இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "இருபுற உணர்த்துதல்" இரட்சிப்பை சுலபமாக்கும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
"இருபுற உணர்த்துதல்" இரட்சிப்பை சுலபமாக்கும்!
Permalink  
 


இந்து  மார்க்கத்தில் மேல்  மிகுந்த  பக்தியுள்ள நண்பர் ஒருவருக்கு இயேசு தரும்  இரட்சிப்பு  பற்றியும் என் வாழ்வில் தேவன் செய்த சில அற்ப்புத காரியங்கள் பற்றியும் சொல்ல நேர்ந்தது.  நான் சொன்ன அனைத்து காரியங்களையும் பொறுமையாக கேட்ட அவர், இது போன்ற காரியங்களை நான் பல நேரங்களில் கேட்டுவிட்டேன்! ஆனால் என்னால் நம்பமுடியவில்லை என்று  சொன்னதோடு "ஏன் இப்படி எல்லோரிடமும் இயேசு  இயேசு என்று சொல்லிக்கொண்டு அலைகிறீர்கள் உங்களை இவ்வாறு சொல்ல சொன்னது யார்? என்று கேட்டார். 
 
நானும் இயேசுவே  "நீங்கள் புறபட்டுபோய் சுவிஷேசம்  சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டுள்ளார் எனவேதான் சொல்கிறோம். நான் இங்கு உங்களிடம் ஆண்டவரைபற்றி சொல்வதென்பதும அதை நீங்கள் கேட்கவேண்டும் என்பது  தேவனின்  திட்டம் என்று சொன்னேன்.     
 
உடனே அவர் "உங்களுக்கு மற்றவரிடம்  சுவிசேஷம் சொல்ல சொல்லும் கடவுள் எங்களிடமும் வந்து, "இதுபோல் இந்த மனுஷர் உன்னிடம் வந்து சுவிசேஷம் சொல்லுவார் அதை நீ ஏற்க்க வேண்டும்" என்று சொல்லிவிட்டால். இதுபோல் பிரச்சினையே வராதே! நீங்கள் சொன்ன உடன் நான் ஏற்றுக்கொள்வேனே. என்று சொன்னவர்,  உண்மையோ பொய்யோ  ஒரு சம்பவத்தையும் சொன்னார்.
 
வடபழனி சாமி கோவிலை கட்டுவதற்கு ஏழை ஒருவர் ஆசைபட்டாராம். அன்று இரவே அந்த சாமி அவருக்கு கனவில் வந்து "நீ இந்த குறிப்பிட்ட மனிதரிடம்போய் கோவில் கட்டுவதற்கான பணத்தை கேள் அவர் தருவார்" என்று சொன்னாராம். அதன்படி மறுநாள் அந்த குறிப்பிட்ட மனுஷரிடம் பணம் கேட்ப்பதற்கு இவர் போனபோது, அந்த மனுஷர் "நேற்று என்னுடய கனவில் இந்த சாமிவந்து நாளை இப்படி ஒருவர் எனது  கோவிலைகட்ட பணம் கேடடு வருவார், அவருக்கு தேவையானதை செய் என்று சொல்லியிருக்கிறது" எனவே எவ்வளவு பணம்தேவை என்று கேடடு உடனே கொடுத்துவிட்டாராம்.
 
இதுபோல் நடந்தால் அது  சரியான் ஒரு காரியம் ஆனால், நீங்கள்  என்னிடம் வந்து வ்வாறு சுவிசேஷம் சொல்வீர்கள் என்று எனக்கு எந்த சாமியும் சொல்ல வில்லையே அதுபற்றி எனக்கு எந்த ஒரு உணரத்துதலும் இல்லையே!  பிறகு எப்படி என்னால் உங்களை நம்பமுடியும்? என்று சொல்லிவிட்டார்.
 
நம்முடய வேதத்திலும் இதுபோல் சில இருபுறமும் உணர்த்துதல் சம்பவங்கள் இருக்கிறது.
 
இயேசுவால் அதிசயமாக தொடப்பட்டு  அப். பவுல் ஜெயித்தபோது இவ்வாறு தரிசனம் காண்கிறார் :

அப் 9௦ 12. அனனியா என்னும் பேருள்ள ஒருமனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையவும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.
 
அதேநேரம் அனனியாவிடம்போய் கர்த்தர் அவனை சவுலுக்கு நேராக வழி நடத்துகிறார்!
 
அப் 9௦ 10. தமஸ்குவிலே அனனியா என்னும்பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். 11. அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்.
17. அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
 
கொர்நெலியுவை ஆண்டவர் தெரிந்துகொள்ள சித்தமானபோதும் இதேபோன்றதொரு காரியம் சம்பவித்ததை வேதத்தில் அறியமுடியும்!
 
முதலில் ஆண்டவர் பேதுருக்கு ஒருதரிசனம் கொடுத்து அவனை வந்தவர்களுடன் போகசொல்கிறார்!
 
அப்போஸ்தலர் 10௦ 19. பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
20. நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
 
அதேபோல் கொர்நெலியுவுக்கு தேவதூதன் மூலம் செய்தியை சொல்கிறார்!
 
அப்போஸ்தலர் 11:13 அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு;
அப்போஸ்தலர் 11:14 நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்
 
இங்கு என்னுடய  கருத்து என்னவெனில்:
 
நம் தேவன் மிகப்பெரியவர்!  பிற தெய்வங்களே இதுபோன்ற காரியங்களை செய்ய முடியுமானால் நமதுதேவன் சர்வவல்லவராக இருந்து  அனைத்து காரியங்களையும் செய்யவல்லவராக இருக்கிறார். ஆகினும் நாம் தான் அந்த வல்லமையை சரியாக பயன்படுத்திகொள்வது இல்லை என்றே கருதுகிறேன்!
 
எனவே அன்பானவர்களே! ஒரு குறிப்பிட்ட மனுஷனுக்கு சுவிசேஷம் சொல்ல செல்வதற்கு முன்னால் முடிந்தவரை அவருக்காக அவரது குடும்பத்துக்காக  ஆண்டவரிடத்தில் ஜெபிபதொடு அவரை உண்மையை அறியவிடாமல் தடைசெய்து மனதை மயக்கி  வைத்திருக்கும் சாத்தானின் ஆவிகளை ஜெபத்தின் மூலம் செயலிழக்க செய்து, அவருக்கு ஒரு உணர்த்துதலை கொடுக்கும்படி தேவனிடம் மற்றாடலாம்.
 
அவர் இரட்சிப்புக்கு பாத்திரவானாக இருந்தால், ஆண்டவர் நிச்சயம் அவருக்கு ஒரு உணர்த்துதலை தரவல்லவர் என்றேநான் விசுவாசிக்கிறேன் கொர்நெலியுவுக்கு, பவுலுக்கு, அனனியாவுக்கு உணர்த்திய தேவன் நம்முடய விண்ணபத்தையும் நிறைவேற்ற வல்லவர்!   
      
இவ்வாறு ஒருவருக்கு இருபுறமும் உணர்த்துதல் கிடைக்கும் பட்சத்தில் இரட்சிப்பு என்பது நிச்சயமான ஓன்று என்றே நான் கருதுகிறேன்

 



-- Edited by SUNDAR on Saturday 9th of July 2011 04:18:58 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard