்தி தேவனுக்கேற்ற பரிசுத்த நிலையை நாம் எட்டும்படி நம்மை வழி நடத்துகிறார்.
எந்த ஒரு மனுஷனும் தன்னுடய சுய பெலத்தில் ஒரு சன்மார்க்க வாழ்க்கையை வேண்டுமாமால் வாழமுடியுமேயன்றி, சாத்தானை ஜெயம்கொள்ளும் அளவுக்கு
ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழவே முடியாது! ஆவியானவர் ஒருவரே நம்முள் குடிகொண்டு நம்மை தேவனுக்கேற்ற பரிசுத்த வாழ்க்கையில் நடந்தும் ஆசான் ஆவர்! அவருடைய ஆவியின் பெலத்தாலேயே நாம் சத்துருவை ஜெயம்கொள்ள முடியும்!
இவ்வாறு ஒருமனுஷன் ஆவியானவரின் பெலத்தில் தேவனுடய பரிசுத்த நிலைகளுக்கு என்றவாறு முழுவதும் கீழ்படிந்துநடந்து ஆதாமின் கீழ்படியாமையால் எல்லா மனுஷன்மேலும் பெலன் செய்யும் சாத்தானை ஜெயம் கொள்ளவேண்டும்!
அவ்வாறு ஜெயங்கொள்கிறவனை பற்றியே கீழ்கண்ட வசனங்கள சொல்கின்றன.
வெளி 21:7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
வெளி 3:21நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
இயேசு ஜெயங்கொண்டதுபோல ஆவியானவரின் பெலத்தோடு பரிசுத்தத்தினுடன் கூடிய கீழ்படிதலுடன் எதிர்த்து நின்று சாத்தானை ஒரு மனுஷன் ஜெயங் கொள்ளாதவரை, இந்த உலகுக்கு முடிவில்லை! அவ்வாறு சாத்தானை ஜெயித்த பின்னரே அவனை பாதாளத்தில் தள்ளி முத்திரைபோட முடியும்!
வெளி 20:2பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்
இந்த காரியங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது காலத்தில் நடக்கும் என்று யாராலும் சொல்லிவிட முடியாது! அது தேவன் ஒருவருக்கே தெரியும். அவரவர் அவரவருக்கு தேவன் நியமித்த காரியங்களை செய்துகொண்டு இருக்கின்றனர். ஞானவான்கள் ஆவியின் வெளிப்பாட்டின் அடிப்படையில் அனேக காரியங்களை புரிந்துகொள்வர்! தெரியாதவர்களுக்கோ ஒன்றும் தெரியாது!
எகிப்த்தில் இருந்து புறப்பட்ட இஸ்ரவேல் கூட்டத்தினர், கானான் தேசத்தை வேவுபர்த்துவிட்டு வந்து அங்குள்ள ஏனோக்கிய்ரை வெல்ல முடியாது என்ற துர்செய்தியை பரப்பியதால் கானானுக்கும் பிரவேசிக்கும் பாக்கியத்தை மேலும் 40 வருடங்கள் இழந்து வனாந்திரத்தில் சுற்றித்திருந்து யோசுவா காலேப் தவிர மற்ற எல்லோரும் மாண்டு போனார்கள்.
அங்கு அவர்கள் குறித்த காலத்தில் கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் போனதற்கு அவர்களின் அவிசுவாசமும் கீழ்படித லின்மையுமே காரணம் என்று அறிய முடிகிறது.
அதுபோல் இன்றும் இரட்சிப்பை பெற்ற ஆவிக்குரிய
இஸ்ரவேலர்கலாகிய நாமும், பரம கானானை சுதந்தரிக்க முடியாமல் நாட்கள் தள்ளிக்கொண்டே போவதற்கு முக்கிய
காரணம் அல்லது இயேவின் வருகை இன்னும் சம்பவிக்காத தர்க்கும், விசுவாசிகள் எனப்படுகிரவர்களின் அவிசுவாசமும் கீழ்படியாமையும்தான் காரணமாக இருக்கலாம்.
இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து சாத்தானை ஜெயிக்கவேண்டும் என்று யாரும் யோசிப்பதுபோல் கூட தெரியவில்லை. அவரவர்கள் இன்னும் எத்தனை சபை கட்டலாம் இன்னும் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் இன்னும் என்னென்ன நவீன கருவிகள் கார்கள் வாங்கலாம் என்றல்லவா யோசிக்கிறார்கள்.
இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து சாத்தானை ஜெயிக்கவேண்டும் என்று யாரும் யோசிப்பதுபோல் கூட தெரியவில்லை. அவரவர்கள் இன்னும் எத்தனை சபை கட்டலாம் இன்னும் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் இன்னும் என்னென்ன நவீன கருவிகள் கார்கள் வாங்கலாம் என்றல்லவா யோசிக்கிறார்கள்.
சாத்தானை "தீயவன், தேவனுக்கு சத்துரு, கொடூரமானவன் உலகமனைத்தையும் மோசம்போக்கி துன்பத்தையும் துயரத்தையும் கண்ணீரையும் வேதனையையும் விதைப்பவன் அவன் கொட்டத்தை அடக்கி அவனது ஆளுகைக்கு ஒரு முடிவை கொண்டுவரவேண்டும்" என்று நினைத்ததால்தானே ஜெயிக்கமுடியும்!
சத்துருவையும் சிநேகியுங்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார் அல்லவா? எனவே சாத்தனோடு ஒன்றி இருந்து சாத்தானின் காரியங்களில் பங்கெடுத்து அவனை நண்பனாகி கொண்டு நவீன முறையில் சாத்தானை ஜெயிக்க முயல்கிறார்களோ என்னவோ? அல்லது மிகுந்த தாழ்மயி நிமித்தம் சாத்தானுக்கு தாழ்ந்து போய்விடலாம் என்று கூட நினைக்க வாய்ப்பிருக்கிறது!
இப்பொழுது இருக்கும் நிலையை பார்த்தால் அரசியல்வாதிகள் சமூக விரோதிகளோடு திரை மறைவில் தொடர்பு வைத்திருப்பதுபோல, பல பெரிய தேவ மனிதர்கள் எனப்படுகிறவர்கள் சாத்தனோடு ஏதாவது ஒரு காரியத்தில் டீல் வைத்திருப்பதை அறிய முடிகிறது. பிறகு அவனை ஜெயிக்கும் முயற்ச்சியும் விரட்டும் முயற்ச்சியும் வெறும் கண்துடைப்பு வேலையே!