தற்போது கோவை பெரியன்ஸ் தளத்தில் நடந்துவரும் விவாதம் ஒன்றில் சகோ. அன்பு அவரகளின் கேள்விக்கு சகோ. சோல்சொலுசன் அவர்கள் எழுப்பிய ஒரு பதில் கேள்வி என்னை மிகவும் கவர்ந்தது. அதை இங்கு அனைவர் பார்வைக்கும் வைக்க விரும்புகிறேன்.
அதாவது வேத வசனம் இவ்வாறு சொல்கிறது
மத்தேயு 5:7இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். யாக்கோபு 213. இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
இந்நிலையில் இரக்கமில்லாமல் காரியங்களை செய்பவர்களுக்கு இரக்கமில்லாத நியாயதீர்ப்பே கிடைக்கும் என்று வசனம் திட்டமாக சொல்கிறது
அதாவது நாம் பிறருடைய தப்பிதங்களை மன்னித்தால் நமது குற்றங்களை தேவன்
மன்னிப்பார்
மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
இந்த வசனந்த்தின் அடிப்படையில் நாம் பிறருடைய தப்பிதங்களை மன்னித்தால் நமது குற்றங்களை தேவன் மன்னிப்பார். இல்லையேல் நாம் தண்டிக்கபடுவது உறுதி என்பது சகோ. அன்பு அவர்களின் ஒருபக்க வாதம்.
இதற்க்கு பதிலாக சகோ. சோல்சொலுசன் அவர்கள் கேட்கும் கேள்வி:
//யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.//
இந்த வசனம் தேவனுக்கும் பொருந்துமா சகோதரரே?////
வேத வசனம் சொல்கிறது:
மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்பார்.
46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
அதாவது "எல்லோருக்கும் இரக்கமாக இருக்கவேண்டும்" என்று கட்டளையிடும் தேவன், இறுதி நியாயதீர்ப்பு நாளில் பூமியில் இரக்கமில்லாமல் தவறான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்காமல் "பிசாசுக்கு ஆயத்தம் பண்ணியுள்ள அக்கினி கடலுக்கு போங்கள்" என்று இரக்கமில்லாமல் ஒரு நியாயதீர்ப்பை கொடுக்கிறாரே, இவ்வாறு இரக்கமில்லாமல் தீர்ப்பு வழங்கும் தேவனுக்கு "இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என்ற கட்டளை பொருந்துமா? என்பதே அவர் கேள்வி!
அதற்க்கு நமது சகோ. அன்பு அவர்கள் "எனக்கு தெரியாது" என்று பதில் சொல்லியிருக்கிறார்.
நமது நாட்டு அரசியல் சட்டத்தை இயற்றியவர் டாக்டர் அம்பேத்கார் என்பது அனைவரும் அறிந்தது. இப்பொழுது அரசியல் சட்டம் இவ்வாறு சொல்கிறது "ஒருவன் இன்னொருவனை திட்டமிட்டு சதி செய்து கொன்றால் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும்" என்று. இந்நிலையில் ஒருவேளை டாக்டர் அம்பேத்கார் அவர்கள் திட்டமிட்டு ஒரு கொலையை செய்தால் அந்த சட்டம் அவருக்கு நிச்சயம் பொருந்துமல்லவா?
அதுபோல் "இரக்கமுள்ளவர்களாக இருங்கள்" என்று சொல்லும் தேவன் தானே இரக்கமில்லாமல் நடந்து, பாவம் செய்த மனுஷர்களை இறுதி நியாயதீர்ப்பில் அக்கினி கடலில் தள்ளுவது நியாயமா? என்பதே அவரது வாதம்!
இவ்வாறு இறுதி நாளில் இரக்கமற்ற தீர்ப்பு செய்யும் தேவன் வேத வார்த்தையின் அடிப்படையில் இரக்கமற்ற தீர்ப்பு பெற பாத்திரவானாகிறாரே என்பது போன்று இந்த கேள்வியின் கருத்து இருக்கிறது.
இக்கேள்விக்கு விளக்கம் தெரிந்தவர்கள் இருதால் பதிவிடவும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இப்படி கேட்டுக்கொண்டே வரும் நியாயஸ்தன் ஒரு கட்டத்தில் தன் கையிலிருக்கும் துப்பாக்கியை கீழே இறக்கிக்கொண்டே வந்து மைனர் குஞ்சுவை சுட்டுவிடுவான்.
சத்தம் கேட்டு ஓடிவரும் ஜனம்," மைனர் குஞ்சுவை என்னடா பண்ணினே..? " என்று கேட்கும்; "மைனர் குஞ்சுவை சுட்டுட்டேன் " என்பான், நியாயஸ்தன்;
"எங்கேடா சுட்டே " என்று கேட்டால், "அதான் சொன்னேனே " என்று சொல்லிக்கொண்டே புழுதி கிளப்பிக் கொண்டே போவான், நியாயஸ்தன்;
இரக்கத்தைக் குறித்த இந்த விவாதத்தை வாசிக்கும்போது ஏனோ நடித்த விவேக் நடித்த அந்த நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது; சர்வ லோக நியாயாதிபதியான ஆண்டவரும் நம்ம ஊர் அம்பேத்கரும் ஒன்றாக முடியுமா நண்பரே..?
இரக்கத்தைக் குறித்த இந்த விவாதத்தை வாசிக்கும்போது ஏனோ நடித்த விவேக் நடித்த அந்த நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது; சர்வ லோக நியாயாதிபதியான ஆண்டவரும் நம்ம ஊர் அம்பேத்கரும் ஒன்றாக முடியுமா நண்பரே..?
அன்பரே! ஒரு கருத்தை சரியாக புரியவைப்ப்தர்க்காக உதாரணமாக சொல்லப்படும் ஒரு காரியத்தை அல்லது சம்பவத்தை நாம் அப்படியே பொருள் கொள்வது சரியான நிலைதானா?.
நான் இங்கு சொல்லியுள்ளது ஒரு உதாரணம்தானே! "செம்பரியாடு" "வெள்ளாடு" என்று வசனம் குறிப்பிட்டால் அதை நாம் அப்படியே எடுத்துகொள்ள முடியுமா?
தேவனை பற்றியும் கர்த்தத்துவம் பற்றியும் நாம் அறியாதவர்கள் அல்லவே!
கேட்கபட்ட அந்த கேள்வியில் ஏதோ சில நியாயம் இருப்பதுபோல் தோன்றியதால் அந்த கேள்வியை இங்கு பதிவிட்டுள்ளேன். அதற்க்கு தாங்கள் கருத்து என்னவென்பதை மாத்திரம் தாருங்களேன். மற்றபடி விவேக்கின் காமெடிக்கும் இதற்கும் எந்த சம்பந்தம் உள்ளது என்பதே சற்றும் எனக்கு புரியவில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //கேட்கப்பட்ட அந்த கேள்வியில் ஏதோ சில நியாயம் இருப்பதுபோல் தோன்றியதால் அந்த கேள்வியை இங்கு பதிவிட்டுள்ளேன்.//
சோல்சொல்யூஷன்தான் விவரமில்லாமலும் தனது கொள்கையை நிலைநாட்டும் முயற்சியாகவும் அப்படியொரு கேள்வியைக் கேட்டால், நீங்களும் அக்கேள்வியில் நியாயம் இருப்பதுபோல் தோன்றுவதாகக் கூறலாமா சகோதரரே?
தேவன் இரக்கமுள்ளவர் என ஏராளமான வசனங்கள் சொல்லியிருக்கையில், தேவனை “இரக்கஞ்செய்யாதவராகக்” கூறமுடியுமா?
இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும் எனும் கூற்று தேவனுக்குப் பொருந்துமா எனும் கேள்வி எழலாமா?
அக்கேள்வியில் நியாயம் இருப்பதுபோல் தோன்றுவதாக நீங்கள் சொல்லலாமா?
அதற்கு ஆதாரமாக வேதவசனத்தைப் போட்டு (மத்தேயு 25:41,46), இப்படியாக நீங்கள் எழுதலாமா?
//அதாவது "எல்லோருக்கும் இரக்கமாக இருக்கவேண்டும்" என்று கட்டளையிடும் தேவன், இறுதி நியாயதீர்ப்பு நாளில் பூமியில் இரக்கமில்லாமல் தவறான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்காமல் "பிசாசுக்கு ஆயத்தம் பண்ணியுள்ள அக்கினி கடலுக்கு போங்கள்" என்று இரக்கமில்லாமல் ஒரு நியாயதீர்ப்பை கொடுக்கிறாரே, இவ்வாறு இரக்கமில்லாமல் தீர்ப்பு வழங்கும் தேவனுக்கு "இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என்ற கட்டளை பொருந்துமா? என்பதே அவர் கேள்வி!//
யோபு 40:2 சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன்.
சகோ.சுந்தர் அவர்களே!
சர்வ வல்ல தேவனை குற்றம் பிடித்து நியாயந்தீர்க்கும் வண்ணமான ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விவாதிப்பது நமக்குத் தேவைதானா?
சகோ. அன்பு அவர்களே, நான் இந்த திரியை இங்கு ஆரம்பித்ததற்கு காரணம், தேவனை பற்றிய சில தவறான புரிதல்களுக்கு விளக்கம் அளிக்கலாம் என்ற நோக்கிலேயே அன்றி, சகோதரர் அவர்கள் கேட்டகேள்வி அடிப்படையில் தேவனை குற்றப்படுத்த அல்ல!
தேவன் யாரும் கேள்விகேட்கமுடியாத ஒரு சர்வாதிகாரி நிலையில் இருந்தாலும், அவருடய தன்மையில்/குணத்தில் அவர் சர்வாதிகாரி அல்ல! ஒரு குழந்தை போன்றவர்! நியாயமான எந்தஒரு கேள்விக்கும் தேவனிடம் பதில் இருக்கிறது. "நான் இப்படித்தான் செய்வேன் அதை கேட்பதற்கு நீ யார்?" என்று ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளையிடம் சொல்லவே மாட்டான்! அதுபோல் தேவனும் நம்மெல்லோருக்கும் ஒரு நல்ல தகப்பனானவர்! நான் அவரை எனது "அப்பாவாகவே" பாவிக்கிறேன். நான் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லாமல் இருந்ததே இல்லை!
யோபு 23:7அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்
என்று வசனம் சொல்லவில்லையா?
எனது தகப்பன் நல்லவர்! அவர் என்னைபார்த்து "யாரையும் அடிக்க கூடாது அது தவறு" என்று சொல்கிறார். ஆனால் ஒருகாலகட்டத்தில் அவரே "ஒருவரை அடித்து வேதனைபடுத்தினால், அவரிடம் "என்னை அடிக்க கூடாது என்று சொல்லி விட்டு
நீங்கள் பிறரை அடித்து துன்புறுத்துவது நியாயமா?" என்று கேட்பது ஒரு நியாயமான கேள்விதானே?
இங்கு தேவனை குற்றம் கண்டுபிடிப்பதல்ல நமது நோக்கம்! அவர் "மஹா பரிசுத்தரும்" "சர்வலோக நியாயதிபதியுமாக" இருக்கிறார் அவர் பேரில் யாரும் எள்ளளவேனும் குற்றம் சொல்ல முடியாது. ஆகினும் நமக்கு தவறுபோல் தோன்றும் அவரின் ஒவ்வொரு செயலிலும் நிச்சயம் ஒருநியாயம் இருக்கும் அந்த நியாயம் என்னவென்பதை குறித்து நாம் ஆராய்ந்து தேவனிடமிருந்து அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே எங்கு எழுத விளைகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //சகோ. அன்பு அவர்களே, நான் இந்த திரியை இங்கு ஆரம்பித்ததற்கு காரணம், தேவனை பற்றிய சில தவறான புரிதல்களுக்கு விளக்கம் அளிக்கலாம் என்ற நோக்கிலேயே அன்றி, சகோதரர் அவர்கள் கேட்டகேள்வி அடிப்படையில் தேவனை குற்றப்படுத்த அல்ல!//
உங்கள் நோக்கத்தை நான் அறிவேன் சகோதரரே! ஆனாலும், தேவனின் தன்மையையே ஒரு விவாதப்பொருளாக்கி விவாதிக்கையில், எப்படியும் தேவத்துவத்துக்கு களங்கமுண்டாக்கும் வார்த்தைகளை யாராவது பயன்படுத்தக் கூடும் என்பதால்தான், இதெல்லாம் நமக்குத் தேவையில்லை எனக் கூறினேன்.
தேவனைப் பற்றிய தவறான புரிதல்களுக்கு விளக்கம் அளிக்கலாம் என்பதே உங்கள் நோக்கம் என்பதால், அந்த விளக்கத்தை நேரடியாகவே சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து, மத்தேயு 25:41,46 வசனங்களைப் போட்டு, தேவன் இரக்கமற்றவரோ எனும் தோற்றத்தை உண்டாக்கி விவாதத்தைத் தொடங்கியது எனக்கு சரியாகப்படவில்லை.
யோபு 23:7-ஐ சுட்டிக்காட்டியிருந்தீர்கள். ஆனால் அவ்வசனம் என்ன சொல்கிறது? (துன்மார்க்கன் அல்ல)சன்மார்க்கன் தேவனோடு வழக்காடலாம் என்றே!
அதுவும் பொதுப்படையான விஷயங்களுக்காக அல்ல, தனது சொந்த பாதிப்புகளுக்காக சன்மார்க்கன் தேவனோடு வழக்காடலாம் என்றே யோபு கூறுகிறார். அதன்படியே யோபுவும் வழக்காடினார். யோபு ஒரு சன்மார்க்கன் என தேவனிடம் சாட்சி பெற்றவர். அப்படிப்பட்ட அவர் முகாந்தரமில்லாமல் கொடிய துன்பங்கங்களை அனுபவிக்க நேரிட்டது. அதோடு மட்டுமின்றி, யோபு செய்த குற்றங்களுக்காகத்தான் யோபு தண்டிக்கப்படுகிறார் என அவரது நண்பர்கள் வேறு அவரை நோகடித்தனர். எனவேதான் தனக்கு வந்த துன்பங்களுக்கான காரணம் என்ன எனக் கேட்டு தேவனோடு அவர் வழக்காடினார். அவரது செயலும் நாம் இங்கு கிளப்பியிருக்கும் பிரச்சனையும் ஒரேவிதமானவையல்ல.
மத்தேயு 25:41,46-ல் தேவன் வழங்கும் நியாயத்தீர்ப்பிற்கான முகாந்தரத்தை soulsolution உட்பட நாம் அனைவரும் நன்கறிவோம். அப்படியிருக்க தேவனின் அந்த நியாயத்தீர்ப்பான செயலை இரக்கமற்ற செயலாகக் காட்டி விவாதிப்பது சரியல்லதானே?
யாக்கோபு 2:13-ன் கூற்று தேவனுக்குப் பொருந்துமா எனும் கேள்விக்கு நான் பதில் சொல்லத் தயாரில்லை. ஆனால் மத்தேயு 25:41,46-ன் அடிப்படையில் தேவனை இரக்கமற்றவராக சித்தரிப்பது தவறு என நான் திட்டமாகக் கூறுவேன். இது மிகவும் எளிதான விஷயம். மிகமிக இரக்கமுள்ளவரான ஒரு நீதிபதி கொலை செய்த ஒருவனுக்கு மரண தண்டனை கொடுக்கையில், அந்த நீதிபதி இரக்கமற்றவர் என நாம் சொல்கிறோமா? நிச்சயமாக சொல்லமாட்டோம். நியாயப்படி, சட்டப்படி தீர்ப்பளித்துள்ளார் என்றுதான் சொல்வோம்.
ஒருவேளை கொலைக் குற்றவாளி அவரது மகனாக இருந்து, அவனுக்கு மரணதண்டனை கொடுத்தால்கூட, அவரை பாசமற்றவர் என நாம் கூறமாட்டோம். சிறந்ததொரு நியாயாதிபதி என்றுதான் சொல்வோம்.
அதுபோலவே நியாயாதிபதியான இயேசு, குற்றம் செய்தவர்களான வெள்ளாட்டுப்பிரிவினரை சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி நித்திய ஆக்கினையை தண்டனையாகக் கொடுக்கையில், அவரை இரக்கமற்றவர் எனச் சொல்ல எந்த முகாந்தரமும் கிடையாது. இரக்கமுள்ளவரான அவர், நியாயாதிபதி ஸ்தானத்தில் இருக்கையில் நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளார் என்று மட்டுமே சொல்லமுடியும்.
உண்மையில் நியாயந்தீர்ப்பது இயேசுவல்ல, அவரது வசனம்தான் அங்கு நியாயந்தீர்க்கிறது (யோவான் 12:48).