இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தகாத இடத்தில் தலையை கொடுத்தால் தப்பிப்பது கடினம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தகாத இடத்தில் தலையை கொடுத்தால் தப்பிப்பது கடினம்!
Permalink  
 


சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒருவர்,  பின்னர் ஒருநாளில்  மனம்திரும்பி, நலலவனாக வாழ நினைத்தாலும், அந்த கும்பலை பற்றிய  சில ரகசியங்கள் அவனுக்கு தெரிந்துவிடுவதால்  அந்த கும்பலை சார்த்தவர்கள் திருந்தியவர்களை   அப்படியே விடுவது இல்லை!  தலையை உள்ளே கொடுத்துவிட்டால் ஓன்று இறுதிவரை/ அவர்களோடு இருந்து விட வேண்டும் அல்லது அவர்கள் கையாலேயே சாவை சந்திக்கவேண்டி வரும். மேலும் அவர்களது குடும்பத்துக்கும்  பிரச்சனையை தருவார்கள். 
 
அதுபோல் சாத்தானானவன் தன்னுடன் சேர்ந்து கூத்தடிக்கும் கூட்டத்துக்கு நல்லவன் போலவே தெரிவான். பல ஆறுதலான வார்த்தைகளை தருவான், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை தருவான், நன்றாக புகழ்ந்து புகழின்  உச்சத்துக்கு கொண்டு சொல்வான் அனைத்தும் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போல் நடப்பது போலவே நமக்கு தோன்றும். 
 
ஆனால் ஒருநாளில் நாம் மனம்திரும்பி அந்த சாத்தானின் கூட்டத்தை விட்டு பிரிய வேண்டும் என்று விரும்புகிறோமோ அன்றுதான் தெரியும் அவனது உண்மை  சொரூபம் என்னவென்பது.
 
அவன் ஒருநாளும் மனுஷர்களை திருந்தவே மாட்டான். அப்படி திருந்தினாலும் திருந்திய அந்த மனுஷர்களை  விடாமல் நோண்டிக்கொண்டே இருப்பதோடு சமயம் வாய்க்கும்போதெல்லாம் அவர்களை மன மடிவாக்குவதும் அவர்களின் ஒவ்வொரு செயல் குறித்தும்  குற்றப்படுத்தி பிராது கொடுப்பதும்  அவனது வாடிக்கையான செயல்.
 
சாத்தானின் கையாட்களாக இருந்து இதுபோன்ற செயல்களை அப்படியே இம்மி பிசகாமல் செய்துவரும் அனேக மனுஷர்களையும் நாம் இந்த உலகில் பார்க்க முடியும்.  வேண்டாம் என்று விலகினாலும் நம்மை விடமாட்டார்கள் சேர்ந்திருந்தாலும் நம்மை பிரச்சனைக்குள் தள்ளாமல் ஓய மாட்டார்கள்.
 
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்பது தேசத்துக்குள் போகும்போது மிகுந்த மதிப்பு மரியாதையுடனும் சந்தொஷமாகவும்தான் போய் தங்கியிருந்தார்கள். சுலபமாக
தலையை கொடுத்துவிட்டார்கள்.  ஆனால் ஒருகாலகட்டத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் அடைந்த வேதனையோ  மிக அதிகம். அவர்களை அந்த தேசத்தில்இருந்து வெளியில் கொண்டுவரவும் பார்வோனின் கைக்கு தப்புவிக்கவும் தேவனே இரங்கி வரவேண்டியதாயிற்று. 
 
எனவே அன்பானவர்களே! தகாத இடத்தில் தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்!  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொடர்பை ஏற்ப்படுத்தி விட்டு பின்னர் மனவேதனையில் வாடுவதை தவிர்க்க  எந்த  ஒரு மனுஷனுடனும் எந்த ஒரு காரியத்திலும் இணையும் முன், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து நன்றாக ஜெபித்துவிட்டு பின்னர் அவரோடு தொடர்புகொள்வதே சிறந்தது.  
 
ஜெபம்:
"எங்களை நேசிக்கும் தகப்பனே, நாங்கள் உமக்கு பிரியமான நல்லவர்களோடு மாத்திரம் இணைந்து செயல்படும் பாக்கியத்தை எங்களுக்கு தாரும். தகாத உறவுகள் உருவாவதை அல்லது தகாத இடத்தில் தலையை கொடுப்பதை தவிர்க்கும் ஞானத்தை எங்களுக்கு தரவேண்டுமாய் மன்றாடுகிறோம் 
மாய்மாலக்கார்கள், வஞ்சகர்கள், ஏமாற்று பேர்வழிகள் மற்றும் சத்துருவின் கைகளுக்கும் அவர்களது தந்திரங்களுக்கும் எங்களை விலக்கி காத்தருள வேண்டுமாய் இயேசுவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம்  ஜெபம் கேளும் எங்கள் பிதாவே ஆமென்.   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தகாத மனுஷர்களின் சேர்க்கை மட்டும் அல்ல தகாத பழக்க வழக்கங்கள் கூடஅப்படியேதான்.
 
விளையாட்டாக பழகும் சில பழக்கங்கள் நாளடைவில்  நம்மை  மரண  குழிக்குள் கொண்டுபோய்விடும்.
 
நான் கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து  விளையாட்டாக்தான்  சிகரெட்  பிடிக்கவும்  மதுபானம்  அருந்தவும் ஆரம்பித்தேன் எனக்கு நெஞ்சுவலி  வந்தபிறது அதில் இருந்து விடுபட நினைத்தேன்.  ஆனால் நான் என்னதான் அதைவிட்டு விலகிவிட நினைத்தாலும் என்னால் முடியவே முடியாமல்.  அதிகமாக வேதனை அடைந்தேன்.    
 
இறுதியில் நான் இறைவழியில் நடக்க ஆரம்பித்த பிறகு ஆண்டவர் தந்த பெலனால் மட்டுமே அவைகளை விட்டொழிக்க முடிந்தது.
 
அதுபோல் எந்த பாவ காரியங்களிலும் உள்ளே  புகுந்து விடுவது சுலவம் ஆனால் அதை விட்டு வெளியில்  வருவது மிகவும்கடினம் நாம் என்னதான் முயன்றாலும்
அதில் இருந்து தப்பிக்க முடியாதபடி  நம்மை அது அடிமையாக்கிவிடும் எனவே தகாத இடத்தில் மட்டுமல்ல தகாத பழக்க வழக்கங்களில் கூட தலையை கொடுத்தால் தப்பிக்க முடியாதுங்கோ.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard