"அன்பு" என்ற இந்த மூன்றெழுத்து வார்த்தை சொல்வதற்கு மிக சுலபமான ஓன்று. எல்லா மதத்தவரும் மிக சுலபமாக "அன்பே கடவுள்" என்று சொல்லிவிடுகின்றனர். ஆனால் அந்த அன்பின் ஆழ அகல நீளம் என்னவென்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் நிரம்பி வழியும் அன்புபற்றி அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்!
நம்முடய பரிசுத்த வேதாகமமும் அன்பைப்பற்றி அதிகமாக போதிக்கிறது. மிக முக்கியமாக அன்பே பெரிது என்று திட்டமாக சொல்கிறது
I கொரிந்தியர் 13:13இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
அன்பில்லாதவன் தேவனை அறியாதவன் என்றும் அன்புள்ள எவனும் தேவனால் பிறந்தவன் என்றும் வேதம் சொல்கிறது.
யோவான் 4:7ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
அதாவது இங்கு கிறிஸ்த்தவன் மற்றவன் என்ற பாகுபாடு இல்லை! அன்புள்ளவனே மேலானவன் என்று அறிய முடிகிறது!
அன்பின் ஆள அகல நீளத்தின் நமக்கு வெளிப்படுத்தியுள்ள நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் பிரதான கற்பனையே இரண்டு அன்புகூறுதல்கள்தான்.
மாற்கு 12:30உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை
மத்தேயு 22:39இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
ஓன்று "தேவனிடத்தில் அன்புகூறுதல்" மற்றொன்று "பிற மனிதனிடத்தில் அன்புகூறுதல்"!
ஒருவன் தேவனிடத்தில் எவ்விதத்தில் அன்புகூருகிறான் என்பது தேவனுக்கே தெரியும் எனவே அந்த அன்பை பற்றி தேவனே தீர்மானிக்கட்டும். இங்கு நாம்
நம்போன்ற சக மனிதர்களிடத்தில் கொண்டுள்ள அன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதுபற்றி மட்டும் சற்று ஆராயலாம்.
அனேக விதமான "அன்பு"கள் பற்றி வேதம் நமக்கு போதித்திருந்தால் அவை அனைத்தும் கீழ்கண்ட மூன்று பிரிவுக்கு அடங்கிவிடும் என்றே நான் கருதுகிறேன்
1. நிபந்தனையற்ற அன்பு
2. மாயமற்ற அன்பு
3. தேவ அன்பு
கர்த்தருக்கு சித்தமானால் இந்த தலைப்பை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.....
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)