இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்தவான்களாகிய நீங்கள் எவ்வாறு நியாயம் தீர்ப்பீர்கள்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பரிசுத்தவான்களாகிய நீங்கள் எவ்வாறு நியாயம் தீர்ப்பீர்கள்?
Permalink  
 


சாத்தானால் வஞ்சிக்கபட்டு ஆதாம் செய்த பாவத்தால் நன்மைதீமை இன்னதென்று அறிந்துகொண்ட மனுஷனுக்கு, அவனுடய  சொந்த மாம்சமே எதிரியாக இருக்கிறது என்று பவுல் சொல்கிறார்.
 
ரோமர் 7: 18. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
 
அதாவது நம்முள்ளேயே நீதிக்கு எதிராக போரிடும்  பாவபிரமாணம் ஓன்று இருக்கிறது! அது எப்பொழுதும் பாவ சந்தோஷத்தையே தேடும் நிலையில் நம்மை கொண்டு செல்கிறது என்று அறிகிறோம்
 
அதே நேரத்தில் சில் நிர்கதியான நிலைகளை தவற பொதுவான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட பாவத்தை செய்வதும் அதை  செய்யாமல் தவிர்ப்பதும் நமது சுய தெரிவின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. இக்கருத்தின்  அடிப்படையில் கொடுக்கப்படும் எச்சரிக்கையை ஏற்று மனம்திரும்பாமல் அலட்சியம் பண்ணுகிறவனின்  இரத்த பழிக்கு அவனேதான் பொறுப்பு  என்றும் வேதம் சொல்கிறது   
 
எசேக்கியேல் 33:4 க்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.
 
இந்த கருத்தை அடிப்படையாககொண்டு  கீழ்கண்ட வசனந்த்தை ஆராய்ந்து சற்று நிதானித்து தெரிவு செய்ய வேண்டுகிறேன்.  
 
I கொரிந்தியர் 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?

அதாவது பரிசுத்தவான்கள்தான்  இந்த உலகத்தை நியாயம் தீர்க்கபோகிறார்களாம்.
 
இந்த வசனத்தின் அடிப்படையில்,  தேவனால் தெரிந்து கொள்ளபட்ட நீங்கள், இந்த உலகத்தை நியாயம்தீர்க்கும் பாக்கியத்தை பெற்றீர்கள் என்று வைத்துகொள்வோம். 
 
அப்பொழுது தங்களின்  மகன் ஒருவன் உங்கள் முன்னால் நியாய தீர்ப்புக்கு கொண்டு வரப்படுகிறான்  என்று வைத்துகொள்வோம். அந்த  பிள்ளையானது சில
கொடிய பாவங்களை செய்து தண்டனைக்கு  பாத்திரவானாகவும்  இருக்கும்  பட்சத்தில் ஒரு நீதியுள்ள தகப்பனாக  அதே நேரத்தில் மிகுந்த  இரக்கமுள்ள தகப்பனாக  உங்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? 
 
1.  நித்திய வேதனையாகிய  அக்கினிகடலுக்கு போ என்று தள்ளுவது.
2.  நித்திய நித்தியமாக என்றுமே இல்லாமல்  அழித்துவிடுவது
3.  செய்த பாவத்துக்கு தகுந்த தண்டனை கொடுத்து ஏற்றுக்கொள்வது
4.  பாவம் செய்த அவனுக்கு நீதியை கற்றுகொடுத்து ஏற்றுக்கொள்வது  
 
இந்த உலகில் உள்ள எல்லா மன்ஷனுமே தேவனால் உருவாக்கபட்ட ஆதாம் ஏவாளின் சந்ததியும், தேவனின் கரத்தின் கிரியைகளாகவும் இருக்கிறோம்! எனவே நாம் ஒவ்வொருவரும் தேவனின் ஜனங்களே. நாம் நம்முடய பிள்ளைகளை எப்படி பார்க்கிறோமோ அதேபோல்தான் தேவன் இவ்வுலக ஜனங்களை பார்ப்பார் என்ற கருத்திலேயே இந்த விளக்கத்தை கொடுத்துள்ளேன்.
 
என்னுடைய நோக்கம் என்னவெனில் "தவறு செய்த ஒருவன் தான் செய்த தவறால் எத்தனைபேருக்கு எத்தனை விதமான பாதிப்புகள் அடைய நேரிட்டது எனபதை அனுபவ பூர்வமாக அறிந்து உணர்ந்து மனங்கசந்து அழுது மனம்திரும்ப வேண்டும்" என்பதே!
 
இங்கு நான் வேத வசனத்திற்க்கோ அல்லது தேவனின் திட்டத்திற்கு எதிராகவோ எதுவும் சொல்வதற்கில்லை ஏனெனில், தேவனின் வார்த்தைகள் நிலையானவை!  அதை யாரும் மாற்ற முடியாது!  "பரிசுத்தவான்கள் உலகை நியாயம்தீர்ப்பார்கள்" என்று வசனம் சொல்கிறது! எனவே இதில்  நம்முடைய நிலை என்னவென்பதை அறிவதே இங்கு நோக்கம்!
 
தேவன் சொல்லியுள்ள வார்த்தைகளில் இருக்கும் நியாயத்தை விளங்க வைக்கவே இந்த கருத்  இங்கு  இக்கருத்தின்  முன்வைத்துள்ளேன்.
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

எந்த ஒரு இரக்கமுள்ள தகப்பனும் தன் பிள்ளை என்னதான் பெரிய தவறு செய்திருந்தாலும் அல்லது பாவம் செய்திருந்தாலும் அதற்க்கு ஏதாவது தண்டனை கொடுத்து  அல்லது அவன் செய்த பாவத்தை அவன் உணரும்படி நடத்தி அவனை திருத்தி நல்வழிக்கு கொண்டுவரவே விரும்புவானே யன்றி தவறு செய்த பிள்ளைகளை அக்கினிகடலில் போட்டு
நித்திய வேதனையில் விட்டுவிட  விரும்பமாட்டான் என்றே  நான் கருதுகிறேன்.  
 
ஆகினும் "நியாயம் தீர்க்கப்படுதல்" என்பது, பாவம் செய்தவனின் நிலை என்ன? அவனை மீண்டும் புதுபிப்பது  கூடிய காரியமா அல்லது கூடாத காரியமா? அக்கினிகடலில் தள்ளப்படுதல் என்பது சாத்தானுக்கும் இறைவனுக்கு ள்ள போராட்டத்தின் அடிப்படையில் ஒரு மாறாத நியமணமா என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும். மாற்ற முடியாத பிரமாணமாக இருக்கும் பட்சத்தில், அதை யாரும் தடுக்கமுடியாமல் போகலாம்.  அக்கினிகடலில் போய் விழுந்தபிறகு குய்யோ முறையோ என்று கத்துவதில் எந்த பலனும் இல்லை.
 
உதாரணமாக: ஒரு கணினியில் வைரஸ் புகுந்து அதை கெடுத்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட நிலைவரை அந்த கணினிகளை சரி செய்துவிட முடியும். இன்னும் அதன் முக்கியமான பகுதிகள்  பாதிக்கபட்டுபோனால் அதை  reformat பண்ணிகூட உபயோகிக்கக முடியும். ஆனால் அந்த கணினியில் எல்லா பகுதிகளும் பாதிக்கபட்டு வைரசால் செயலிழந்து போனால் பின்னர் அதை சரி செய்வது என்பதே முடியாத நிலையை அடையும். அப்படி பட்ட கணினிக ளுக்கு அழிவே முடிவாக  இருக்கும்.
 
அதுபோல் புதுப்பிக்க முடியாத ஆத்துமாக்களுக்கு  சுட்டேரித்தாலே முடிவாக அமையும் என்று வேதம் சொல்கிறது.   
 
எபிரெயர் 6:7.  தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
 
8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோதகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

 


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard