இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனின் "சித்தம்" மற்றும் அவரது "நியமணம்"!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவனின் "சித்தம்" மற்றும் அவரது "நியமணம்"!
Permalink  
 


ஒரு மனுஷனின் உலகநிலையை எடுத்துகொண்டால் இவ்வுலகில் அவன் செய்யும் காரியங்கள் அனைத்தையுமே இரண்டு பிரிவின் அடிப்படையில் பிரித்துவிட முடியும்!
 
மனுஷனே விரும்பி செய்யும் காரியங்கள் ஒருபுறமும் விரும்பியோ விரும்பாமலோ நியமணத்தின் அடிப்படையில் செய்யும் காரியங்கள்  இன்னொரு புறமும் உண்டு!   
 
எல்லா மனுஷனுக்குமே ஏதாவது ஒரு காரியத்தில் சொந்த  விருப்பம் மற்றும் வெறுப்பு இருக்க வாய்ப்பிருக்கிறது! அதேநேரத்தில் ஒருவர் விரும்பியோ அல்லது  விரும்பாமலோ சில காரியங்கள் செய்தேஆகவேண்டும் என்ற நிபந்தமான காரியங்களும் சில இருக்கிறது! அந்த காரியங்களே "நியமணம்" என்ற தொகுப்பில் அடங்கும்.
 
உதாரணமாக நமது உடம்பில் பல நியமனங்கள் இருக்கின்றன உண்ணுதல், உறங்குதல், காலை கடன்கள் போன்ற காரியங்கள் நமது உடலில் நியமணமாக இருக்கிறது. அதை ஒருவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும்  செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலை உள்ளது.
 
சில காரியங்களையோ நாம் தெரிவு செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது படிப்பது, T V பார்ப்பது, வேலை செய்வது போன்ற காரியங்கள் நம்முடைய தெரிவின் அடிப்படையில் நாம் செய்யமுடியும்!    
 
இவ்வாறு ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கும் காரியங்கள் நியமணங்கள் ஆகும்.
 
அதுபோல் இந்த உலகத்தினுள் அசுத்தம் புகுந்துவிட்டபோது எல்லோரும் சாத்தானின் பிடியில் அகப்பட்டு தேவமகிமையை இழந்துபோனோம். இந்நிலையில் அந்த  அசுத்தத்தை  உலகைவிட்டு வெளியேற்றி, மனுஷனை மீட்டெடுத்து  இந்த உலகை சுத்தப்படுத்தும் தேவனின்திட்டத்தில், தேவன் விரும்பியோ விரும்பாமலோ அவர் நீதியினிமித்தம்  சில  நியமணங்களை நிர்மாணிக்க வேண்டிய நிலை உருவானது.
 
அவ்வாறு உருவான கட்டளைகளே தேவனின் நியமணங்கள் ஆகும்!       
 
துன்மார்க்கனின் சாவையோ அவன் அழிவதையோ  சிறிதும் விரும்பாத தேவன் "அறுப்புண்டு போவதே துன்மார்க்கனின் முடிவு" என்ற நியமணத்தை ஏற்ப்படுத்துகிறார். இவ்வாறு நியமனத்தை ஏற்ப்படுத்துவதற்க்கு காரணம் தேவனின் சத்துருக்களின் இடைவிடாத குற்றம் சுமத்துதலே!
 
இந்த காரியங்களை சரியாக புரியவைக்கும்படிக்கு வேதத்திலுள்ள ஒரு சம்பவத்தை நான் சுட்ட விரும்புகிறேன்.
 
ராஜாவாகிய தரியு மிகபெரியவனும் தான் நினைத்தஎந்த ஒன்றையும் செய்ய வல்லனுமாக இருந்து ராஜ்யபாரம் பண்ணியபோது. அவனுடய ராஜ்யத்தில் இருந்த சில  பிரதானிகள், உண்மையானவனும் ராஜாவுக்கு பிரியமானவனுமான  தானியேலின் மீது குற்றம் கண்டுபிடிக்கும் பொருட்டு ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி அதற்க்கு ராஜாவின் ஒப்புதலையும் வாங்கிவிடுகின்றனர்.   
 
ஒருநாள், ராஜாவுக்கு மிகவும் பிரியமான தானியேலையே தான் அளித்த  ஒப்புதலின் அடிப்படையில் சிங்கங்களின் கெபியில் போட வேண்டும்  என்ற பிராது உண்டானபோது ராஜாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
 
ராஜாவுக்கோ தானியேல் மேல் பிரியம் இருந்தது. அவனை சிங்கங்கள் கெபியில் போடுவதற்கு அவரது மனதில் விருப்பமோ அல்லது ஒப்புதலோ எதுவும் இல்லாது இருந்தது. அவர் நினைத்தால்  எல்லாவற்றையும் மாற்றி அவனை விடுவித்திருக்க முடியும் ஆகினும் தான் உருவாக்கிய நியமனத்திநிமித்தம் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் அந்த  நியமணத்தின் அடிப்படையிலேயே தானியேல் சிங்கங்கள் கெபியில் போடப்படுகிறான்.
 
இதேபோன்றதொரு நிலையே இங்கு தேவனின் நிலையும்!
 
துன்மார்க்கன் அழிவது இரக்கமுள்ள  தேவனின் விருப்பமோ  அல்லது சித்தமோ இல்லவேயில்லை! ஆனால் சத்துருவிநிமித்தமும் அவர் நீதியிநிமித்த்தமும் உண்டான சில  நிர்பந்தங்களின் அடிப்படையில் அப்படியொரு நியமணத்தை அவர் வைத்துள்ளார்.
 
தேவனை யாரும் நிர்பந்தித்து ஒரு நியமணத்தை உருவாக்க முடியுமா? என்றொரு கேள்வி எழலாம்!
 
அதற்க்கு "முடியும்" என்பதே வேதம்சொல்லும் பதில்!  உத்தமனும் சன்மார்க்கனுமான யோபுவை சோதிக்கும்படி கர்த்தரிடம்  சாத்தான் பிராதுபண்ணி அவனை சோதனைக்குள் கடந்துபோக வைத்த காரியத்தை இங்கு கூறமுடியும்!
 
அடுத்து 
 
தேவனுக்கு மிகவும் பிரியமான தாவீதுவுக்கு தண்டனை கொடுக்க மனதில்லா திருந்தும் சத்துரு தூஷிக்க நேரிடும் என்ற காரணத்தின் அடிப்படையில் அவனுக்கு தண்டனை கொடுத்தது போன்ற காரியங்களை இங்கு குறிப்பிடலாம்!
 
II சாமுவேல் 12:14 இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.
 
சத்துருவிநிமித்தம் இதுபோன்ற நியமனங்களை உருவாக்கியதால் தேவன் சாத்தானுக்கு பயந்தவரோ  என்று எண்ணுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை மாறாக தேவன் நீதியும் செம்மயுமானவராக இருப்பதால், அவரது இருதயத்துக்கு ஏற்றவர்கள் கூட  தவறான காரியங்களை செய்யும்போது அதை கண்டித்தே ஆகவேண்டிய நிலை இருக்கிறது! இல்லையேல் அவர் பட்சபாதம் பண்ணுகிரவர் போல் காணப்பட நேரிடும்!  அவர் நீதியினிமித்தம் உண்டானதே தேவனின் நியமணங்கள்!  
 
அவ்வித நியமணத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அனேக  வசனங்கள் எழுதப்பட்டுள்ளன
 
சங்கீதம் 37:20 துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள்
எசே 3:18  துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்
யோபு 18:5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்
சங்கீதம் 37:38 அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.
II பேதுரு 2:9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
 
இவ்வித வசனங்கள் (நியமணங்கள்)  எவ்விதத்திலும் தேவனின் இரக்க குணத்துக்கு எதிரானது அல்ல! 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

மேலேயுள்ள திரியில் "இறைவனின்  சித்தம்" மற்றும்  "இறைவனின் நியமணம் "இரண்டுக்கும் உள்ள வேறுபாடு விளக்கபட்டுள்ளது. அதாவது சித்தம் என்பது இறைவனின் விருப்பமாகவும், நியமணம்என்பது அவர் விரும்பாவிட்டாலும் கூட நிர்ணயிக்கபட்டதாகவும் அறியமுடிகிறது.
 
ஆனால் வேத வசனங்களை மேலும் ஆராய்ந்தால், இறுதி  முடிவின் போது தேவனின் சித்தம் மற்றும் நியமணத்தில்  ஏதாவது ஒன்றுதான்  நடக்கமுடியும் என்ற நிலை இருப்பது போல்  தெரிகிறது.
 
உதாரணமாக:
 
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
 
மத்தேயு 8:12 ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
போன்ற வசனங்களின்டி  இறைவனின் நியமணத்தின் அடிப்படையில் ஒரே ஒரு ஆத்துமா அக்கினிகடலில் நித்திய வாதைக்கு தள்ளப்பட்டாலும் கூட தேவனின் சித்தமாகிய  கீழ்கண்ட வசனம் நிறைவேறாமல் போகும் 
 
II பேதுரு 3:9  ; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
 
மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
 
எனவே முன்பு குறிப்பிட்டுள்ளபடி, இங்கு ஓன்று இறைவனின் சித்தம் முழுமையாக நிறைவேறவேண்டும் அல்லது அவரது நியமணம் நிறைவேர வேண்டும். அல்லது இதில் ஏதாவது ஒன்றை மாற்றவேண்டும்! 
 
இந்நிலையில்  இறைவன் எதை மாற்ற விரும்புவார்? அல்லது இரண்டையும் ஒருசேர எவ்வாறு நிறைவேற்றுவார்?    
  


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard