எரேமியா 4:22என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மை செய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
மேலேசொல்லப்பட்ட வசனங்கள் எரேமியா தீர்க்கதரிசியின் காலத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களை பார்த்து கடிந்து சொன்ன வார்த்தையாகும்.
கர்த்தராகிய தேவன் எத்தனயோ முறை அவர்களை எச்சரித்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் தேவன் வெறுக்கும் காரியங்களையே செய்து வந்ததனர் எனவே ஆண்டவர் இவ்வாறு புலம்புகிறார்.
இன்றும் அதே காரியங்கதான் இந்த ஜனங்களிடையே நிறைவேறி வருகிறது என்பதை சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால் நாம் கண்டுகொள்ளலாம்.
மேலே சொல்லபட்ட வசனத்தில் ஆண்டவர் மூன்று காரியங்களை குறிப்பிடுவதை நாம் பார்க்க முடியும்.
1. என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்
2. அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை;
3. பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
1. என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்:
இங்கு "என் ஜனங்கள்" என்று தேவன் குறிப்பிடுவது புறஜாதியாரை அல்ல! இரட்சிக்கபட்டு தேவனுடைய பிள்ளைகள்ஆனோம் என்று கூறிக்கொண்டு திரியும் கிறிஸ்த்தவ விசுவாசிகளை குறித்தேன் தேவன் "என் ஜனங்கள்" என்று சொல்கிறார்.
யோவான் 1:12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
இயேசுவின் நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாகி அவரை ஏற்றுக் கொண்ட வர்கள் தேவனுடய பிள்ளைகள் ஆகிறார்கள் அந்த ஜனங்களை குறித்தே தேவன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"என் ஜனங்களோ மதியற்றவர்கள்"
மதிகேடுள்ள மனுஷர்களை நாம் பல நேரங்களில் பார்த்திருப்போம். அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும் எந்த நேரத்தில் எதை பேசவேண்டும் எவ்வாறு பேசவேண்டும் என்பது தெரியாமல் பேசவும் காரியங்களை செய்யவும் துணிவார்கள். முக்கியமாக மதியற்றவர்களுக்கு ஒரு மனுஷனின் சித்தம் அறிந்து அதை சரியாக செய்ய தெரியாது. தாங்கள் செய்யும் செயலினால் அநேகருக்கு
பிரச்சனையையும் தேவையற்ற இடைஞ்சல்களையும் ஏற்ப்படுத்துவார்கள். எனவேதான் வேதம் ஒவ்வொருவரையும் பார்த்து இவ்வாறு சொல்கிறது.
எபேசியர் 5:17ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
இந்த கடைசி காலத்தில் கர்த்தருடைய சித்தம் என்னவென்பதை சரியாக அறிந்து செய்யபடாத காரியம் எல்லாமே மேதிகேடான காரியமாகவே அமையும்.
இன்று அநேகர் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தேவனின் சித்தம் எதுவென்று அறியாமலேயே தேவனுக்கென்று ஓடுகிறார்கள் ஆடுகிறார்கள் குதிக்கிறார்கள் குறைகூறி திரிகிறார்கள் அற்ப்புத அதிசயம் செய்கிராரார்கள் உலக ஆசீர்வாதத்துக்காக ஏங்குகிறார்கள் என்னென்னவோ செய்கிறார்கள். ஆனால் தேவனின் வழியையோ அல்லது வார்த்தைகளையோ அவர்கள் கண்டுகொள்வதே யில்லை.
எரேமியா 5:4இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள்
என்று கர்த்தர் இவர்களை பார்த்தே புலம்புகிறார்.
தேவனுடய வழியை அறியவேண்டும் என்றால் முதலில் தேவனை அறிய வேண்டுமல்லவா? இவர்கள் தேவனை அறிந்திருக்கிறார்களா என்றால் "அறியவில்லை" என்பதை இவர்களின் வார்த்தைகள் மூலமே அறியமுடியும். ஆகவேதான் கர்த்தர் "இவர்கள் என்னை அறியவில்லை" என்று சொல்கிறார்.
உண்மையில் அந்த காலத்து இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை அறியாமலா இருந்தார்கள்? தேவன் செய்த அனேக அதிசய அற்ப்புத செயல்களை கண்கூடாக அறிந்தவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள். ஒரு தகப்பன் தன் பிள்ளையை சுமப்பதுபோல் இஸ்ரவேல் ஜனங்களை சுமந்து வழி நடத்தியவர் நாம் தேவனாகிய கர்த்தர். அவ்வாறு அவரின் அன்புக்கு பாத்திரமான அந்த ஜனங்களை பார்த்துதான் தேவன் இவ்வாறு சொல்கிறார் "என் ஜனங்களோ என்னை அறியவில்லை" என்று!
இன்றும் ஒருவர் "தேவன் பெரிய காரியங்களை செய்பவர்" என்றோ "தேவனால் எல்லாம் கூடும்" என்றோ " என்றோ "தேவன் அன்புள்ளவர் கருணையுள்ளவர் இரக்கமுள்ளவர்" என்றோ தேவன் "சர்வலோக நியாயாதிபதி" என்றோ அல்லது
"தேவன் தன் ஒரு பேரான குமாரனை உலகுக்கு தனது தான் அன்பை வெளிப்படுத்தினார்" என்றோகூட அறிந்திருக்கலாம்! ஆனால் இதெல்லாம் தேவனை முழுமயாக அறிகிற அறிவல்ல. இதெல்லாம் நாம் அறிந்திருப்பதால் தேவனை அறிந்து கொண்டோம் என்று நம்மால் மார்தட்டவும் முடியாது. உங்களை பார்த்தும் தேவன் சொல்லும் வார்த்தை "அவர்கள் பயித்தியமுள்ள பிள்ளைகள் என்னை அறியாதிருக்கிறார்கள்" என்பதே!
-- Edited by SUNDAR on Monday 20th of June 2011 04:03:31 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
2. அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை;
இரண்டாவதாக கர்த்தராகிய தேவன் ஜனங்களை பார்த்து சொல்கிறார் "அவர்கள் பயித்தியமுள்ள பிள்ளைகள்" என்று.
இன்றைய உலகில் ஒரு விசுவாசியை பார்த்தோ, அல்லது எந்தஒரு சாதாரண மனுஷனை பார்த்தோ "நீ பயித்தியமுள்ள பிள்ளை உனக்கு உணர்வு அல்லது சொரணை இல்லை" என்று சொன்னால் யாராவது ஏற்பார்களா? நிச்சயம் ஏற்க்க மாட்டார்கள்!
ஆனால் தேவனையே நம்பி தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ இந்த உலகத்தில உள்ள பல காரியங்களை இழக்க துணியும் என்னை பார்த்து பலர் "பயித்தியமுள்ளவன்" என்று பேசியிருக்கிறார்கள்.
ஆம்
I கொரிந்தியர் 3:19இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது!
அதே வேளையில் தேவஞானம் உலக மக்களுக்கு முன்னால் பயித்தியமாக தெரிகிறது!
தேவனையும் நித்தியத்தை தேட பிரயாசம் எடுக்காமல் உலகத்தின் பின்னே ஓடும் மனுஷனை பார்த்து "பயித்தமுள்ள பிள்ளைகள்" என்று தேவன் சொல்கிறார்! ஆனால் உலகமோ இந்த உலகத்தின் அற்ப உலகவாழ்வில் ஆசைகொண்டு, மனுஷ வாழ்வின் நிலையற்ற தன்மையை அறிந்திருந்தும் தேவனுக்கு பின்னே ஓடும் மனுஷனை பார்த்து பயித்தியம் என்று சொல்கிறது.
அன்று பவுல் பேசிய தேவஞானத்தை கேட்டு பெஸ்து அவனை பயித்தியம் என்று கூவினான்!
ஏனென்றால் இருதயம் அடைக்கபட்டிருகும் அவர்களுக்கு தேவனின் ஞானத்தை புரிய முடியவில்லை எனவே பிறரை பார்த்து பயித்தியம் என்று சொல்கிறார்கள். யார் பயித்தியம்? யார் ஞானமுள்ளவர்கள்? என்பதை அறியும் காலம் விரைவிலேயே வர இருக்கிறதே!
அடுத்ததாக தேவன் சொல்லும் வார்த்தை "அவர்களுக்கு உணர்வே இல்லை" என்று!
"உணர்வு அல்லது சொரணை" எனப்படும் உணர்ச்சி ஒரு உறுப்பில் இல்லை என்றால் அது உடலில் ஒரு அங்கமாக இருந்தும் எந்தபயனும் இல்லை. அது போல் சொரணை இல்லாத அனேக விசுவாசிகள் கிறிஸ்த்துவின் சரீரத்தில் அங்கமாக இருப்பதாலேயே இன்று கிறிஸ்த்தவம் என்பது அநேகரால் வெறுக்கப் படும் ஒரு மார்க்கமாகி போனது.
சொரணையற்ற ஒரு உறுப்பில் கத்தியை வைத்து குத்தினால்கூட வலிக்காது. அது போல் உணர்ச்சியற்ற விசுவாசிகளை தேவன் எந்தனை முறைதான் கடிந்து கொண்டாலும் இவர்கள் தங்கள் வழிகளைவிட்டு திரும்புவது இல்லை. தேவனுடைய வார்த்தையை தள்ளி, துன்மார்க்கத்திலும், பொருளாசையிலும், பிறரை நியாயம் தீர்ப்பதிலும் தீவிரமாக இருக்கும் இவர்கள் தங்களுக்கு தாங்களே ஆக்கினையை வருவித்துகொள்கிறார்கள்.
நீதி 15:10 ; கடிந்துகொள்ளுதலைவெறுக்கிறவன் சாவான். என்று வேதம் சொல்கிறது.
இந்த உலகம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை புரியும் அறிவு அநேகருக்கு இல்லை. உலகில் நடக்கும் காரியங்களின் அடிப்படையை ஆராய்ந்து பார்க்கும் அவசியத்தை அறியாமல் உணர்வில்லாமல் வாழும் கூட்டம் உலகில் அதிகரித்து விட்டது. கடிந்து கொள்ளுதல் ஏற்காதவனை தேவன் "என்னை நம்பாதவன்" என்று சொல்கிறார்.
செப்பனியா 3:2அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை;
நீ கர்த்தரை நம்புகிறாயா? தேவனை விசுவாசிக்கிறாயா? நீ உணர்வற்றவனாக இருக்காமல் அவரது கடிந்துகொள்ளும் சத்தத்துக்கு செவிகொடு! தேவன் தனக்கு பிரியமானவனே கடிந்துகொள்கிறார்..நீ நிர்மூலமாகாதபடிக்கு வேத வசனம் மூலமாகவோ அல்லது சபை போதகர் மூலமாகவோ அல்லது யார் மூலமாகவோ வரும் கடிந்துகொள்ளுதலுக்கு செவிகொடு! சொரணை அற்றவனாக இருந்தால் நீ நிர்மூலமாக நேரிடலாம்!
செப்பனியா 3:7உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
3. பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
இறுதியாக தேவன் தன் ஜனங்களை பார்த்து சொல்லும் வார்த்தை "அவர்கள் பொல்லாப்பு செய்ய அறிவாளிகளாம்"
இன்றும் உலகில் பல மனுஷர்கள் கொலை செய்வதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் தவறான காரியங்களை செய்வதற்கும் எப்படியெல்லாமோ மாறுபட்ட கோணங்களில் சிந்தித்து காரியங்களை செய்கின்றனர்.
"குற்றம் நடந்தது என்ன" என்ற நிகழ்ச்சியை பார்த்தால் மனுஷன் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா? என்றே என்ன தோன்றும்! தங்களுக்கு பிடிக்காதவனை கெடுப்பதற்கும் அவரது வளர்ச்சியை தடுப்பதற்கும் ஒரு கம்பூட்டர் எஞ்சினியர் கூட யோசிக்க முடியாத அளவுக்கு யோசித்து அடுத்தவரை கெடுப்பதில் வெற்றி பெரும் பலரை நாம் பார்க்க முடியும்.
வேதாகமத்தில் தாவீது என்னும் தேவனை அறிந்த மனுஷனை பாருங்கள். தன்னுடய போர் சேவகன் மனைவியுடன் தகாத உறவு வைத்துகொண்ட அவன், தன்மேல் குற்றம் சுமந்துவிடாத படிக்கும் எவ்வளவு அறிவோடு திட்டம் தீட்டி உரியாவை கொல்கிறான்
II சாமுவேல் 11:15அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
இப்படி ஒரு நிருபத்தை எழுதி அதை உரியாவின் கையிலேயே கொடுத்து அனுப்புகிறான் என்றால், பொல்லாப்பு செய்ய அவனுடய அறிவு அவனுக்கு எவ்வளவு துணை செய்கிறது என்பதை கண்கூடாக அறியமுடிகிறதல்லவா?
அதேபோல் நாபோத்தின் திராட்சை தோட்டத்தை அபகரிக்க ஆகாபின் மனைவி எசபேல் போட்ட அருமையான திட்டத்தை பாருங்கள்:
I இராஜா 21:9அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, 10. தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்
இதுமட்டுமா? மனுஷர்கள் பொல்லாப்பு செய்ய அறிவாளிகள் என்பதை நிரூபிக்க இன்னும் எத்தனையோ ஆதாரங்கள் வேதத்தில் உண்டு! இவை எல்லாவற்றையும் விட, வெறும் பொறாமையின் அடிப்படயில் "ஜீவாதிபதியாகிய நமது ஆண்டவர் இயேசுவை எப்படியாவது சிலுவையில் அறைந்துவிடவேண்டும் என்று எப்படியெல்லாம் பொய் சாட்சிகளை ஏற்ப்படுத்தி பார்த்தார்கள். இறுதியில் தாங்கள் நினைத்ததை சாதித்தும் விட்டார்களே இந்த பொல்லாப்பும்செய்ய அறிவாளிகளான மனுஷர்கள்.
இதுபோன்ற காரியங்கள் எத்தனையோ இன்றும் இந்த உலகில் இன்றும் ஈடேறி வருகிறது. மாம்சத்துக்குரிய உலகில் மட்டுமல்ல ஆவிக்குரிய உலகில் கூட, ஒரு
சபையில் உள்ள ஆடுகளை வேறு சபைக்கு கவரவும், விசுவாசிகளிடம் காணிக்கைகளை பிடுங்கவும், தனது சபையில் தன்னைவிட இன்னொருவர் எவ்விதத்திலும் வளர்ந்துவிடாமல் அமுக்கி வைக்கவும் என்னெனவோ புது புது விதத்தில் யோசித்து காரியங்களை செய்து வருகின்றனர்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக சமீபத்தில் இயேசுவின் தெய்வ தன்மையை அவமதித்து நான் எழுதியதுபோலவே எனது பெயரில் ஒரு பதிவை வேறுஒரு தளத்தில் எழுதி, அந்தபதிவை சொடுக்கினால் என்னுடய தளத்துக்கு வருமளவுக்கு தொடுப்பு கொடுத்து, பயங்கர திட்டம்தீட்டி என்னை கவிழ்க்க சதிசெய்த அந்த மனுஷரின் அறிவை பார்த்தால், தேவன் சொன்ன "பொல்லாப்பு செய்ய அவர்கள் அறிவாளிகள்" என்ற வார்த்தையில் 100௦௦% உண்மை இருக்கிறது என்பதை நாம் அறியமுடியும்!
இவ்வாறு பொல்லாப்பு செய்ய அறிவாளியாக இருக்கும் மனுஷன் தேவனை எவ்வாறு அறிந்திருக்கமுடியும்? எனவே "அவர்கள் என்னை அறியவில்லை" என்று தேவன் சொல்கிறார்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)