ஒருநாள் நான் வழியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சிறிய பையனை அவனைவிட சற்று பெரிய பையன் ஒருவன் அதிகமாக அடித்து கொண்டிருந்தான். அடிபட்ட அந்த பையனோ பெரிதாக எதுவும் எதிர்ப்பு காட்டவில்லை அந்த இடத்தைவிட்டு ஓடவும் இல்லை. அதை கவனித்த எனக்கு அந்த சிறு பயன்மேல் பரிதாபம் ஏற்பட்டதால் அடித்து கொண்டிருந்த அந்த பெரிய பையனை கடிந்து கொண்டு விரட்டினேன்.
இந்த சம்பவத்தை நான் இங்கு சொல்வதற்கு காரணம், இரக்க குணம் படைத்த யாருக்குமே, ஒருவர் இன்னொருவரை துன்பபடுத்த்தும்போது துன்பம் அனுபவிப்பவர்களை எப்படியாவது அந்த இக்கட்டில் இருந்து விடுவிக்கவேண்டும் என்ற உத்வேகம் நிச்சயம் வரும். நம்மால் முடியவில்லை என்றாலும் அது ஒரு ஆதங்கமாக வெளிப்படும்
ஒருவேளை அந்த அடிபடும் அல்லது துன்பப்படும் நபர் ஏதாவது தவறு கூட செய்திருக்கலாம் ஆகினும் நம் கண்முன்னால் ஒருவர் அடிபடுவதையும், பலர் சேர்ந்து அடிப்பதையும் நம்மால் தாங்க முடிவதில்லை. பாவம் செய்யாத தவறுகள் செய்யாத மனிதர்கள் எவர் இங்குஇருக்கிறார்கள்? அடுத்தவர் தவறு செய்யும்போது அடிக்க அல்லது கண்டிக்க துணியும் நாம், நம்முடய தவறுகளையோ யாருக்கும் தெரியாமல் மறைக்கவே விரும்புகிறோம்!
அவனவன் அவனவன் தகுதிக்கு தகுந்தால்போல் பிறருக்கு தெரியாமல் மறைத்து
தவறான காரியங்களை செய்து தப்பித்து கொள்கின்றனர். சிலரோ மாட்டி கொள்கின்றனர் துன்பபடுகின்றனர் மற்றபடி அடுத்தவரை கைநீட்டி குற்றவாளி என்று சொல்ல யாருமே பூரண யோக்கியர் அல்ல . அடிபடும் ஒருவனை விட அடிக்கும் ஒருவன் எந்த விதத்திலும் மென்மையானவனாக இருக்கமாட்டான். அதுபோல் பிறரை துன்பபடுத்தும்/ தரக்குறைவான வார்த்தைகளை பேசும் மன மடிவாக்கும் மனுஷன் எவ்விதத்திலும் அடுத்தவனைவிட மேன்மையானவன் அல்ல. மேன்மையான ஒருவன் எந்நிலையிலும் பிறரை துன்பபடுத்தவோ அல்லது மனமடிவாக்கவோ விரும்பமாட்டான்.
ஆண்டவராகிய இயேசுவை எடுத்துகொள்ளுங்கள்.அவர் மஹா பரிசுத்தர் ஆனால் "இவளை எப்படியாவது கல்லெறிந்து கொல்ல வேண்டும்" என்ற உத்வேகத்தில் நின்ற யோக்கிய பரிசேய கூட்டத்தையும் அவர்களுக்கு நடுவே நிர்கதியாக நின்ற அந்த விபச்சாரம் செய்த ஸ்திரியையும் பார்த்தபோது அந்த சிறுமையான ஸ்திரி மேலேயே இயேசுவுக்கு பரிதாபம் ஏற்ப்பட்டது. அவள் பாவம் செய்தவள்தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அனால் ஆண்டவரோ அவளது பாவத்துக்கு அவளை தண்டிக்க விரும்பாமல் அவளை அந்த கூட்டத்தரிடமிருந்து தற்காத்து மன்னிக்கவே விருப்பம் கொட்டிருந்தார்.
ஆம்! தேவன் இன்று மனிதனை பார்த்து கூறுவதும் இதுதான்
எசேக்கியேல் 18:32சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
யாரொருவர்சாவதயோ அல்லது துன்பபடுவதயோ எள்ளளவேனும் தேவன் விரும்பவில்லை. நாம் துன்பப்பட கூடாது என்பதற்க்காகத்தானே தன்னுடய குமாரனையே நமக்காக அவர் தந்திருக்கிறார்.
நாம் தேவன் என்றுமே சிருமைபாடவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தாழ்மையானவர்களையும் துயரப்படுகிரவர்களையும் எழிமையானவர்களையும் அதிகமதிகமாக நேசிக்கும் தன்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை அவருடைய அனேக வார்த்தைகள் மூலம் நாம் அறிய முடியும்!
யாத்திராகமம் 22:25உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
சங்கீதம் 9:9சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
II கொரிந்தியர் 7:6ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன்
இன்னும் அனேக வசனங்கள் சிருமைபட்டவர்களுக்கே தேவன் ஆறுதல்செய்கிறார் என்பதை நமக்கு அறிவிருத்துகின்ற்றனர். அதற்க்கு நேர் எதிர் மாறாக தேவன் மேட்டின்மையையும் பிறரை மனமடிவாக்கி துன்புறுத்தும் எண்ணமாகிய குரூர புத்தியுள்ளவர்களையும் எந்நிலையிலும் அவர் வெறுக்கிறார்.
I சாமுவேல் 2:3இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்;
"மேட்ட்மையாக இராதே" "மேட்டிமை கொள்ளாதே" "மேட்டிமையான பார்வை வேண்டாம்" அடுத்தவரை அற்பமாக எண்ணாதே என்பதே கர்த்தர் நமக்கு திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தை.
ஒருவேளை எத்தையோ கோடி ஜனங்களில் தேவன் உன்னை தெரிந்து கொண்டு இரட்சித்திருக்கலாம், நீ நீதிமானாக இருக்கலாம், அல்லது தேவனின் வார்த்தைகள்படி வாழ்பவராக இருக்கலாம், அனேக ஆத்துமாக்களை தேவனண்டை நடத்துபவராககூட இருக்ம் மிகப்பெரிய ஜெப வீரராக இருக்கலாம் இன்னும் என்னென்னவோ தகுதிகள் நமக்கு இருக்கலாம் அனால் நம்மிடம் தாழ்மை இல்லாமல் மேட்டிமை இருக்குமானால் அந்த ஒரே ஒரு குணமே நமது அனைத்து தகுதிகளையும் அழித்துபோடும் என்பதை கருத்தில்கொண்டு என்றுமே பிறருக்கு