(இந்த செய்தி கடந்தவாரம் நான் சபையில் கேட்ட, என்னை மிகவும் சிந்தனைக்குள் நடத்திய ஒரு செய்தியின் அடிப்படையில் உருவானது)
ஜெர்மனியில் ஒரு புகழ்பெற்ற ஓவியகண்காட்சி நடந்துகொண்டு இருந்தது. அங்கு இருந்த அநேகமான அழகான மனதை கவரும் ஓவியங்களை ஏராளமானவர்கள் பார்வையிட்டு செற்றுகொண்டு இருந்த எல்லோரையும் ஒரே ஒரு ஓவியம் மிக அதிகமாக கவர்ந்தது. அந்த ஓவியத்தை நிற்று பார்க்காதவர்கள் இல்லை பார்த்து "ஐயோ" என்று "உச்" கொட்டாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது.
அப்படி அனைவரையும் கவர்ந்த அந்த ஓவியத்தில் என்னதான் இருந்தது என்றால்,
ஒருபுறம் சாத்தானும் மறுபுறம் மனுஷனும் அமர்ந்து சதுரங்கம் (chess) ஆடுவது போல் இருந்ததே அந்த ஓவியத்தின் சிறப்பு. சாத்தனுடன் சதுரங்கம் ஆடிய மனுஷனின் நிலை அந்தோ பரிதாபமாக இருந்தது.. அனைத்து காய்களையும் இழந்து, இரண்டு மூன்று காய்களை மட்டும் வைத்துக் கொண்டு தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டு இருந்தான். அவனது முகம் வெளிறிப்போய் இருந்தது அவன் ஒருவேளை தோற்றால் அவனுக்கு சாத்தானின் இடமாகிய நரக பாதாளம்தான் கதி!
ஆனால் சாத்தானின் முகத்திலோ எக்காள சிரிப்பு! இந்த மனுஷனால் இனி எக்காரத்தினாலும் தனை ஜெயிக்க முடியாது, தான் வெற்றிபெற்று இவனை அடிமையாக்குவது உறுதி என்ற இருமாப்புடனம்கூடிய புன் சிரிப்பில் அமர்ந்திருந்தான்.
சாத்தானுடன் சதுரங்கம் ஆடும் அந்த மனுஷனின் நிலைமையை பார்த்தே அனைவரும் "ஐயோ பாவம்" என்று "உச்" கொட்டி சென்றுகொண்டு இருந்தனர்.
அவ்வாறு ஓவியத்தை பார்வையிட்டுகொண்டு இருந்த ஒரேஒரு மனுச்ன் மட்டும் அந்த ஒவியம் இருக்கும் இடத்தை விட்டு நகரவே இல்லை! ஒருமணி இரண்டு மணி என்று நேரம் நகர்ந்தது ஆனால் அந்த மனுஷனோ அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை!
ஓவியத்தை நிவாகிப்பவர் அந்த மனுஷனிடம் வந்து, ஐயா! அந்த ஓவியத்தை அப்படி என்னஇருக்கிறது, இவ்வளவுநேரம் அதை பார்த்துகொண்டு இருக்கிறீர்கள் அந்த மனுஷன்தான் தோற்ப்பது உருதியாகிவிட்டதே! அதில் இவ்வளவு நேரம் ஆராய என்ன இருக்கிறது? என்று கேட்கிறார்!
அதற்க்கு அந்தமனிதனோ " NO, இல்லவே இல்லை! அந்த மனுஷன் ஜெயிப்பதற்கு இன்னும் ஒரே MOVE இருக்கிறது" என்று கத்தினார்! நீங்கள் எல்லோரும் அந்த மனிதனின் பரிதாபநிலையை பார்த்தீர்கள் அனால் நான்ஒரு சதுரங்க விளையாட்டு காரனாக இருப்பதால் அந்த சதுரங்க கட்டத்தில் இன்னும் எதாவதுவழி இருக்கிறதா என்று அனேக நேரம் பார்த்தேன். இப்பொழுது ஒரு வழி எனக்கு தெரிந்துவிட்டது, அந்தவழியில் நகர்த்தினால் மனுஷன் வெற்றிபெறுவது நிச்சயம் என்று கத்தினார்!
இப்பொழுது இந்த கரியத்தை சற்று விரிவாக ஆராயலாம்!
1. சாத்தானுக்கு தனி மனுஷனுக்கும் இடையே நடக்கும் சதுரங்கம்!
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனுஷனையும் "செக்" வைத்து தோற்க்கடித்து
தன்னுடய இடமாகிய பாதாளத்துக்கு கொண்டு சென்று வேதனைபடுத்தவே
சாத்தான் திட்டமிட்டு, தனது காய்களை நகர்த்துகிறான்!
அன்பான சகோதரனே சகோதரியே! சாத்தானின் செயல்கள் உங்களுடைய கண்களுக்கும் இருதயத்துக்கும் மறைவாகவும் தெரியாமலும் இருக்கலாம் ஆனால் ஆவிக்குரிய கண்களோடு பார்க்கும்போது சாத்தானின் ஆட்டம் நன்றாகவே புரியும்!
சாத்தானின் காய் நகர்த்துதளால், தோல்வி மேல் தோல்வியையும் , பிரச்சனை மேல் பிரச்சனையையும் சந்தித்து, தீராத நோயினால் உண்டான துன்பம், கடன்
பிரச்சனைகள் இவற்றில் மூழ்கி "இனி வாழ்க்கையே இல்லை, நான் உயிர் வாழ வேறு வழியே இல்லை என்று முடிவின் விழிம்பில் நிற்கும் அன்பானவர்களே உங்கள் ஆட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும்! நீங்கள் சாத்தானிடம் தோறக்கவேண்டிய அவசியமே இல்லை!
இன்னும் ஒரே ஒரு "மூவ்" அதுவும் மிக மிக விசேஷமான ஒரு "மூவ்" உங்களுக்காக ஆண்டவர் ஏற்ப்படுத்தி வைத்திருக்கிறார்! அந்த நகர்த்துதலில் போனால் வெற்றி நிச்சயம் உண்டு! சாத்தானுக்கு தோல்வி நிச்சயம்!
அதுதான் ஆண்டவராகிய இயேசுவின் கரத்தில் உங்கள் வாழ்க்கையை ஒப்புகொடுப்பது!
ஆம்! அன்பானவர்களே!
நீங்கள் வாழும் வாழ்வுக்கு ஒரு அருத்தம் உண்டு அவ்வருத்தத்தை இயேசுவின் கரத்தில் வரும்போதே நீங்கள் புரிந்துகொள்ள முடியும்! அவரே நமக்கு
கேர்ட்டையும் அரணுமாக இருந்து சாத்தானின் சகல அதிகாரத்துக்கும் நம்மை விலக்கி காக்க வல்லவர்!
நீங்கள் கால தாமதம் செய்யும்வரை உங்களின் ஒவ்வொரு காய்களாக வெட்டப்படும். ஒவ்வொரு நம்பிக்கையாக உங்களைவிட்டு கடந்துபோகும்! நீங்கள் தோல்வியை தழுவுவது நிச்சயம். ஏனெனில் இந்த மாம்சத்தோடும் இரத்தத்தோடும் இருக்கும் நம்மால், ஆவி ஜீவியாகிய சாத்தானை எதிர்த்து விளையாடி ஜெயிக்கவே முடியாது!
இயேசுவை விசுவாசிப்பதன்மூலம் கிடைக்கும் பரிசுத்தஆவியின் துணையுடனேயே ஒருவரால் சாத்தானை ஜெயம்கொள்ள முடியும்! எனவே இனியும் தாமதிக்காமல், உங்கள் ஆட்டம் முடியும் முன்னரே, காயை சரியான பாதையில் நகர்த்தி, இயேசுவின் கரத்துக்குள் வாருங்கள்! அவர் தம்மிடம் வரும் ஒருவரையும் புறம்பே தள்ளுவதில்லை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)