என்னை ஆண்டவர் ஆவியால் அபிஷேகம் செய்து நடத்திய காலங்களில் அனேக நாட்கள் என்னுடைய ஆவிக்குரிய கண்கள் திறந்த நிலையிலேயே இருந்ததால் இயற்க்கைக்கு எட்டாத அனேக காரியங்களை என்னால் காண முடிந்தது. அதைப் பற்றிய சில உண்மைகள் குறித்து கீழ்கண்ட திரியில் எழுதியுள்ளேன்.
அந்நேரங்களில் ஒருநாள், எங்கள் வீட்டினுள் அமர்ந்து நான் என்னுடைய தாயாரிடம் ஆண்டவரின் அதிசய செயல்கள் மற்றும் அவரின் வல்லமைகள் குறித்து பேசிக் கொண்டு இருந்தேன். அவர்களும் அதிக அக்கறையுடன் அதை கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்நேரத்தில் எங்கள்வீட்டின் சுவர் பக்கத்தில் பூமியிலிருந்த கதவுபோல ஓன்று திறந்து கொள்ள, பாதாளத்தில் இருந்து ஒரு ஏறிவந்த அசுத்த ஆவிஓன்று என்னுடய தாயாரின் உடம்புக்குள் புகுந்துகொண்டதை என்னுடைய ஆவிக்குரிய கண்களால் அப்படியே பார்க்க முடிந்தது.
அந்த ஆவி புகுந்த ஒரே நொடியில் என்னுடய தாயார் நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பாட்டு, நான் ஆண்டவரை பற்றி சொல்லும் எந்த காரியத்தையும் கேட்க மனதில்லாதவர்கலாக எழுந்து சென்றுவிட்டார்கள். நான் அவர்களுக்கு எதிரேபோய் பேசினாலும் அதை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை என்னை முறைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் அவர்களிடம் "உங்கள் சரீரத்துக்குள் ஒரு ஆவி புகுந்தததை நான் பார்த்தேன்" என்று சொல்லவும் சற்று பயமாக இருந்தது. காரணம் அந்த ஆவியானது அவர்கள் சரீரத்துக்குள்தான். இருக்கிறது, நான் என் தாயாரிடம் பேசுகிறேனா அல்லது அந்த அசுத்த ஆவியிடம்தான் பேசுகிறேனா என்பதே தெரியாமல் அவர்கள் சரீரத்தோடு கலந்துவிட்டிருந்தது.
அந்நாட்களில், ஒவ்வொரு மனுஷருடைய சரீரங்களிலும் ஒவ்வொரு விதமான ஆவிகள் குடிகொண்டிருந்து அந்த மனுஷர்களை ஆட்டி படைப்பதை என்னுடைய ஆவிக்குரிய கண்களால் காண முடிந்தது. சுருக்கமாக சொல்லபோனால் இந்த உலகத்தில் நடக்கும் அனைத்து அட்டூழியங்களுக்கும் அடிப்படை காரணம் அந்த அசுத்தத் ஆவிகளின் அட்டூளியமே! மனுஷானோ தன்னுடைய மாம்ச சரீரத்தால் அந்த அந்த ஆவிகளை எதுவும் செய்ய முடியாமல் அது ஆட்டும் ஆட்டத்துக்கு எல்லாம் அடிகொண்டு இருக்கிறான் அவ்வளவுதான்!
வேத புத்தகத்தில் அனேக ஆவிகளை குறித்து எழுதப்பட்டுள்ளது!
வஞ்சக ஆவி, எரிச்சலின் ஆவி, பொல்லாத ஆவி, பொறாமையின் ஆவி. இன்னும் பல.
அதைதொடர்ந்து இன்னும் அனேக ஆவிகள் இன்றைய நவீன உலகில் கிரியை செய்து வருகிறது.
சினிமா ஆவி, டீவி ஆவி, காதல் ஆவி, மதுபான ஆவி, பான்பராக் ஆவி, கம்புட்டர் ஆவி, இன்டர்நெட் ஆவி, சங்கீத ஆவி, பண ஆவி, பொருளாசையின் ஆவி, இன்னும் பல!.
அத்தோடு:
ஊழிய ஆவி, சர்ச் ஆவி, காணிக்கை ஆவி, போதகஆவி, விரோத ஆவி, பெருமையின் ஆவி போன்ற விசுவாசிக்குள் அதிகமாக கிரியை செய்யும் ஆவிகளும் இன்று உலகில் செயல்படுகின்றன
அதாவது ஒரு மனுஷனுக்கு எதில் அதிக நாட்டம் உள்ளதோ அந்த காரியத்தில் அவனுக்கு அதிகமதிகமாய் வாஞ்சையை ஏற்ப்படுத்தி அவனோடு அவன் வழியிலேயே கூடவே நடந்து போய், குழியில் தள்ளுவதே இந்த ஆவியின் வேலை. இந்த ஆவிகளுக்கு வெவேறு நவீன பெயர்கள் இருந்தாலும், இவைகள் அனைத்து செயல்பாட்டின் இறுதி நோக்கமும் மனுஷனை தேவனை விட்டு பிரிப்பதே!
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இந்த ஆவிகளோடுதான் போராட்டமேயன்றி அவைகள் கருவியாக பயன்படுத்தும் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு போராட்டல் அல்ல! என்பதை சரியாக அறிந்துகொண்டால் நாம் நிச்சயம் பிற மனுஷர்களை குறைகூறி திரியமாட்டோம்.
எபேசியர் 6:12ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
மீண்டும் சொல்கிறேன் "உலகில் உள்ள எந்த மாம்சமான மனுஷனுடனும் நமக்கு போராட்டம் இல்லை இல்லை இல்லை"
ஆனால் இன்றோ, கண்ணுக்கு தெரியாமல் செயல்பட்டு மனுஷனுக்குள் கிரியை செய்து தவறான காரியங்களை செய்வதிலும் எரிச்சலையும் பொறாமையும் மூட்டி, சண்டையை இழுத்துவிடும் அசுத்த ஆவிகளை ஜெபத்தின் மூலமும் தேவ வார்த்தையில் நடப்பதன் மூலமும் மேற்கொண்டு ஜெயிக்கும் காரியத்தை அநேக விசுவாசிகள் செயாமல், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தங்களிடம் என்ன ஆவி கிரியை செய்கிறது என்பதை அவிசுவாசிகளுக்கும் பகிரங்கமாக தெரிவித்து வருகிறார்கள்.
வேத புத்தகத்தில் சில அசுத்த ஆவிகள் பிடித்த மனிதர்கள் தன்னிலை மறந்து அலைந்த சம்பவங்களை நாம் காண முடியும். அவ்வித அசுத்த ஆவிகளால் செய்யப்படும் செயல்கள் எதுவுக்கும் அந்த மனுஷன் பொறுப்பல்ல. ஆனால் அவ்வித ஆவிகளைவிட நாம் சற்றும் அறிய முடியாத அளவுக்கு நம்முள் வந்து தங்கியிருந்து கமுக்கமாக செயல்பட்டு "இது தவறு அல்ல" "அதில் எந்த தப்பும் கிடையாது" என்பதுபோல் நம்மிடம் பேசி நம்மை தவறான வழிக்கு திருப்பிவிடும் அசுத்த அவைகளுக்கே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த அசுத்த ஆவிகள் நம்முள் கிரியை செய்கிறதா? அல்லது அவைகளின் செயல்பாட்டில் இருந்து நாம் எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.......
-- Edited by SUNDAR on Saturday 25th of June 2011 03:53:05 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பொதுவாக அசுத்த ஆவிகள் எல்லா மனுஷனுக்குள்ளும் நிரந்தரமாக வந்து தங்குவதில்லை ஆகினும் அசுத்தஆவிகள் நிரந்தரமாக வந்து தங்கும்போது அவன் சுயநிலயற்று திரிய ஆரம்பித்துவிடுகிறான். அவ்வாறு அசுத்த ஆவி நிலையாக பிடித்து வைத்திருக்கும் பலரை ஆண்டவராகிய இயேசு விடுவித்த சம்பம் வேதத்தில் உண்டு. இன்றும்கூட அசுத்த ஆவியால் முற்றிலும் பீடிக்கபட்டு புத்தி சுவாதீனமில்லாம்ல அலையும் சிலரை நாம் பார்க்க முடியும்.
சாதாரணமான ஒரு மனுஷனுக்குள் அசுத்த ஆவிகள் நிரந்தரமாக வந்து குடியிருப்பது இல்லை என்றாலும் மனுஷனின் இதயமானது அசுத்த ஆவிகள் நினைத்து நேரத்தில் வந்துபோகும், வேண்டிய நேரத்தில் பயன்படுத்திகொள்ளும் ஒரு சத்திரம்போலவே இருக்கிறது! ஆதாமை தன் வஞ்சகத்தால் மேற்கொண்ட சாத்தான் அவன் தோன்றுபோனதால் மனுஷனுக்குள் நினைத்த நேரத்தில் புகுந்து கொள்ளும் வல்லமையை பெற்றுள்ளான்
ஒரு தேவபிள்ளையின் வாழ்க்கையில்:
அவர் சபைக்கு போவதற்காக இரவு சுமார் 8 மணிக்கு அதிக ஆள் நடமாட்ட மில்லாத ஒரு பாலத்தை கடக்க நேர்ந்தது. அப்பொழுது அவருக்கு பின்னால் இடது புறத்தில் சிறிது தூரத்தில் இரண்டு ஆவிகள் வேகவேகமாக அவரை பின் தொடர்வதை பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் வலது புறத்திலும் இரண்டு ஆவி உருவங்கள் இவரை பின் தொடர்ந்தது. அப்பொழுது ஆண்டவர் . "உனது இரண்டு புறமும் இரண்டு விதமான ஆவிகள் உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். அதில் ஒருபுரமுள்ளது தீய ஆவி, இன்னொரு புறமுள்ளது நல்ல ஆவி. இங்கு நீ நல்லதையே நினைத்து தேவனை துதித்து, நல்ல நோக்கத்துடன் நடந்தால் நல்ல ஆவிகள் உனக்கு அருகில் வரும் அசுத்த ஆவிகள் உன்னை விட்டு பின்வாங்கி தூரத்தில் போகும். ஆனால் நீ அங்கும் இங்கும் கண்ணை
பறக்கவிட்டு மாம்ச சிந்தனையில் விழுந்து பயந்துகொண்டே வந்தால் தீய ஆவிகள் உனது பக்கத்தில் வரும். நல்ல ஆவிகள் வருத்தத்தோடு உன்னைவிட்டு தூரமாக போகும் அப்பொழுது உன்னுடைய கெட்டஎண்ணங்கள் மேலும் அதிகமாக வளரும். இடம் கொடுத்தால் அது உன்னுள்ளேயே புகுந்துகொள்ளும்! நீ கேட்டில் விழ நேரிடும்! நீ எதை தேர்ந்தெடுக்கிறாய் என்பது உனது கரத்திலேயே இருக்கிறது என்று சொன்னாராம்!
ஆம்!
தீய ஆவிகளுக்கு, ஒருவன் இலங்கை தமிழனா அல்லது இந்திய தமிழனா என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. இடம்கொடுத்தால் அது உள்ளே புகுந்துவிடும் பின்னர் அதற்க்கு தாய் என்றோ தாரம் என்றோ தங்கை/தம்பி என்று பாகுபாடு இல்லை.
நேற்று கோயமுத்தூரில் ஒரு சிக்னலில் பட்ட பகலில் பலபேர் முன்னினல்யில் ஒரு மனிதனை சில மனிதர்கள் சேர்ந்து அடித்து கல்லை தூக்கிபோட்டு கொன்றதையும் அதை சிலர் சினிமாப் படம் பார்ப்பதுபோல் நின்று வேடிக்கை பார்த்ததையும் கவனித்தோம். அங்கு அடித்தது அடிபட்டது வேடிக்கை பார்த்தது எல்லாமே தமிழர்கள்தான். தமிழனுக்கு தமிழனே இவ்வாறு அடித்து கொண்டு சாகும்போது, சிங்களவனின் அணுகுமுறை கடினமாகவே இருக்கும்.
இதை எந்தமனுஷன் செய்தான் என்பதல்ல முக்கியம், இந்த காரியங்கள் எல்லாம் யாரால் நடத்தப்படுகிறது என்பதே முக்கியம். தன்னைபோன்ற ஒரு சக மனிதனை சித்திரவதை செய்து கொல்ல தூண்டுவது என்ன? மனிதன் நேயமா?
மனுஷ தன்மையுள்ள எந்த ஒரு மனுஷனும் தன்னைபோலுள்ள எந்த ஒரு மனுஷனையும் கொல்ல நிச்சயம் துணியமாட்டான். ஆனால் சாத்தானின் கொடூர ஆவி உள்ளே புகுந்துவிட்டால் தேவனின் படைப்பாகிய எல்லா மனுஷர்களுமே அவனுக்கு எதிரிதான்! சாத்தானின் ஆவிக்கு இடம்கொடுத்தால் அவன் உள்ளே புகுந்து சாகசம் செய்துவிடுவான்.
எபேசியர் 4:27பிசாசுக்குஇடங்கொடாமலும் இருங்கள்.
பிசாசுக்கு இடங்கொடுக்காமல் இருக்க கோபத்துக்கு இடம்கொடுக்காமல் இருப்பது அவசியம். கோபமே ஒரு மனுஷனை கொடூரனாக்கி விடுகிறது. கோபம் வருவது இயல்பு ! ஆனால் அதை உடனேயே மறந்து சகஜநிலைக்கு திரும்ப முயலுங்கள். கோபத்தை மேற்கொள்ளும் பெலத்தை தேவனிடம் கேளுங்கள். கோபத்தை தவிர்த்தால் அசுத்த ஆவிகள் உள் நுழைவதை வெகுவாக தடை செய்யமுடியும் என்றே நான் கருதுகிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஊழிய ஆவி, சர்ச் ஆவி, காணிக்கை ஆவி, போதகஆவி, விரோத ஆவி, பெருமையின் ஆவி போன்ற விசுவாசிக்குள் அதிகமாக கிரியை செய்யும் ஆவிகளும் இன்று உலகில் செயல்படுகின்றன
அதாவது ஒரு மனுஷனுக்கு எதில் அதிக நாட்டம் உள்ளதோ அந்த காரியத்தில் அவனுக்கு அதிகமதிகமாய் வாஞ்சையை ஏற்ப்படுத்தி அவனோடு அவன் வழியிலேயே கூடவே நடந்து போய், குழியில் தள்ளுவதே இந்த ஆவியின் வேலை. இந்த ஆவிகளுக்கு வெவேறு நவீன பெயர்கள் இருந்தாலும், இவைகள் அனைத்து செயல்பாட்டின் இறுதி நோக்கமும் மனுஷனை தேவனை விட்டு பிரிப்பதே!
மேலேயுள்ள எனது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளின் அடிப்படையில் சபைக்கு போவது அல்லது ஊழியம் செய்வது அல்லது காணிக்கை கொடுப்பது எல்லாமே தவறான ஆவி என்று யாரும் பொருள் கொண்டுவிடவேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
(தவறான) சபை ஆவி!
சபை என்பது தேவனை மகிமைப்படுத்த கூடும் ஒரு சிறந்த இடம்! ஆனால் சிலர் சபையே தங்கும் விடுதிபோல் எண்ணிக்கொண்டு வீட்டில் இருக்கும் துணிகளை எல்லாம் அள்ளிக்கொண்டு வந்து சபையில் உள்ள பாத்ருமில் துவைப்பதும், பிள்ளைகளை குளிப்பாடுவதும் அங்கேயே காலையில் இருந்து இரவுவரை தங்கி விடுவதும் போன்ற செயல்களை செய்துவருவதை சில சபைகளில் பார்க்க முடிந்தது! மேலும் முழுஇரவு ஜெபத்துக்கு வருவதும் சரியாக 10௦-11 மணிக்கு நல்ல மின்விசிறி ஓடும் இடத்தில் படுத்து தூங்குவது போன்ற ஆவியை உடையவர்களாக இருக்கின்றனர். நடைமுறை வாழ்க்கை நிலைகளில் ஆண்டவருக்கு கீழ்படியாமல் நடந்துவிட்டு தவறாமல் சபைக்குபோய் அட்டென்ட்
பண்ணிவிடுவதால் நாம் நிச்சயம் பரலோகம் போய்விடலாம் போன்ற எண்ணத்தில் இருப்பது போன்றவைககளையே சபை ஆவி என்று எழுதியுள்ளேன்.
சபைக்கு வந்து தங்கிவிடுவதால் தப்பித்துகொள்ளலாம் என்றஎண்ணம் வேண்டாம்
I பேதுரு 4:17நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது;
எசேக்கியேல் 9:6முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.
நியாயத்தீர்ப்பு துவங்கும் இடம் தேவனுடய பரிசுத்தஸ்தலமே! எனவே எச்சரிக்கை அவசியம்!
(தவறான) ஊழிய ஆவி!
யோவான் 12:26ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
என்றாம் நமதாண்டவர். இயேசுவுக்கு ஊழியம் செய்வது என்பது எல்லோர் மேலும் விழுந்த கடமை ஆனால் நான் இங்கு தவறான ஊழிய ஆவி என்று நான் குறிப்பிட்டது. தேவனுடய வார்த்தைகளை மீறி செய்யும் ஊழியங்களை
குறிப்பிடவே. இன்று பல ஊழியர்கள், ஊழியம் என்ற பெயரில் தேவன் கட்டளை யிடாத காரியங்களை எல்லாம் செய்துவருவதை அறிய முடிகிறது. அதிலும்
பெண்கள் ஊழியம் என்ற பெயரில் வீட்டு காரியங்களையோ கணவனையோ பிள்ளைகளையோ கவனிக்காமல் எப்பொழுது தெரு தெருவாக அலைவதிலேயே
குறியாய் இருக்கின்றனர். எந்த வீட்டில் என்ன கிடைத்தாலும் வாங்கி சாப்பிட்டு விட்டு, வீட்டில் கணவனை மதிக்காமல் தாங்கள் சுய விருப்பத்தை நிறைவேற்றி வருகின்றனர். சாட்சியற்ற வாழ்க்கையுடன் கூடிய இதுபோன்ற சிலரது செயல்கள் ஆண்டவருக்கு அவப்பெயர் வர வாய்ப்பிருக்கிறது.
தீத்து 2:4. தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், 5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில்தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி,
என்று வசனம் சொல்கிறது! எனவே செய்யும் எந்தஒரு காரியத்தையும் கிரமப்படி தேவனுக்கேற்ற வகையில் செய்யாத போது தேவன் "நீங்கள் எவ்விதத்தாரோ உங்களை அறியேன் என்று சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது"
லூக்கா 13:27ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இவ்வாறு தேவனின் நியமனப்படி ஊழியம்செய்யாமல் ஆண்டவருக்கு அவப்பெயரை எற்ப்படுத்து ஊழியங்களையே தவறான "ஊழிய ஆவி" என்று குறிப்பிட்டேன்.
(தவறான) காணிக்கை ஆவி!
தேவனுக்கு காணிக்கை கொடுப்பது என்பது ஒரு மிக சிறந்த காரியம். அனால் நாம் படைக்கும்காணிக்கை தேவனுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். தேவன் காணிக்கை படைப்பவரின் மனதைதான் முதலில் பார்க்கிராறேயன்றி கொண்டுவரும் காணிக்கையை அல்ல. எனவே எப்படியாவது சம்பாதித்து தசமபாகத்தையும் காணிக்கை யையும் சபைக்கு கொடுத்து அதனால் தேவன் நிச்சயம் திருப்தியடைந்து விடுவார் என்று என்னும் ஒரு நிலையையே காணிக்கை ஆவி என்று குறிப்பிட்டுள்ளேன்
ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்த தேவன் காயீனின் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை ஏனெனில் அவன் மனம் தேவனுக்கேற்ற நல்ல நிலையில் இல்லை!
காணிக்கை படைக்க வரும் நமக்கு ஆண்டவர் சொல்வது!
மத்தேயு 5: 23. நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், 24அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
ஆம்! முதலில் எல்லோரோடும் ஒப்புரவாகி சமாதானமான ஒரு வாழ்க்கையை வாழ பழகி, ஒரு நல்ல மனநிலையுடன் செலுத்தும் காணிக்கையே தேவனால் ஏற்றுக் கொள்ளப்படும். மற்றபடி ஒருவர் என்னதான் அள்ளியள்ளி காணிக்கையை போட்டு விட்டாலும் அந்த காணிக்கை அவரை பரலோகம் கொடுபோகாது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என் மனைவி என்னிடம் அடிக்கடி என்னை இவ்வாறு எச்சரிப்பது உண்டு "அசுத்த
ஆவிகளைபற்றி அதிகம் பேசவோ எழுதவோ செய்யாதீர்கள். அது அவைகளுக்கு பிடிப்பதில்லை! எனவே எதாவது பிரச்சனையை அல்லது போராட்டத்தை கொண்டு வந்துவிடும். உண்மையில் நீங்கள் அசுத்த ஆவிகளை மேற்கொள்ள விரும்பினால் அவைகளை இயேசுவின் நாமத்தில் கட்டி செயலிழக்கவேண்டி ஜெபியுங்கள், அதுவே சிறந்தது, அவைகள் பயப்படுவது இயேசுவின் நாமத்தில் நாம் வாயால் சொல்லும் வார்த்தைகளாகக் மட்டுமே" என்று!
நான் அசுத்த ஆவிகளை பெரிதாக எடுத்துகொள்வது இல்லை! ஆனால் அசுத்த
ஆவிகளை பற்றிய இந்த பதிவை நான் எழுதிய நாளில் இருந்து கடந்த இரண்டு வாராமாக அதிக போராட்டமாகவும் எங்கு போனாலும் பிரச்சனைகள் உருவாவதையும் என்னால் அறியமுடிகிறது. பலர் தேவையில்லாமல் என்மீது கோபமாக இருக்கின்றனர் காரணத்தை என்னால் அறிய முடியவில்லை.
பதிவுகளே எழுத முடியாத அளவுக்கு மனமடிவுக்குள் ஆளாகியுள்ளேன்! ஆகினும் அவைகளைபற்றி அதிகம் எச்சரிப்பது என்னுடைய கடமையாக இருக்கிறது.
வெளி 16:13அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.
இந்த அசுத்த ஆவிகள்தான் அத்தனை மனிதர்களையும் ஆட்டிபடைக்கும் சாத்தானின் வல்லமைகள். இவைகள் எப்படி வேண்டுமாலும் அவதாரம் எடுக்கும்
அற்ப்புதங்களை செய்யும் ஆவிகள், குறிசொல்லும் ஆவிகள், கள்ள தீர்க்கதரிசன ஆவிகள், உமையும் செவிடுமான ஆவிகள், பலவீனப்படுத்தும் ஆவிகள், மிகவும் பொல்லாத ஆவிகள் போன்ற அனேக விதமான ஆவிகள் இங்கு கிரியை செய்கின்றனர்.
I யோவான் 4:1 நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்
எனவே மிகுந்த எச்சரிக்கையோடு ஆவியில் நிரம்பி தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிவதன் மூலமே தேவனால் உண்டான ஆவிகளையும் மற்ற ஆவிகளையும் பகுத்து அறியமுடியும்
ஆவிகளை குறித்து எச்சரிக்கை அவசியம். ஒரே நிமிடத்தில் உங்களுள் வந்து, பேதுருவை இய்சு கடிந்து கொண்டதுபோல, உங்களை தேவன் கடிந்துகொள்ளும் அளவுக்கு வழி நடத்திவிடும். எனவே எச்சரிக்கை அவசியம்!
நீதிமொழிகள் 4:23எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நேற்று ஆவிக்குரியவர்கள் காதலிப்பதை பற்றி என்ற தலைப்பு எழுதியதில்
சாத்தானுக்கு கோபத்தை கொண்டு வந்து விட்டது என்று நான் நினைக்கின்றேன்
நேற்று இரவு நான் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்த நபர் மூலம்
சாத்தான் உனக்கு பிரச்சனையை கொண்டு வருவான் நீ வார்த்தையில் ஜாக்கிரதையாயிரு என்று எனக்கு தெரியபடுத்தினார்
பரிசுத்த ஆவியானவர் தெரியபடுத்தியது போலவே அந்த நபர் என்னோடு பல வார்த்தைகளை பேசி என்னை மனமடிவாக்கி எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தினார்
ஆனால் எனக்கு பரிசுத்த ஆவியானவர் முன்பே தெரிய படுத்தியதால் என் நாக்கையும் என் இருதயத்தையும் அடக்கி காத்துகொண்டு அந்த நபருக்குள் கிரியை செய்த ஆவியை ஜெய்த்து அந்த நபருக்கே இரண்டு மணி நேரமும் தேவனுடைய நீதி நீயாயம் போன்றவற்றை சொல்லி கொண்டு இருந்தேன்
தேவனுடைய வார்த்தையை சொல்ல சொல்ல அந்த நபருக்கும் எனக்கும் ஒரு சமாதானம் கிடைத்தது
பின்பு அந்த நபர் தேவன் இப்படி பட்டவரா தேவனுக்கு இது பிடிக்காதா என்று ஆசையோடு கேட்டு கொண்டு இருந்தார்கள்
உன்மேல் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.............
தேவனுக்கு கோடான கோடி நன்றி.........
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 7th of October 2011 01:53:23 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
இந்த உலகத்தில் நடக்கும் அனைத்து தீய செயலுக்கும் ஆவிகளின் அட்டுளியமே காரணம் என்று ஏற்கெனவே நான் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு நாட்டையும், ஊரையும். தெருவையும், வீட்டையும் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ப்ளோரையும் கூட இந்த ஆவிகள் பங்குபோட்டு ஆளுகை செய்து அட்டூழியம் செய்து வருகின்றன.
இவ்வித ஆவிகளை ஜெபித்து செயலிழக்க செய்யாவிட்டால் அதன் ஆழுகையில் இருக்கும் ஜனங்களை மீட்பது மிகவும் கடினம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக என் ஒரு பகல் நேரத்தில் என் மனைவி கட்டிலில் படித்திருக்கும் போது அவள் காலுக்கு பக்கத்தில் குட்டியான சிறுபிள்ளைகளின் உருவத்தில் இரண்டு ஆவிகள் நிற்ப்பதை ஆவியில் அறிந்திருக்கிறாள். அதில் ஒருஆவி அவளது காலை பிடித்து கிள்ளிவிட்டதாம், பக்கத்தில் நின்ற இன்னொரு ஆவி "ஏய் அவளை கிள்ளாதே அவள் 'யேசுவின் நாமத்தில்" என்று சொல்லி திட்டுவாள்" என்று சொன்னதாம். ஆனால் அதோ தொடர்ந்து அவளை கிள்ளிக் கொண்டு இருக்க, என் மனைவியும் எழுந்து "இயேசுவின் நாமத்தில் வெளியே போ" என்று சத்தமிட்டாளாம். உடனே இரண்டு ஆவிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வாயை மூடிக் கொண்டு எங்கள் வீட்டைவிட்டு
வெளியேறிபோனதாம்.
ஆகினும் வெளியேறிய அந்த ஆவிகள் எங்களுக்கு பக்கத்து வீட்டில் குடித்தனம் இருக்கும் இன்னொரு இந்து சகோதரியின் வீட்டுக்குள் போனதை அவள் ஆவியில் உணர்ந்திருக்கிறாள். ஒரு சில நிமிடங்களில் வெளியில் அடிபிடி சத்தம் மற்றும் கூச்சல் கேட்கவே இவள் எழுந்து வெளியில் வந்து பார்த்தால், அந்த ஆவிகள் புகுந்த வீட்டில் இருந்த கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பயங்கர சண்டை உண்டாகி கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து அடித்து
இருவரும் சண்டைபோட்டு அந்த கணவன் "உன்னை என்னசெய்கிறேன்
பார்" என்று சொல்லிக்கொண்டு சட்டையை எடுத்து போட்டுகொண்டு வெளியில் போனாராம்.
இவ்வாறு, சமாதானமாக இருக்கும் வீட்டுக்குள்புகுந்து ஏதாவது சண்டை
மூட்டிவிட்டுகொண்டு அலையும் அந்த ஆவிகள் நாங்கள் தங்கியிருக்கும் முதல் மாடியில் உள்ள ஏழு வீடுகளில் மாறி மாறி புகுந்து வருகிறது. அங்கு நாங்கள் ஒருவர்தான் கிறித்தவர் ஆகினும் எங்கள் வீட்டுக்குளும் வந்து விடுகிறது ஆனால் ஜெபித்தால் ஓடி ஓடி விளையாட்டு காட்டிக்கொண்டு இருக்கிறது.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் என் மனைவி பக்கத்து வீட்டில் சென்று இந்த கதையை கூறி "நமது வீட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் இந்த ஆவிகள் தான் காரணம், இவைகள் வருவதை அறிந்து நாம் இயேசுவின் நாமத்தில் ஜெபித்துவிட்டால் இவைகள் ஓடிவிடும். இல்லையெனில், நல்ல சமாதானமாக இருக்கும் வீட்டில் கூட புகுந்து பெரிய சண்டை மூட்டிவிட்டுவிடும்.எங்கள் வீட்டினுள் எல்லாம் இப்பொழுது வருவதே இல்லை! இவைகளை பற்றி எனக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது" என்று அப்பொழுதுதான் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறாள்.
வீட்டில் வந்து என் மகளிடம் ஒரு சிறிய வேலையே செய்ய சொல்லி யிருக்கிறாள். என் மகளோ டிவியை பார்த்துகொண்டு அவள் சொன்ன வேலையே செய்யமாட்டேன் என்று சொல்ல, இருவருக்கும் வாய் தகராறு ஆரம்பித்து பின்னர் கையில் கிடைத்த் ஏதோ ஒரு பொருளை தூக்கி அவளை அடிக்க இப்படி பெரிய சண்டையாகி வீடே களோபரமாகிபோனது.
மன வேதனையில் இருந்த என் மனைவி ஓரிடத்தில் தலையை சாய்க்க அவள் முன்னே வந்து நின்ற அதே இரண்டு ஆவிகள் "பார்த்தாயா?இவ்வளவு நேரம் எங்களை பற்றி பக்கத்து வீட்டில் பேசி எச்சரித்து விட்டு வந்தாய், ஆனால் உன்னையே ஒரே நிமிடத்தில் நாங்கள் ஆட்டி வைத்து விட்டோம், உன்னால் என்ன செய்ய முடியும்? என்று சொல்லி எக்காளமாக சிரித்து விட்டு வெளியேறி போனதாம்"
பிள்ளைகள்தான் ஏதோ வேண்டாத வேலை செய்கிறது என்று எண்ணி
அவர்களை நாம் கண்டிக்கிறோம். ஆனால் பிள்ளைகள் செய்யும் அனைத்து வேண்டாத்தனத்துக்கும் பின்னே நிற்ப்பது இதுபோன்ற ஆவிகளே. காற்றோடு காற்றாக வரும் இவைகள் வேலியில்லாத
மனுஷர்களுக்குள் அப்படியே புகுந்துவிடுகின்றன. ஆனால் ஆண்டவரின்
பிள்ளைகளுக்கும் அவ்வளவு சீக்கிரம் புகுந்துகொள்ள முடிவத்தில்லை என்றாலும் விட்டுவிடுவதில்லை. ஏதாவது ஒரு விதத்தில் கோபத்தை மூட்டி சண்டையை உருவாக்க முயற்ச்சிக்கின்றன.
வீட்டில் எல்லோரும் சண்டை போட்டு அடித்துக்கொண்டு கிடந்தால் வந்த வேலை முடிந்தது என்று எண்ணி சந்தோசமாக வெளியேறி அடுத்த வீட்டுக்குள் போகின்றன.
இவ்வித ஆவிகளின் செயல்பாடுகளை ஆவியில்அறிந்து முன்கூட்டியே
இயேசுவின் நாமத்தில் கட்டி ஜெபிபோமானால் கூடிய வரை சண்டகள் உருவாகாமல் பார்த்துகொள்ள முடியும் என்பது எனது கருத்து.
(இதற்க்கு வேதத்தில் என்ன ஆதாரம் என்று கேட்க வேண்டாம். இயேசு அனேக அசுத்த ஆவிகளை துரத்தி அடித்திருக்கிறார் என்பதை அனைவரும் அறிகிறோம்)
-- Edited by SUNDAR on Monday 7th of May 2012 10:08:02 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)